Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய நிகழ்ச்சியில் * மத்திய தரைக்கடலில் மனிதக்கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் தோற்றுவிட்டதாக பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு விமர்சனம்; லிபிய கரையோரம் மேலும் குடியேறிகள் மீட்பு. * பெருமளவு பங்குகளை விற்கும் சவுதி அரசின் பெட்ரோலிய நிறுவனம்; அரம்கோ நிறுவனத்துக்கு செல்ல பிபிசிக்கு அரிய வாய்ப்பு. * மருந்துக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய காச நோய்க்கு எதிரான போராட்டம்; நோயில் இருந்து தப்பிய கென்ய நோயாளியை சந்தித்தது பிபிசி. ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.

  2. இன்றைய நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஒரு நபர் எப்படி சுட்டுக்கொல்ல முடிந்தது என்று கேள்விகள் எழுந்துள்ளன; இதனால் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் என்ன? ஆராய்கிறது பிபிசி. துருக்கி சுற்றுலாத்துறையில் நாற்பத்தைந்து சதவீதம் வீழ்ச்சி; ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்டது மற்றும் வேறுபல பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் விளைவு இன்னும் மோசமாகுமா? சீனாவின் ஐந்து புள்ளி ஐந்து பில்லியன் டாலர் செலவிலான டிஸ்னி பூங்கா; சாதாரண மக்களால் பார்க்க முடியாது என்கிறார்கள் விமர்சகர்கள்; ஆனால், ''நிஜ அனுபவத்தைத் தரும்'' என்கிறார் இதன் உரிமையாளர். உள்ளிட்ட செய்திகள் இடம்பெறுகின்றன.

  3. இன்றைய நிகழ்ச்சியில் - உலக மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் சிரியா குறித்து விவாதித்துக் கொண்டிருக்க, போரினால் நிர்மூலமான அலெப்போ நகரில் இருந்து வெளியேற மறுத்த ஒருவரை பிபிசி சந்தித்தது. - பெண்களின் உடல் தோற்றத்தை நிந்திப்பது பாகிஸ்தானில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதற்கு தீர்வுகாண முயற்சிக்கிறார் ஒரு பெண் வழக்கறிஞர். - இலங்கையில் கடும் மழை காரணமாக குறைந்தது பதினொரு பேர் உயிரிழந்துள்ளனர்.

  4. இன்றைய நிகழ்ச்சியில் - இலங்கையில் தொடரும் கடுமையான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் முப்பத்தி ஏழு பேராவது கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். - ஐரோப்பிய கனவில் பெருத்த ஏமாற்றத்துடன் போர் முடியாவிட்டாலும் நாடு திரும்பும் இராக்கியர். - இந்தோனேஷியாவில் தொடரும் பெண்ணுறுப்பை சிதைக்கும் பழக்கம் குறித்து பிபிசியின் பிரத்யேக செய்திக் குறிப்பு

  5. இன்றைய நிகழ்ச்சியில் - கிழக்கு மத்திய தரைக்கடலில் எகிப்திய விமானம் அறுபத்தியாறு பேருடன் விபத்து. தீவிர தேடுதல்கள் நடக்கின்றன. - தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்றை தாங்கள் மறித்தபோது, பாதுகாப்பற்ற வகையில் தமது இரண்டு விமானங்கள் மேலும் கீழும் பறந்தன என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு கூறுவதை சீனா மறுத்துள்ளது. - இஸ்லாமியவாத பயங்கரவாதக் குழுவான போக்கோ ஹராமிடமிருந்து மீட்கப்பட்ட நைஜீரியப் பள்ளி மாணவி ஒருவர் இன்று அதிபர் முகமது புகாரியை சந்திக்கிறார்.

  6. இன்றைய நிகழ்ச்சியில் • ஸீக்கா வைரஸ் முன்பு நினைத்திருந்ததைவிட அதிக ஆபத்தானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை; • வடகொரியாவில் கொண்டாட்டங்கள் - நான்கு தசாப்தங்களில் நடக்கும் முதலாவது ஆளும் கட்சியின் தேசிய மாநாடு - மிகவும் ரகசியமான தேசத்திலிருந்து பிபிசியின் நேரடிக் குறிப்பு; • யானைகளைக் காப்பாற்றும் முயற்சி - வேட்டையே தீர்வாக முடியும் என்னும் நமிபியாவின் வித்தியாசமான முயற்சியை நேரில் சென்று ஆராயும் பிபிசியின் பிரத்யேகச் செய்திக் குறிப்பு ஆகியவற்றைக் காணலாம்.

