வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
நிஜமான அனுபவம் கலக்கும் எந்தவொரு படைப்பிலும் ஜீவன் இருப்பது நிச்சயம். அப்படி தன்னை பாதித்த சொந்த அனுபவத்திற்கு சிபியை நாயகனாக்கி 'லீ'யை தந்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். கொக்கி மூலம் கரனுக்கு திருப்புமுனையை கொடுத்த பெருமை இவரை சாரும். 'கோவை, மதுரைன்னு தெக்கத்தி ஏரியாவுல படம் சூப்பரா போகுதுங்க.. ' என லீ லாபம் ஈட்டும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டவரிடம்... விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையை படமாக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? "கொக்கி முடிந்த கையோடு சத்யராஜ் சார் என்னை கூப்பிட்டு சிபிக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை பண்ண சொன்னார். அடுத்த நிமிஷமே என் சொந்த வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்தது. நெய்வேலி செயிண்ட் பால் பள்ளியில்தான் நான் படித்தேன்.…
-
- 0 replies
- 885 views
-
-
சினிமாவில் யார் அழகு வானில் தவழும் நிலா, தரையில் தவழும் குழந்தை இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது? பி.ஜாக்குலின், குடிக்காடு. நிலா என்பது வளர்ந்த குழந்தை. குழந்தை என்பது வளரும் பிறை. என்னைக் கவர்ந்தது தரையில் தவழும் குழந்தைதான். ஏனென்றால்_ வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு; வளரும் பிறைக்குக் கறை இல்லை. செம்மொழி என்றால் என்ன? எம்.கந்தகுப்தன், இளம்பிள்ளை. ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண இலக்கியத் தொடர்ச்சியுள்ள மொழி; தன்னிலிருந்து சில மொழிகளை ஈன்று கொடுத்த மொழி; இன்னும் உயிருள்ள மொழி; உலகப் பண்பாட்டுச் செழுமைக்குப் பங்களிப்புச் செய்த மொழி இவை போன்ற தகுதிகளால் உலகத்தின் ஐந்தே மொழிகளில் ஒன்றாகத் திகழும் நம் மொழி செம்மொழி. இலக்கிய கூ…
-
- 0 replies
- 1.5k views
-
-
நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இருந்த படம், அதுவும் நல்ல பிரதியில் என்ற என் எண்ணம் கைகூடியது கடந்த வாரத்தில் தான். Bangalore, Land Mark இல் வாங்கிய VCD ஆன காழ்ச்சா என்ற படம் தான் அது. http://kanapraba.blogspot.com/2006/07/blog...2458814385.html
-
- 9 replies
- 1.9k views
-
-
சமீபகாலமாக பத்திரிகை செய்திகளில் அடிப்பட்டுக்கொண்டிருக்கும
-
- 0 replies
- 865 views
-
-
வரும் ஜுலையுடன் அப்துல்காலமின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிகிறது. மீண்டும் அவரே ஜனாதிபதியாக வேண்டும் என்பது பலரது விருப்பம். தேசிய, மாநில கட்சிகள் சிலவும் இதையே விரும்புகின்றன. ஆனால், கலாமின் விருப்பம் வேறு. பதவியை துறந்து பேராசிரியராக வேண்டும் என்பது அவரது ஆசை! அப்படியானால் அடுத்த ஜனாதிபதி யார்? சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரும் அமிதாப்பச்சனின் குடும்ப நண்பருமான அமர்சிங் அடுத்த ஜனாதிபதியாக அமிதாப்பச்சனின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். இதனை வழிமொழிந்திருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி. இந்தியர்களின் நல்ல நேரம், அரசியல்வாதிகளின் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை அமிதாப். "நண்பர்களின் இந்த பேச்சு மனதை தொட்டது. ஆயினும் ஜனாதிபதியாக நான் தகுதியி…
