Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் ரஜினியின் 'சிவாஜி' படத்தில் சந்தியாவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினி படத்தில் லைட்மேன் வேலைசெய்வது கூட பெருமையான விஷயம்தான். அந்த வகையில் கடைசிநேரத்தில் சந்தியாவும் 'சிவாஜி'யில் முக்கிய பங்காற்றுகிறார். கதாநாயகி ஸ்ரேயா இருக்கும்போது சந்தியாவுக்கு என்ன வேலை.... என்று நீங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதற்குள் 'சிவாஜி'யில் சந்தியாவின் ரோல் என்ன என்பதை நாங்களே சொல்லிவிடுகிறோம். கடந்த வாரம் இயக்குனர் ஷங்கரிடமிருந்து வந்த போன், சந்தியாவின் மொபைலை எழுப்பியது. போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த நொடியே சந்தியாவின் முகமுழுவதும் பூரிப்பு பூத்தது. படத்தில் ஸ்ரேயாவுக்கு பின்னணி குரல் கொடுக்க யார்யாரையோ தேர்வு செய்து பார்த்தும் ஒருவரும் தேரவில்ல…

  2. இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் மணிரத்னம். தனிமனிதப் பிரச்சனைகளை தாண்டி தேசிய பிரச்சனைகளை கையிலெடுத்ததை தொடர்ந்து - குறிப்பாக சொல்வதென்றால் 'ரோஜா' திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இயக்குனராக இவரது இருப்பு பிரகாசமடைய தொடங்கியது. இவரது புதிய படம் 'குரு' வும் பிராந்திய எல்லைகளை தாண்டிய ஒரு மாபெரும் தொழிலதிபரைப் பற்றியது. குருபாய் என அழைக்கப்படும் குரு கான்ட் தேசாய்க்கு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு. துருக்கி சென்று சம்பாதிக்கும் பணம் முதலீடு செய்ய போதவில்லை. வரதட்சணையாக பணம் கிடைக்கும் என்பதற்காக சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் மனைவி மைத்துனருடன் மும்பை சொல்…

  3. Started by pepsi,

    http://www.oruwebsite.com/ar_rahman_hits/01.html User name: lovetack.com Password : oruwebsite.com

    • 0 replies
    • 1.1k views
  4. இதுவொன்றும் புது விஷயமில்லை. 'குஷி' படத்தில் வரும் 'மொட்டு ஒன்று மலர்ந்திட....' பாடலில் எம்.ஜி.ஆர். போல நடன அசைவுகளை விஜய்யை வைத்து செய்திருப்பார் சூர்யா. 'நியூ' படத்தில் வரும் 'படகோட்டி' படப் பாடலான 'தொட்டால் பூ மலரும்...' ரீ-மிக்ஸ் இன்னொரு உதாரணம். 'திருமகன்' படத்திலும் உண்டு எம்.ஜி.ஆர். காப்பி. இதில் இடம் பெறும் சிலம்ப சண்டையை எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்து அப்படியே அமைத்திருக்கிறார்கள். 'பெரிய இடத்து பெண்' போன்ற பல படங்களில் எம்.ஜி.ஆர். போட்ட கம்பு சண்டைகளை சி.டி. யில் போட்டுப் பார்த்து அப்படியே 'திருமகனில்' பெர்பார்ம் செய்திருக்கிறார் சூர்யா. 'வியாபாரி' க்குப் பிறகு இவரும் ஷக்தி சிதம்பரமும் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'உங்க வீட்டு பிள்ளை' என்று பெயர் வைத்திர…

  5. பிக்பிரதர் நிகழ்ச்சியில் வென்று உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமடைந்திருக்கும் ஷில்பா ஷெட்டி தனது குடும்பம் மீது அதிகம் பாசம் கொண்டவர். தனது நலனுக் காக பெற்றோர் விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அவர் கூறியதா வது:- திருமண விஷயத்தில் பெற்றோரின் தேர்வே மிகவும் சரியாக இருக்கும் எனவே அவர்களின் கருத்துக்கு அதிக மதிப்பளிக்கிறேன். என் காதலனுடன் டேட்டிங் செல்ல தாயும், தந்தையும் அனுமதித்தால் கூட தனியாக டேட்டிங் செல்ல முடியாது. எனது தங்கை மற்றும் வீட்டில் உள்ள ஒரு ஆண் ஆகியோரை துணைக்கு அழைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். பார்ட்டி களில் தனியாக கலந்து கொள்ள முடியாது. இது மற்றவர்களுக்கு விநோதமாக தெரியலாம். ஆனால் எங்கள்…

