Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மோதி விளையாடு’ படத்தில் டிரம்ஸ் சிவமணி நடிக்கிறார். உலகப் புகழ்பெற்ற டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி. சரண் இயக்கும் படம் ‘மோதி விளையாடு’. வினய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரிஹரன், லெஸ்லி இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் கிரீஸ், துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தப் படத்துக்காக, வைரமுத்து எழுதிய, ‘மோதி விளையாடு’ என்று தொடங்கும் பாடல் காட்சியில் ஹரிஹரன், லெஸ்லியுடன் டிரம்ஸ் சிவமணி நடிக்கிறார். இப்பாடலை ஹரிஹரன், லெஸ்லியுடன் இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=451

  2. கோயிலில் அர்ச்சகராக இருக்கும் சிம்பு, அம்மாஞ்சி அம்பி. பருப்பு சாதம் சாப்பிடும் அம்பி, ஒரு கட்டத்தில் ரௌடிகளைக் கொத்து பரோட்டா போடும் சூழல் வருகிறது. 'என்னமோமேட் டருப்பா' என யோசிக்கும்போதே, ஜெயிலில் இருந்து ரிலீஸான பிரபு, சிம்புவைத் தேடி வருகிறார். அங்கே விரிகிறது இன்னொரு சிம்புவுக்கான வீர ஃப்ளாஷ்பேக். பங்காளிச் சண்டையில்ஃப்ளாஷ் பேக் முடிவில் சிம்பு உயிரை விடுகிறார். அதிரடி சிம்புவுக்கும் இந்த அம்மாஞ்சி சிம்புவுக்கும் என்ன தொடர்பு என்பதை ரத்தம், சத்தம், ஆபாசம் தெறிக்கச் சொல்லும் ஆட்டம்! ஐயர் சிம்பு யார் என்பதில் சஸ்பென்ஸ் வளர்த்துக்கொண்டே சென்று, படாரென்று உண்மையை உடைக்கும் இடத்தில் நிமிர்ந்து உட்காரவைக்கிறார் அறிமுக இயக்குநர் சரவணன். மகா மெகா மைனஸ்... நெளியவைக…

  3. நடிகர் சத்யராஜ் ரஜினி தன் மிகச்சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார்.ஓகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது சத்யராஜ் ஆற்றிய உரை நேரடியாக ரஜினியைத் தாக்குவதுபோலவே அமைந்திருந்தது. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரத மேடையில் ரஜினியைப் பாராட்டிப் பேசியது போல இருந்தது. பெரியார் வலைக்காட்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி சத்யராஜ் வழங்கிய சிறப்புச் செவ்வியில் இது குறித்து உண்மையில் ரஜினி பற்றிய உங்கள் கருத்து என்ன? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு சத்யராஜ் பதிலளிக்கையில், உண்மையில் ரஜினி சார் என்னுடைய நெருங்கிய நண்பர். என் மீது மிகவும் அக்கறை கொண்டவர்.ஓகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது நான் ரஜினியை திட்டிப் பேசவில்லை. கர்நாடகத் தமிழர்கள் பிரச்சினையில் அவர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டாரோ வ…

    • 0 replies
    • 1.6k views
  4. நயன்தாராவுக்கும் கோயில்: 'சாதனை' படைக்கத் துடிக்கும் ரசிகர்கள்! ரசிகர்களின் பைத்தியக்காரத்தனத்துக்கும், விளம்பர மோகத்துக்கும் ஒரு முற்றுப் புள்ளியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக திருச்சிக்காரர்கள், இதில் டபுள் பிஎச்டி வாங்குமளவுக்கு தேறிவிட்டார்கள். நடிகைகளுக்கு கோயில் கட்டும் அரிய திருப்பணியை ஆரம்பித்து வைத்தவர்களும் இவர்கள்தான். இவர்களைப் பார்த்து, சும்மா இருக்க முடியாமல் நெல்லையைச் சேர்ந்த சிலர் எங்கோ ஒரு கிராமத்தில் நமீதாவுக்கு கோயில் கட்டியதாக அறிவிக்க, அதை போலீசார் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேட வேண்டி வந்தது. இப்போது மீண்டும் திருச்சியைச் சேர்ந்த சிலர் கோயில் திருப்பணியைத் துவங்கிவிட்டனர். இந்த முறை அவர்களுக்கு நயன்த…