-
- 2 replies
- 1.3k views
-
-
போக்கிரி v போக்கிரி காட்சி 1 http://www.youtube.com/watch?v=msljxCJ8lwI http://www.youtube.com/watch?v=_8-vWUdDpx8 காட்சி 2 http://www.youtube.com/watch?v=Ddq2E00z7dY http://www.youtube.com/watch?v=J-qKk5LFHSM காட்சி 3 http://www.youtube.com/watch?v=f_KWO3dvcMw http://www.youtube.com/watch?v=8MH70rVPIGc காட்சி 4 http://www.youtube.com/watch?v=2ogl4J4_D_c http://www.youtube.com/watch?v=sRgMRyprBj0
-
- 6 replies
- 2k views
-
-
ஜீவன் உண்மையிலேயே மச்சக்காரர். சினேகா, நமிதா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா என டாப் ஹீரோயின்களுடன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி. இவர்கள் அனைவரும் 'நான் அவனில்லை' என்ற ஒரே படத்தில் ஜீவனுடன் நடிப்பதுதான் விசேஷம். ஆனால், நாம் சொல்ல வந்த 'மச்சக்காரன்' வேறு. இதுவும் ஜீவன் சம்பந்தப்பட்டதுதான். 'கள்வனின் காதலி' என்ற அபாயகரமான படத்தை இயக்கிய தமிழ்வாணன் அடுத்து எடுக்கப் போகும் ஏடாகூட படம் 'மச்சக்காரன்'. கதையே ஒரு விதமாக இருக்கிறது. வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காத ஒருவன். எல்லாமே கிடைத்த ஒருத்தி. இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் என்னவாகும்? இந்த கேள்விக்கான பதிலே 'மச்சக்காரன்'. இதில், எதுவுமே கிடைக்காதவன் ரோலில் ஜீவனும், எல்லாமே கிடைத்த ஒருத்தியாக காம்னாவும் நடிக்கிறார்…
-
- 0 replies
- 1k views
-
-
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கிறது 'பச்சைக்கிளி முத்துச்சரம்.' சென்னை மல்டிபிளிக்ஸ் தியேட்டர்களில் கௌதமின் இந்தப் படத்திற்கு நேற்று நூறு சதவீத ஆடியன்ஸ். புறநகர் பகுதிகளிலும் கணிசமான கூட்டத்தை காணமுடிந்தது. கௌதம் கதையை நகர்த்தும் விதமும், வசனங்களும், சரத், ஜோதிகா, ஆன்ட்ரியா மற்றும் மிலிந்த் சோமனின் நடிப்பும் ஏ கிளாஸ்! அதிலும், காதில் மூன்று நான்கு வளையங்கள், மூக்குத்தி, பாசிமணி மாலை, அழுத்தமான லிப்ஸ்டிக், கண் நிறைய மை என வித்தியாசமான மேக்கப்பில் வரும் ஜோதிகாவின் தோற்றமும் நடிப்பும் கைத்தட்டல்களை அள்ளுகிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் குறை சொல்ல முடியாதவை. ஆயினும், சரத், ஜோதிகாவிடம் மனைவிக்கு தெரியாமல் உறவ…
-
- 0 replies
- 954 views
-
-
அ, ஆ... படிக்கும் பருவத்தில் ஒரு திரைப்படத்தையே இயக்கி ஆஹா ... போட வைத்திருக்கிறார் மாஸ்டர் கிஷன். அம்மா அப்பா யாரும் இல்லாத அனாதை சிறுவனான கிஷன் வாழ்க்கையின் வழி தெரியாமலும் விடை புரியாமலும் குப்பை பொறுக்கும் தொழிலை செய்து வருகிறான். அவனுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள எடுத்து வளர்க்கும் பாட்டி ஒருத்திதான். குப்பை பொறுக்கும் போது வழியில் பள்ளிக்கூட சிறுவர்களை பார்க்கும் இவனுக்குள்ளும் பள்ளிக்கூட ஆசை மணியடிக்க ஆரம்பிக்கிறது. புத்தகங்களை இரவல் வாங்கி படிக்க ஆரம்பிக்கும் கிஷன், தனது கெட்டிக்காரத்தனத்தால் ஐந்தாம் வகுப்பு பாடம் வரை அச்சுறசுத்தமாய் ஒப்பிக்க ஆரம்பிக்க, பள்ளிக்கூட ஆசை இன்னும் விருட்சமாகிறது. குப்பத்திலேயே செல்வாக்குமிக்கவராக இருக்கும் ரங்காவிடமும்,…
