Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 12 JUN, 2025 | 09:26 AM (நமது நிருபர்) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப்பிரிவின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன, முக்கிய சாட்சிகளை அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (11) முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார். அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அவர் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்க…

  2. இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை! adminJune 12, 2025 இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை (11.06.25) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன், OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு – அந் நிறுவனத்தால் இதற்கான உதவித்தொகை தலா 90 ஆயிரம் ரூபாய் வீதம் வேலணை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் மீளத் திரும்பிய ஆறு பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.…

  3. சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் தெரிவு! adminJune 12, 2025 சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வியட்நாம் நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 14 தொடக்கம் 19 வரை நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு பிரிவு 3ல் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் யாழ் இந்து மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 500 மாணவர்களிடையே இவ்நான்கு மாணவர்களும் தெரிவாகியுள்ளனர். https://globaltamilnews.net/2025/216681/

  4. 11 JUN, 2025 | 07:40 PM (நா.தனுஜா) 'இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தாமே இந்நாட்டின் பூர்வகுடிகள்' எனும் சிங்கள பௌத்தர்களின் நம்பிக்கையே 'நாட்டிலுள்ள நிலங்கள் தமக்குச் சொந்தமானவை, சமூக கலாசார விடயங்களில் தாமே மேலாதிக்கம் உடையவர்கள்' எனும் மனநிலையை அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும், அது மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் மற்றும் பொருளாதார ரீதியிலான பிரிவினைகளுக்கு வழிகோலியிருப்பதாகவும் மத ரீதியிலான ஒடுக்குமுறைகள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'அச்சத்திலிருந்து வன்முறைக்கு: இலங்கையில் இடம்பெற்ற மத அடிப்படையிலான தாக்குதல்கள்' எனும் தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்)…

  5. 11 Jun, 2025 | 11:54 AM தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருள் கொனண்டு சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென்னிலங்கை இளைஞனை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையில் பொசன் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றுள்ளது. இந்த வழிப்பாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞன் ஒருவன், கடந்த திங்கட்கிழமை (09) தென்னிலங்கையில் இருந்து தையிட்டி விகாரைக்கு சென்றுள்ளார். இதன்போது இந்த இளைஞன்விகாரையை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார். அதனை அவதானித்த பலாலி பொலிஸார் இளைஞனை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியமை…

    • 1 reply
    • 192 views
  6. கிழக்கில் தமிழரசுக்கட்சியின் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நாங்கள் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து சபைகளில் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று…

  7. 11 JUN, 2025 | 07:24 PM ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் உலகளாவிய மாற்றத்துக்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. புதிய அரசாங்கத்தினது திட்டங்களின் முன்னுரிமைகளை இனங்கண்டு அதற்கு ஆதரவளிப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றால் செயற்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது குறித்து, இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ள…

  8. தற்போதைய சிறுவர்கள் காய்கறிகள், பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்; பெற்றோர்களும் சமூகமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 11 JUN, 2025 | 06:07 PM தற்போதைய இளைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை வேகமாக தவிர்த்து வருகின்றனர். சுற்றுச்சூழலில் சத்தான மற்றும் சிறந்த பொருட்கள் காணப்பட்டாலும், பள்ளிகளில் அவை குறித்து எவ்வளவு தூரம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், சிறுவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை விரும்புவதில்லை. பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்துக்காக இன்று (11) காலை…

  9. 11 JUN, 2025 | 06:23 PM வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக கல்மடுக்குளத்தையும், அதன் கீழான வயல்நிலங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு தமிழ் மக்கள் நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்த இடங்கள், தற்போது பயன்பாடின்றி பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றபோது, அந்த இடங்களை வனப்பகுதியாகக் கருதி, வனவளத் திணைக்களம் ஆக்கிரமிக்கும் செயற்பாட்டிற்கும் ரவிகரன் வன்மையாக கண்டனம் தெரிவித்தார். இவ்வருடத்திற்கான இரண்டாவது வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இ…

  10. நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை; உண்மை எதுவென தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் நிசாம் காரியப்பர் 07 JUN, 2025 | 10:28 PM நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; கடந்த காலத்தில் நிதி மோசடியில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட டபிள்யூ எச். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக ஊடகங்களில் பர…

  11. 11 JUN, 2025 | 01:41 PM மின்சாரக் கட்டணம் இன்று நள்ளிரவு (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தால் உயர்வடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை மின்சார சபை (CEB) 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணங்களை 18.3 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217159

  12. 11 JUN, 2025 | 04:01 PM பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் இதுபோன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு, நோயாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாணவியின் நிலை தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இன்று காலை உடையார் கட்டில் உள்ள பாடசாலைக…