    • 6 replies
    • 1.5k views
  6. தெலுங்கு படவுலகில் தமிழ் கலைஞர்களுக்கு தனிமரியாதை கிடைத்து வரும் காலம் இது. தமிழர்கள் என்றால் யோசிக்காமல் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள். சென்ற வருட தெலுங்குபட 'ஹிட்' லிஸ்ட் தமிழர்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்தியுள்ளது. சென்ற வருடம் வெளியான படங்களில் 'ஸ்டாலின்', 'பொம்மரிலு' படங்கள் மட்டுமே பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் தமிழர்கள். ஸ்டாலினை ஏ.ஆர். முருகதாஸும், பொம்மரிலுவை தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரும் இயக்கியிருந்தனர். தவிர, தமிழ் படங்கள் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு அதிக வசூலை ஈட்டி வருகின்றன. இதனால் தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர் தெலுங்கு நட்சத்திரங்கள். செல்வ…

  7. உலகம் முழுவதும் உள்ள மீடியாக்கள் ஒரே மாதிரியானவையே. பிரபலமானவர்கள் பிறந்தநாள் கொண்டாடினால் அன்று அந்த செய்தியே பிரதான நியூஸ்! திங்கள்கிழமை தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடினார் அபிஷேக்பச்சன். அமிதாபச்சனின் மகன், பாலிவுட் நடிகர் என்பதுடன் ஐஸ்வர்யாராயின் வருங்கால கணவர் என இவர்மீது ஏகப்பட்ட புகழ் வெளிச்சம். வட இந்திய பத்திரிகைகளும் தனியார் தொலைக்காட்சிகளும் அபிஷேக்கின் பிறந்தநாளை அவரை விட உற்சாகமாக கொண்டாடின. மக்களின் அடிப்படை பிரச்சனையான காவிரி நீர் பங்கீட்டையும் இந்த கொண்டாட்டம் பின்னுக்கு தள்ளிவிட்டது. பிறந்த நாள் அன்று ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருந்த அபிஷேக்பச்சன் விமானம் மூலம் மும்பை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார் அமிதாப்பச்சன். உடன் ஐஸ்வ…

  8. ஆர்வக்கோளாறில் அகல கால் வைக்க நினைப்பவர்களா நீங்கள்? அப்படியானால் நீங்கள் பாடம் கற்க வேண்டிய முகவரி காமெடியன் கருணாஸ். பாப் சிங்கராக இருந்து இயக்குனர் பாலாவால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் கருணாஸ். 'நந்தா', 'பிதாமகன்' என அடுத்தடுத்த படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர், மற்ற காமெடியன்களின் வயிற்றில் புளியை கரைத்தார். இதெல்லாம் ஆரம்பத்தில் நடந்த அதிசயம் என்றாலும் இப்போது கருணாஸின் சினிமாக்கேரியர் அவரது லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் போலவே நொண்டி அடிக்க ஆரம்பித்துள்ளது. கால்ஷீட்டுகளும், காசுகளுமாக நிரம்பி வழிய ஆரம்பித்தபோது வேறொரு தொழிலில் பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டார். அதன்படி ஆசை வார்த்தை காட்டிய சகாக்கள் ஐடியாப்படி ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்தார். ஆனால் ஐடியா…