-
- 1 reply
- 1.9k views
-
-
தனது தாயாரே தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள நடிகை ப்ரீத்தி வர்மாவை அவரது குடும்பம் தலைமுழுகியுள்ளது. ப்ரீத்தி படத்துக்கு மாலை போட்டு, விளக்கேற்றியுள்ள அவரது குடும்பத்தினர் ப்ரீத்தி செத்துப் போய்விட்டதாக கருதுவதாக கூறியுள்ளனர். விந்தியாவின் மேனேஜர் கம் முன்னாள் காதலன் அருணுடன் ஓடிப் போன ப்ரீத்தி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அருணை மும்பையில் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்ட ப்ரீத்தி தனது காதலன் விஜய்யுடன் எங்கேயோ போய்விட்டதாகக் கருதப்படுகிறது. இந் நிலையில் பணத்துக்காக தன்னை பணக்காரர்களுக்கு தனது தாய் ரம்யாவே தாரை வார்த்ததாகக் கூறியும், என்னைத் தேட வேண்டாம், நான் என் வாழ்க்கையை பார்த்துக் கொள்வேன் என்று சொல…
-
- 0 replies
- 876 views
-
-
சினிமா தொடங்கி காலம் தொட்டு இன்றைய நவீன தொழில்நுட்பம் வரையிலான அரிய விஷயங்களின் அற்புத தொகுப்பாக சென்னையில் 'சினிமாடுடே' கண்காட்சி தொடங்கியது. சினிமா என்றொரு பெரும் ஊடகம் இந்தியாவில் அறிமுகமாகி 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள இன்றைய நிலையில் அதனை நினைவுகூறும் வகையில் சினிமாடுடே என்ற பெயரில் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டர் வளாகத்தில் 16-ந் தேதி முதல் வரும் 18-ந் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை இன்று காலை நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராமநாராயணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இக்கண்காட்சியில் எடிட்டிங், கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, ஒப்பனை உள்ளிட…
-
- 0 replies
- 739 views
-
-
லண்டனைச் சேர்ந்த Divine Creations Ltd., (UK) என்ற பட நிறுவனமும் DC Entertainment Pvt. Ltd. India, பட நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமுறையில் தயாரிக்கும் படம் 'நெஞ்சைத்தொடு'. புதுமுகம் ஜெமினி கதாநாயகனாகவும், லட்சுமிராய் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தை P.Ae. ராஜ்கண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பதினைந்து வருடங்களுக்கு மேலாக பல இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்த ராஜ்கண்ணன் 'ஆயுதபூஜை', 'ரெட்டை ஜடை வயசு' உட்பட பல படங்களில் பணியாற்றியவர். "பாசத்துக்காக ஏங்கும் கதாநாயகன். அது தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆயதங்கப்படும் அவன், தனக்கு வரப்போகும் மனைவியிடம் வாட்டியும் முதலுமாக பாசம் கிடைக்கும் என்று நம்புகிறான். அவன் நம்பிக்கை மெய்யானதா? பொய்யானதா? - என்பத…
-
- 0 replies
- 784 views
-
-
