வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
திரை விமர்சனம்: சேதுபதி சேதுபதி (விஜய் சேதுபதி) நேர்மையான இன்ஸ்பெக்டர். அழகான மனைவி (ரம்யா நம்பீசன்), அன்பான குழந்தைகள் என சராசரியான குடும்பம் அவருடையது. அவரது காவல் நிலைய எல்லைக்குள் சப்-இன்ஸ் பெக்டர் சுப்புராஜ் சரமாரியாக வெட்டிக் கொளுத்தப்படுகிறார். இந்த வழக்கை துப்பு துலக்கும்போது அதன் பின்னணியில் வாத்தியார் (வேல ராமமூர்த்தி) என்ற பெரிய மனிதர் இருப்பது தெரியவருகிறது. வாத்தியார் ஏன் இதைச் செய்தார் என்பதை சேதுபதி கண்டுபிடிக்கிறார். சேதுபதிக்கும் வாத்தியாருக்கும் மோதல் உருவாகிறது. வாத்தியாரின் சக்தி, சேதுபதிக்கு எல்லா விதங்களிலும் சவால் விடுகிறது. இந்த மோதலில் யார் வென்றார் என்பதை விவரித்துச் செல்கிறது இயக்குநர் எஸ்.யு.அர…
-
- 0 replies
- 493 views
-
-
திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு உள் ளிட்ட பெரும் பொருளாதார நெருக்கடி களைச் சந்திக்கும் 2020-ல் கதை நடக்கிறது. நிழலுலகில் ஓஹோவென்று ராஜ்ஜியம் நடத்தும் பெரிய தாதாக்களும் இதனால் தொழில் மந்தநிலையைச் சந்திக் கிறார்கள். தெய்வா (ஆர்.அமரேந்திரன்) என்ற போதைப்போருள் கடத்தல் மன்னன், தன் வசம் கடைசிக் கையிருப்பாகப் பல கோடி மதிப்பு கொண்ட கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருக்கிறான். அதை விற்க வியாபாரமும் பேசி முடிக்கிறான். போதைப் பொருளை ஒரு காரில் நூதனமான முறையில் ஒளித்துவைக்கவும் அதை ஹைதராபாத்தில் நடக்கும் பழம்பெரும் கார்களின் பேரணிக்கு வரும் சீனனிடம் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுவரவும் திட்டமிடுகிறான்…
-
- 0 replies
- 470 views
-
-
திரை விமர்சனம்: ஜீரோ அஸ்வினும் ஷிவதாவும் காதல் திருமணம் செய்துகொள் கின்றனர். ஷிவதாவுக்குப் பெற்றோர் இல்லை. அஸ்வினின் அப்பாவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அப்பா வின் எதிர்ப்பை மீறிக் காதல் தம்பதி யர் வாழ்கையைத் தொடங்கு கின்றனர். இனிய கனவுபோலத் தொடங்கும் அவர்களது வாழ்க்கை விரைவிலேயே பயங்கரக் கனவாக மாறுகிறது. கார ணம், ஷிவதாவுக்கு வரும் கனவுகள். ஷிவதாவின் கனவில் வரும் அவரு டைய அம்மா, தான் வசிக்கும் மாய உலகத்துக்கு மகளை அழைத்துச் செல்கிறார். இரு உலகங்களுக்கிடை யில் ஊசலாடும் ஷிவதாவுக்கு, காது களில் இரைச்சல் கேட்கும் ஆடிட்டரி ஹாலுசினேஷன், கண் எதிரே பாம்பு வருவதுபோன்ற விஷுவல் ஹாலு சினேஷன் என்று உளவியல் கோளாறு களும…
-
- 0 replies
- 401 views
-
-
படம் வெளியான சூட்டோடு, வீட்டிலேயே அமர்ந்து நமக்கு விருப்பமான நேரத்தில், சூழலில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை சேரனின் சி டூ ஹெச் திட்டம் ஏற்படுத்தித் தந்துள்ளது. முதல் வெளியீடான ‘ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை ஃபார்வேர்டு, ரீவைண்ட் செய்து நம் விருப்பப்படி பார்க்கும்போது நமது வாழ்க்கையை நாமே திருப்பிப் பார்த் துக்கொள்வது போன்ற அனுபவம் ஏற்படு கிறது. வாழ்க்கையைப் பெரிய விளையாட்டு மைதானமாக்கிக் களிக்கும் ஓர் இளைஞனின் பயணத்தில் நடக்கும் ஒரு சம்பவம் அவனது வாழ்க்கையை ஒரு பள்ளிக்கூடம் ஆக்குகிறது. அரட்டை, ஆர்ப்பாட்டம் எனக் கழித்த அவன் ஒவ்வொரு மணித்துளியையும் அர்த்தம் உள்ளதாக உணர்கிறான். குடும்பத்துக்காகவும் சுற்றியுள்ளவர்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான். இந்த …