    • 147 replies
    • 18.2k views
  5. நான் கிளாமராக நடித்தால் மட்டும் குற்றம் சொல்கிறார்கள் என்று பிரியாமணி கூறினார்.‘ஆறுமுகம்’ படப்பிடிப்பில் இருந்த பிரியாமணி கூறியதாவது: இந்தப் படத்தில் கிளாமராக நடிக்கிறீர்களாமே என்று கேட்கிறார்கள். நான் கிளாமராக நடித்தால் மட்டும் ஏன் குற்றம் சொல்கிறார்கள். மற்றவர்கள் நடித்தால் அதை பற்றி எதுவும் பேசுவதில்லை. தெலுங்கில் ‘துரோனா’ படத்தில் நீச்சல் உடையில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். நீச்சல் குளத்தில் குளிக்கப் போகும்போது பட்டுச்சேலை கட்டிக் கொண்டு யாரும் குளிப்பதில்லை. சினிமாவில் கிளாமர் தவறில்லை. அதை ஒரு விஷயமாக பேசிக் கொண்டிருப்பதுதான் தவறென்று நினைக்கிறேன். http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=445 -தினகரன்

  6. ரஜினி நடிக்கும் எந்திரன் படத்தின் ஷூட்டிங் 3 நாட்களாக மீஞ்சூரில் நடந்தது. ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தினமும் இரவு 7 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி, மறுநாள் அதிகாலை 3 மணி வரை படப்பிடிப்பு நடந்து வந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, ரஜினி தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டார். கோயம்பேடு 100 அடி ரோடு வழியாக மீஞ்சூருக்கு போய்க் கொண்டிருந்தபோது மணலி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ், கார், வேன் மற்றும் கண்டெய்னர் லாரிகள் நின்றிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர் இரவு 7 மணி வரை மீஞ்சூரை அடை…

  7. இப்போது தான் 2007 ஆண்டு முடிந்தது போல் இருந்தது. உடனே 2009ஆம் ஆண்டு நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம் என்றால் நம்ப முடியவில்லை. வேகமான உலகத்தில் காலச் சக்கரம் அதி வேகமாகச் சுழன்றுகொண்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் வேகம், உலகத் தரத்தை நோக்கிச் செல்லும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. கிராமத்தில் நிலத்தை விற்றுப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எல்லாம் மறைந்து பல கார்ப்பரேட் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் நுழைந்து இருப்பது இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் பல நடிகர், நடிகைகளின் முகத்தில் சந்தோஷம் வரத் தொடங்கியிருக்கிறது. சரி ! இந்த வருடம் வெளிவந்த படங்களை ஒரு பார்வை பார்ப்போம். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி, கமல் படங்கள் ஒரே…

  8. பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா தம்பதியின் மகள் த்ரிஷா. மகள் மீது அதிக பாசம் கொள்ளும் பிரகாஷ்ராஜ், அவள் பள்ளிக்குச் செல்லும்போது ஏற்படும் சிறு பிரிவைக்கூட தாங்க முடியாமல் பரிதவிப்பவர். தந்தையும், மகளும் இணைபிரியாத நண்பர்களாகப் பழகுகின்றனர். த்ரிஷாவுக்கு டெல்லியில் எம்.பி.ஏ படிக்க இடம் கிடைத்து, விஷயத்தைச் சொன்னதும், ‘பொண்ணை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது’ என்று பிரகாஷ்ராஜ் குதிக்கிறார். ஆனால், ஐஸ்வர்யாவின் வார்த்தைகளால் மனம் மாறி டெல்லிக்கு அனுப்புகிறார். இரு வருடங்கள் கழித்து திரும்பி வந்த த்ரிஷா, பஞ்சாப் இளைஞன் கணேஷ் வெங்கட்ராமைக் காதலிப்பதாக வெடிகுண்டு வீசுகிறார். மகள் மீது கொண்ட அதீத பாசத்தால், மனம் உடைந்து சிதறும் பிரகாஷ்ராஜ், திருமணத்துக்கு சம்மதிக்க மறுக்கிறார். பிற…

