வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
நான்கு கதை... நான்கு பூதம்... ஒரு ஹீரோ! - `சோலோ' விமர்சனம் பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றில் ஆகாயத்தை தவிர மற்ற நான்கு பூதங்களுக்கும் ஒரு கதை என நான்கு வெவ்வேறு கதையும், களத்தையும் இணைத்து `சோலோ'வாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிஜோய் நம்பியார். நான்கு எலமென்ட், ஒவ்வொன்றிலும் சிவனின் ரெஃபரன்ஸ் வைத்து மித்தாலஜியும் சேர்த்து, நான்கு வித காட்சியமைப்பு, கலர், சவுண்ட் என தரமான ஆந்தாலஜி படமாக களம் இறங்கியிருக்கிறது `சோலோ' ஒவ்வொரு கதை துவங்குவதற்கு முன்னும் அந்தக் கதை சம்பந்தப்பட்ட கவிதையுடன் துவங்குகிறது. முதல் கதையாக, சேகர், ராதிகா (சாய் தன்ஷிகா) இருவரின் கதையுடன் விரிகிறது படம். சேகர் கோவமோ, ப…
-
- 0 replies
- 442 views
-
-
“தடை பல தாண்டி... தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலீஸ் உறுதி!” ‘தேனாண்டாள்’ முரளி ‘தெறி’ படத்தைத் தொடர்ந்து விஜய்யுடன் அட்லி மீண்டும் இணையும் படம், தேனாண்டாள் நிறுவனத்தின் 100 வது தயாரிப்பு... இப்படி ஏகப்பட்ட பரபரப்புடன் தயாராகிவரும் ‘மெர்சல்’ படத்துக்கு அது தொடங்கிய நாளிலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்பபு. காளை மாட்டுடன் விஜய் இருக்கும் புகைப்படம், படத்தின் முதல் பார்வையாக வெளியானபோது எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது. தொடர்ந்து ‘ஆளப்போறான் தமிழன்’ பாட்டு வெளியானபோது, ‘கமர்ஷியலில் இது வேறு லெவல் சினிமா’ என்ற எண்ணம் உருவானது. இப்படிப் படிப்படியாக எகிறிக்கொண்டு இருந்த ‘மெர்சல்’ படத்தின் எதிர்பார்ப்பை இறக்கும் வகையில் வழக்குடன் வந்தா…
-
- 6 replies
- 800 views
-
-
கணேஷின் முட்டைக் கணக்கு, விஜய்யின் பதில், ‘பிக்பாஸ் ஃபேமிலி'யின் வாட்ஸ்அப் குரூப்! வையாபுரி ஷேரிங் #VikatanExclusive “பிக் பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன்புவரை நான் சும்மாதான் இருந்தேன். படத்தில் நடிக்க வாய்ப்புகளை தேடி வாங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபிறகு வாய்ப்புகள் என்னைத்தேடி வருகின்றன. 'கலகலப்பு 2', 'சாமி 2' படங்களில் இப்போது கமிட் ஆகியிருக்கின்றேன். இதுதவிர பிரபு சாலமன், மிஷ்கின் சார் படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது.” - ‘நான் வீட்டுக்கு போகணும்’ என்று அழுதுகொண்டு இருந்த வையாபுரியின் வாழ்க்கை இப்போது ‘ஹாய் படி... ஹேப்பி படி’ என்று மகிழ்ச்சியாக போய்க்கொண்டு இருக்கிறது. …
-
- 0 replies
- 555 views
-
-
கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக ஓவியாவுடன் நடிப்பேன்: ஆரவ் 'பிக் பாஸ்' வெற்றிக் கோப்பையுடன் ஆரவ் | கோப்புப் படம் கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக ஓவியாவுடன் இணைந்து நடிப்பேன் என்று ஆரவ் தெரிவித்திருக்கிறார். பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். இறுதியில் ஆரவ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அவற்றின் தொகுப்…
-
- 0 replies
- 271 views
-
-
'நம்புங்க... எனக்கு நிச்சயதார்த்தம் ஆகலை. அந்த பொண்ணு...!" - 'பிக்பாஸ்' ஆரவ் பிக் பாஸ்' வீடு, அந்த வீட்டில் வசித்தவர்களுக்கு மட்டுமன்றி, நமக்கும் பல்வேறு பாடங்களைக் கற்பித்து, நூறு நாள்களைத் தற்போது நிறைவு செய்துள்ளது. 