வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
உத்தமபுத்திரன் 60 ஆண்டுகள்: பார்த்திபன் நல்லவன், விக்ரமன் கெட்டவன் சிவாஜிகணேசன் ஒத்த உருவத்துடன் கூடிய இரட்டை வேடங்களில் நடித்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும், அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது இன்னமும் அலுக்காத ஒரு கலையனுபவத்தைத் தருகிறது. செய்தியைக் கொண்டுசெல்லும் வீரனை மறைந்திருந்து அம்பெய்திக் கொல்லும் முதல் காட்சியிலேயே தொற்றிக்கொள்கிற பரபரப்பு, படம் முடியும்வரை தொய்வின்றித் தொடர்கிறது. இரண்டே கால் மணி நேரத் திரைப்படத்தில் முதல் இருபது நிமிடங்களிலேயே படத்தின் மொத்த முன்கதைச் சுருக்கத்தையும் சொல்லிமுடித்து அரைமணி நே…
-
- 0 replies
- 329 views
-
-
நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகின்றது… நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெங்களூரை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தை உருவாக்கி வருவதாகவும் இதற்காக . ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனிகபூரிடமும் அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இந்த ஐந்து பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்-நடிகைகள் ஸ்ரீதேவி பற்றி பாராட்டி பேசும் கருத்துகளும் அவரது படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில…
-
- 0 replies
- 796 views
-
-
வன்முறையை கொண்டாடக் கூட செய்யலாம்... ஆனால்..!? - ‘வீரா’ விமர்சனம் வடசென்னையில் முன்னொரு காலத்தில் சமூகநீதி காக்க தொடங்கப்பட்ட மன்றங்கள், நாளடைவில் அதிகார வர்க்கங்களின் சூழ்ச்சியால் ரௌடிகளின் கூடாரமாக மாறுகின்றன. அப்படியொரு மன்றத்துக்கு தலைவராவதையே லட்சியமாகக் கொண்டிருக்கும் ஹீரோ, தலைவரானாரா, இல்லையா என்பதே 'வீரா' படத்தின் கதை. வீரமுத்து (கிருஷ்ணா), பச்சமுத்து (கருணாகரன்) இருவரும், ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மனமகிழ் மன்ற’த்தில் முறைவாசல் செய்பவர்கள். மன்றத்தின் தலைவர் சுறா முருகனை (கண்ணா ரவி) போட்டுத்தள்ளிவிட்டு தலைவராக நினைக்கிறார்கள். ‘நீங்கள் கொலை செய்யும் அளவுக்கு வொர்த் இல்லை. அதனால் ஸ்கெட்ச் சேகரிடம் (ராதாரவி) போய் தொழில் …
-
- 0 replies
- 375 views
-
-
சினிமா விமர்சனம்: நாச்சியார் தாரை தப்பட்டை படம் இயக்குனர் பாலாவின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்த நிலையில், பாடல்களைக் குறைத்து, தன் வழக்கத்திற்கு மாறான பாணியில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் மனிதர். நாச்சியார் (ஜோதிகா) ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கர்ப்பமாக இருக்கும் அரசி (இவானா) என்ற ஒரு சிறு பெண்ணை மீட்பவர், அந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கியதாக காத்தவராயன் (ஜி.வி. பிரகாஷ்குமார்) என்ற சிறுவனைக் கைதுசெய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கிறார். திரைப்படம் நாச்சியார் நடிகர்கள் ஜோ…
-
- 1 reply
- 859 views
-
-
விக்னேஷ் சிவனுடன் காதலர் தினம் கொண்டாடிய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய நயன்தாரா! கோலிவுட்டின் பிரபல ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா. இருவரும் பிறந்த நாளாக இருந்தாலும் சரி, பண்டிகை தினங்களாக இருந்தாலும் சரி இணைந்து கொண்டாடுவார்கள். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவது நயன்தாராவின் வழக்கம். இந்நிலையில், அண்மையில் காதலர் தினம் முடிந்த நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தங்களின் கொண்டாடத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். http://www.dinamani.com/cinema/cinema-ne…