  9. மலையாள திரையுலகில் இருந்து ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அதிகம் பிரபலமாகாத இவர், தமிழில் நடிக்க தொடங்கிய சில வருடங்களில் நடிகர் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நம்பர் ஒன் நடிகையானார்.தொடர்ந்து தமிழிலிலிருந்து தெலுங்கில் கால் பதித்த நயன்தாரா அங்கும் தனி முத்திரை பதித்தார். தெலுங்கு படஉலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகை என்ற பெயரையும் பெற்றார். தெலுங்கில் டைரக்டர் லிங்குசாமி இயக்கும் பையா படத்திற்காக நயன்தாராவுக்கு ரூ.1.25 கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா நேற்று திருவனந்தபுரம் வந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து க…

  10. பையா படத்தில் நடிக்க மறுத்ததால் நயன்தாராவுக்கு தடை விதிப்பது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது.லிங்குசாமி தயாரித்து இயக்கும் படம் பையா. இதில் கார்த¢தி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் வேடத்துக்கு நயன்தாரா ஒப்பந்தமானார். இப்படத்துக்காக ரூ. 1 கோடியே 25 லட்சம் அவருக்கு சம்பளமாக பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ரூ. 25 லட்சத்தை அட்வான்சாக அவருக்கு வழங்கப்பட்டதாம். இப்படத்தின் ஷ¨ட்டிங் அக்டோபரில் தொடங்குவதாக இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அப்பட ஷ¨ட்டிங் முடியாததால் பையா பட ஷ¨ட்டிங் தள்ளிப்போனது. Ôதனது கால்ஷீட்டை வீணடித்து விட்டதாகவும் இனி அப்படத்தில் நடிக்கும் எண்ணம் இல்லைÕ என்றும் நயன்தாரா கூற¤னார். இதையடுத்த…

  11. தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவனுக்கு அழகான மனைவி அமைந்தால்...? அதனால் ஏற்படும் பிரச்னைதான் ‘திண்டுக்கல் சாரதி’.திருமணத்துக்கு பார்த்த பெண்கள் எல்லோரும், ‘இவரா... மாப்பிள்ளை, வேண்டாம்‘ என்று சொல்ல, வருத்தத்தில் இருக்கிறார் கருணாஸ். புரோக்கர் மூலமாக கார்த்திகாவை பெண் பார்க்கச் செல்கிறார்கள். இவளும் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிடுவாள் என நினைத்து கிளம்ப நினைக்கிறார் கருணாஸ். ஆனால், மாப்பிள்¬ளையை பிடித்திருக்கிறது என்கிறார் கார்த்திகா. ஆச்சர்யமடையும் கருணாஸ், சந்தோஷத்தில் திக்குமுக்காடுகிறார். அழகான மனைவி அமைந்ததில் அவர் மீது வைக்கும் பாசம் எல்லை மீறி போகிறது. சந்தேகமடைகிறார். விவகாரம் பெரிதாகி, குடும்பத்தில் பிரச்னை. தனது வீட்டுக்குச் சென்றுவிடுகிறார் கார்த்திகா. பிறகு எ…

  12. விஜய், நயன்தாரா நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் வில்லு. இந்தியில் ட்டான சோல்ஜர் படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி டியூப் தமிழ் என்ற வெப்சைட்டில் வெளியாகியுள்ளது. இதில் வில்லன் கூட்டத்தாருடன் விஜய் மோதுவது போன்ற சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்த வில்லு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படப்பிடிப்பு முடியாத நிலையில் சண்டைக் காட்சி எப்படி இன்டர்நெட்டில் வெளியானது என படக்குழு குழப்பத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ரஜினியின் சிவாஜி படத்தின் மூன்று பாடல்கள் இதே போல இன்டர்நெட்டில் வெளியானது. சில மாதங்களுக்கு முன் வாரணம் ஆயிரம் படத்தின் இரண்டு பாடல…