காசு வரவர அதன் மீதுள்ள காதல் அதிகரிக்கும் என்பது நூறு சதவீதம் சரி. 'பிக் பிரதர்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்று கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கும் ஷில்பாவுக்கு காசு ஆசை விடவில்லை. 'பிக் பிரதர்' அனுபவத்தை மீண்டுமொரு முறை காசாக்க முயற்சிக்கிறார். 'பிக் பிரதர்' நிகழ்ச்சியே ஒரு சுவாரஸியமான ஏற்பாடு. பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை அப்படியே பார்ப்பது ஒரு வித அனுபவம் என்றால், அதில் கலந்து கொள்வது வேறு மாதிரியான சுவாரஸியம். அதுவும் ஷில்பா ஷெட்டி எபிசோட், நாய், இனவெறி, சரியாக சமைக்காத கோழிக்கறி என்று பாலிவுட் மசாலா படங்களை மிஞ்சி விட்டது. உலகை திரும்பிப் பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவத்தை சுயசரிதையாக எழுதி வெளியிட்டால் என்ன என்று தோன்றியிருக்கிறது ஷில்பா ஷெட்…
-
- 0 replies
- 987 views
-
-
நடிகைகள் உடம்பை ஸ்லிம்மாக்குவார்கள் என்று பார்த்தால், பத்து கிலோ எடை குறைத்து பள்ளி மாணவனாக வந்து நின்றார் ஜீவா. என்ன திடீர் எடை குறைப்பு? "'பொறி' படத்துக்காக கொஞ்சம் சதை போட்டேன். அதை எக்ஸசைஸ் செய்து குறைத்திருக்கேன்!" இந்த எடை குறைப்பு 'தமிழ் எம்.ஏ.' படத்திற்காகவாம். புதர் மண்டிய தாடி, தலைமுடி, கண்களில் பத்து நாள் தூக்கம், பார்வையில் நாலுநாள் பசியென்று டோட்டாலாக வித்தியாசமான வேடம். ஜீவாவை பொறுத்தவரை 'தமிழ் எம்.ஏ.' அவர் கேரியரில் ரொம்ப முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறார். தமிழ் படித்தவனுக்கு தமிழ் நாட்டில் எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. இதுதான் படத்தின் அடிநாதம். இந்த சீரழிவை தட்டிக் கேட்பவன் தமிழ் எம்.ஏ. பிளாட்பார கடையில் சாப்பிட்டு ப…
-
- 0 replies
- 758 views
-
-
நகைச்சுவை நாடகம் 2 hrs http://www.oruwebsite.com/comedy/flight.html
-
- 0 replies
- 928 views
-
-
சிம்பு புத்தியை காட்டிவிட்டார்நயன் பாய்ச்சல் தன்னை ஒரு பெண் என்றும் பாராமல் மிக நெருக்கமாக படம் எடுத்துவிட்டு அதை இப்போது இண்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார் சிம்பு. இதன் மூலம் அவர் தனது புத்தியை காட்டிவிட்டார் என நயனதாரா பாய்ந்துள்ளார். சிம்புநயனதாரா இடையே உருவான திடீர் காதல் திடீரென புட்டுக் கொண்டது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கொஞ்ச காலமாக இருவருமே அமைதியாக இருந்தனர். இந் நிலையில் நயனதாராவோடு ஹோட்டல் ரூமில் சிம்பு மிக நெருக்கமாக இருந்த படங்கள் வலம் வர ஆரம்பித்துள்ளன. சோபாவில் அமர்ந்தபடி நயனதாராவை கட்டி அணைத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. ஒரு கட்டத்தில் இருவரும் உதடுகளை…
-
- 17 replies
- 5.7k views
-
-
கமல் - ஸ்ரீதேவி நடித்த 'மூன்றாம் பிறை'யில் மனதை கனக்கவைத்த முடிவையே 'தீபாவளி'யின் முன்னுரையாக்கி காதல் கமகமக்கும் அத்தியாயங்களை அடிகாக சொல்லியிருக்கிறார் எழில். சென்னை ராயபுரத்தில் அரசியல்வாதிகளே சலாம் போடுமளவிற்கு செல்வாக்கு மிக்கவர் விஜயகுமார். இவரது மகன் ஜெயம்ரவி. பெங்களுரில் கட்டபஞ்சாயத்தும் கன்ஸ்ட்ரக்ஸ்ன் என பண பலம், ஆள் பலத்துடன் இருக்கும் லாலின் மகள் பாவனா. வந்த இடத்தில் ரவியின் துறுதுறுப்பும் துடுக்குதனமும் பாவானாவின் மனசில் தூண்டில் போட அவ்வப்போது டூயட் ஆட ஆரம்பிக்கிறது காதல். இந்நிலையில் நடந்த சம்பங்களை அடிக்கடி மாந்துவிடும் மூளை குறைபாடு இருப்பது தெரியவருகிறது. ஒரு இடத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவுதான் இந்த நோய்க்கு காரணம் என்பதை ரவியிடம் ச…
-
- 0 replies
- 2.2k views
-
-