-
- 0 replies
- 399 views
-
-
நடிப்புக்கு முழுக்கு போடும் கமல்ஹாசன் அ-அ+ மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்த பிறகு நடிக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். #Kamal #Kamalhaasan நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை விரைவில் வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தபோது அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். எனவே, இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. …
-
- 2 replies
- 417 views
-
-
நொறுங்க இன்னொரு இதயம் வேண்டுமா? பிப்ரவரி 14: காதலர் தினம் செல்போன் சார்ஜரைத் தவிர வேறு எதனாலும் பிரித்துவிட முடியாதது நவீன காலத்தின் காதல். அதையும் நூற்றாண்டைத் தாண்டிய இந்திய சினிமாதான் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்களும் பெண்களும் இயல்பாகச் சந்திக்கும் இடங்கள், சூழ்நிலைகள் ஆகியன, இந்தியாவின் பெருநகரங்களைத் தவிர சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் இன்னமும் சந்தேகத்துடன் பார்க்கப்படும் சூழ்நிலையே உள்ளது. சாதி தாண்டிய காதலைக் கண்டிக்கும் இந்திய வீடுகளில் விரகமும் தாபமும் தொனிக்கும் பாடல்கள் வழியாகக் காதலை 24 மணி நேரமும் கனவு காண்பது ஒரு முரண்பாடுதான். 90 சதவீதம் …
-
- 0 replies
- 435 views
-
-
Chennai: 2017 கான்ஸ் திரைப்படவிழாவில் இலங்கைத் தமிழரான ஜூட் ரட்ணம் இயக்கிய 'Demons in Paradise' ஆவணப்படம் திரையிடப்பட்டு Golden Camera, Golden Eye விருதுகளிற்குப் பரிந்துரையானது. வரும் மார்ச் மாதத்தில் சர்வதேசத் திரையரங்குகளில் படம் மக்களிடம் வருகிறது. 'எங்களது குழந்தைகள் குண்டுவீச்சு விமானத்தின் சத்தத்தை வைத்தே அது என்ன ரகப் போர் விமானம் எனச் சொல்லிவிடுவார்கள், ஆனால், அவர்கள் இதுவரை ஒரு ரயிலைக்கூடப் பார்த்ததில்லை' என்பது யுத்தகாலத்தில் தமிழ்க் கவிஞர் ஒருவரால் எழுதப்பட்ட வரிகள். இலங்கையில் 1867 ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதலாவது ரயிலை பிரித்தானிய காலனிய அரசு ஓடவிட்டது. மத்திய நாட்டின் மலைகளிலிருந்து தேயிலையும் ரப்பரையும் கரைநாட்டுத் துறைமுகங்களிற்கு கொண்டுவந்து…
-
- 0 replies
- 363 views
-
-
“எப்படி சினிமாவுக்குள் வந்தேன்!”- 'ஒரு அடார் லவ்' பட நாயகி பிரியா பிரகாஷ் #PriyaPrakashVarrier வாரா வாரம் ஏதோ ஒன்று இன்டெர்நெட் உலகைக் கலக்கிவருவது வழக்கமாகிவிட்டது. ஜிமிக்கி கம்மல் ஆரம்பித்து ஷின்சான் வரை வைரல் லிஸ்ட் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த வாரம் வைரல் லிஸ்டில் கலக்கிவருபவர், பிரியா பிரகாஷ். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளார், பிரியா. ஒமர் லுலு இயக்கத்தில் 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாட்டு வெள்ளியன்று வெளியானது. பெரிய நடிகர்கள் நடிக்காத இப்படத்தில், இந்தப் பாடலின் வீடியோவை இதுவரை 38 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசையில் இப்பாடலை வினீத் ஶ்ரீனிவாசன் பாடியுள்ளார். இந…
-
- 1 reply
- 543 views
-
-
விகடன் விருதுகள்: சிறந்த நடிகராக விஜய் தேர்வு! ஆனந்த விகடன் வார இதழின் 2017-ம் ஆண்டுக்கான சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகராக விஜய்யும் சிறந்த நடிகையாக நயன்தாராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சிறந்த படத்துக்கான விருது அறம் படத்துக்குக் கிடைத்துள்ளது. சிறந்த வில்லன் - விஜய் சேதுபதி, சிறந்த வில்லி - ஷிவதா. சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எஸ்.எஸ். வாசன் விருது இளையராஜாவுக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த பாடகராக அனிருத்தும் சிறந்த பாடகியாக ஸ்ரேயா கோஷலும் தேர்வாகியுள்ளார்கள். விருதுகள் …