'பிக் பாஸ்' டைட்டில் வின்னரான ஆரவ், அந்த 100 நாள் அனுபவம் குறித்துப் பேசினார். என் சொந்த ஊர் திருச்சி. படிச்சு முடிச்சு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தேன். ஆனால், எனக்கு சின்ன வயசிலிருந்து நடிப்பு மேல ஆர்வம். அதனால், வேலையை விட்டுட்டு மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். சினிமாவில் நடிக்க கிடைச்ச வாய்ப்புகள் சொல்லிக்கிற மாதிரி இல்லைன்னாலும், எனக்குப் பிடிச்ச தொழிலில் இருக்கும் தி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சினிமா விமர்சனம்: விக்டோரியா அண்ட் அப்துல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2011ஆம் ஆண்டில் ஷ்ரபானி பாசு எழுதி வெளிவந்த Victoria & Abdul: The True Story of the Queen's Closest Confidant என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் இது. பேரரசி விக்டோரியாவுக்கும் அவரது பணியாளராக இருந்த, இந்தியாவைச் சேர்ந்த அப்துல் கரீமிற்கும் இடையிலான உறவைச் சொல்கி…
-
- 0 replies
- 352 views
-
-
தொடரும் மோடியின் மௌனம்... தேசிய விருதுகளை திருப்பித் தரப் போகிறேன்! - பிரகாஷ் ராஜ் ஆவேசம் பெங்களூர்: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரதமர் மௌனம் காப்பது வருத்தமாக உள்ளது. இந்த மௌனம் தொடர்ந்தால் என்னுடைய தேசிய விருதுகளை திருப்பித் தரப் போகிறேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசுகையில், "கௌரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மவுனமாக இருப்பதன் மூலம், தன்னைவிட மிகச் சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபிக்கிறது. இதுபோன்ற கொடூர சம்பவங்களில் தொடர்ந்து மோடி மௌனமாக இருந்தால், என்னுடைய தேசிய விருதுகளை அரசிடம் திரும்ப…
-
- 2 replies
- 244 views
-
-
வேட்டையாடு விளையாடு: ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள் ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள் இன்றைக்கும் உலக கிளாசிக்குகளில் ஒன்றாக ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவா இயக்கிய ‘செவன் சாமுராய்’ படம் கருதப்படுகிறது. 16-ம் நூற்றாண்டு ஜப்பானில் குடியானவர்களின் நிலை, சாமுராய் வீரர்களின் வாழ்க்கை ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண்பித்த கருப்பு வெள்ளைத் திரைப்படம் இது. அறுவடையான பயிர்களைக் கொள்ளையடிக்க குதிரைகளில் திருடர்கள் கூட்டமாக வருவார்கள். அவர்களிடமிருந்து அறுவடையைப் பாதுகாக்க ஏழு நாடோடி சாமுராய்களைக் காவலர்களாக நியமிக்கிறது ஒரு ஜப்பானிய கிராமம். ஏழு பேரும் சேர்ந்து அந்தக் கிராமத்தைச் சூறையாட வரும் 40 திருட…
-
- 18 replies
- 5.1k views
-
-
கமல் - ஷங்கர் கூட்டணியில் 'இந்தியன்' இரண்டாவது பாகம்! அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த 1996-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் 'இந்தியன்'. இந்தப் படத்தில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும் இளமையான ஒரு வேடத்திலும் நடித்திருப்பார். கமல்ஹாசனின் அட்டகாசமான நடிப்பாலும் விறுவிறுப்பான திரைக்கதையாலும் படம் பட்டிதொட்டி எங்கும் தெறி ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடித்ததுக்காக கமல்ஹாசனுக்குத் தேசிய விருதும் கிடைத்தது. இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று வெகுநாள்களாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்தப் படத்துக்குச் சம்பந்தப்பட்ட தரப்பு இதுநாள் வரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்ப…
-
- 0 replies
- 190 views
-
-
டி.ஆரின் கடும் சாடலால் அழுத தன்ஷிகா: 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சை டி.ராஜேந்தர் மற்றும் தன்ஷிகா | கோப்புப் படம் டி.ராஜேந்தரின் கடும் சாடலால் தன்ஷிகா அழத் தொடங்கியதால், 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. மீரா கதிரவன் இயக்கத்தில் வெங்கட்பிரபு, விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'விழித்திரு'. இதில் டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடி, அதற்கு நடனமும் ஆடியுள்ளார். அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தன்ஷிகா பேசும்போது, மேடையிலிருந்த அ…