  7. இன்றைய நிகழ்ச்சியில் - வன்செயலாலும், போராலும், ஆறு கோடியே ஐம்பது லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மோதல்களை தடுக்க அவசர நடவடிக்கை கோருகிறது ஐநா. - சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் தமது மீனவர் மீது சுட்டதாக இந்தோனேசியா மீது சீனா குற்றச்சாட்டு. ஆனால், அவர்கள் வெறும் மீனவர்கள் மாத்திரந்தானா என்பது குறித்த பிபிசியின் சிறப்பு ஆய்வு. - ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதா அல்லது அதிலிருந்து விலகுவதா என்று முடிவெடுக்கவுள்ள பிரிட்டிஷ் மக்கள். இந்த சிக்கலான விவகாரம் குறித்த பிபிசியின் விளக்க காணொளி.

  8. இன்றைய நிகழ்ச்சியில் - மத்திய தரைக்கடலில் விபத்துக்குள்ளான எகிப்திய விமானத்தின் இடிபாடுகளும் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. - பாலியல் வன்செயல்களுக்கு எதிராக போராடும் மெக்ஸிகோ நாட்டுப் பெண்கள். - நீரில் மூழ்கிய இரு எகிப்திய நகரங்களின் இடிபாடுகள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில்.

  9. இன்றைய நிகழ்ச்சியில் - டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சியா? துப்பாக்கியை பறிக்க முயற்சித்ததற்காகவும், ட்ரம்பை கொலை செய்யப்போவதாக கூறியதற்காகவும் ஒரு பிரிட்டிஷ்காரர் கைதானார். - குடிநீருக்காக ஆற்றை மறிக்கும் மத்திய கிழக்கு நாடுகள். வேகமாக வறண்டு கொண்டிருக்கும் மரணித்த கடல். - அமெசான் காடுகளை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் அழிக்கிறார்கள். ஆனால், கூடவே பழங்குடியின மக்களின் வாழ்வும் அழிகிறது.

  10. - ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதா அல்லது அதிலிருந்து விலகுவதா என்று பிரிட்டன் முடிவு செய்ய இன்னமும் சில மணிநேரமே இருக்கின்றது. இங்குள்ள தெற்காசிய மக்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த கருத்துக்கள் - மாற்றுக்கருத்தாளர்களை ஒடுக்குவதற்கான சீன நடவடிக்கைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கிராம மக்கள், தமது தலைவரை விடுவிக்க கோருகிறார்கள். - ஜப்பானில் அடைத்து வைக்கப்படும் தஞ்சக் கோரிக்கையாளர்கள். தஞ்சம் கிடைக்கும் வாய்ப்பும் மிக மிகக்குறைவு.

  11. இன்றைய நிகழ்ச்சியில் - பனிப்போர்கால அடிச்சுவடுகளில் இருந்து விலகும் ஒரு முயற்சியாக, முன்னாள் எதிரியான வியட்நாமுக்கு ஆயுதங்களை விற்பதற்கான தடையை அதிபர் ஒபாமா நீக்கினார். - மாற்றகாலத்துக்கான நீதியாக துனிஸியாவில் கடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்கான ஆணைக்குழு. - சீனாவில் நிர்மாணிக்கப்படும் உலகின் மிகப்பெரும் ரேடியோ தொலைநோக்கி. விண் ஆய்வாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதம்.

  12. இன்றைய நிகழ்ச்சியில் - துருக்கிய நகரான சிஸ்ரேயில் பொதுமக்களை கொன்றதாக வந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற ஐநா கோரிக்கையை துருக்கி நிராகரித்துள்ளது. - இருபத்தைந்தாவது சுதந்திர தினத்தை எரித்ரியா கொண்டாடுகிறது. ஆனால், கடும்போக்கு ஆட்சி நடக்கும் அந்த கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் இன்னமும் பிரச்சினைகள் இருக்கின்றன. - உலகின் மிகப்பெரிய முந்திரி ஏற்றுமதி நாடான இந்தியாவை முந்துகின்ற ஐவரிகோஸ்ட். சாக்லேட்டில் இருந்து முந்திரியை நோக்கி.

  13. இன்றைய நிகழ்ச்சியில் - ஆப்கானிஸ்தான் தலிபான்களின் புதிய தலைவராக ஹிபத்துல்லாஹ் அக்குண்ஷாடா அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தாக்குதலில் பழைய தலைவர் கொல்லப்பட்டு சில தினங்களில் அறிக்கை வந்துள்ளது. - போர் நடக்கும் சிரியாவில் இருந்து பிரான்ஸுக்கு வந்த ஒரு சிறுவனின் கதை. தனது சித்திரங்கள் மூலம் அவன் அந்த பயங்கரத்தை விபரித்துள்ளான். - சீனாவில் மனிதனுக்கு பார்வை தரும் பன்றிகள்.