-
- 11 replies
- 3.6k views
-
-
சொல்லவந்ததை சொல்லியிருக்கலாமே... சொல்லிவிடவா விமர்சனம் 1999-ல் நடக்கும் கார்கில் போரை மக்களிடம்நேரடியாகக் கொண்டு சேர்க்க, களத்துக்கே செல்லும் ஜர்னலிஸ்ட் ஜோடிக்கு, போர்களம் காதல் களமாக மாற, அதை இறுதியில் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்களா என்பதே இந்த `சொல்லிவிடவா'. 1999-ல் நடக்கும் கதை. `டிவி 6' சேனலில் நிருபராக வேலை பார்த்து வருபவர், சாந்தன் குமார் (சஞ்சய்). அந்த சேனலின் போட்டியாளரான `ஏ 3' சேனலில் நிருபராக வேலை செய்பவர், மது (ஐஷ்வர்யா அர்ஜூன்). சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்த மது, அவரது தாத்தா சீனு (K. விஸ்வநாத்) அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். அவருடைய அத்தை, சுஹாசினியின் மகன் ராகுலுக்கும் இவருக்கும் திருமணம்…
-
- 0 replies
- 243 views
-
-
'அந்த டிஸ்க்ளைமர்லாம் டூ மச்!' - 'கலகலப்பு 2' விமர்சனம் தனக்குச் சொந்தமான பூர்வீகச் சொத்தைத் தேடி காசிக்கு வரும் ஜெய்... காசியில் ஒரு பாடாவதி மேன்ஷன் நடத்தும் ஜீவா... ஒரு பொருளைத்தேடி அடியாள்களோடு காசிக்கு வரும் ஓர் அரசியல்வாதி... போலிச் சாமியார் யோகி பாபு... இவர்களுக்கும் சென்னையில் இருக்கும் சீட்டிங் சாம்பியன் சிவாவுக்கும் என்ன சம்பந்தம்? என்கிற கதையைத் தன் டிரேட்மார்க் காமெடி- க்ளாமர் காக்டெய்ல் கலந்து கலகலப்பாக்கி தந்திருக்கிறார் சுந்தர்.சி. அதே டெய்லர் அதே வாடகை என்பதுபோல ’கலகலப்பு1’-ன் டெம்ப்ளேட்டை எடுத்துவைத்துக் கதை பண்ணி இருக்கிறார். முதல் பாகத்தில் வந்த கேரக்டர் பெயர் முதற்கொண்டு அதே அதே! விமல்-மிர்ச்சி…
-
- 1 reply
- 886 views
-
-
தமிழ்த் திரையுலகம்: எங்கே செல்லும் இந்தப் பாதை? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் வெளியான திரைப்படங்கள் எதுவும் ஹிட் ஆகாத நிலையில், பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். மேலும் மிக அதிகமாக உள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தைக் குறைக்கக் கோரி மார்ச் ஒன்றாம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகாது என்றும் அறிவிக்கப்பட்டி…
-
- 0 replies
- 330 views
-
-
படப்பிடிப்பு நடத்த விரும்புவோருக்கு பச்சைக் கம்பளம் விரிக்கும் மலேசியாவின் ‘பேராக்’ கெல்லீஸ் கேஸ்ட்டில் டெம்பரங் குகை கெல்லீஸ் கேஸ்ட்டில் டெம்பரங் குகை மழையும் வெயிலும் மாறி மாறி ஆசீர்வதிக்கும் மலேசியாவின் 4-வது பெரிய மாநிலம் ‘பேராக்’. குளிர் மலை, வயல்வெளி, விவசாய பூமி, அழகுக் கட்டிடங்கள், வனப்புமிகு நதிக்கரை, வசீகரத் தீவு, மிளிரும் அரண்மனைகள் என இயற்கை வரம்பெற்ற நிலப்பிரதேசம். இயற்கை தனது எல்லா வண்ணங்களையும…
-
- 0 replies
- 285 views
-
-
'சொடக்கு' பாட்டு போடாததால்... பஸ் கண்ணாடியை உடைத்த, சூர்யா ரசிகர்கள்! சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலை போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளனர் சூர்யா ரசிகர்கள். பஸ் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரையும் நடத்துநரையும் தாக்கிய கல்லூரி மாணவர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகி வருகிறது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் குறைவான வசூலை மட்டுமே பெற்றதாகக் கூறப்படுகிறது.விருதுநகர் மொட்டமலையில் இரு…
-
- 0 replies
- 627 views
-
-
