ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
"இலங்கைக்கு தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து ஒன்றாக இணைந்து தாழமுக்கமாக மாறவுள்ளன. இவ்வாறு இரு காற்றுச் சுழற்சிகள் இணைந்து இலங்கை ஊடாக நகர்கின்றமை 130 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை. இதனால், எதிர்வரும் 30ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்தில் கனமழை தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்றுறையின் மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராசா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச்சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று புதன்கிழமை ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறவுள்ளன. காற்றழுத்த தாழ்வுநிலை இந்தக் கா…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை Nov 26, 2025 - 02:37 PM கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது தற்போது அதன் அதிகபட்ச கொள்ளளவை அண்மித்து வருவதுடன், தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை காரணமாக விசேடமாக தமன, அம்பாறை, இறக்காமம், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன்…
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
26 Nov, 2025 | 04:39 PM மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இங்கிலாந்தில் எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒரு "சுமுகமான ஆர்ப்பாட்டம்" என்று பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்தார். புதன்கிழமை (26) எதுல் கோட்டையில் நடைபெற்ற பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் வழக்கறிஞர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், தில்வின் சில்வாவுக்கு எதிராக புலிக்கொடிகள் ஏந்தி வந்தபோதும், எந்தவொரு கோரிக்கையையோ அல்லது கோஷத்தையோ அவர்கள் முன்வைக்கவில்லை. அவர் வாகனத்திலிருந்து இறங்கி விழா நடைபெறும் இடத்திற்குச் செல்வதைத் தடுக்க எந்த மு…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-
-
சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து! ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர்களை ஈர்த்த சிங்கள, முஸ்லீம் போராளிகளின் பெற்றோர்கள் கெளரவிக்கப்படவேண்டுமென மாவீரர் அறிவிழியின் தந்தையும், மூத்த போராளியுமான முத்துக்குமார் மனோகர் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அங்கு மேலும் கருத்துரைக்கையில், இலங்கையிலுள்ள நான்கு இனங்களைச் சேர்ந்த பேராளிகளும் மாவீரர்கள் ஆகியுள்ளனர். எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்தே இறுதி யுத்தம் வரை உறுதியுடன் போராடியுள்ளனர். இந்த மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே! வருடாவருடம் இந்த விடயம் தொடர்பாக நான் வலிய…
-
-
- 8 replies
- 687 views
-
-
26 Nov, 2025 | 01:15 PM தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் இன்று புதன்னிழமை (26) குறித்த பகுதிக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்டோர் விஜயம் செய்து, நீரில் மூழ்கியுள்ள மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்ட வீதிகள் தொடர்பிலும் நிலைமையை கேட்டறிந்ததோடு, உடனடியாக அவ்வீதிகளை மூழ்கடித்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விஜயத்தின்போது சபை நிர்வாகிகள் முள்ளிப்பொத்தானை பாதிமா பாலிகா பாடசாலை வீதி, 4ஆம் வாய்க்கால் வீதி, பாலம் போட்டாறு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
Published By: Vishnu 26 Nov, 2025 | 01:55 AM இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை , கோட்டாஞ்சேனையில் உள்ள செயிண்ட் லூசியா கதீட்ரலில், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் தலைமையில், பிரதி தலைமை அதிகாரி,விநியோகம் மற்றும் சேவை இயக்குநர் ரியர் அட்மிரல் ருவன் கலுபோவிலன் தலைமையில், 2025 நவம்பர் 21 அன்று நடைபெற்றது. 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை கடற்படை கிறிஸ்தவ சங்கம், மிக உயர்ந்த கடற்படை பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின்படி தொடர்ச்சியாக 34 ஆண்டுகளாக கூட்டு உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனையை நடத்தி வருகிறது. இந்த உற்சவம் மற்றும…
-
- 0 replies
- 89 views
- 1 follower
-
-
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த IMF பரிசீலனை! November 26, 2025 இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு அடுத்தகட்ட ஒப்புதலுக்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபையினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர், இக்காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சந்த…
-
- 0 replies
- 84 views
-
-
Published By: Vishnu 26 Nov, 2025 | 01:38 AM (எம்.மனோசித்ரா) திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைககள் அகற்றப்பட்மை போன்ற சம்பவங்கள் ஊடாக பௌத்த சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சிக்கப்படுகிறது. எனவே இளம் பிக்குகள் மற்றும் தேசிய அமைப்புகள் அமைதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கும் அதேவேளை, மீண்டும் தனி ஈழத்துக்புகு பாதை அமைப்பதற்கு இடமளித்து விடக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். இராஜகிரியவிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட ச…
-
-
- 1 reply
- 139 views
- 1 follower
-
-
யாழில் மாவீரர் வாரத்தில் பொலிஸாரின் கெடுபிடிகள்! மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர் நாள் நாளை வியாழக்கிழமையும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு பொலிஸாரின் கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று சோடினையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரின் சிவில் உடை படங்களுடன் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட பதாகையை அகற்றுமாறும் வல்வ…
-
- 0 replies
- 74 views