  9. 'நேதாஜி', 'கவிதை' படங்களை இயக்கியவர் G. கிச்சா. இவர் தற்போது நந்தாரகு என்ற பார்ட்னர் துணையுடன் 'நண்பனின் காதலி' படத்தை தயாரித்து இயக்குகிறார். 'காதலர் தினம்', 'புன்னகை தேசம்', 'பார்வை ஒன்றே போதுமே' படங்களை தொடர்ந்து குணால் நடிக்கும் இந்த படத்தில் 'விசில்' படத்தில் நடித்த ஆதித்யாவும் இன்னொரு நாயகன். கதாநாயகியாக 'காதல் எப்.எம்' படத்தில் நடித்த ஷிவானி சிங் நடிக்கிறார். கோவாவுக்கு வேலைக்கு செல்லும் விக்ரமாதித்யா கடற்கரையில் ஷிவானி சிங் -ஐ கண்டதும் முதல் பார்வையிலேயே காதல் கொள்கிறார். ஷிவானியின் வீட்டிற்கு எதிரிலேயே தங்கி அவளை தன் வசப்படுத்த செய்யும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது. விக்ரமாதித்யா அறையில் தங்குவதற்கு வரும் குணால், விக்ரமாதித்யாவின் காதல் விளைய…

    • 3 replies
    • 1.6k views
  10. மலையாளிகளுக்கு கொஞ்சம் கொழுப்பு அதிகம். எடுத்ததற்கெல்லாம் கொடி பிடிப்பது இவர்களின் பிரதான வியாதி. இந்த வியாதிக்கு மருந்தாகியிருக்கிறார் நடிகை பத்மப்ரியா. மலையாள படங்களில் தொடர்ந்து நடித்துவரும் பத்மப்ரியா, பேட்டியொன்றில், டப்பிங் வேறு ஆள்கள் பேசுவதால் என்னுடைய கேரக்டர் முழுமையாக பிரகாசிக்க முடியாமல் போகிறது என்றார். இதே கருத்தை எல்லா மொழி நடிகர்களும் காலம் காலமாக கூறிவருவதுதான். மேலும், சொந்தக்குரலில் பத்மப்ரியா பேசி நடித்த 'கறுத்த பட்சிகள்' படம் அவருக்கு விருது பெற்று தந்திருக்கிறது. இந்த காரணத்தினால்தான் சொந்தக்குரலில் பேசுவது மற்றவர்கள் டப்பிங் கொடுப்பதைவிட மேலானது என கருத்து தெரிவித்திருந்தார். மலையாள டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளுக்கு இது போதாதா? உடனே கொடி பிடித்து…

  11. பானு. தமிழ்நாட்டுக்கு 'தாமிரபரணி' கொடுத்திருக்கும் மலையாள தேவதை. படித்தது ப்ளஸ்டூ, நடித்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் என சூப்பர் குட் பயோடேட்டாவுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். பேச்சில், சிரிப்பில், பார்வையில் என பானுவின் எல்லா செயல்பாடுகளிலும் தடுமாறி விழுகிறது மனசு. "என்னோட முதல் படம் 'அச்சன் உறங்காத வீடு.' லால்ஜோஸ் சார் இயக்கிய படம். படம் சூப்பர் ஹிட்டாக, மலையாள வாலிபர்களின் மனசுக்குள் எனக்கும் ஒரு நாற்காலி போடப்பட்டது. ஹரி சார் தாமிரபரணிக்கு நடிக்க கூப்பிட்டப்ப அவருடைய படங்களை பற்றி கேள்விப்பட்டு அடுத்த நிமிடமே ஓ.கேன்னு தலையாட்டிட்டு தமிழ்நாட்டுக்கு ப்ளைட் ஏறிட்டேன். இதோ இப்போ பானுவா உங்க முன்னாடி. 'தாமிரபரணி' வெற்றி படமானதுல்ல எனக்கு ரொம்ப சந்தோஷம் விஷாலோ…

  12. முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை சென்னை, பிப். 6- நடிகர் அஜீத்குமார் "கிரீடம்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார். காரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறா…

  13. Started by pepsi,

    Cast: Jeeva, Pooja, delhi ganesh, Ghana Ulaganathan Camera: Egambaram Music: Dina Art: GK Lyrics: Yugabharathi Story Screenplay Dialogue Direction: subramania siva http://lovetack.com/pori/watch1.html

