வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
கமலை படமெடுக்கும் அக்ஷரா! -வாரிசுகளால் பெருமைப்படும் அப்பாக்கள்! ரஜினியின் பாபா படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் தன் வீடியோ கேமிராவில் பதிவு செய்திருந்தார் அவரது மகள் ஐஸ்வர்யா. அந்த படம் எப்படி உருவானது என்பதை தனி வீடியோ தொகுப்பாக போடவும் திட்டம் வைத்திருந்தார் அவர். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த வீடியோ தொகுப்பு வெளியிடப்படவே இல்லை. அது போலவே தன் அப்பா கமல் நடிக்கும் தசாவதாரம் படப்பிடிப்பை வீடியோவில் படம் பிடித்து வருகிறார் அக்ஷரா! பத்து கெட்டப்புகளில் தோன்றும் கமல், மேக்கப்புக்காக செலவிடும் நேரம், சிரமம் எல்லாவற்றையும் ஷ§ட் பண்ணுகிறாராம். இதுவாவது வீடியோ பதிவாக வெளிவருமா? அதிருக்கட்டும்.... கமலின் மற்றொரு மகள் ஸ்ருதி இசையை முறையாக படித்து வருகிறார். தமிழில் …
-
- 0 replies
- 782 views
-
-
நான் சேகரித்த சினிமா ஞானம் அழிந்து போய்விட கூடாது! பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா Ôசினிமா பட்டறைÕ என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் சென்னை சாலிகிராமத்தில் இந்த சினிமா பள்ளி செயல்பட ஆரம்பிக்கும். 40 ஆண்டுகளாக நான் சினிமாவில் சேகரித்த அனுபவமும், ஞானமும் என்னோடு அழிந்து போக கூடாது. அதற்காகதான் இந்த சினிமா பட்டறையை துவங்கியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் பாலுமகேந்திரா. இங்கு ஒளிப்பதிவு, டைரக்ஷன், நடிப்பு ஆகிய மூன்று துறைகளுக்கான வகுப்புகளை முதல் கட்டமாக துவங்க இருக்கிறார்களாம். எல்லாமே ஒரு வருட படிப்பு என்று கூறும் இயக்குனர், இது குருகுலம் போல் செயல்படும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார். …
-
- 0 replies
- 629 views
-
-
தமிழுக்கு வரும் ஜெமினி மகள்! பாலிவுட்டின் செக்ஸ் சிம்பலாக பல காலம் கலக்கிய காதல் மன்னன் ஜெமினி கணேசன் அழகு மகள் ரேகா, வயது போன காலத்தில் தமிழில் நடிக்க வருகிறார். அந்தக் காலத்து கனவுக் கன்னிகளில் முக்கியமானவர் ரேகா. ஜெமினியின் மகளான இவர் இதுவரை தமிழில் ஒரு படத்தில் கூட தலை காட்டியதில்லை. பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ரேகா. ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா என பெரும் தலைகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்த காலத்தில் தனது பாணியில் ரசிகர்களை தக தக்க வைத்தவர் ரேகா. கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம், பிரபல இயக்குநர்கள், சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ரேகா. பாலிவுட்டில் படு பிரபலமாக இருந்தபோதிலும், கோலிவுட்…
-
- 7 replies
- 12.4k views
-
-
காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்தியை மறுத்திருக்கும் நந்திதா சினிசவுத்துக்கு சுடச்சுட பேட்டியளித்திருக்கிறார். வீட்டை எதிர்த்துக்கொண்டு ஒளிப்பதிவாளரை நந்திதா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக நமது இணைய தளத்தில் நேற்று செய்தி வெளியிட்டோம். செய்தி வெளியான சில மணி நேரங்களில் நந்திதாவிடமிருந்து போன் வர நறநறக்க ஆரம்பித்துவிட்டார். 'உண்மையை சொல்லுங்க அம்மணி.. அப்படியே போடுகிறோம் செய்தியை' என்றதும் ரிலாக்ஸாக பேச ஆரம்பித்தார். "இதுவரை நான் 25 படங்களில் நடித்திருக்கிறேன். 2005-ல் 'ஈசல்' என்ற குறும்படத்தில் நடித்தேன். அந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த காசியுடன் அப்போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் என்னை காதலிப்பதாக காசி சொன்னார். எனக்கு…