  14. இன்றைய நிகழ்ச்சியில் - ஊழலால் ஓப்பியம் சாகுபடியை ஒழிக்க தடுமாறும் ஆப்கானிஸ்தான். பிபிசியின் சிறப்பு புலனாய்வு. - ரஷ்ய சிறையில் இரு வருடங்களை கழித்து நாடு திரும்பிய யுக்ரெய்னிய பெண் விமானிக்கு இராஜ வரவேற்பு. - உலகின் நவநாகரிக தலைநகரான பிரான்ஸில், முஸ்லிம் பெண்களுக்கான உடையலங்காரம் குறித்து சர்ச்சை.

  15. இன்றைய நிகழ்ச்சியில்.. - முதலாவது அணுக்குண்டால் நிர்மூலமான ஜப்பானிய நகரான ஹிரோஷிமாவுக்கு அதிபர் ஒபாமா விஜயம். - புதிய தொழிற்சட்டம் குறித்து உறுதியாய் இருப்பேன் என்கிறார் பிரான்ஸ் நாட்டு அதிபர். ஆனால், தொழிற்சங்கங்களோ போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளன. - ரியோ டி ஜெனிரோவில் பதின்ம வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை பிரேசில் காவல்துறை தேடிவருகிறது.

  16. இன்றைய நிகழ்ச்சியில் * ஃபலூஜா நகரை மீட்பதற்கான இராக் இராணுவ சண்டை நகர வாசலில் இடைநிறுத்தம்; ஐஎஸ் தீவிரவாதிகள் திருப்பித்தாக்குவதால் தீவிரமாகும் மோதல். * வடகொரியாவின் கிழக்கு கடலோரத்தில் ஏவப்பட்ட அந்நாட்டின் ஏவுகணை முயற்சி தோல்வியில் முடிந்ததா? ஆராய்கிறது பிபிசி. *உலகில் நாற்பத்தி ஆறு மில்லியன் அடிமைகள் இருப்பதாக கூறுகிறது புதிய அறிக்கை; நவீன அடிமைகளின் அவலத்தை நினைவு கூறும் செல்சி பூங்கா கண்காட்சியிலிருந்து பிபிசியின் பிரத்யேகச் செய்திக்குறிப்பு

  17. பிபிசி தலைமை அலுவலகம் அருகே மர்ம வாகனத்தால் பரபரப்பு !! வெடிகுண்டு பீதியில் ஊழியர்கள் வெளியேற்றம் ! லண்டன்: லண்டன் பிபிசி தலைமை அலுவலகம் அருகே மர்மமான வாகனத்தால் பரபரப்பு நிலவியது. இதனால் பிபிசி தலைமை அலுவல கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தவர்கள் உடனடியாக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிபிசி செய்தி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த பகுதியில் இன்று மதியம் மர்மமான வாகனம் ஒன்று நின்று கொண்டு இருந்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து வாகனத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற பீதியில் பிபிசி அலுவலகத்தில் இருந்த …

  18. 7 ஜூன், 2013 பிபிசியின் மீளக்கட்டியமைக்கப்பட்ட தலைமை அலுவலகத்தை எலிசபெத் மகாராணியார் இன்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வுக்காக லண்டனின் மையப்பகுதியில் இருக்கின்ற ''நியூ புரோட்காஸ்டிங் ஹவுஸ்'' என்னும் எமது தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்த மகாராணியார், இங்கு நடந்த ஒரு இசைக்கச்சேரியின் நேரடி ஒலிபரப்பை கேட்டு ரசித்ததுடன், எமது செய்தி தயாரிப்பு அறைகளுக்கும் விஜயம் செய்தார். அதன் பின்னர் பிபிசி வானொலியின் கலையகத்துக்கும் அவர் வருகை தந்தார். அங்கு நேரலையில் உரையாற்றிய மகாராணியார், இந்த நிலையம், எதிர்காலத்தில் பிபிசியின் பணிகளுக்கு மிகவும் சிறப்பாகச் சேவையாற்றும் என்று நம்புவதாகக் கூறினார். அத்துடன் அதனை அதிகாரபூர்வமாக திறந்து வைப்பதா…

  19. பிபிசியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனும், ஊடகவியலாளருமான டாக்டர் சமீர் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, பிரித்தானிய கலாச்சாரத்துறை செயலர் லூசி பிரேசர் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எம்.பி.க்கள் அடங்கிய தேர்வுக் குழு அவரது பெயரை இறுதி செய்யும், இது பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸால் அங்கீகரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது. தொலைக்காட்சி தயாரிப்பு மற்றும் பத்திரிகையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள சமீர் ஷா, முன்பு பிபிசியின் நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் தலைவராகப் பணியாற்றினார். அவர் மார்ச் 2028 வரை (நான்கு ஆண்டுகள்) பிபிசி தலைவர…