  13. Land and freedom Best Film, European Film Awards 1995 Director: Ken Loach கென் லொக்கின் மற்றும் ஒரு சமூக அரசியற் படம்.பிராங்கோவின் பாசிசத்துக்கு எதிரான ஸ்பானிய மக்களின் குடியருசுக்கான போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு , நிகழ்கால அரசியலை விமர்சனமாக்கும் திரைப்படம். படத்தின் நாயகன் இங்கிலாந்தின் லிவபூலில் இருந்து ஸ்பெயினுக்கு மிலிசியாக்கள் என்னும் மக்கள் படைகளுடன் சேர்ந்து போராடச் செல்கிறான்.இங்கிலாந்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கதுவனானவன் ஸ்பெயினில் நடக்கும் மக்கள் புரட்சியில் தன்னை மற்றைய சர்வதேசப் புரட்சியாளர்களுடன் இணைத்துக் கொள்கிறான். மக்களுடன் மக்களாக முன்னணிக் காப்பரணில் பல்வேறு நாட்டு சோசலிஸ்ட்டுக்கள்,தொழிலாளர்க

  14. ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகை பார்கவி நேற்று தனது காதலரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். காதலியைக் கொன்ற பின்னர் காதலரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். குண்டூர் மாவட்டம் கோரன்வாலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பார்கவி. ஏராளமான டிவி தொடர்களில் நடித்துள்ளார். பின்னர் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி, நாயகியாக மாறி தற்போது பிரபல வளரும் நடிகையாக நடித்து வந்தார். இவர் நடித்த ஹாலிடேஸ் என்ற படம் ஹிட் ஆகவே, பிரபல நடிகைகள் வரிசையில் இணைந்தார். ஹைதராபாத்தில், தனது தாயாருடன் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவரும், மேடைப் பாடகரான புஜ்ஜி என்கிற பிரவீனும் காதலித்து வந்தனர். ஆனால் இந்தக் காதலை பார்கவியின் தாயார் ஏற்றுக் கொ…

    • 6 replies
    • 2.8k views
  15. ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ (ரோபோ) படத்தை தயாரிப்பதாக இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் அறிவித்துள்ளது. சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் ஒரு அங்கமான சன் பிக்சர்ஸ், பெரும் பொருட்செலவில் இந்தியாவிலேயே மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். பிரமாண்டம், புதுமை, உருவாகும் விதம் என அனைத்து வகையிலும் இது மிகப்பெரிய படமாக உருவாகும். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா தெரிவித்தார். வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் …

    • 1 reply
    • 1.9k views
  16. ‘சிங்கம்’ படத்தின் கதை விவாதம், சென்னையில் நடந்து வருகிறது. ஏப்ரலில் ஷ¨ட்டிங் தொடங்குகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிக்கிறார். ‘காக்க காக்க’ படத்துக்குப் பிறகு மீண்டும் காக்கிச்சட்டை போடுகிறார், சூர்யா. தற்போது ‘அயன்’ படத்துக்கான விடுபட்ட காட்சிகளின் ஷ¨ட்டிங்கில் இருக்கும் அவர், அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டே ‘சிங்கம்’ படத்தில் நடிக்கிறார். இவ்விரு படங்களுக்குப் பின், மிஷ்கின் டைரக்ட் செய்யும் படம், சம்பத் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் என, மேலும் இரு படங்களில் நடிக்கிறார் சூர்யா. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=429

  17. ஸ்லம்டாக் மில்லியனர் ஆங்கில படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு லண்டன் விமர்சகர்கள் விருது வழங்கப்பட்டது.லண்டனை சேர்ந்த டேனி போய்லே இயக்கியுள்ள ஆங்கில படம் ஸ்லம்டாக் மில்லியனர். மும்பை குடிசை பகுதியில் வாழும் 18 வயது இளைஞன், டிவியில் நடக்கும் கேம்ஷோவில் பங்கேற்கிறான். அதில் அவன் ஜெயித்து மில்லியனர் ஆவதுதான் படக்கதை. கேம் ஷோ நடத்துபவராக அனில் கபூர் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். லண்டன் சினிமா விமர்சகர்கள் சங்கத்தினர் இப்படத்தை பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளனர். அதில் சிறந்த இசைக்காக ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், Ôஇப்பட இயக்குனர் டேனி போய்லே எனது நண்பராகிவிட்டார். இப்படத்தில் பின்னணி இசை, அதி…