-
- 0 replies
- 527 views
-
-
கொஞ்சம் நையாண்டியும் நிறைய கோபமுமாக ஓர் அரசியல் படம். வணிக அம்சங்களைத் தவிர்த்து சமூக அக்கறையுடன் இப்படி ஒரு படத்தைக் கொடுத்த துணிச்சலுக்காகவே இயக்குநர் ராஜு முருகனைப் பாராட்டலாம். தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் சாமானியக் குடிமகனான சோம சுந்தரத்தின் வீட்டில் ஒழுங்காக ஒரு கழிப்பறைகூட கிடையாது. ஆனால் அவர் தன்னை இந்திய ஜனாதிபதியாகக் கற்பித்துக் கொண்டு செயல்படுகிறார். அரசு அதிகாரிகள், காவல் துறையின ரிடம் ஜனாதிபதிக்குரிய தோரணை யுடன் பேசுகிறார். பொதுப் பிரச் சினைகளுக்காகப் போராடுகிறார், ‘உத்தரவுகள்’ பிறப்பிக்கிறார். யார் இந்த ‘ஜனாதிபதி’, அவ ருக்கு என்ன பிரச்சினை என்பதற் கான பதில்கள் சோமசுந்தரத்தின் பின்கதையில் உள்ளன. தனியார் தண்ணீர்…
-
- 2 replies
- 502 views
-
-
திரை விமர்சனம்: டார்லிங் 2 நண்பனின் துரோகத்தால் தான் தங்களது காதல் தோற்றது என்று கருதும் காதல் ஜோடி ஆவியாக வந்து நண்பனைப் பழிவாங்கத் துடிப்பதே ‘டார்லிங் 2’. ஒரு பெண்ணுக்குப் பேய் பிடிப்பது போன்ற திகில் காட்சியுடன் தொடங்கு கிறது படம். அடுத்த காட்சியில் தற்கொலை. அடுத்து, கலையரசன், காளி, ஹரி (மெட்ராஸ் ஜானி), அர்ஜுன், ரமீஸ், ஆகிய நண்பர்கள் வால்பாறைக்குச் சுற்றுலா போகிறார் கள். வால்பாறையில் ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார்கள். நண் பர்கள் ஒவ்வொருவராக ‘காட்டு காட்டு’ என்று காட்டுகிறது ஆவி. ஒரு கட்டத்தில் கலையரசனின் உடலில் புகுந்துகொள்ளும் ராமின் ஆவி, கலையரசனைக் கொல்லப்போவ தாக மிரட்டுகிறது. ஆவிக்கு ஏன் கலையரசன் மீது கோபம்? கலையரசனால் ஆவ…
-
- 0 replies
- 450 views
-
-
திரை விமர்சனம்: தங்கரதம் சந்தைக்கு காய்கறி ஏற்றிச் செல்லும் இரண்டு டெம்போ வேன் ஓட்டு நர்களிடையே நடக்கும் மோத லும், அதில் மலரும் ஒரு காதலும்தான் தங்கரதம். சித்தப்பாவை (‘ஆடுகளம்’ நரேன்) நம்பி வாழ்க்கையை ஓட்டும் நாயகன் வெற்றி. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்குச் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து காய்கறி களை ஏற்றிவரும் டெம்போ ஓட்டுநர் வேலை. அதேபோல காய்கறிகளை ஏற்றி வரும் சவுந்தரராஜாவுக்கும் வெற் றிக்கும் தொழில் போட்டி. இருவருக்குமிடையேயான மோதலுக்கு மத்தியில் சவுந்தரராஜாவின் தங்கை அதிதி கிருஷ்ணாவை காத லிக்கிறார் வெற்றி. ஒரு கட்டத்தில் தொழில் போட்டி பெரிதாகி வெற்றியைக் கொல்ல திட்டம் போடுகிறார் சவு…
-
- 0 replies
- 402 views
-
-
