ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143432 topics in this forum
-
"இனவாதமும் பாகுபாடும் இனி செல்லாது!" - அடம்பனில் பிரதமர் அதிரடி 15 February 2026 இனவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ்வாறான அநீதிகளால் அதிகளவில் பாதிக்கப்படுபவர்களில் பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். மன்னார், அடம்பன் பகுதியில் இன்று (15) நடைபெற்ற மன்னார் மாவட்டப் பெண்கள் மாநாட்டில் உரையாற்றும் போது இவ்விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மாற்றத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்வதற்கு, பலமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பெண் தலைமைத்துவம் அவசியமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை வடிவமைப்பதில் பெண…
-
- 1 reply
- 191 views
- 1 follower
-
-
எம்.பி.க்களின் ஓய்வூதியத்திற்கு ஆப்பு! இன்று அனல் பறக்கும் விவாதம் Feb 17, 2026 - 07:35 AM பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (17) பாராளுமன்றில் நடைபெறவுள்ளது. இன்று முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இதற்கான விவாதம் நடைபெறும் எனப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது பாராளுமன்ற வாரம் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், முற்பகல் 11.30 மணி வரை பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைய முக்கிய அலுவல்க…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
76 வருடகால சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் : மார்ச் 01 இல் வர்க்க அதிகாரத்தை நிலைநாட்டும் முன்னிலை சோசலிசக் கட்சியின் 4வது தேசிய மாநாடு கொழும்பில் 16 Feb, 2026 | 06:35 PM (க.சிவலிங்கமூர்த்தி) நாட்டின் 76 வருடகால சாபத்தை முடிவுக்குக் கொண்டுவந்து உழைக்கும் வர்க்கத்தின் கரங்களில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான தீர்க்கமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்து முன்னிலை சோசலிசக் கட்சியின் 4ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (16) நுகேகொடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்தினம் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள…
-
- 0 replies
- 98 views
- 1 follower
-
-
வடக்கு மாகாண பொதுச் சேவை வெற்றிடப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல் 16 Feb, 2026 | 05:36 PM வடக்கு மாகாண பொதுச் சேவையில் நிலவும் தொழில்நுட்பவியல் சார்ந்த பதவிகளுக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி தெரிவித்துள்ளார். கீழ்க்காணும் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கே விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன: மண் பரிசோதகர் – மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III அல்லது பயிற்சித் தரம் (அறிவித்தல் இல: R/2026/04) ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் – வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III (அறிவித்தல் இல: R/2026/05) வேலை மேற்பார்வையாளர் – வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
“புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” கையெழுத்து போராட்டம்! ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து ‘புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்’ என்ற தொனிப்பொருளில் இன்றையதினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்றையதினம் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த போராட்டம். இன்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தவத்திரு வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார், ஏனைய மதகுருக்கள் குறித்த சட்டங்களை எதிர்த்து கையொப்பமிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு…
-
- 1 reply
- 181 views
- 1 follower
-
-
வெடுக்கு நாறிமலையில் சிவாரத்திரி தின வழிபாடுகள்! வடக்கு வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் நேற்று (15) சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது நேற்று மதியம் 2.00 மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேடபூஜை அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் பொலிஸார் அந்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் வழிபாடுகளுக்கு எந்தவித தடைகளும் விதித்திருக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmlop6dhc0004356ny5ebog49
-
-
- 3 replies
- 232 views
- 1 follower
-
-
நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துத் துயரம் நீங்கியது: கடற்படைப் படகு மூலம் கொண்டு செல்லப்பட்ட புதிய பஸ்! Published By: Digital Desk 1 16 Feb, 2026 | 10:33 AM நெடுந்தீவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, கடற்படையின் விசேட படகு மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பஸ் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும், நீண்ட நாட்களாக குறித்த பஸ், பழுதடைந்த நிலையில், கடும் சிரமத்திற்கு மத்தியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி போக…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார் Feb 13, 2026 - 08:56 AM இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmlkbs1k30006356n0rxx4bvb
-
- 1 reply
- 152 views
- 1 follower
-
-
கிளிநொச்சியின் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு - நீர் வழங்கல் அமைச்சர் 16 Feb, 2026 | 09:43 AM கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய் வழி நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக வைத்திய கலாநிதி சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நீர் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் நடத்திய கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்கால பொருளாதார நலன்கரு…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-
-
மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 பேர் சிறையில் Feb 16, 2026 - 05:12 PM மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் 817 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையின்படி, அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டுக் கைதிகளின் எண்ணிக்கை 811 ஆகும். இதில் 792 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர். மேலும், ஐந்து வெளிநாட்டுப் பிரஜைகளும், பயங்கரவாதக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரும் சிறையிலிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விபரங்கள்: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 311 பேர் தற்போது சிறையிலுள்ளனர். இவ…
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி! இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட உதவித்தொகையாகும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு திரும்பும் விமானக் கட்டணம், உதவித்தொகை, விடுதி தங்குமிடம் மற்றும் வருடாந்திர புத்தக மானியம் வழங்கப்படும். 19-45 வயதுக்குட்பட்ட (01.04.2026 நிலவரப்படி) மற்றும் தொடக்க/இடைநிலை மட்டத்தில் இந்தி படித்த அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் https://www.hcicolombo.gov.in/sect…