சென்னை விமான நிலையத்தில் ரஜினி கண்ணெதிரே பெண் டாக்டரை அவமானப்படுத்திய சம்பவம் ஒன்று அரங்கேறி அம்பலத்திற்கு வந்துள்ளது. சென்னை தி.நகரில் மில்லினியம் சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வருபவர் அய்யாதுரை. இவரது மகள் டாக்டர் உமா தனபாலன், மகன் சிவாவும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் சென்னை வந்த இவர்கள் இருவரும் ஜனவரி 13-ந் தேதி அமெரிக்காவுக்கு லூப்தான்சா விமானத்தில் திரும்பிச்செல்ல டிக்கெட் வாங்கியிருந்தனர். இந்நிலையில் டாக்டர் உமாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் டிக்கெட்டை ரத்து செய்து பிப்ரவரி (இம்மாதம்) 5-ந் தேதிக்கு மாற்றிக்கொண்டார். விமான பயண விதிமுறைப்படி, உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கான மருத்துவ சான்றிதழை சமர்பித்தால் அபராதத்தொகை இல்லாமல் மாற்றியமைக்கப்பட…
-
- 7 replies
- 2.2k views
-
-
பிப்ரவரி வரவுகள் : மாறும் தேதிகள் 2006க்கும் 2007க்கும் இடையே பல படங்கள் திரையிட திட்டமிடப்பட்டு, சில திரைக்கு வந்து, பல தாமதமாகி, தேதிகள் மாறி என கோலிவுட் வட்டாரம் வழக்கத்தைவிட சற்று அதிக பரபரப்புடன் இருக்கிறது. தீபாவளி முதலே பல படங்களின் படபிடிப்பு தாமதமாகியது. எடிட்டிங் போன்ற படபிடிப்புக்கு பிந்தைய வேலைகளும் பல படங்களுக்கு தாமதமாகி பொங்கல் சமயம் பல படங்கள் திரைக்கு வர நெருக்கடி ஏற்பட்டது. மேலும் விஜய், அஜித் படங்களோடு தங்கள் படங்களையும் வெளியிட பல தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. எனவே தங்கள் படங்களுக்கு ஏற்ற ரிலீஸ் தேதிகள் அமைக்க படவுலகும் திரைப்பாளர்களும் பரபரக்கின்றனர். இவற்றின் விளைவாக 2007 பிப்ரவரியில் எக்கச்சக்கசக்கமான புதிய திரைப்படங்கள் திரைக்கு வ…
-
- 0 replies
- 871 views
-
-
சினிமா ஆர்வலர்களின் கண்களுக்கும் கருத்துகளுக்கும் தீனிபோட சென்னையில் 'சினிமா டுடே' திரைப்பட விழா தொடங்கியது. திரைப்பட ஊடகம் தொடங்கப்பட்டு பவள விழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 75 ஆண்டு கால திரைப்பட வரலாற்றை நினைவு கொள்ளும் வகையில் சர்வதேச திரைப்படவிழா (Film panorama) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் திரையரங்குகளில் தொடங்கப்பட்டது. நடிகர்கள் ஜெயம்ரவி, அருண்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், அலெக்ஸ், நடிகைகள் சினேகா, கஸ்தூரி, கீர்த்திசாவ்லா ஆகியோர் கலந்துகொண்டு பலூன்களை பறக்கவிட்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தனர். நேற்று தொடங்கிய படவிழா நாளை வரை நடக்கிறது. சர்வதேச அளவில் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்ட 30 படங்கள் தினமும் 10 ப…
-
- 0 replies
- 978 views
-
-
'திருமகன்' உள்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ப்ரீத்தி வர்மா. இவரை அருண் என்பவர் கடத்தி விட்டதாக ப்ரீத்தியின் தாயார் புகார் கொடுத்திருக்கிறார். ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரியில் ப்ரீத்தி வர்மா நடிக்கும் 'ராமுடு மஞ்சு பாலுடு' என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக தனது தாய் தம்பியுடன் ராஜமுந்திரி சென்றிருந்தார் ப்ரீத்தி. மொத்தம் 13 நாள்கள் ஷுட்டிங். ஒன்பது நாள்வரை பிரச்சனை ஏதுமில்லை. பத்தாவது நாள் காலை ப்ரீத்தியின் தம்பிக்கு உடல்நலமில்லாமல் போக, அவரது தாயார் ஹோட்டலில் ப்ரீத்தியின் தம்பியுடன் தங்கியிருந்திருக்கிறார். ப்ரீத்தி படப்பிடிப்புக்கு தனியாக சென்றுள்ளார். மாலையில் ப்ரீத்தி வர்மா திரும்பி வரவில்லை. படப்பிடிப்பு குழுவிடம் கேட…