திரை விமர்சனம்: தர்மதுரை இயக்குநர் சீனு ராமசாமி ‘நீர்ப் பறவை’ திரைப்படத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கும் படம் ‘தர்மதுரை’. மருத்துவர்கள் கிராமங் களுக்குப் பணியாற்ற செல்லத் தயங்கக் கூடாது என்பதை குடும்ப ‘நாடக’ பின்னணியில் சொல்ல முற்பட்டிருக்கிறது இந்தப் படம். மருத்துவரான தர்மதுரை (விஜய் சேதுபதி) தொழிலைக் கவனிக்காமல் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிக் குடும்பத்தினருக்குத் தொல்லை கொடுத்துவருகிறார். நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி என ஐந்து பேரைக் கொண்ட குடும்பத்தை அவர்களுடைய அம்மா பாண்டி யம்மா (ராதிகா) ஒற்றுமையாக வைத்திருக்க முயற்சி செய்கிறார். தங்களுடைய தொழிலுக்கு இடைஞ்சலாக இருப்பதால், தர்மதுரையை ஒழித்து…
-
- 0 replies
- 390 views
-
-
திரை விமர்சனம்: திரி கெட்ட அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நல்ல மாணவன், புத்திசாலித்தனமாகப் பாடம் கற்றுக்கொடுக்கும் கதை. கட்டப்பஞ்சாயத்து, கழுத்தை அறுக்கும் ரவுடியிஸம், ரியல் எஸ்டேட், கட்சித் தாவல் என அரசியலை அழுக்காக்கி அதன்மூலம் கல்வி வியாபாரியாகவும் மாறிய ஒரு வில்லன் அரசியல்வாதி அங்கண்ணன் (ஏ.எல்.அழகப்பன்). இவருக்கு நேர்மாறான ஒழுக்கசீலர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ். தன் மகன் ஜீவாவை(அஸ்வின்) பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஆக்க வேண்டும் என கனவு காண்கிறார். இதற்கிடையில், அங்கண்ணனின் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆளும் அவரது மகன் கிஷோரை (அர்ஜெய்) எதிர்பாராத சூழ்நிலையில் அறைந்துவிடுகிறார் ஜீவா. அங்கண்ணனின் கல்லூரி…
-
- 0 replies
- 673 views
-
-
திரை விமர்சனம்: திருநாள் டெல்டா மாவட்டங்களில் நீதிபதி களையே கதிகலங்க வைக்கும் அதிரடி தாதா நாகா (சரத் லோகிதஸ்வா). அவரது விசுவாச அடியாள் பிளேடு (ஜீவா). தாதாவின் சாக்கு மண்டித் தொழிலில் மட்டும் நேர்மையான பங்குதாரராக ஜோ மல்லூரி, அவர் மகள் நயன்தாரா. இவருக்கும் ஜீவாவுக்குமிடையே காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் காதலில் ஏற்படும் பிரச்சினையால் தாதாவுக்கும் ஜீவாவுக்கும் முரண்பாடு தொடங்குகிறது. இன்னொரு பக்கம் ‘நீயா, நானா?’ கோபிநாத் தலைமை யில் காவல் துறைக் குழு ரவுடிகளைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறது. காதலர்கள் சேர்ந்தார்களா? தாதா - அடியாள் மோதல் என்ன ஆனது என்பதே மீதிக் கதை! என்னதான் கதை பழைய பாணி யில் இருந்தாலும் தேர்ந்தெடுத்து…
-
- 0 replies
- 410 views
-
-
திரை விமர்சனம்: தில்லுக்கு துட்டு தனக்குப் பிடிக்காத இளைஞனை (சந்தானம்) தன் மகள் (ஷனாயா) காதலிப்பதைக் கண்டு ஆத்திரப்படும் ஒரு பணக்காரர் (சவுரவ் சுக்லா), அந்தப் பையனைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறார். வெளியூரில் கல்யாணம் என்று சொல்லி ஆள் நடமாட்டம் இல்லாத பங்களாவுக்கு வரவழைத்து, பேய் அடித்து விட்டதாகச் சொல்லிக் கொலை செய்வது திட்டம். கூலிப் படைத் தலைவனின் (மொட்டை ராஜேந்திரன்) கைங்கர்யத்தில் போலிப் பேய்கள் உலவும் வீட்டில் நிஜப் பேய் களும் இருப்பதால் ஏற்படும் குழப்படி கலாட்டாக்கள்தான் ‘தில்லுக்கு துட்டு’. ஆவிபோல் நடிப்பவர்களுக்கு மத்தியில் நிஜமான ஆவிகளும் ஆஜரானால் என்ன ஆகும் என்ற கதை பேய்ப் படங்களின் வரிசையில் புதிது. இதை வை…
