ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
தமிழகத்திலிருந்து இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடு நிறுத்திவைப்பு 19 August 2025 தமிழகத்தில் இருந்து இலங்கையின் ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளது. த ஹிந்து செய்தித்தாள் இந்த செய்தியைப் பிரசுரித்துள்ளது. தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறும் தன்னார்வமாகத் திரும்புபவர்களுக்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது. இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு ஏதிலிகள், அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…
-
- 0 replies
- 136 views
-
-
கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு! 2025-05-15 கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாணவி, ஏற்கனவே பாடசாலை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்ததாக கூறி தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மாண…
-
- 0 replies
- 111 views
-
-
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு - விமல் வீரவன்ச கருத்து! அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதுடன் இவர்களை மகிழ்விப்பதற்காக மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர கொண்டு வந்த இலங்கை மின்சாரசபை சட்டத்தை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தது. மக்கள் விடுதலை முன்னணியின் த…
-
- 0 replies
- 98 views
-
-
ஹர்த்தால் வெற்றியே என்கிறார் சுமந்திரன்! adminAugust 19, 2025 யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் த…
-
- 1 reply
- 156 views
-
-
18 AUG, 2025 | 04:50 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இந்நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாளக் குழுக்களின…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
18 AUG, 2025 | 04:02 PM (எம்.மனோசித்ரா) தபால் மற்றும் தொலைதொடர்பாடல் நிலைய அதிகாரிகள் சங்கமும், ஒன்றிணைந்த தபால் சேவையாளர்கள் சங்கமும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (17) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர். இதனால் திங்கட்கிழமை (18)மத்திய தபால் பரிமாற்றம் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. தபால் சேவைகள் இடம்பெறாமையால் சேவை பெறுநர்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். எவ்வாறிருப்பினும் பேச்சுவார்த்தைகளில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என தபால்மா அதிபர் ருவ…
-
- 8 replies
- 513 views
- 1 follower
-
-
18 AUG, 2025 | 03:38 PM நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட, குறிப்பாக, வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டு வரும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் மனித குலத்திற்கு எதிராக, இந்த பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
Published By: VISHNU 18 AUG, 2025 | 02:02 AM (இராஜதுரை ஹஷான்) முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் திங்கட்கிழமை (17) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுமையாக முடங்க வேண்டும். அதனுடாக அரசாங்கத்துக்கு வலுவான செய்தியை எ…
-
- 4 replies
- 259 views
- 1 follower
-
-
வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம் August 18, 2025 8:55 am வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுவிபத்திற்குள்ளாகியது. விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்ப்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர். மேலும் இலகுரக வாகனம் தடம்புரண்டு வி…
-
-
- 2 replies
- 272 views
-
-
பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள் August 18, 2025 10:33 am வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வழமை போல் அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது. வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழர…
-
-
- 6 replies
- 442 views
- 1 follower
-
-
கிழக்கில் மக்களின் பேராதரவுடன் இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக பூரண ஹர்த்தால் இடம்பெறுவதாக சாணக்கியன் அறிவிப்பு வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னாம் முடிவுக்கு வரவேண்டும்…!; வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் இன்றைய தினம் வடக்கு மற்றும் கிழக்கில் பூரண ஹர்த்தால் மக்களின் பேராதரவுடன் இடம்பெறுகின்றது. இதனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்பாடு செய்ததுடன் இதற்கான பாரிய ஆதரவினை ஆதரவினை பலர் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகம்..! என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது..! எமது மக்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என சாணக்கியன் M.P மேலும் …
-
- 1 reply
- 134 views
-
-
தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்; ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு - செல்வம் அடைக்கலநாதன் Published By: Vishnu 18 Aug, 2025 | 01:57 AM இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத் திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும். மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.எனினும் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் 'ரெலோ' ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (17) மாலை ஊடகங்களுக்கு க…
-
- 0 replies
- 96 views
-
-
யாழில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் - உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை! யாழ் கந்தரோடையில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டிடத்தின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் யாழ்.கந்தரோடையில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையத்தை நேற்றையதினம் (16) சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் என்ற பெயரில் இராணுவ முகாமுக்கு அருகில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடம் தொடர்பில் எங்களுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்றைய தினம் அதைப்…
-
- 0 replies
- 164 views
-
-
ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – வழமைப் போன்று இயங்கும் யாழ். நகர்! வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே குறித்த இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து இர…
-
- 2 replies
- 277 views
-
-