  18. நடிகை சங்கீதா - பின்னணி பாடகர் கிரீஷ் திருமணம் பிப்ரவரி 1-ம் தேதி நடக்கிறது. 'உயிர்’, ‘தனம்’ உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சங்கீதா. ‘உன்னாலே உன்னாலே’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ உட்பட பல படங்களில் பாடியவர் கிரீஷ். இவர்கள் இருவரும் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது நட்பு ஏற்பட்டு, பிறகு காதல் மலர்ந்தது.இந்நிலையில், தமிழில் புதுப்படம் ஒப்புக்கொள்ளாததால் சங்கீதாவுக்கும், கிரீஷ§க்கும் ரகசிய திருமணம் நடந்ததாக சினிமா வட்டாரத்தில் வதந்தி பரவியது. அப்போது, ‘யாரையும் காதலிக்கவில்லை’ என்றார் சங்கீதா. ஆனால் ‘நானும், சங்கீதாவும் 7 மாதங்களாக காதலித்து வருகிறோம்’ என்று கிரிஷ் அளித்த பேட்டியில் உண்மையைப் போட்டு உடைத்தார். பிறகு சங்கீதா…

  19. கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நாணல் என்ற தொடர் மூலமாக சோனியா அகர்வால் சின்னத்திரையில் கால் பதிக்கிறார்.புயல் வீசும்போது ஆலமரம் கூட வேரோடு சாய்ந்துவிடும். ஆனால் அதன் அருகில் இருக்கும் நாணலோ எந்த பாதிப்பும் இன்றி நிமிர்ந்து நிற்கும்.பெண் என்பவளும் அதுபோலத்தான், தேவைப்படும் நேரத்தில் வளைந்து கொடுக்கும் பெண், பிரச்சினை என்று வரும்போது நிமிர்ந்து நின்று பதிலடி கொடுப்பாள். இந்த கதையையே மையமாகக் கொண்ட தொடர்தான் நாணல். இந்த தொடரின் கதை உருவாக்கத் தலைமையாக குஷ்பு சுந்தர் உள்ளார். கதை முடிவானதும் இந்த பாத்திரத்திற்கு யாரை போடுவது என்று யோசித்ததும் சட்டென நினைவுக்கு வந்தவர் சோனியா தான் என்கிறார் குஷ்பு. மேலும் இந்த தொடரில் ஸ்ரீ, ஏ.ஆர்.எஸ். ரேவதி சங்கரன், ஜோக்கர் துளசி, ப…

  20. லிங்குசாமி படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்தது தெரியாது என்றார் தமன்னா. லிங்குசாமியின் பையா படத்தில் கார்த்தி ஜோடியாக நயன்தாரா நடிக்க இருந்தார். அதற்காக ரூ.1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டது. திடீரென்று சம்பளத்தை குறைக்கச் சொல்லி லிங்குசாமி தரப்பில் கேட்கப்பட்டது. அதை ஏற்காமல் படத்திலிருந்து விலகினார் நயன்தாரா. இதையடுத்து தமன்னா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுபற்றி தமன்னாவிடம் கேட்டபோது, இதுவரை இப்படத்தில் என்ன நடந்தது என்பது தெரியாது. படத்திலிருந்து ஹீரோயின் விலகுகிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். எனக்கு மற்றவர்களுடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஏற்ற வேடங்களில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டி போடுகிறேன் என்…

  21. த்ரிஷா- நயன்தாரா இடையேயான பனிப்போர், பையா படத்திலும் தொடர்கிறது. முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதில் த்ரிஷா-நயன்தாராவுக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. ரஜினியின் சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷாவை நடிக்க கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். அந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றது. குருவியில் விஜய் ஜோடியாகவும், சத்யம் படத்தில் விஷால் ஜோடியாகவும் நடிப்பது யார் என்பதில் த்ரிஷா-நயன்தாராவுக்கு இடையே நடந்த போட்டி திரையுலகினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்பிரச்னையில் நயன், த்ரிஷா இருவரும் தலா ஒரு படத்தில் ஜோடி சேர்ந்தனர். இந்நிலையில் லிங்குசாமி இயக்கும் ÔபையாÕ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ரூ.1 கோடிக்கும் அதிகம…