-
- 0 replies
- 493 views
-
-
திரை விமர்சனம்: தேவி பேயிடம் ஒப்பந்தம் போட்டு தன் மனைவியை மீட்க போராடும் ஒரு கணவனின் கதைதான் ‘தேவி’. நாகரிகமான பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது மும்பையில் வேலை பார்க்கும் கிருஷ்ணகுமாரின் (பிரபுதேவா) லட்சியம். சிக்கலான சூழலில், மாடு மேய்க்கும் கிராமத்துப் பெண் தேவியை (தமன்னா) திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. வேண்டா வெறுப்போடு மணம் முடித்து தமன்னாவுடன் மும்பை செல்லும் பிரபுதேவா, ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் குடியேறுகிறார். வீட்டில் நுழைந்ததும் தமன்னாவிடம் தலைகீழ் மாற்றங்கள் நடக்கின்றன. பிரபுதேவாவை அதிரவைக்கும் அந்த மாற்றங்களின் பின்னணியும், விளைவுகளும்தான் படம். பேய்ப் படங்களுக்கென்…
-
- 0 replies
- 331 views
-
-
திரை விமர்சனம்: தொடரி கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு காதல் பயணமே ‘தொடரி’. டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் ரயில் கேன்டீனில் வேலைபார்க்கும் ஊழியர், பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் பயணிக்கும் நடிகை ஷாவின் (பூஜா ஜாவேரி) ஒப்பனை உதவியாளர் சரோஜா (கீர்த்தி சுரேஷ்). முதல் பார்வையிலேயே கீர்த்தியின் மீது காதலைப் படர விடுகிறார் தனுஷ். ஆரம்பத்தில் பிடி கொடுக்காத கீர்த்தி ஒரு கட்டத்தில் மனம் மாறுகிறார். அதே ரயிலில் மத்திய அமைச்சர் ராதாரவி பயணிக் கிறார்.ரயில் ஓட்டுநர் ஆர்.வி.உதயகுமாருக்கும், உதவியாளர் போஸ் வெங்கட்டுக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன் பிறகு ரயில் மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறது. அந்த ஆபத்து …
-
- 0 replies
- 490 views
-
-
திரை விமர்சனம்: தோழா சர்வதேசத் திரைப்படங்களை அதிகார பூர்வமாகவே ரீமேக் செய்யும் போக்குக்கு கோலிவுட் மாறியிருக் கிறது. ‘தூங்காவனம்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களைத் தொடர்ந்து ‘தோழா’. ‘தி இன்டச்சபிள்ஸ்’ என்னும் பிரஞ்சுத் திரைப்படத்தைத் தழுவி, ‘தோழா’வை இயக்கியிருக்கிறார் டோலிவுட் இயக்குநர் வம்சி பைடிபள்ளி. அக்கினேனி நாகார்ஜுனா குவாட்ரி பிளேஜியாவால் (கழுத்துக்குக் கீழே உடலியக்கம் இல்லா நிலை) பாதிக்கப் பட்ட கோடீஸ்வரத் தொழிலதிபர். அவரைக் கவனித்துக்கொள்ளும் காப் பாளர் பணி நேர்காணலுக்குச் செல்கிறார் சிறையிலிருந்து பரோ லில் வெளியே வரும் கார்த்தி. கார்த்தியின் இயல்பான, கலகலப்பான சுபாவம் பிடித்துப்போக அவரையே காப்பாளராக நியமிக்கிறார…
-
- 0 replies
- 546 views
-
-