-
- 0 replies
- 312 views
-
-
தமிழ் சினிமா ஹீரோக்கள் மாஸ் ஹீரோவாக எடுக்கும் அவதாரம் போலீஸ் அல்லது கிராமத்து கதைக்களம். இந்த இரண்டிலுமே நடித்து ஹிட் அடித்துவிட்டால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள் தங்களை என்று ஒரு நம்பிக்கை. அப்படி சேதுபதியில் போலீஸாக ஜெயித்த விஜய் சேதுபதி, கிராமத்து இளைஞனாக கருப்பனிலும் ஜெயித்தாரா? பார்ப்போம். கதைக்களம் வாடி வாசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருந்து ஆரம்பிக்கின்றது கதை. ஊரில் பெரிய தலைக்கட்டு பசுபதி, அவருடைய காளையை இதுவரை யாரும் அடக்கியது இல்லை என்ற கர்வத்தில் இருக்க, அவரிடம் வாயை கொடுத்து இந்த காளையை அடக்குபவருக்கே தன் தங்கையை திருமணம் செய்து வைக்கின்றேன் என சொல்ல வைக்கின்றனர். அதை தொடர்ந்து அந்த காளையை விஜய் சேது…
-
- 3 replies
- 1.9k views
-
-
தொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்து வந்த கவுதம் கார்த்திக் தற்போது வெற்றிப்பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். ரங்கூன், இவன் தந்திரனையடுத்து ஹரஹர மஹாதேவகியும் காப்பாற்றியதா பார்ப்போம். ஹரஹர மஹாதேவகி இந்த வார்த்தையை கேட்டதுமே இளைஞர்கள் சிரிக்கத்தொடங்கி விடுவார்கள். இதற்கு காரணம் அந்த வாட்ஸ்அப் சாமியாரின் ஆடியோக்கள் என்பது பெரும்பாலானவர்கள் அறிந்ததே. 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படம் தான். படத்தின் முதல் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் வரை சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. டைட்டில் கார்டிலேயே அந்த வாட்ஸ்அப் சாமியாரின் அத்தனை வசனங்களும் இடம்பெற்று விடுகிறது. படத்தில் கதை நகரும்போது பின்னணியில் ஒலிக்கும் குரல் கூட அதே சா…
-
- 1 reply
- 1.1k views
-
-
காமசூத்ரா வழங்கிய இந்தியாவுக்கு நிர்வாணம் ஒன்றும் புதிதில்லையே!: பிளேபாய் புகழ் செர்லின் சோப்ரா ஸ்டேட்மெண்ட்! செர்லின் சோப்ராவைத் தெரியாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? இருந்தால் அது அதிசயம்... செர்லின் ஒரு மாடல், பாடகி, பாலிவுட் நடிகை என்பதைத் தாண்டி 2012 ஆம் ஆண்டில் உலகப் பிரசித்தி பெற்ற பிளே பாய் பத்திரிகையின் அட்டையில் இடம்பெற்ற முதலும் கடைசியுமான ஒரே இந்திய நடிகை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். பிளேபாய் பத்திரிகையின் அட்டையில் ஷெர்லின் அளித்த நிர்வாண போஸுக்குப் பின் உலகம் முழுக்க ஷெர்லின் புகழ் பரவியது. அதைத் தொடர்ந்து 2013, டிசம்பர் மாதம் எம…
-
- 0 replies
- 466 views
-
-
சினிமா விமர்சனம்: ஸ்பைடர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் திரைப்படம் ஸ்பைடர் நடிகர்கள் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பரத், ஆர்.ஜே. பாலாஜி, ஜெயபிரகாஷ் இசை …
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ் திரை இசையுலகில் மறக்க முடியாத பாடகி, ஜென்ஸி. இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். தன் மென்மையான குரலால் நம் மனதை கொள்ளை கொண்டவர். பிரபலமாக இருந்த நேரத்தில் மியூசிக் டீச்சராக தன் வாழ்வை மாற்றிக்கொண்டவர். "பிறந்து வளர்ந்தது, தற்போது வசிப்பது எல்லாமே கேரளாவுலதான். சாதாரண நடுத்தரக் குடும்பம்தான். பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு, மியூசிக்ல லோயர், ஹையர் கோர்ஸ் முடிச்சேன். என்னோட 13 வயசுல இருந்து மேடைகள்ல பாடிட்டு இருக்கேன். ஜேசுதாஸ் அண்ணாகூட கேரளாவுல நிறைய கச்சேரிகள்ல பாடியிருக்கேன். தாஸ் அண்ணாதான், 'நீ நல்லா பாடுறே'ன்னு சொல்லி, 16 வயசுல என்னை ராஜாசார்கிட்ட கூட்டிட்டுப்போனாரு. அப்போ ராஜா சார் தன்னோட மெல்லிசையால பல ஹிட் கொடுத்துட்டு இருந்த காலம். அவரைப் பார்க்கப் ப…