-
- 0 replies
- 762 views
-
-
வாட் இஸ் யுவர் நேம்? என்று கேட்டால்கூட சிரிப்பையும் சிணுங்கலையும் வெளிப்படுத்தும் சிரிப்பழகி லைலா. தனது கன்னக்குழியழகில் தமிழ் சினிமா ரசிகர்களை தடுமாறி விழவைத்த லைலா, கடந்த வருடம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலேயே கல்யாணம் கட்டிக்கொண்டு மும்பையில் குடிபுகுந்தார். பால் கணக்கில் ஆரம்பித்து கணவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து போடுவதுவரை முழுமையான இல்லத்தரசியாக மாறிவிட்ட லைலா விரைவில் அம்மா ஸ்தானத்தையும் அடையப்போகிறாராம். இப்போது அவர் சிலமாத கர்ப்பமாக இருக்கிறாராம். குழந்தையின் ஆரோக்கியம் கருதி ஆறுமாதம் வரை லைலாவை ஒய்வெடுக்க சொல்லி டாக்டர் அறிவுறுத்தியிருக்கிறாராம். லைலா மீண்டும் நடிக்க வேண்டுமென்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு லைலாவின் பதில் எ…
-
- 0 replies
- 774 views
-
-
எ°ஜே.சூர்யா போட்ட ஆட்டம்-அதிர்ச்சியில் உறைந்த டைரக்டர் கலைப்புலி தாணு தயாரிப்பில் எ°.ஜே.சூர்யா, மாளவிகா, மீராஜா°மின், ப்ரீத்தி வர்மா, கார்த்திகா என பலர் நடிக்க டைரக்டர் ரத்னகுமார் இயக்கிய "திருமகன்" பட விவகாரத்தில் ஆபாச காட்சிகளை சேர்க்கமாட்டேன் என்று சொன்ன டைரக்டருக்கு எதிராக எ°.ஜே.சூர்யாவும் தாணுவும் களமிறங்கி மோதிக்கொண்டார்கள். இதனால் ரத்னகுமார் பெயரையே தாணு இருட்டடிப்பு செய்தது பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தோம். தாணு மீதும் எ°.ஜே. சூர்யா மீதும் தயாரிப்பாளர் சங்கத்திலும் இயக்குநர்கள் சங்கத்திலும் புகார் கொடுத்திருந்தார் ரத்னகுமார். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் இந்தப் பிரச்சினையை கை கழுவிவிட்டது. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி இயக்குநர்கள் சங்க செயற்குழு கூட்டத்த…
-
- 0 replies
- 965 views
-
-
சிம்பு சிக்குவாரா நயன்தாராவும் சிம்புவும் காதலித்துக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி பெரிய பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது. இதனால் சிம்புவுடன் பழகிய மற்ற நடிகைகளும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். சிம்புவும் நயன்தாராவும் நெருங்கி உறவாடும் இந்தப் படம் துபாயில் எடுக்கப்பட்டிருக்கிறது. துபாயில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தெலுங்கு பிரபலங்களும் தமிழ் பிரபலங்களும் போயிருந்தார்கள். அப்போது சிம்புவின் ஆட்டத்தை ரசிக்க நயன்தாராவும் போயிருந்தார். அங்கு தங்கியிருந்த இடத்தில் தான் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுத்தது யார்? இந்தக் கேள்விக்கு விடை தேடி கோலிவுட்டை துளாவினோம். …
-
- 0 replies
- 815 views
-
-