திரை விமர்சனம்: ஏமாலி மெ ன்பொருள் துறையில் வேலை செய்யும் மாலி என்கிற மாலீஸ்வரனும் (சாம் ஜோன்ஸ்) ரீத்து வும் (அதுல்யா ரவி) காதலர்கள். இவர்கள் காதலில் ஒரு செல்ஃபி சிக்கலை ஏற்படுத்த, காதலைச் சட்டென்று முறித்துக்கொள்கிறார் ரீத்து. இதைப் பொறுக்கமுடியாமல் தன் நண்பர்களுக்கு பிரேக்-அப் பார்ட்டி கொடுக்கிறார் மாலி. பார்ட்டிக்கு வரும் மாலியின் நண்பர்கள் அரவிந்த் (சமுத்திரக்கனி) மற்றும் ராதா கிருஷ்ணன் (பாலசரவணன்) ஆகியோரிடம் புலம்பித் தள்ளும் மாலி, தற்போது வேறு ஒருவனுடன் தனது காதலி பழக ஆரம்பித்துவிட்டதைக் கூறி அவளைக் கொலை செய்யப் போவதாகக் கூறுகிறார். மன அழுத்தத்தால் தவிக்கும் மாலியை மடை மாற்ற, “கொலை செய்வது பெரிய விஷயமில்லை. போலீஸில…
-
- 0 replies
- 563 views
-
-
ஏ. ஆர். ரஹ்மான் – புதிய இசையின் மெசையா / பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு மாதம் முன்பு முடிந்த வருடம் ஏ.ஆர். ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைக்க வந்து கால் நூற்றாண்டு. வருடங்களை நூற்றாண்டுகளாகச் சொல்வது அவற்றை ஒரு காலகட்டமாகத் தொகுக்கிறது. ரஹ்மானை இந்திய சினிமா இசையில் ஒரு காலகட்டமாகத் தொகுத்து, தனித்து உள்வாங்கிக் கொள்ளவும், புரிந்துகொள்ளவுமான கால அளவை அவரது இசைப்பயணம் எட்டிவிட்டிருக்கிறது. ஆனால் பாப்புலர் இசையை தீவிரமாக அணுகுவதில் தொடர்ந்து தவறுகின்றவர்களான நாம் இக்கால் நூற்றாண்டு முடிவை குறைந்தபட்சம் கொண்டாடவும், பரிசீலனை செய்யவும், அவருடைய ஆக்கங்களின் அழகியல் நுட்பங்களை, பன்மையை, ஈர்ப்பை, விலகலை ஒரு தலைமுறையின் இசை நுகர்வின் மீது அவர் செலுத்…
-
- 1 reply
- 1k views
-
-
“ ‘மா’ குறும்படம் நயன்தாரா மேடத்துக்குப் பிடிச்சிருந்தது... அதனால என் கதைல நடிக்கிறாங்க!” ‘லட்சுமி’ குறும்பட இயக்குநர் சர்ஜூன் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய குறும்படம் 'லஷ்மி'. இயக்குநர் சர்ஜூன் எடுத்து இருந்த இந்தக் குறும்படத்தில் துணை நடிகை லட்சுமி நாயகியாக நடித்திருந்தார். ஒரு நடுத்தர வீட்டுப் பெண்ணின் வாழ்க்கை முறையைப் பேசியிருந்த இந்தப் படத்தை பற்றிப் பலரும் விவாதித்தனர். எதிர்மறையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றிருந்தாலும், படத்தைப் பார்த்தவர்கள் எண்ணிக்கை என்னமோ அதிகம்தான். இதற்கிடையில் சர்ஜூன் தனது அடுத்த குறும்படமான 'மா' படத்தைச் சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டார். கெளதம் வாசுதேவ் மேனனின் 'ஒன்றாக' நிறுவனம் தயாரித்திர…
-
- 0 replies
- 193 views
-
-
அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: சென்னை தொழிலதிபர் கைது நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். #AmalaPaul தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர் இன்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடனப் பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் மீது புகார் மனு அளித்தார். அந்த மனுவில் மலேசியாவில் இருக்கும் தமது நண்பருடன் டின்னர் சாப்பிட வருமாறு அழைத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்…
-
- 13 replies
- 1.3k views
-
-
இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு குடியரசு தின விழாவை முன்னிட்டு 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முன்பாக பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. கடந்த 1954-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு இன்று (25.1.2018) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. …
-
- 22 replies
- 1k views
-
-