-
- 1 reply
- 3.8k views
-
-
பூ மலர்ந்திட நடமிட்ட பொன்மயிலே... மாதவி ஃபேனா நீங்க? 'பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே... நின்றாடும் உன் பாதம் பொன்பாதம் விழிகளால் இரவினை விடியவிடு நான் நடமிட உருகிய திருமகனே ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ' 'டிக் டிக் டிக்' படத்தில் வரும் இந்தப் பாடலையும் மறக்க முடியாது... பாடலின் பாவங்களில் ரசம் குறையாது அழகிய நடமிடும் மாதவிப் பொன் மயிலாளையும் யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. 'மாதவிப் பொன்மயிலாள்' என்பது என்னுடைய வார்த்தைப் பிரயோகம் அல்ல, அது 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இருமலர்கள்’ திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்ம…
-
- 3 replies
- 771 views
-
-
ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..! பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியா தனக்கென மக்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கடை ஒன்றின் திறப்பு விழா இன்று நடந்தது. அந்த கடையை ஓவியா திறந்து வைத்தார், அவரை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டு வந்துள்ளது. கடையை திறந்து வைத்த பிறகு மக்களிடம் பேசுகையில் ‘உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி, இதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். மேலும், கண்டிப்பாக பிக்பாஸ் 100வது நாளுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வருவேன்’ என்று கூற, ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஓவியாவிற்கு பிடித்தவர் அனு…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழ் சினிமா மூத்த நடிகர் பீலி சிவம் காலமானார்..! தமிழ் திரைஉலகின் குணச்சித்திர நடிகர் பீலி சிவம் இன்று உடல் நலக் குறைபாட்டால் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. பீலி சிவம், 1938-ம் ஆண்டு ஜூலை மாதம் 5 தேதி பிறந்தார். அவருடைய ஆரம்ப கால நாள்களில் நாடகத்தில் நடித்துவந்தார். பின்னர், தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர், அபிமன்யு, தங்க பாப்பா, முகமது பின் துக்ளக் உள்ளிட்ட நிறைய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாளைடைவில் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் நாடகங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 1995-ம் நாடகத்துறையில் சிறந்த…
-
- 0 replies
- 574 views
-
-
ஜிமிக்கி கம்மல் வைரல்: நடனம் மூலம் நன்றி தெரிவித்த மோகன்லால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைYOUTUBE/SATYAMVIDEOS யு டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட 'ஜிமிக்கி கம்மல்' பாடல் வைரலானதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடிகர் மோகன்லால் நடனமாடும் புதிய பாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. மோகன…
-
- 0 replies
- 570 views
-
-
அறிவழகனின் அடுத்த டாக்கட் ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய திரைப்படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில், லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். சங்கர் தயாரித்த ‘ஈரம்’ திரைப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் அறிவழகன். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதையடுத்து, சமீபத்தில் ‘குற்றம் 23’ திரைப்படத்தை இயக்கினார். இதில், அருண் விஜய் நாயகனாகவும் மகிமா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு மற்றும் அதிக வசூலை வாங்கிக் கொடுத்தது. இவர், அடுத்ததாக, நாயகிக்கு முக்கியத…