திரை விமர்சனம்: நகர்வலம் தண்ணீர் லாரி ஓட்டும் எளிய குடும் பத்து இளைஞன் குமாரும் (யுத்தன் பாலாஜி) வலுவான குடும்பப் பின்னணிக் கொண்ட பள்ளி மாணவி ஜனனியும் காதலிக்கிறார்கள். காதல் வெளியே தெரிந்ததும் பெண் வீட்டாரிட மிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது. ஜனனியின் சித்தப்பா அரசியல்வாதி, அவளது அண்ணன் அவரால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட ரவுடி. இருவரும் இணைந்து குமாரைத் தீர்த்துக்கட்ட நினைக்கும்போது, அவர்களின் தாக்கு தலையும் எதிர்ப்பையும் காதலர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதே கதை. கட்சி அரசியலில் அழுக்காக இருக் கும் சித்தப்பா கதாபாத்திரம், நாயகனின் அண்ணனை வைத்து அரங்கேற்றும் தொடக்கக் கொலை மீது இயக்கு…
-
- 0 replies
- 483 views
-
-
திரை விமர்சனம்: நிசப்தம் எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படு வதால் ஏற்படும் பாதிப்புகளை யும், அவற்றிலிருந்து மீளும் வழியையும் உரக்கச் சொல்கிறது ‘நிசப்தம்’. பெங்களூருவில் வசிக்கும் ஆதி (அஜய்) ஆதிரா (அபிநயா) தம்பதியின் ஒரே மகள் எட்டு வயது பூமிகா (பேபி சாதன்யா). எளிய நடுத்தர வாழ்வை நடத்தி வரும் இக்குடும்பத்தில் திடீரென புயல் வீசுகிறது. பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் பூமிகா, ஒரு காம வெறியனால் பிய்த்தெறியப்படு கிறாள். கொடூரமான பலாத்காரத் துக்குப் பின் குற்றுயிராக மீட்கப் படும் அவள், உடலாலும் மனதாலும் அடையும் சேதாரங்களைக் கண்டு, அவளது பெற்றோரின் வாழ்க்கை நொறுங்கிப்போகிறது. ஊடகங்கள் செ…
-
- 0 replies
- 321 views
-
-
திரை விமர்சனம்: பகடி ஆட்டம் பாலியல் வன்முறைக்குப் பல முகங்கள் உண்டு. அதில் ஒன்றைத் திரைவிலக்கிக் காட்டுகிறது இந்தப் ‘பகடி ஆட்டம்’. செல்வச் செழிப்பு மிக்க குடும் பத்தின் ஒரே வாரிசு சூர்யா (சுரேந்தர்). தன் வசதியையும் வசீகரத் தையும் தூண்டிலாகப் பயன்படுத் திப் பெண்களுக்கு வலை வீசுவது அவன் பொழுதுபோக்கு. அப்படி அவனிடம் சிக்கிய ஒரு பெண் கவுசல்யா (மோனிகா). நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கவுசல்யா, முதல் தலைமுறைப் பட்டதாரியாக உருவாக வேண்டியவள். அவள் சூர்யாவின் வலையில் சிக்கிச் சின்னாபின்னம் ஆக, துடித்துப் போகிறது குடும்பம். அடுத்த பெண்ணுக்கு வலைவிரிக்கத் தயா ராகும் சூர்யாவோ திடீரென்று காணாமல் போகிறான். அ…
-
- 0 replies
- 440 views
-
-
திரை விமர்சனம்: பலே வெள்ளையத் தேவா மதுரையில் பசுமையும் தொழில் நுட்பமும் நிறைந்த ஒரு கிராமம். பணிமாற்றல் காரணமாக அந்த ஊருக்கு வரும் தபால் நிலையப் பணியாளர் தமயந்தி (ரோகிணி), தனது மகன் சக்திவேலுடன் (சசிகுமார்) அங்கே குடியேறுகிறார். படித்து முடித்து அரசு வேலைக்காகக் காத்திருக்கும் சக்திவேலுக்கும் அந்தக் கிராமத்தில் கேபிள் டிவி நடத்திவரும் ராதுவுக் கும் (பாலா சிங்) ஏற்படும் உரசல் ஒரு கட்டத்தில் மோதலாக முற்றுகிறது. ராதுவின் சூழ்ச்சியால் சக்திவேல் சிறைக்குச் செல்ல, அவர் அரசு வேலைக் குச் செல்வது கேள்விக்குறியாகி விடுகிறது. அதன் பிறகு ராதுவை சக்திவேல் எப்படி வீழ்த்துகிறார் என்பது தான் கதை. கிராமத்தைக் களமாகக் …
-
- 0 replies
- 308 views
-
-