-
- 0 replies
- 767 views
-
-
கவர்னேட்டரின் காதல் மனைவி! காலையில் கல்யாணம்.. மாலையில் டைவர்ஸ் என்று வாழும் அமெரிக்க வி.ஐ.பி&க்களுக்கு மத்தியில் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அர்னால்டு ஸ்வாஷ்னெகர் & மரியா ஷ்ரிவர் தம்பதி மட்டும் ஆச்சர்ய விதிவிலக்கு! அமெரிக்கர்களால், ‘கவர்னேட்டர்’ என்று அன்போடு அழைக்கப்படும் அர்னால்டு கடந்த 2003&ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் முக்கிய மாகாணமான கலிபோர்னியாவின் கவர்னராக இருக்கிறார் (அவர் நடித்து சூப்பர்ஹிட்டான ‘டெர்மினேட்டர்’ படத்தின் பெயரையும் கவர்னரையும் சேர்த்துதான் ‘கவர்னேட்டர்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்)! இந்த ரியல் ஹீரோவின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது மரியா ஷ்ரிவர் என்ற காதல் மனைவிதான்! சமீபத்தில் ‘யாஹ¨’ நிறுவனம் தன்னுடைய கருத்துக்கணிப்…
-
- 0 replies
- 964 views
-
-
Cast:Jayam Ravi, Bhavana, Vijay Kumar, Lal Direction:S.Ezhil Music:Yuvan Shankar Raja Watch This Movie <<< ON WEB NOW
-
- 1 reply
- 1.2k views
-
-
டி. ராஜேந்தரின் அதே டன்டனக்கா டன்க்கனக்க.... சத்தம்தான் டிஜிட்டல் ஒலி அலைகளில். சட்டமன்ற உறுப்பிரனரான டி. ராஜேந்தந்தர் நீதி, நேர்மைக்கு உதாரண புருஷராக திகழ்பவர். ஆளுங்கட்சி அமைச்சரின் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து அவ்வப்போது வில்லனுக்கு எதிராக தொடைதட்டிக்கொண்டு குஸ்திபோட தயங்காதவர். இந்நிலையில் கல்லூரியில் நன்றாக படிக்கும் அமைச்சரின் மைத்துனரான அஜிசுடன் காதல் கொள்கிறார் டி. ஆரின் தங்கை ஷீலா. வீட்டில் வேலை செய்யும் மும்தாஜ் டி.ஆரை ஒருதலையாக காதலிக்கிறார். எதிரி என்றும் பாராமல் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்ற அமைச்சரின் வீடு தேடிச்சென்று மாப்பிள்ளை கேட்கும் டி.ஆர் வில்லனாலும் வில்லி பத்மா நாராயணாலும் அவமானப்படுத்தப்படுகிறார். காதலனுடன் தங்கையை சேர்த்துவைக்கமுடியா…
-
- 4 replies
- 1.6k views
-
-
அஜித் அவதாரமாயிட்டார்னு ஊரெல்லாம் பேச்சு. நல்ல மனுஷனாச்சே எப்படி இந்த மாதிரி கெட்டுப் போனார்னு ஓடிப்போய் அடிச்சுப் பிடிச்சு ஆழ்வார் படத்துக்கு டிக்கெட் வாங்கி உள்ளப் போனா... ஏண்டா வந்தோம்னு ஆகிப் போச்சு. என்ன வெவகாரம்னுதானே கேட்கிறீங்க? கொஞ்சம் விலாவரியா சொல்ல வேண்டிய சமாச்சாரம் இது. ஆழ்வார்ல அஜித்துக்கு 'களை' பிடுங்கிற வேலை. அதாவது சமுதாயத்துல களையா இருக்கிற ரவுடிகளை போட்டுத் தள்றது. அதுவும், ராமர் கிருஷ்ணர்னு விஷ்ணுவோட அவதார மேக்கப் போட்டு சைக்கிள்ல காத்து பிடுங்கிற மாதிரி ஆயுசை பிடுங்கிடறார். அஜித்தை இப்படி எமதர்மனா மாத்துனதுக்கு இயக்குனர் ஷெல்லா அழகா ஒரு கதை சொல்றார். கதாகாலேட்சபம் பண்ற சாது ஒருதரம் தெரியாதத்தனமா, எல்லா பயப்புள்ளைகளும் கடவுள்தான்டான…
-
- 3 replies
- 1.4k views
-