சிபிக்காக சத்யராஜ் செய்த முதலீடு! சினிமாவில் என்னதான் பெரிய நடிகரின் வாரிசாக இருந்தாலும் தனிப்பட்ட திறமை இருந்தால் தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பதற்கு இங்கே நிறைய உதாரணங்களை சொல்லலாம். அந்த வகையில் சத்யராஜின் வாரிசு சிபியும் ஒருவர். இருபத்தி ஐந்து வருஷமாக சினிமாவில் இருக்கும் சத்யராஜ் "வல்லவனுக்கு வல்லவன்" படத்தை எடுத்து கையை சுட்டுக் கொண்ட பிறகு படம் தயாரிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். தன் வாரிசுக்காக அந்த கொள்கையை தளர்த்தி அவர் எடுத்த படம்தான் "லீ". மொத்த படத்துக்கும் செய்யப்பட்ட செலவு மூன்று கோடியே இருபது லட்சம் ரூபாய். ஆனால் படம் ரிலீஸாகும் போது வியாபாரம் செய்த வகையில் சத்யராஜின் கைக்கு திரும்பி வந்த பணம் ஒரு கோடியே இருபது லட்சம் மட்டும…
-
- 0 replies
- 836 views
-
-
இயக்குநர் அமீர் கொடுத்த வாழ்க்கை! கிட்டத்தட்ட முப்பது படத்துக்குமேல் ஹீரோவாக நடித்து ஒரு காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகர் சரவணன். நடுவில் தப்பான சில படங்களால் மொத்தமாக வீட்டில் உட்காருகிற நிலைமைக்கு ஆளாகி விட்டார். அப்படி இருந்தவருக்கு நடுவில் கிடைத்த வாய்ப்பு நந்தா. அதிலும் கூட பாலா அவரை சரியாக பயன்படுத்தவில்லை. இதை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் அமீர் நான் படம் பண்ணும் போது நல்ல வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக கூப்பிடறேன் என்று சொல்லியிருந்தாராம். அதை மனதில் வைத்துக் கொண்டு பருத்தி வீரன் படத்தில் ஹீரோ கார்த்தியின் சித்தப்பா கேரக்டர் ஒன்றைக் கொடுத்தார். படம் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஊரிலிருந்து... …
-
- 0 replies
- 719 views
-
-
சிவாஜி ட்ரெயிலருக்காக விட்டுக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்! "காக்க காக்க" படத்தின் மூலம் பா°ட் கட்டிங் (குயளவ ஊரவவiபே) என்ற யுக்தியை எடிட்டிங்கில் புகுத்தியவர் ஆண்டனி. அதனை தொடர்ந்து °டைலான படங்களை விரும்புகிற இயக்குனர்களுக்கு இவர்தான் ஆ°தான எடிட்டர். இவர் பணிபுரியும் படங்களின் ட்ரெயிலர் காட்சிகளை இயக்குனர் இல்லாமலேதான் கட் பண்ணுவார். மேலும் அதற்கான இசையையும் இவரே ஏதாவது ஆங்கில பட சி.டி அல்லது ஆல்பத்திலிருந்து எடுத்து பயன்படுத்தி கொள்வார். இதற்கு ஒப்புக் கொண்டு தான் இயக்குனர்கள் அவரை ஒப்பந்தம் செய்வார்கள். "சிவாஜி" படத்துக்கும் இவர்தான் எடிட்டர். படம் முடிந்த நிலையில் மார்ச் முதல் வாரம் படத்துக்கான ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடக்கப் போகிறது. அதற்காக டி.வி மற்ற…
-
- 351 replies
- 35k views
-
-
யாருமே விரும்பியோ விரும்பாமலோ தம் வாழ்வியலில் கடக்கவேண்டிய கடைசி அத்தியாயம் இந்த முதுமை.முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், கழிந்து போன பந்தங்களையும் அது தேடி ஓடுகின்றது என்று. அதுதான் "மனசினக்கரே" படத்தின் அடி நாதம், முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/03/blog-post.html
-
- 0 replies
- 933 views
-
-
ஏப்ரலில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி மே மாதம் நிறைவடைகிறது. பிறகு போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள். ஜுன் - ஜுலையில் திரைக்கு வந்துவிடும் கமலின் 'தசாவதாரம்!' கமலுக்கும் சரி தமிழ் திரையுலகுக்கும் சரி இது மற்றுமொரு திரைப்படம் அல்ல, ஒரு சாதனை! உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகர் ஒரே படத்தில் பத்து வேடங்களை இதுவரை ஏற்று நடித்ததில்லை. 'தசாவதாரம்' அதனை உடைக்கிறது. இதில் கமலுக்கு பத்து வேடங்கள். படத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை. ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே 'தசாவதாரம்.' இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கம…