  22. முறைப்பையன் தங்கராசுவை பார்வதி காதலிக்கிறாள். காத்திருக்கிறாள். கசிந்துருகி கதறுகிறாள். இதுதான் கதை. ``அந்தப் புள்ளை பாவம்பா. சீக்கிரமா ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு கதைய முடிங்க'' என ஒட்டுமொத்த ஆடியன்ஸையும் புலம்பவிட்டு, ``இதெல்லாம் தப்பு... சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா பொறக்குற குழந்தை சுகவீனமாயிடும்''னு பிரசார நெடியுடன் முடிகிறது `பூ'. செம்மண் புழுதி படிந்த சிவகாசி மண்ணுக்கு, புதுமுகம் பார்வதி `பூ' மாதிரி சரியாகப் பொருந்துகிறார். படத்தின் ஆரம்பத்தில் வரும் மளிகைக்கடை காட்சிகளும், கணவன்-மனைவி அன்னியோன்யமும் `பளிச்'. குறிப்பாக, பார்வதிக்குக் கணவராக வரும் அந்த நபர், வெகுவாகக் கவர்கிறார். இயல்பான காட்சிகளைப் பார்த்து `அடடே...' போட்டுக் கொண்டிருக்கும்போதே த…

    • 0 replies
    • 1.3k views
  23. மூத்த மகன் விஷாலின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்த பிரபுதேவா, சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 'வில்லு' ஷ¨ட்டிங்கில் கலந்துகொண்டார். நேற்று சென்னை மீனம்பாக்கம் அருகிலுள்ள வீட்டில், தன் மகன் விஜய்யுடன் ரஞ்சிதா நடித்த காட்சிகளை பிரபுதேவா இயக்கினார். இதில் நயன்தாரா, கீதாவும் நடித்தனர். பிறகு பின்னி மில்லில் விஜய், நயன்தாரா நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=419

    • 0 replies
    • 1.5k views
  24. அன்பும் கலகலப்பும் பொங்கி வழியும் கூட்டுக் குடும்பத்தின் செல்லப் பிள்ளை ஷக்தி. கடைசி தங்கை கீர்த்தனாவுக்கு (சரண்யா மோகன்). நல்ல இடத்திலிருந்து சம்பந்தம் பேச வருகிறார்கள். அண்ணனுக்கும் மாப்பிள்ளை பிடித்தால்தான் கல்யாணத்துக்கு சம்மதிப்பேன் என்கிறார் கீர்த்தனா. சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் ஷக்தி கும்பகோணம் வருகிறார். தங்கையின் மாப்பிள்ளையை பார்த்து ஓ.கே. சொல்ல, கல்யாண ஏற்பாடுகள் பரபரக்கிறது. இந்த சந்தோஷ நிகழ்ச்சிக்கு இடையில் சென்னையில் தனக்கும் சந்தியாவுக்கும் இடையேயான காதல் கதையை சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார் ஷக்தி. சாவின் விளிம்பில் இருக்கும் தன் அம்மாவின் ஆசைக்காக மகனின் திருமணத்தோடு மகளின் திருமணத்தையும் நடத்த நினைக்கிறார்கள் சம்பந்தி வீட்டார்கள். …

    • 0 replies
    • 1.3k views
  25. நயன்தாரா கால்ஷீட்டை நாங்கள் வீணாக்கவில்லை என்றார் தயாரிப்பாளர் போஸ். லிங்குசாமி இயக்கும் பையா படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். போஸ் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடிக்கும் அதிகமாக நயன்தாராவுக்கு சம்பளம் பேசப்பட்டது. இதுவரை எந்த நடிகைக்கும் இவ்வளவு அதிக சம்பளம் தராததால் இது தமிழ் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், Ôசம்பளத்தை குறைக்கக் கூறியதால் லிங்குசாமி படத்திலிருந்து விலகுவதாக நயன்தாரா அறிவித்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் போஸ் கூறியதாவது: நயன்தாராவுக்கு முதலில் பேசப்பட்ட சம்பளத்தை, சமீபத்தில் குறைத்துக்கொள்ள சொன்னது உண்மைதான். சமீபகாலமாக ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.