  14. டூயட் பாடுவதும், டிஷ்யூம் போடுவதும் மட்டுமே ஒரு திரைப்படத்தின் அம்சமும் கதாநாயகனின் பொறுப்பும் அல்ல என்பதை பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்தும் அற்புதம் இந்த அடைக்கலம். விபரம் அறியா பருவத்திலேயே அப்பாவை (தியாகராஜன்) பிரிந்து அம்மா சரண்யாவுடன் மாமா ராதாரவியின் வீட்டில் வளரும் அண்ணன் - தங்கையாக பிரஷாந்த் - உமா. தங்களுக்காக கஷ்டப்படும் மாமா, அம்மாவின் நிலையுணர்ந்து அண்ணன் தங்கை இருவரும் பொறுப்பாக மருத்துவ படிப்பு படிக்கின்றனர். ஒரு அதிர்ச்சியில் அம்மா சரண்யா இறந்துபோக மனைவியின் காரியம் நிறைவேற்ற பதினாறு வருடங்கள் கழித்து ஊருக்குள் வருகிறார் பிரஷாந்தின் தந்தையான தியாகராஜன். இத்தனை வருடம் இருக்கும் இடம்கூட தெரியாமல் இருந்த அப்பாவை பார்த்ததும் கோபத்தில் பொங்கியெழ…

  15. இயக்குனர் ஏ.வெங்கடேஷ் குத்தாட்ட ப்ரியர். இவர் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையே, கவர்ச்சி குத்தாட்டம் கியாரண்டி! பரத்தை வைத்து இவர் இயக்கும் 'கில்லாடி' படத்திலும் இடம் பெறுகிறது. இவரது பேவரிட் அயிட்டம் தனியாக கவர்ச்சி நடிகை யாரையும் பயன்படுத்தாமல் கதாநாயகி நிலாவையே இதில் ஆட்டம் போட வைத்துள்ளார். இளையராஜா முதன் முதலில் இசையமைத்த 'அன்னக்கிளி' படத்தில் அனைவரையும் கவர்ந்த பாடல் 'மச்சானை பார்த்திங்களா... மலைவாழை தோப்புக்குள்ளே...' கிறக்கமான இந்த பாடலை கில்லாடிக்காக ரீ-மிக்ஸ் செய்துள்ளனர். பாடல் வரிகள் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ப்ரெஷ்ஷாக இருப்பதால் வரிகளை அப்படியே வைத்து இசையை மட்டும் வித்தயாசப்படுக்கிறார்கள். இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில…

  16. கிசுகிசு சிவாஜியார் நாயகி நடிகைக்கு ஆபாச படங்கள் ஈ மெயிலில் வருகிறதாம். அதோடு கொச்சையான வார்த்தைகளும் அனுப்பப்படுகிறதாம். ரசிகர்களின் இந்த தொல்லையால் நடிகை மனம் நொடிந்து போய் இருக்கிறாராம். சேட்டைக்கார ரசிகர்களுக்கு புத்திமதி சொல்லி பதில் அனுப்பி வருகிறார்.ஆனாலும் ஆபாச படங்கள் வருகைநின்ற பாடில்லையாம். உந்த குரங்குச்சேட்டை விடுகுறது ஆராய்யிருக்கும் ஒருவேளை ரஜினின்ரை மருமோன் சுள்ளானாய் இருக்குமோ?இல்லாட்டி உவன் சிம்பு.................? நன்றி - சினிசவுத்-

  17. நடிகர் பிரபு தேவா, ரம்யா நடிப்பில் "எய்ட்ஸ்' விழிப்புணர்வு குறும்படம் பெங்களூரூ : பிரபல இயக்குனர் சந்தோஷ் சிவன் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த குறும்படத்தை எடுத்து வருகிறார். இதில் பிரபுதேவா, ரம்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். அசோகா, டெரரிஸ்ட் உட்பட பல பாலிவுட் படங்களின் மூலம் பிரபலமானவர் சந்தோஷ் சிவன். தற்போது இவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய முயற்சிகளில் களம் இறங்கியுள்ளார். கேட்ஸ் அறக்கட்டளைக்காக எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த குறும்படத்தை இயக்கி வருகிறார். கன்னடத்தில் எடுக்கப்படும் இப்படத்திற்கு "ப்ராரம்பா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் லாரி டிரைவர் வேடத்தில் நடிகரும், இயக்குனருமான பிரபு தேவா நடிக்கிறார். விபசாரத்த…