-
- 0 replies
- 1.4k views
-
-
அக்பர் பீர்பால் User name: lovetack.com Password: oruwebsite.com http://oruwebsite.com/movies/tamil_kids_videos/kathai1.html
-
- 8 replies
- 2.1k views
-
-
இதற்கு முன்பும் பல பாடல்கள் பாடியிருக்கிறார் சிம்பு. ஆனால் இப்போது பாடியிருப்பது அசலான சிச்சுவேஷன் பாடல். பரதன் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் 'நீ நான் நிலா.' படத்தை சிவக்குமார் என்பவர் இயக்குகிறார். இரண்டு ஹீரோக்கள். இருவருமே புதுமுகங்கள். ஒருவர் பரதன், இன்னொருவர் ரவி. இரண்டு ஹீரோக்களுக்கும் சேர்த்து ஒரு ஹீரோயின். தமிழ் நாட்டில் யாரும் அகப்படாமல் குஜராத் சென்று நாயகியை அழைத்து வந்திருக்கிறார்கள். இவர் ஒரு மாடல். பெயர் மேக்னா. தமிழுக்கு இவர் புதுசு. இந்தப் படத்தில் கலகலப்பான பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதனை சிம்பு பாடினால் நல்லாயிருக்குமே என இயக்குனருக்கு ஓர் எண்ணம். சிம்புவிடம் கேட்டதும் மறுக்காமல் ஒப்புக் கொண்டார். உயிருக்குயிராக காதலித்தேன்... ஆனால் கவி…
-
- 1 reply
- 1.2k views
-
-
எம்.ஆர்.ராதா பரம்பரையில் அடுத்த நட்சத்திரம் சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் என்பது ஒரு தொடர்கதைதான். அந்த வரிசையில் தற்போது இடம் பெற்றிருப்பவர் ரேயான். கிழக்கேப்போகும் ரயில் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தை தொட்டவர் ராதிகா. தற்போது சினிமா மற்றும் தொலைகாட்சி சீரியல் நடிப்பிலும், தயாரிப்பிலும் கலக்கி வருகிறார். ராதிகாவுக்கும் லண்டன் கணவருக்கும் பிறந்தவர்தான் இந்த ரேயான். வாலிப வயதை எட்டிவிட்ட ரேயானை ஹீரோயினாக்க முடிவு செய்துள்ளார் ராதிகா. அதனால் நல்ல கதையாக இருந்தால் சொல்லுங்கள் என்று இயக்குனர்களிடம் கூறியுள்ளாராம். அதனால் தற்போது புதிய இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் ராதிகா வீட்டிற்கு நடையாய் நடந்து வருகிறார்கள். …
-
- 0 replies
- 962 views
-
-
ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு மார்டின் ஸ்கோர்ஸேஸே உலக அளவில் திரைப்படத் துறையில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் ஹாலிவுட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருது மார்டின் ஸ்கோர்ஸேஸே இயக்கிய தி டிபார்டட் என்கிற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற குற்றச் செயல்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநருக்கான விருதையும் அவர் பெற்றார். சிறந்த நடிகருக்கான விருது தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து என்கிற படத்தில் உகாண்டாவின் முன்னாள் அதிபாரான இடி அமினாக நடித்த பாரஸ்ட் விட்டேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்…
-
- 7 replies
- 1.3k views
-
-