திரை விமர்சனம்: பழைய வண்ணாரப்பேட்டை இடைத்தேர்தல் பரபரப்பில் இருக்கும் பழைய வண் ணாரப்பேட்டையில் பொது வுடைமைக் கட்சித் தொண்டர் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலையாளியைத் தேடும் காவல் துறை, பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்தியையும் (பிரஜன்) அவரது நண்பர்கள் 5 பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் அள்ளிக்கொண்டு செல்கிறது. அவர்களில் ஒருவர்தான் கொலை யாளி என்ற முடிவுக்கு காவல் துறை வருகிறது. ஆனால், இதில் உதவி ஆணையர் மூர்த்திக்கு (ரிச்சர்ட்) நம்பிக்கை இல்லை. அரசியல் கொலையின் சூத்திரதாரி யைத் தேடி அவர் புறப்படுகிறார். இன்னொரு பக்கம், தனது நண் பனை மீட்க உண்மையான குற்ற வாளியைக் கண்டுபிடித்தாக வேண் டும் என்று கார்த்தியும் புறப்படு கிற…
-
- 0 replies
- 293 views
-
-
காவியத் தன்மை கொண்ட கதைகளை, பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியா வாலும் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது எஸ்.எஸ்.ராஜ மவுலியின் இயக்கத்தில் வந்திருக்கும் பாகுபலி. பல இந்தியக் காவியங்களில் கையா ளப்படும் அரியணைக்கான போட்டியும், உறவுகளை வீழ்த்தும் ரத்தக் கறை படிந்த துரோகப் பக்கங்களும்தான் பாகுபலியின் கதை. பிரம்மாண்டமான மலை, காட்டருவி, காட்டருவியைத் தாண்டினால் மகிழ்மதி ராஜ்ஜியம், அங்கே 25 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசி தேவசேனா என, பழைய அடிமைப் பெண் படத்தின் கதையை ஞாபகப்படுத்தும் கதை. மகாராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) ஒரு கைக்குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மரணமடையும் காட்சி யுடன் தொடங்குகிறது படம். மலைப்பகுதி மக்களில் ஒருவரான ரோகிணியால் வளர்க்கப்படும் குழந்தை சிவா…
-
- 9 replies
- 4.7k views
-
-
பக்தர்கள் பாவத்தைத் தலைமுழுகத் தாமிரபரணியைத் தேடிவரும் ஊர் பாபநாசம். அங்கே குடும்பத்துடன் வசிக்கிறார் சுயம்புலிங்கம் (கமல்). கேபிள் டி.வி தொழில் செய்கிறார். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் நடைமுறை அறிவு மிக்கவர். சினிமாவின் மீதான அவரது அதீத மான காதல் அவருக்குப் பல விஷ யங்களைச் சொல்லிக்கொடுத்திருக் கிறது. மனைவி ராணி (கவுதமி), மகள்கள் செல்வி (நிவேதா தாமஸ்), மீனா (எஸ்தர் அனில்) ஆகியோர்தான் அவரது உலகம். நிலையான தொழில், திகட்டத் திகட்ட அன்பு என்று அமைதி யாக நகரும் இந்தக் குடும்பத்தின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது ஒரு சம்பவம். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் சுயம்புலிங்கம், பயந்து நடுங் கியபடி அழுதுகொண்டிருக்கும் மனைவி, குழந்தைகளைப் பார்த்து அதிர்ந்து போக…
-
- 2 replies
- 1.5k views
-
-