''நாப்கினை மறைக்கத் தேவையில்லை!'' - பாலிவுட்டில் பரபரக்கும் பேட்மேன் சேலஞ்ச் #PadManChallenge பாலிவுட்டில் ’பத்மாவத்’ திரைப்படத்துக்கு அடுத்து பரபரப்பாகப் பேசப்படும் திரைப்படம், ‘பேட்மேன்’. பாலிவுட்டின் ஆக்ஷன் கிங் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது. பெண்களுக்குக் குறைந்த செலவில் நாப்கின்கள் தயாரித்த கோயம்பத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கைக் கதையைப் பேசுகிறது இந்தத் திரைப்படம். ''இந்தப் படம் மாதவிடாய் குறித்து சமூகத்தில் நிலவும் பல கற்பிதங்களை உடைக்கும் வகையில் இருக்கும்'' என்று அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார். திரைப்படத்தைப் பல வகை…
-
- 1 reply
- 308 views
-
-
அழகோ... அழகு... பரினிதி சோப்ராவின் இடுப்பை வர்ணித்த ரசிகர்கள் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையும், நடிகையுமான பரினீதி சோப்ரா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது இடுப்பை சகட்டு மேனிக்கு வர்ணித்துள்ளனர். இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினிதி சோப்ராவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கொஞ்சம் குண்டாக இருந்த இவர், உடல் எடையை தீவிர பயிற்சி செய்து குறைத்துள்ளார். இந்த படத்தை பரினிதி, கூலிங்கிளாஸ் அணிந்து இடுப்பு தெரி…
-
- 0 replies
- 848 views
-
-
படை வீரன் திரை விமர்சனம் படை வீரன் திரை விமர்சனம் இப்போது இளம் ஹீரோக்கள் பலர் கதாநாயகர்களாக படையெடுத்து வருவது தொடர்கிறது. இதற்கிடையில் பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் படைவீரன் மூலம் ஹீரோவாக படையெடுத்திருக்கிறார். படை வீரனாக அவர் எதை நோக்கி படைஎடுக்கிறார் என பார்க்கலாம். கதைக்களம் அழகான அய்யனார்பட்டி கிராமம். வறட்சியில்லாமல் இருக்கும் நல்ல பூமி. வாழ்வாங்கு வாழும் மனிதர்கள். ஆனால் மனிதர்கள் மனமோ வறண்டு கிடக்கிறது. அம்மக்களுக்கிடையில் ஒரு எளிமையான குடும்பத்தில் இருக்கிறார் நம்ம ஹீரோ விஜய். கிராமத்து இளைஞர் அதிலும் ஊரில் முக்கிய ஆள் என்றால் சொல்லவா வேண்டும். தன் நண்ப…
-
- 0 replies
- 537 views
-
-
பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ள ரிஷிவரன் மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரனின் புகைப்படம் வெளியாகி பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ளது. மறைந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து பின்னர் பிரிந்துவிட்டார். அவர்களது மகனான சாய் ரிஷிவரனின் படம் வெளியில் வந்தது இல்லை. இந்தநிலையில் கல்லூரியில் படிக்கும் ரிஷியின் புகைப்படம் தற்போது வெளியாகி பலருத கவனத்தினையும் ஈர்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் ரகுவரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவ்வாறு குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தினைப் பெற்றிருந்தார். நடிப்பில் வல்லவரான ரகுவரனை தெரிந்த எமக்கு அவருக்கு இருந்த இசை ஆர்வம் பற்றி அதிகம் தெரியாது. இ…
-
- 0 replies
- 564 views
-
-
நல்ல படம் மக்களே... ஆனா, கபாலியை கலாய்ச்சது ஏன்? - 'மதுரவீரன்' விமர்சனம் Chennai: சாதியைத் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் மண்வாசனை சினிமாக்களுக்கு மத்தியில், 'இன்னும் எத்தனை நாளைக்குத்தான்யா இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருக்கப்போறீங்க?' என எழுந்திருக்கும் சமாதானக் குரல்தான், 'மதுரவீரன்'. சுத்துப்பட்டு கிராமங்கள் முழுவதும் மதிக்கும் மனிதர், சமுத்திரக்கனி. சாதிகளே வேண்டாம் எனவும், உழைப்பவனே முதலாளி எனவும் கருத்துரை பரப்பும் கருப்புச் சட்டை போட்ட கம்யூனிஸ்ட்காரர். சாதிகளால் பிளவுபட்டுக் கிடக்கும் ஊர்களை ஜல்லிக்கட்டால் இணைக்கமுடியும் என நம்புகிறார். அவரின் தீவிர முயற்சியால், ஜல்லிக்கட்டும் நடக்கிறது. ஆனால், நினைத்ததற்கு மாறாகப் பகை ம…
-
- 0 replies
- 264 views
-