நடிகையாகிறார் வீரப்பன் மனைவி வீரப்பன் திரைப்படத்தில் முத்துலட்சுமி : ராஜ்குமார் வேடத்தில் நாகேஸ்வரராவ் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் பெங்களூரு: "வீரப்பன்' திரைப்படத்தில் முத்துலட்சுமி, ராஜ்குமார் வேடத்தில் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ், போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் நடிக்கின்றனர். "வீரப்பன்' வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ரமேஷ் திரைப்படமாக இயக்க முடிவு செய்தார். இதற்கு தடை விதிக்க கோரி முத்துலட்சுமி நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றத்திலிருந்து முத்துலட்சுமி வழக்கை வாபஸ் பெற்றதால், இந்த பிரச்னை தற்போது சுமூக நிலையை அடைந்தது. எனவே படப்பிடிப்பை தொடங்க முழு மூச்சில் இறங்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ். ராஜிவ் காந்தி கொலையில் தொடர்புடைய சிவராசன…
-
- 2 replies
- 2k views
-
-
தேசிய விருதுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் மதிக்கப்படும் சினிமா விருது, ஆங்கிலப் பத்திரிகையான பிலம்பேர் அளிப்பது. வருடாவருடம் இந்திப் படங்களுக்கும் பாலிவுட் கலைஞர்களுக்கும் விருது வழங்குகிறவர்கள் சில வருடங்களாக தென் மாநில மொழிப் படங்களுக்கும் விருதுகள் வழங்குகிறார்கள். இவ்விரு நிகழ்ச்சிகளும் தனித்தனியே நடத்தப்படும். நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தி படங்களுக்கான விருது வழங்கும் விழாவில் சில சுவாரஸியங்கள். சென்ற வருடத்தின் சிறந்த துணை நடிகருக்கான விருது அபிஷேக்பச்சனுக்கு அளிக்கப்பட்டது. இவ்விருதினை அவரது வருங்கால மனைவி ஐஸ்வர்யா ராய் அளித்தார். இதேபோல் வாழ்நாள் சாதனையாளர் விருது ஜெயபச்சனுக்கு வழங்கினர். இவ்விருதை அவரது கணவர் அமிதாபச்சன் வழங்கியபோது அரங்கில் கைதட்ட…
-
- 1 reply
- 757 views
-
-
நண்பர்களே உங்களில்யார்யார் இவ் திரைப்படத்தை என்னை பொறுத்தவரை இது படமல்ல காவியம் பார்த்தநீர்கள் பார்காதவர்கள் தயவுசெய்து உடனே பார்க்கவும். http://blooddiamondmovie.warnerbros.com/
-
- 13 replies
- 2.3k views
-
-
மாற்றமே மாறாதது என்ற மார்க்ஸின் புகழ்பெற்ற வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ... சிம்புவுக்கு நூறுசதம் பொருந்தும். கதாநாயகியை மாற்றுவது, ஒளிப்பதிவாளர்களை மாற்றுவது, சமயத்தில் தயாரிப்பாளர்களையே மாற்றுவது சிம்புவின் சினிமா கேரியரில் சகஜம். 'வல்லவன்' படத்திற்குப் பிறகு தருண்கோபியின் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இப்போது இதிலும் சிறிய மாற்றம். சிம்புவின் புதிய படத்தை ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்குகிறார். படத்திற்கு 'சிலம்பாட்டம்' என பெயர் வைத்திருக்கிறார்கள். சிம்புவின் புதிய படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிப்பதாக இருந்தது. இப்போது இதுவும் மாறியிருக்கிறது. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தருண்கோபியிடம் கதை கேட்டிருந்தார். அவர் இயக்கும் படத்தைதான் தயாரிப்…
-
- 0 replies
- 839 views
-
-