திரை விமர்சனம்: பாம்பு சட்டை தன்னுடைய உடல் வளர்ச்சிக்காகச் சட்டையை உரிக்கும் பாம்பைப் போல, மனிதன் தன் னுடைய வளர்ச்சிக்காக மாறிக்கொள்ளலாமா என்ற சமூக சிந்தனையுடன் கூடிய கதையில் மசாலா தூவித் தரப்பட்டுள்ள படம் ‘பாம்பு சட்டை’. விதவையாக இருக்கும் அண்ணியுடன் (பானு) ஒரே வீட்டில் வசித்துவருகிறார் தட்சிணா (பாபி சிம்ஹா). அவருக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும் என்று விரும்புகிறார். சரியான வேலை இல்லாமல் கிடைத்த வேலையைச் செய்யும் பாபி சிம்ஹா, பார்த்த மாத்திரத் தில் துரத்தித் துரத்தி வேணியைக் (கீர்த்தி சுரேஷ்) காதலிக்கிறார். அண்ணியுடன் ஒரே வீட்டில் இருப்பதால் பாபிக்குத் தன் பெண் ணைத் திருமணம் செய்து…
-
- 0 replies
- 249 views
-
-
விளையாட்டு, அரசியல், நிழ லுலகம் என எதை முதன்மைப் படுத்தினாலும் அதில் வலு வான குடும்பப் பின்னணியை அமைத்து யதார்த்தமான சித்தரிப் புடன் படங்களைத் தருபவர் சுசீந்திரன். இந்தப் படத்திலும் குடும்பமும் உறவு களும் இருக்கின்றன. அவற்றுடன் குற்றவியல் நடவடிக்கைகளும் ஊடாடுகின்றன. நிழல் உலக தாதாக்களைத் தீர்த்துக் கட்டும் முயற்சிக்கு எதிர்பாராத இடத்தி லிருந்து சவால் வரும்போது காவல் துறை அதிகாரி என்ன செய்வார் என்பதுதான் ‘பாயும் புலி’. சுதந்திரப் போராட்டத் தியாகியின் பேரன் காவல் அதிகாரியான விஷால். தன் அப்பா கேட்டுக்கொண்டதற்காக அரசியலில் நுழையாமல் இருக்கிறார் விஷாலின் அப்பா. ஆனால் விஷாலின் அண்ணன் சமுத்திரக்கனி அரசியலில் நுழையும் எண்ணம் கொண்டவர். அன்பும், பாசமும் மிக்க இவர்களது குடும்பம் வச…
-
- 0 replies
- 391 views
-
-
திரை விமர்சனம்: பெங்களூர் நாட்கள் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவரும் பள்ளி நாட்களில் இருந்து ஒன்றா கவே வளரும் உறவுக்காரர்கள். ஆர்யா பள்ளிப் படிப்போடு நிறுத் திக்கொண்டு பைக் ரேஸில் ஆர்வம் ஏற்பட்டு ஹைதராபாத் சென்றுவிடுகிறார். பிறகு ரேஸை விட்டுவிட்டு பெங்களூரில் தங்கி விடுகிறார். சாஃப்ட்வேர் இன்ஜினீ யரான சிம்ஹாவுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. எம்பிஏ படிப்பைத் தொடர வேண்டும் என்பது ஸ்ரீதிவ்யாவின் கனவு. அவரது பெற்றோரோ பெங்களூரில் வேலை பார்க்கும் ராணாவை ஸ்ரீதிவ்யாவுக்குத் திருமணம் செய்துவைக்கிறார்கள். பெங்களூரில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகிய நால்வருக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல் நிகழ, அதை அவர்கள் எ…
-
- 0 replies
- 350 views
-
-
திரை விமர்சனம்: மனிதன் சில்லறை வழக்கில் சிக்கியவருக்கு பெயில் வாங்கித்தரக்கூட வக்கற்ற ஒரு கற்றுக்குட்டி வழக்கறிஞர், இந்தியாவின் நம்பர் ஒன் வழக்கறிஞரைத் தோற்கடிக்க நடத்தும் தர்ம யுத்தம்தான் ‘மனிதன்’. பொள்ளாச்சி வழக்கறிஞர் சக்தியின் (உதயநிதி ஸ்டாலின்) திறமையின்மையை மீறி அவரைக் காதலிக்கிறார் முறைப்பெண் ப்ரியா (ஹன்சிகா). சக்தியின் அசட்டுத்தனங்களும் தோல்விகளும் அவரது காதலில் நெருடலை ஏற்படுத்த, தன்னை நிரூபித்துக்காட்டச் சென் னைக்கு வருகிறார் சக்தி. இவர் வந்த நேரத்தில் மாநிலமே எதிர்பார்க்கும் ஒரு வழக்கு பரபரப்பா கிறது. குற்றம் சுமத்தப்பட்ட பெரிய இடத்துப் பையன் விடுவிக்கப்படுகிறார். தனது வாதத் திறமையால் அவரை விடுவித்தவர் இந்தியா …
-
- 1 reply
- 371 views
-