  18. Started by pepsi,

    http://lovetack.com/guru/watch1.html

    • 0 replies
    • 1.2k views
  19. ரஜினிக்கு மற்றவர்களை பாராட்டுவது என்பது ஒரு வீக்னஸ். விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய், த்ரிஷா ஹரி, தரணி, ஏ.ஆர். முருகதாஸ்... என பாதி இன்டஸ்ட்ரி இவரது பாராட்டுக்கு பாத்திரமாகியிருக்கிறது. இரண்டு நாள் முன்பு தனது பிரதான ரசிகர் விஜய்யின் 'போக்கிரி' படத்தை பார்த்தார் ரஜினி. தனது ஸ்டைலில் விஜய் பன்ச் டயலாக் பேசி எதிரிகளை பந்தாடுவது ரஜினியை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. படம் முடிந்த உடனே 'போக்கிரி'யின் இயக்குனர் பிரபுதேவாவை தொடர்பு கொண்டிருக்கிறார். அவரிடம் தனக்கு படம் ரொம்பப் பிடித்திருப்பதாக கூறியிருக்கிறார். "படம் தொடங்கியதும் தெரியலை முடிஞ்சதும் தெரியலை, வெரிபாஸ்ட்" என பிரபுதேவாவின் டைரக்ஷ்னை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். மைசூரில் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் குறும்படத்தில்…

  20. தவறான பொருளில் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று ‘புரட்சி’. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும்போது உருவாகும் மக்கள் கலகமே புரட்சியாக மாறுகிறது. அப்படித் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும் மக்களின் உணர்ச்சிமிக்க வரலாறு தான் The battle of algiers! 1957. விடுதலைப் போராளிகள் ஒளிந்திருக்கும் குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைக்கிறார்கள் ராணுவ வீரர்கள். அங்கிருக்கும் வீடுகளிலிருந்து அப்பாவி மக்களைத் துப்பாக்கி முனையில் வெளி யேற்றுகிறார்கள். ஒரு வீட்டினுள் நுழைந்து, அங்கிருக்கும் ஒரு சுவரில் சலவைக்கல் செயற்கையாக ஒட்டப்பட்ட அந்த இடத்தைச் சூழ்கிறார்கள். உள்ளே மறைவிடத் தின் இருளுக்குள், அலி உள்ளிட்ட விடுதலை இயக்கத்தினர் நான்கு பேர் ஒளிந்…

    • 1 reply
    • 2.2k views
  21. ஒளிப்பதிவாளர் ஜீவாவோடு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும் மனசும், உடம்பும் லேசானது மாதிரி இருக்கிறது. அந்தளவுக்கு நாட்டு நடப்புகளையும் இளசுகளின் மனதையும் அப்படியே கலர் ஜெராக்ஸ் எடுத்த மாதிரி விரல் நுனியில் வைத்திருக்கிறார் ஜீவா. ஒளிப்பதிவாளாராக தமிழ், இந்தி என்று பறந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது இயக்குனர் ஜீவாவுக்கும் தீனி போட்டுக் கொண்டிருக்கிறார். '12 பி' யை தொடர்ந்து 'உள்ளம் கேட்குமே' என்று இளைஞர்களின் உலகத்துக்குள் நடக்கும் சுவாரஸங்களையும், சோகங்களையும் சொன்னவர் இந்தமுறை அடுத்த கட்டத்துக்கு போயிருக்கிறார். யெஸ்... 'உன்னாலே உன்னாலே' படம் முழுக்க முழுக்க இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கிற மாதிரியான படம். "பொதுவா எல்லா காதலுமே முதலில் நட்பில்தான் தொடங்குகிறது…