அடுத்த வருடத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்? மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். “நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம். அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம். சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற…
-
- 0 replies
- 106 views
-
-
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. இதற்காக பொருத்தமான நபர்களை அடையாளம் காணுவதற்காக தற்போது அறிவுறுத்தப்பட்டு வருவதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி தெரிவித்தார். விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே உள்ள மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயலிழக்கச் செய்யப்பட்டபோது, சுமார் 60,000 மீனவர்கள் இதன் மூலம் பலன்களைப் பெற்று வந்ததாக தலைவர் கூறினார். அதன்படி, இந்த மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும்போது, அந்த எண்ணிக்கையை விட அதிகமான மீனவர்களுக்கு பலன்க…
-
- 1 reply
- 156 views
- 1 follower
-
-
நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு Aug 17, 2025 - 09:09 - இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் 37 பெண்கள் மற்றும் 220 ஆண்கள் அடங்குவர் என்று பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். இதற்கிடையில், நீரில் மூழ்கி விபத்துக்களில் இருந்து 69 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளையும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmef4zsxz02n0qp4kfae9rzm6
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
17 AUG, 2025 | 07:34 PM பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடு, எனவே நாம் அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதே எமது கட்சியின் அரசியல் எழுச்சிளை தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே, எனவே இச் சட்டத்தை பற்றி நாம் நன்கு அறிந்துள்ளோம். எனவே பயங்கரவாத தடைச்சட்டதை நீக்குவதே எமது அரசின் நோக்கம் எனத் தெரிவித்த அமைச்…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
திருகோணமலையில் வரோதயாநகர் படுகொலையின் 40வது ஆண்டு நினைவு நாள் 17 AUG, 2025 | 07:52 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் குடும்பத்தினரால் வரோதயநகர் பாதாள வைரவர் ஆலயத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட 11 பேருக்கும் விசேட ஆத்ம சாந்திப் பூசை இடம்பெற்றதுடன் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. குறித்த படுகொலைச் சம்பவத்தில், குணராசா வசிகலா, குணராசா சங்கர், குணராசா கெங்கா, தேசிங்கன் இன்பன், தேசிங்கன் ஜெயந்தி, இராசரெட்ணம் ரபேந்திரராசா, கதிர்காமு நாகேஸ்வரி, வெள்ளையன் திருச்செல்வம், கந்தன் மாணிக்கம், சீனியன் மாணிக்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 AUG, 2025 | 02:55 PM முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணனை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக சென்றார். விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் சட்டத்தரணி நடராசா காண்டீபன் அவர்களுடன் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் பத்துமணியளவில் ஆரம்பித்த விசாரணை சுமார் நா…
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
வாடகை வீடு தேடும் மகிந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வரும் பின்னணியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறித்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் ஓய்வு காலத்தைஉத்தியோகபூர்வ இல்லத்திற்கு கழிக்க உரிமை இல்லை. இந்நிலையில், அவர் தற்போது பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது. மெதமுலானையில் உள்ள தனது வீட்டிற்கு அவர் செல்ல விரும்பினாலும், கொழும்புக்கு கணிசமான தூரம் பயணிப்பதில் உள்…
-
- 0 replies
- 170 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் – பயணிகள் பெரும் அவதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு கடுமையான நெரிசல் ஏற்பட்டதாகவும், செக்-இன் கவுண்டர்கள் மற்றும் குடியேற்ற மையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தங்கள் விமானங்களை தவறவிட்டதாக பல பயணிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையம் அதிக கொள்ளளவுக்கு அதிகமாக இயங்கியதாகவும், ஒரே நேரத்தில் பல விமானங்கள் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இதனால் புறப்படும் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். குழப்பமான சூழ்நிலை குறித்து பலர் விரக்தியை வெளிப்படுத்தினர். எதிர்காலத்தில் இதுபோன்ற இடையூறுகளைத் தவிர்க்க பணியாளர்கள் மற்றும் திட…
-
- 0 replies
- 339 views
-
-
இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பது தமிழ், முஸ்லிம் இன விரிசல்களை ஏற்படுத்தும் - அருட்தந்தை மா.சத்திவேல் இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப் படுகொலையாளர்களை பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொடூர இனப்படுகொலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கும் அதன் இனப்படுகொலையை ஆதரிக்கும் நேச நாடுகளுக்கு எதிராகவும் நேற்றுமுன்தினம் பாரிய ஆர்ப்பாட்டம்…
-
- 0 replies
- 90 views
-
-
ஹர்த்தாலுக்கான அழைப்பின் மூலம் கேலிக்கூத்தாடும் இலங்கை தமிழரசு கட்சி! ஹர்த்தாலுக்கு ஆதரவை திரட்டுமாறு தமிழரசுக் கட்சியின் உயர்மட்டமானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் குடைச்சலை கொடுத்து வருவதாக அறியமுடிகிறது. அதாவது ஹர்த்தாலுக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் இவ்வாறு ஆதரவை திரட்டுமாறு உயர்மட்டமானது கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அந்த கடிதத்தில் பதில் தலைவரானத சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சகல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகல கௌரவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் அன்புட…
-
- 1 reply
- 141 views
-
-
இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை: புதிய அரசியலமைப்பு, பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், மாகாணசபைத்தேர்தல் நடைமுறை என்பன உள்வாங்கப்படும் 17 Aug, 2025 | 09:53 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாதக்கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாத்தடைச்சட்டத்தை நீக்குதல், மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவேண்டும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் அரசியல…
-
- 0 replies
- 99 views
-