நிஜமான அனுபவம் கலக்கும் எந்தவொரு படைப்பிலும் ஜீவன் இருப்பது நிச்சயம். அப்படி தன்னை பாதித்த சொந்த அனுபவத்திற்கு சிபியை நாயகனாக்கி 'லீ'யை தந்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். கொக்கி மூலம் கரனுக்கு திருப்புமுனையை கொடுத்த பெருமை இவரை சாரும். 'கோவை, மதுரைன்னு தெக்கத்தி ஏரியாவுல படம் சூப்பரா போகுதுங்க.. ' என லீ லாபம் ஈட்டும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டவரிடம்... விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையை படமாக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? "கொக்கி முடிந்த கையோடு சத்யராஜ் சார் என்னை கூப்பிட்டு சிபிக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை பண்ண சொன்னார். அடுத்த நிமிஷமே என் சொந்த வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்தது. நெய்வேலி செயிண்ட் பால் பள்ளியில்தான் நான் படித்தேன்.…
-
- 0 replies
- 889 views
-
-
சினிமாவில் யார் அழகு வானில் தவழும் நிலா, தரையில் தவழும் குழந்தை இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது? பி.ஜாக்குலின், குடிக்காடு. நிலா என்பது வளர்ந்த குழந்தை. குழந்தை என்பது வளரும் பிறை. என்னைக் கவர்ந்தது தரையில் தவழும் குழந்தைதான். ஏனென்றால்_ வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு; வளரும் பிறைக்குக் கறை இல்லை. செம்மொழி என்றால் என்ன? எம்.கந்தகுப்தன், இளம்பிள்ளை. ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண இலக்கியத் தொடர்ச்சியுள்ள மொழி; தன்னிலிருந்து சில மொழிகளை ஈன்று கொடுத்த மொழி; இன்னும் உயிருள்ள மொழி; உலகப் பண்பாட்டுச் செழுமைக்குப் பங்களிப்புச் செய்த மொழி இவை போன்ற தகுதிகளால் உலகத்தின் ஐந்தே மொழிகளில் ஒன்றாகத் திகழும் நம் மொழி செம்மொழி. இலக்கிய கூ…
-
- 0 replies
- 1.5k views
-
-
சமீபகாலமாக பத்திரிகை செய்திகளில் அடிப்பட்டுக்கொண்டிருக்கும
-
- 0 replies
- 870 views
-
-
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. கால்பந்து அளவுக்கு பிரபலமானதல்ல கிரிக்கெட். ஆயினும் இங்கிலாந்து மற்றும் அதன் காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் கால்பந்தை விட கிரிக்கெட்டிற்கே மதிப்பு அதிகம். இந்தியா கிரிக்கெட் விளையாடும் தினங்களில் சாலைகள் வெறிச்சோடி விடும். முக்கியமாக திரையரங்குகள். பார்வையாளர்களை கிரிக்கெட் ஈர்த்துக் கொள்வதால் திரையரங்குகள் காற்று வாங்கும். உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறும் காலத்தில் திரையரங்கை கிரிக்கெட் ஒளிபரப்பும் அரங்கமாக மாற்றிய நிகழ்வுகள் இந்தியாவில் நடந்ததுண்டு. ஜனங்களின் இந்த கிரிக்கெட் பீவர் திரையுலகிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பட வெ…
-
- 1 reply
- 1.1k views
-
-
வரும் ஜுலையுடன் அப்துல்காலமின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிகிறது. மீண்டும் அவரே ஜனாதிபதியாக வேண்டும் என்பது பலரது விருப்பம். தேசிய, மாநில கட்சிகள் சிலவும் இதையே விரும்புகின்றன. ஆனால், கலாமின் விருப்பம் வேறு. பதவியை துறந்து பேராசிரியராக வேண்டும் என்பது அவரது ஆசை! அப்படியானால் அடுத்த ஜனாதிபதி யார்? சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரும் அமிதாப்பச்சனின் குடும்ப நண்பருமான அமர்சிங் அடுத்த ஜனாதிபதியாக அமிதாப்பச்சனின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். இதனை வழிமொழிந்திருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி. இந்தியர்களின் நல்ல நேரம், அரசியல்வாதிகளின் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை அமிதாப். "நண்பர்களின் இந்த பேச்சு மனதை தொட்டது. ஆயினும் ஜனாதிபதியாக நான் தகுதியி…
-
- 2 replies
- 1.3k views
-