ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
20 AUG, 2025 | 04:03 PM (எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்) யாழ். பாலாவி விமான நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முழுமைப்படுத்தப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது. விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கு தேவைப்படும் நிதிப்பெறுமதி எவ்வளவு என்பதையும், இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 2…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. இன்று தேர் த…
-
-
- 6 replies
- 480 views
-
-
பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு! தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்களைக் கைது செய்ய, பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ஜூலை 21 ஆம் திகதி கிரிபத்கொடையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞர் ஒருவர் T-56 ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர்கள் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தமை அம்பலமானது. அத்துடன் குறித்த தாக்குதலை மேற்கொள்வதற்கு வவுனியாவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். குறித்த கைக்குண்டுகளை கொழும்புக்கு கொண்டு அவர்கள் வரத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கை…
-
- 1 reply
- 204 views
- 1 follower
-
-
இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளை அன்புடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்; தேவையான வசதிகள் வழங்கப்படும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி அன்பாக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை அகதிகள் நாடு திரும்பிய போது சட்ட குறைபாடுகளால் நடந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் கவலையடைவதாகவும் , இந்த விடயம் தொடர்பில் அந்த அமைப்புடன் கலந்துரையாடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின்…
-
- 0 replies
- 220 views
-
-
யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை 21 Aug, 2025 | 11:37 AM யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட யாழ்ப்பாணத்தின் 14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன. யாழ்ப்பாண வலய மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். மாணவர் பாராளுமன்றம் என்ற எண்ணக்கரு, பாடசாலைகள் ஊடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்…
-
- 0 replies
- 157 views
-
-
கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு செய்திகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீ…
-
- 1 reply
- 177 views
-
-
கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் - பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை! adminAugust 20, 2025 கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களை நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை மற்றும் உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவைகளானது வெற்றியடைந்துள்ளது. இரண்டு நடமாடும் சேவையிலும் எதிர்பார்த்த மக்களை விட அதிகமானோர் பங்கேற்றனர். அவ்…
-
- 0 replies
- 126 views
-
-
20 AUG, 2025 | 05:45 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் என அனைவரும் அறிவர். அதனை நான் குற்றப்புலனாய்வுப்பிரிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்…
-
- 1 reply
- 159 views
- 1 follower
-
-
20 AUG, 2025 | 12:54 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முறையான வணிக திட்டமிடல்களின்றி இந்த இலக்கை அடைய முடியாது. யாழ். விமான நிலையத்தை விரிவாக்க காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும் மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) ந…
-
-
- 8 replies
- 606 views
- 1 follower
-
-
20 AUG, 2025 | 04:55 PM 1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் சபையின் உறுப்பினர் பிரகலாதன் கூறியதுடன் இந்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் இன்று புதன்கிழமை (20) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் காலை 10.00 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு வலியுறுத்தினார். மேலும் …
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 04:18 PM லங்கா உப்பு நிறுவனம் தனது அயோடின் கலந்த உப்புப் பொருட்களின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நிறுவனத்தின் தலைவர் நந்தன திலக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். 400 கிராம் அயோடின் கலந்த உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 1 கிலோ கிராம் பக்கற் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 100 ரூபாவுக்கும், 1 கிலோ கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கும், கிரிஸ்டல் உப்பு பக்கற் ஒன்றின் விலை 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெர…
-
-
- 1 reply
- 179 views
- 1 follower
-
-
நல்லூர் தேர்த்திருவிழாவினையொட்டி நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 01:52 PM வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வியாழக்கிழமை (21) வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று புதன்கிழமை (20) மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதன்பிரகாரம், உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண ம…
-
-
- 1 reply
- 400 views
- 1 follower
-
-
வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரம் அடைந்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் ஒருங்கிணைப்புடன் இயக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாண…
-
- 1 reply
- 206 views
-
-
Published By: VISHNU 20 AUG, 2025 | 03:17 AM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை ஆகும். இந்தப் பயணம் 2023 ஆண்டு, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பத்து பேர் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்…