    • 2 replies
    • 410 views
  20. முன்னாள் கான்சர்வேட்டிவ் அரசியல்வாதி ஒருவர் சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று காண்பிக்கும் படத்தை ஒளிபரப்பியது தவறு என்று பிபிசி ஒப்புக்கொண்டுள்ளது. [size=3][size=4]பிபிசியின் புலனாய்வு செய்தி சேகரிப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய பிரச்சினையாக இது பார்க்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]பிபிசியின் நம்பகம் குறித்த ஒரு பெரிய பிரச்சினையாக இதனைக் குறிப்பிட்டுள்ள பிபிசியின் தலைமை இயக்குனர் ஜோர்ஜ் எண்ட்விசில் அவர்கள், நியூஸ் நைட் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான செய்தி ஏற்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இந்த ஊழலில் தவறாக காண்பிக்கப்பட்ட கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் பொருளாளரான மக் அல்பைன் அவர்களிடம், பிபிசி நிறுவனமும், அதனைக் க…

    • 2 replies
    • 1.1k views
  21. இன்றைய நிகழ்ச்சியில் - மனிதர்களுக்கான உடலுறுப்புகளை வளர்க்க பன்றிகளை பயன்படுத்தலாமா? மனித குருத்தணுக்களை விலங்குகளில் செலுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு குறித்த பிபிசியின் நேரடிச் செய்திகள். - மில்லியன் கணக்கான டாலர்களை தீவிரவாதிகளுக்கு வழங்கும் ஆப்கானின் இயற்கை வளம். ஆப்கான் இரத்தினச் சுரங்கங்கள் குறித்த பிபிசியின் தகவல்கள். - பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட சயன நிலைப் புத்தர் சிலை. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகால சிலையை பாதுகாக்க பெரும் பிரயத்தனம்.

  22. இன்றைய நிகழ்ச்சியில் , பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து இன்று விலகும் டேவிட் கேமரனுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு மழை. ஆனால் அவரது ஆட்சிக்காலம் எப்படி பார்க்கப்படும். தென் சீனக்கடலில் சீனாவுக்கு சட்ட உரிமையில்லையென சர்வதேச தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு சீனா பதிலடி. தென் சீனக்கடலில் வான்பாதுகாப்பு வலையம் அமைக்கப்போவதாக எச்சரிக்கை.

  23. இன்றைய நிகழ்ச்சியில் * இயல்புநிலைக்கு திரும்பியது துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம்; ஆனால் ஐஎஸ் அமைப்பிடமிருந்து மகனை மீட்க துருக்கிக்கு சென்ற தந்தையோ சடலமாக துனிஷியா திரும்பினார். * உலகை உலுக்கிய சோம் போரின் நூற்றாண்டு நினைவுநாள் ஐரோப்பா நெடுக அனுஷ்டிக்கப்பட்டது; அதில் பிரிட்டனின் தோல்விக்கான காரணத்தை ஆராய்கிறது பிபிசி. * லண்டனில் சொத்துவாங்க கடன் தருவதை இடைநிறுத்தியது சிங்கப்பூர் வங்கி; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரியும் பிரிட்டன் பொருளாதாரம் மோசமாவதன் இன்னொரு அடையாளமா?

  24. இன்றைய நிகழ்ச்சியில்.. * மொசூலின் புறநகர் பகுதிக்குள் நுழைந்த இராக்கிய படைகள் நகரை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாக நகருகின்றன. * மொறோக்கோவில் மீன் வியாபாரி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இரவு பகலாக போராட்டம். இரு போலிஸார் உட்பட பதினொரு பேர் கைது. * எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே ஆபத்தான ஏரியை சீர் செய்யும் நேபாளிகள். நீர்வரத்து பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை இது பாதுகாக்கும்.

  25. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியா நெருக்கடி பேரழிவு நிலைக்கு செல்கிறது என்று உதவி நிறுவன்ங்கள் கவலை தெரிவித்துள்ளனர். அலெப்போவில் இருந்து ஐம்பதினாயிரம் மக்கள் தப்பி ஓடியிருக்கிறார்கள். - வடகொரியாவின் ராக்கட் சோதனைக்கு பதிலடியாக, கூட்டாக நடத்திய தொழில் பேட்டையில் இருந்து வெளியேறுகிறது தென்கொரியா. - அத்துடன், மனிதனின் கோபத்தையும், மகிழ்ச்சியையும் அறிந்துகொள்ளும் குதிரைகள் பற்றிய தகவல்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.