  22. தனக்கு என்னவெல்லாம் சரியாக வராதோ, அவற்றையெல்லாம் பட்டியலிட்டு செய்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா! படம் இயக்குவதே இவரது தொழில். ஆனால், ஆசை என்னவோ நடிப்பு மீது. 'திருமகன்', 'வியாபாரி' என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 'வியாபாரி' யில் இவருக்கு மாளவிகா, தமன்னா, நமிதா என மூன்று ஜோடிகள். இயக்கம் ஷக்தி சிதம்பரம். வெற்றிகரமான வியாபாரி ஒருத்தனின் கதை என சொல்கிறார் ஷக்தி. படத்தின் ஸ்டில்களை பார்த்தால் அவர் 'சதை' வியாபாரியாக இருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது. இந்தப் படத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக குளோனிங்கை புகுந்தியிருப்பதாக பெருமையடிக்கிறார் ஷக்தி சிதம்பரம். அதாவது குளோனிங் முறையில் ஒரே நபரை போல இன்னொருவரை உருவாக்குவதை 'வியாபாரி' கதையில் பயன…

  23. டைட்டானிக் ரோஸ்! ஆதனூர் சோழன் முப்பது வயதுக்குள் நான்கு முறை ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகை இவர்தான். சிறந்த துணை நடிகை விருதுக்கு இருமுறை. சிறந்த நடிகைக்கு இருமுறை. ஆனால் இதுவரை விருது பெறவில்லை என்பது வேறு விஷயம். கொழுமொழுவென்று இருப்பார். குழந்தை போல முகம் இருக்கும். கண்கள் பளிங்குபோல பளபளக்கும். அதில் ஒரு கவிதை இருக்கும். பார்ப்பவர் மனதில் பச்செக்கென்று ஒட்டிக்கொள்ள இவை போதாதா? கேத்தி வின்ஸ்லெட்...! ஆமாம். "டைட்டானிக்' படத்தின் கதாநாயகிதான். அந்தப் படத்தில் இவரது பெயர் ரோஸ். படம் வெளியானபோது உலகமே இவரை ஒரு ரோஜா பூவைப்போல பார்த்து மயங்கியது. இளம்பெண்கள் தங்களை கேத்தியுடன் ஒப்பிட்டு ரசிக்கத் துவங்கினர். 1…

  24. தமிழில் குரு திரைப்படம் அபிஷேக் பச்சன் ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க, முக்கிய வேடத்தில் மாதவன் நடித்துள்ள குரு திரைப்படம், தமிழில் வெளியாக உள்ளது. 2007 பொங்கல் அன்று வெளியாக உள்ள இந்தப் படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தொழிலதிபர் அமரர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை இந்தப் படம் மறைமுகமாகப் பிரதிபலிக்கிறது. பகல் நிலவு, மவுன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவரும் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவருமான மணிரத்னம், புதிய படம் ஒன்றை இந்தியிலும் தமிழிலும் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரிக்க…

    • 3 replies
    • 3.6k views
  25. இம்சை அரசன் விரைவில் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஆக மாறுகிறார். முதல் படத்தில் எட்டடி பாய்ந்தால் அடுத்த படத்தில் பதினாறு அடி பாயவேண்டும் என்று விதியா? இம்சை அரசனில் இரண்டு வேடங்களில் நடித்த வடிவேலு 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் நான்கு வேடங்களில் வருகிறார். முதல்கட்ட தகவல்களின்படி நான்கு வேடங்களில் ஒன்று நார்மல். மற்ற மூன்றும் வித்தியாசமான கெட்டப்புகள். புராண இதிகாசத்தையும், நவீன உலகையும் இணைக்கும் கதை இது. இதற்காக சென்னை ஸ்டுடியோவில் பிரமாண்ட எமலோக அரங்கை அமைக்க இருக்கிறார் கலை இயக்குனர் பி. கிருஷ்ணமூர்த்தி. படத்தின் ஒரே நோக்கம் பார்வையாளர்களை இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்க வேண்டும்! இதனால் வடிவேலுவின் கெட்டப்பை மட்டுமல்லாமல் படத்தில் வரும் எமலோக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.