-
- 1 reply
- 138 views
- 1 follower
-
-
யாழில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு Published By: Vishnu 20 Aug, 2025 | 09:21 AM யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரை பை ஒன்று காணப்பட்டதை அடுத்து , கொடிகாம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த உரை பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவை கோர்வைகள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து அவற்றை மீட்டு கொடிகாம பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் அவற்றுள் 1393…
-
- 0 replies
- 152 views
-
-
சமூகத்தின் மனப்பான்மை ரீதியான மாற்றத்திற்க அரச ஊடகங்களின் பங்களிப்பைப் பெறத் திட்டம் தயாரிக்குக - ஜனாதிபதி 20 Aug, 2025 | 10:19 AM சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் உள்ள 04 திணைக்கலன்களில் உள்ள 41 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற…
-
- 0 replies
- 97 views
-
-
முத்தையன்கட்டு சம்பவம்: கைதான 4 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல் 20 August 2025 முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணைக்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று இராணுவத்தினர் முன்னதாக கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, இராணுவ சிப்பாய் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபரும் ஏற்கனவே விளக்கமறியலில்…
-
- 0 replies
- 116 views
-
-
10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தாய்லாந்து! தாய்லாந்தின் அமைச்சரவை 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான கொடிய எல்லை மோதலைத் தொடர்ந்து கம்போடிய தொழிலாளர்கள் நாடு திரும்புவதால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, வயதான மக்கள் தொகை மற்றும் சுருங்கி வரும் பணியாளர்கள் எண்ணிக்கை என்பவற்றினால் விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைந்தது 3 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள்…
-
- 0 replies
- 148 views
-
-
பேலியகொடை மீன் சந்தையின் ஊழியர் ஒருவர் இன்றைய (19) துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி பிரயோகத்தின் போது, துப்பாக்கி சூட்டுக்காக இலக்கு வைக்கப்பட்டவர் மாத்திரம் இன்றி, அங்கு வீதியில் சென்ற ஒருவரும் காயமடைந்தார். பேலியகொடை ஞானரதன மாவத்தை பகுதியில் இன்று காலை 9:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் T - 56 ரக துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சந்தேகநபரால் இலக்கு வைக்கப்பட்டவர் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்றையவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலைய…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 AUG, 2025 | 04:32 PM மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் நேற்று திங்கட்கிழமை (18) மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று திங்கள் கிழமை மன்னார் ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் ஆயர் அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துர…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி. வடக்கில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்ததுடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக தெற்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நிதி மோசடிகளுக்கான வழக்குகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆனால் வடக்கில் அவ்வாறு இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, குறிப்பிட்டுள்ளார். எனவே தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை மாத்திரமே முன்னெடுப்பதாக, மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக இராமநாதன் அர்ச்சுனா, குறி…
-
- 0 replies
- 170 views
-
-
19 AUG, 2025 | 01:30 PM நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (24) வரை இடம்பெறவுள்ளது. நீர்வள…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
Published By: VISHNU 19 AUG, 2025 | 03:24 AM அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் வீரமுனையின் பெயரைக் குறிக்கும் பெயர்ப் பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை - கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பிரதான வீதியில் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இந்த பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை இன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்தது. எனினும் அங்குவந்த சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த சம்மாந்துறை பொலிஸாரும் பிரதேசசபை உறுப்பினர்களுக்…
-
- 1 reply
- 189 views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை அரச - தனியார் பங்குடமை முறைமையின் கீழ் ஆரம்பிப்பதற்காக உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைவதற்கு இயலாமல் போயுள்ளது. அதனால், குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச தனியார் பங்குடமை முறைமையின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சர்வதேச முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத…
-
- 1 reply
- 176 views
- 1 follower
-
-
வாகரை பனிச்சங்கேணியில் பிள்ளையானின் 50 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் 50 ஆவது பிறந்த தினம் வாகரை பனிச்சங்கேணியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளுடன் இன்று கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுகளை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி, கலை, கலாசாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இரத்தான நிகழ்வு நடைபெற்றது. பலர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் பனிச்சங்கேணி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசையும் அ…
-
- 1 reply
- 184 views
-