  13. 11 Jun, 2025 | 03:29 PM நாட்டுக்கு தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. ஜூன் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 21,293 என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையில், இந்தியாவிலிருந்து 6,014 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28.2 சதவீதம் ஆகும். அதேவேளை, பிரித்தானியாவிலிருந்து 1,884 பேரும், சீனாவிலிருந்து 1,277 பேரும், பங்களாதேஷிலிருந்து 1,173 பேரும் இலங்கைக்கு …

  14. யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரை ஒதுங்கி வருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.…

  15. 11 Jun, 2025 | 05:47 PM குரங்குகளால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவற்றை தடுத்து வைக்கும் இடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்படி முன்னோடித் திட்டம் மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கிறது. நாட்டின் முதலாவது குரங்கு பாதுகாப்பு சரணாலயம் மாத்தளை மாவட்டத்தில் களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைப்பதற்கு இனம் காணப்பட்டுள்ளது. நீர், உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு 150 ஹெக்டயர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு 283.87 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் மனித - விலங்கு மோதல்கள், உடைமை சேதம் மற்றும் பயிர் சேதம்…

  16. முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குச் சொந்தமான வீடொன்றில் பணியாற்றும் பணிப்பெண் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று புதன்கிழமை (11) கைதுசெய்யப்பட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் அவரது பணிப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பணிப்பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் கைது! | Virakesari.lk

  17. Published By: DIGITAL DESK 2 10 JUN, 2025 | 01:39 PM மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில் இடம் பெற உள்ள கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது. கா…

  18. சவேந்திர சில்வா மற்றும் அமைச்சர் பிமல் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல் சீற்றம் பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப்படுகொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். எனசமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (11.06.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மணி சமூக புதைகுழியில் தோண்டத் தோண்ட கொலை செய்து புதைக்கப்பட்ட அல்லது உயிரோடு புதைத்து கொல்லப்பட்டோரின் உடல் எச்சங்க…

    • 1 reply
    • 245 views
  19. தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் தமிழரசுக் கட்சி தவறவிட்டுள்ளது - குருசாமி சுரேந்திரன் 11 June 2025 தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி தவறவிட்டுள்ளதாக ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த கட்சியின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியத் தரப்பாக ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்குப் பல தடவைகள் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எடுத்துக்கொண்ட முயற்சிகள் உதாசீனப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பல விட்டுக்கொடுப்புகள் அரவணைப்புகளின் அடிப்படையில் ஜனநாயக தமி…

  20. சட்டவிரோத கருக்கலைப்பு – அதீத இரத்தப் பெருக்கினால் பெண் உயிழப்பு! adminJune 11, 2025 யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு , வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட போது , அதீத இரத்தப் பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதீத இரத்த பெருக்கே உயிரிழப்புக்கு காரணம் என மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , சுன்னாக காவவற்துறையினர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/216619/

  21. Published By: DIGITAL DESK 2 10 JUN, 2025 | 06:44 PM (இராஜதுரை ஹஷான்) சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். சிறைச்சாலை தலைமையகம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரம் - மிஹிந்தலை விகாரையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேசிய பொசன் உற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, சமூகம் மற்றும் சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண…

  22. யாழ்.சாவகச்சேரி நகரில் நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(10) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தின் கீழ் இயங்கும் போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. கைது இதனையடுத்து, குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவர்களில் மூவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சாவகச்சேரி நகர்ப்பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை…

      • Haha
      • Like
      • Thanks
    • 5 replies
    • 387 views
  23. கண்டி மாவட்டம்,கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் (வயது 43), அவரது மனைவி பாத்திமா பர்ஹானா-(வயது 34) இவர்களின் குழந்தைகள் முஹம்மது யஹ்யா ( வயது 12), அலிஷா-(வயது 4), அமிரா-(வயது 4) ஆகிய 5 பேர்களாவர். இவர்கள் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் திங்கட்கிழமை(09) அதிகாலை வந்து இறங்கினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்த 5 பேரையும் மண்டபம் மெரைன் கா…

  24. 31 MAY, 2025 | 03:00 PM இலங்கை கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலுக்குள் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில் நீரியல் வள திணைக்கள யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்தார். யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 3 தொடக்கம் 4 வருடங்களாக யாழ். மயிலிட்டி துறைமுகத்தில் அத்துமீறிய இந்திய ரோலர் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படகுகள் …

  25. 10 JUN, 2025 | 05:49 PM கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை புதன்கிழமை (11) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவநிலையின் தாக்கம் காரணமாக, காற்றின் வேகமானது, அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.