-
- 0 replies
- 243 views
-
-
'அப்படிப் போய் இப்படிப் போய் எப்படியோ போனானாம்!' - 'பிச்சுவாகத்தி' விமர்சனம் சிறுதவறுகூட செய்யத்தெரியாமல் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் சிலர், திரும்பத் திரும்ப தவறு ஒன்றையே செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுவதையும், அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதையும் சொல்கிறது, ‘பிச்சுவாகத்தி’. கிரிக்கெட், சரக்கு என ஜாலியாக சுற்றித்திரியும் நண்பர்கள் இனிகோபிரபாகரன், ரமேஷ்திலக், யோகிபாபு. நாயகி ஶ்ரீபிரியங்கா, இனிகோவிடம் காதலைச் சொன்ன சந்தோஷத்தில் நண்பர்களான மூவரும் குடிக்கிறார்கள். எக்ஸ்ட்ரா சரக்குக்கு ஆசைப்பட்டு, ஆடு திருடி மாட்டிக்கொள்கிறார்கள். அருகே இருக்கும் கும்பகோணம் காவல் நிலையத்தில் முப்பது நாட்கள் கையெழுத்து போட வேண்டிய சூழல். இது ஒரு கதை. இரண…
-
- 0 replies
- 780 views
-
-
'சிலுக்கு ஸ்மிதா' - ரசிகர்கள் கொண்டாட காரணம் ? 1980களில் தமிழ் ரசிகர்களை ஆட்டிப்படைத்த சிலுக்கு சுமிதாவின் திரை பயணம். விரைவில் .......
-
- 8 replies
- 729 views
-
-
நீர்க் குமிழி 1: திடுக்கிட வைத்த ‘வனமோகினி’ கே.தவமணி தேவி ‘ராஜகுமாரி’ படத்தில் சுகுமாராக எம்.ஜி.ஆர், விஷாராணியாக தவமணிதேவி கே.தவமணி தேவி ‘ராஜகுமாரி’ படத்தில் சுகுமாராக எம்.ஜி.ஆர், விஷாராணியாக தவமணிதேவி சினிமாவில் சின்ன துரும்பைக் கிள்ளிப் போடுவதென்றால் கூட, ஏழுகடல் ஏழு மலை தாண்டி வட இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டும். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற ‘மாயாலோக’ த்தை சேலத்தில் உருவாக்கி, இந்தத் தேவையற்ற அலைச்சலைப் போக்கியவர் ‘செல்லுலாய்டு சீமான்’…
-
- 10 replies
- 3.4k views
-
-
தரணி ஆளும் கணினி இசை 1: முதல் முதலா ஒரு பாட்டு... ‘விக்ரம்’ படத்தில் கமல், லிஸி கமலுக்கும் கம்ப்யூட்டர் இசைக்கும் ஒரு சுவாரசியமான தொடர்பு உண்டு. பல கலைகளில் வல்லவராக விளங்கும் கமலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ‘சகலகலா வல்லவன்’. அந்த வெற்றியைச் சிறியதாக மாற்றிவிட ஒரு அதிநவீன திரைப்படத்தை எடுத்து, அதில் நடித்துவிடவேண்டும் என்று முடிவு செய்தார். அந்தப் படம் 1986-ம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’. கம்ப்யூட்டர் இசை தன் முகத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலாகக் காட்டியது அந்தப் படத்தில்தான். ‘விக்ரம்’ படத்தின் முதல் காட்சி நீதிமன்றத்தில் தொடங்கும். நீதிபதி, வழக்கறிஞர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் காட்சி, பென்ச…
-
- 28 replies
- 8.4k views
- 1 follower
-
-
ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக ஒரு சிலர் படம் பார்ப்பார்கள். அப்படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருந்தவர் இயக்குனர் சரண். ஆனால், இவர் அசல் படத்திற்கு பிறகு எந்த படங்களையுமே இயக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு வினய் நடித்துள்ள ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியுள்ளார். சரண் கம்பேக் கொடுத்தாரா? பார்ப்போம். கதைக்களம் வினய் இரட்டையர்கள், அம்மா வயிற்றுக்குள் இருக்கும் போதே அடித்துக்கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒற்றுப்போவதில்லை. அந்த சமயத்தில் வினய் அப்பாவிற்கு ஏற்கனவே பங்காளி வீட்டு சண்டை உள்ளது. ஒருநாள் அனைவரும் குடும்பத்துடன் கண்…
-
- 1 reply
- 1.3k views
-