-
-
- 1 reply
- 147 views
-
-
தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்! “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார். கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சப…
-
-
- 4 replies
- 276 views
-
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: 17 வயது இளைஞன் உயிரிழப்பு Feb 10, 2026 - 06:33 AM பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், அந்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு திசை நோக்கிச் சென்றுள்ளது. அந்த நேரத்தில் மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு இது குறித்து அறிவிக்க…
-
-
- 80 replies
- 3.6k views
- 2 followers
-
-
சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று; தமிழரசுக்கட்சி பங்கேற்காது 15 Feb, 2026 | 02:33 PM (நா.தனுஜா) தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசினால் கொண்டுவரப்படவிருக்கும் ஏக்கிய இராச்சிய வரைவை நிராகரித்து, கூட்டாட்சி தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பில் தமிழ்ந்தேசியக்கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறவித்திருக்கும் அதேவேளை, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் இதில் கலந்துகொள்வதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரியவருகிறது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஏக்கிய இராச்சிய அரசியல…
-
- 3 replies
- 273 views
- 1 follower
-
-
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் - இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் 13 Feb, 2026 | 07:12 PM (நா.தனுஜா) ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ச…
-
- 1 reply
- 124 views
- 1 follower
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்பது எமது கொள்கையே ; தேசிய பாதுகாப்பின் பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியம் - லக்மாலி ஹேமசந்திர எம்.பி தெரிவிப்பு 15 Feb, 2026 | 01:54 PM ஆர்.ராம் நாட்டில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது எமது கொள்கையாகும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இருப்பினும், நாட்டின் தேசிய பாதுகாப்பு சார்ந்த பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியமாகின்றது என்பதாலேயே அதுபற்றி கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார். இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, ஊடக ஒழுக…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல் போதைப்பொருள் வியாபாரத்தில் காவல்துறையினர் மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார். நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தனமல்விலவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காவல்துறை மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான எந்தவொரு தகவலையும் நேரடியாகத் பொதுமக்கள் எனக்கு தெரிவிக்க முடியும். 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கைது "இந்த போதைப்பொருள் வியாபாரம் ஒவ்வொரு மூலையிலும் இந்தக் கடத்தல்காரர்களால் நிறை…
-
-
- 1 reply
- 118 views
- 1 follower
-
-
பெருந்தோட்ட பகுதி முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை 15 Feb, 2026 | 10:46 AM மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று மத்திய மாகாணத்திற்கு கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொட்டகலையில் சனிக்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே குறித்த ஒன்றியம் இந்த கோரிக்கையை முன்வைத்தது. இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் யோகேஸ்வரி கருத்து தெரிவிக்கையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இந்த முன்பள்ளி பாடசாலைகளை சுமார் 20 வருடங்களாக நடாத்தி வருகிறோம். அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கும் வளங்கள் எதுவும் எமக்கு கிடை…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
வவுனியாவில் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் Feb 15, 2026 - 06:02 PM வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அக்குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வொன்றின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, இக்குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் …
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
திருகோணமலையில் பணமோசடி: பலர் பாதிப்பு! சிறிலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தின் ஊழியர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, பொதுமக்களின் வங்கி விபரங்களைப் பெற்று பணத்தைச் சூறையாடும் பாரிய மோசடி ஒன்று திருகோணமலை பகுதியில் இடம்பெற்று வருகின்றது. கடந்த வியாழக்கிழமை (12) இவ்வாறானதொரு மோசடிக்கு இலக்காகி தம்பதியினர் ஒருவர் பெரும் தொகையை இழந்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபர்கள், தாம் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளனர். பணமோசடி "நீங்கள் நீண்டகாலமாக எமது வாடிக்கையாளராக இருப்பதால், உங்கள் கணக்கில் 1,20,000 ரூபா பெறுமதியான 'ஸ்டார் பொயின்ஸ்' (Star Points) சேர்ந்துள்ளது. அதனைப் பணமாக மாற்றி உங்கள் வங்கிக் கணக்க…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு! adminFebruary 7, 2026 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பண…
-
- 3 replies
- 237 views
- 1 follower
-
-
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை! நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இதேவேளை நீர்கொழும்பு பொலிஸார் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமையை அறிந்து , யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நீர்கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் கார் ஒன்றினை வாடகைக்கு …
-
- 0 replies
- 141 views
-
-
நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது - விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு 15 Feb, 2026 | 12:06 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தை விட, நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் கொண்டதாக தற்போதைய அரசாங்கத்தால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் ஊடகங்கள் மாத்திரமின்றி, மக்கள் தமது எண்ணங்களை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலைமை ஏற்படுமென முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்…
-
- 0 replies
- 84 views
-
-
வலி.வடக்கில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதியை சித்திரை புத்தாண்டுக்கு முன்விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர் 15 Feb, 2026 | 11:38 AM யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான்…
-
- 0 replies
- 70 views
-
-
சோமரத்ன ராஜபக்ஷவின் அண்மைய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு 15 Feb, 2026 | 11:29 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கைவிடுத்து கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின…
-
- 0 replies
- 88 views
-