-
-
அசாதாரண காலநிலை காரணமாக யாழில் 560 பேருக்கு பாதிப்பு! வடமாகாணத்தில் தற்போது நிலவும் அசாதாரண கால நிலை காரணமாக, 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவின்பிரதிப்பணிப்பாளர் ரி.என். சூரியராஜா தெரிவித்துள்னர். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலைகாரணமாக சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சங்கானை பிரதேசசெயலர் பிரிவில் மின்னல் தாக்கம் மற்றும் வெள்ள இடர் காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஊர்காவற்றுறை பிரதே…
-
- 0 replies
- 53 views
-
-
தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று! தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் தாயகத்திலும் புலத்திலும் இன்று கொண்டாடப்படவுள்ளது. தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது இல்லம் அமைந்துள்ள வளாகம் அந்தப் பகுதி இளைஞர்களால் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை கேக் வெட்டிக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. தமிழர்தாயகத்தின் இதர பகுதிகளிலும், புலம்பெயர்நாடுகளிலும்கூடதலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கடந்த பல வருடங்களாக இராணுவத்தினர…
-
-
- 17 replies
- 1.1k views
- 1 follower
-
-
0 1 minute read கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத அரசு காலத்தில் செயல்பட்டது போல் தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை தவிர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது பற்றி ஸ்ரீ. ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடக பேச்சாளர் முபாறக் மஜீத் தெரிவித்ததாவது, அண்மைக்காலமாக தொல்பொருள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையில் முரண்பாடு தோன்றுவதும் கவலைக்குரிய விடயமாகும். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிள்ளையார் ஆலயத்திலும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்டு இடங்களிலும், இது போல் பல இடங்களிலும் தொல்பொருள…
-
- 2 replies
- 221 views
-
-
25 Nov, 2025 | 06:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஆண்டுக்கு பல பில்லியன் ரூபா வருமானம் பெறும் டியூசன் மாபியா என்ற கைத்தொழில் துறை ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களை சுரண்டிப் பிழைக்கிறது. தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த டியூசன் மாபியாவை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டது. ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற 2026 வரவு - செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 25 Nov, 2025 | 05:30 PM பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படாமையினால் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த இலங்கை–அமெரிக்க பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஆவணத்தில், இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்கள், செயல்துறை வரம்புகள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த 14 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்த ஒப்பந்தம் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மாநில கூட்டுத் திட்டத்தின் (SPP) கீழ் மொன்டானா தேசிய காவல்படை, அமெரிக்க கடலோர காவல்படை மாவட்டம் 13 மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடை…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) அலைமருவி சமிக்ஞை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமையை (Analog Terrestrial System) இயக்குவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயன்முறையை இடைநிறுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது இயங்கிவரும் அலைமருவி சமிக்ஞை ஒளிபரப்பு முறைமை மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்புவதற்காக தற்போது 16 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தி 5 அரச தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளிட்ட 24 அலைவரிசைகள் நாட்டில் தற்போது காணப்படுகின்றன. தற்போது தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் வர்ண ஒளிர்மை அதிர்வெண் இயலளவை உயர்ந்தபட்சம் பயன்படுத்தி இயக்கப்படுவதுடன், 46 வருடங்கள் பழமையான அலைமருவி சமிக்ஞை ஒளிபரப்பு முறைமைக்குப் பதிலாக நவீன தொழிநுட்பத…
-
- 0 replies
- 90 views
-
-
இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படத் தேவையில்லை, அவர்கள் சுயமாகச் செயற்படுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே அவசியமானது – தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாந்து 25 Nov, 2025 | 05:23 PM இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படவேண்டிய அவசியமில்லை, அவ்வாறு அனுதாபப்படுவது அவர்களை ஒரு விதத்தில் அவமரியாதைப் படுத்துவதுபோன்றாகும். இயலாமை உடைய நபர்கள் தமது கடமைகளைச் சுயமாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்குவதையே செய்ய வேண்டியிருப்பதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாந்து தெரிவித்தார். இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அமைச்சுக்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள செயலம…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு Nov 25, 2025 - 04:52 PM கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கதிரவேலு சிவராசசிங்கம் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ள…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
25 Nov, 2025 | 03:52 PM கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை துரிதமாக முன்னெடுத்துள்ளது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் அறிவுறுத்தலின் பேரில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் பெரியநீலாவணை பிரதேசங்களின் கடல் வாய் முகத்துவாரங்கள் தோண்டித் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கல்முனையின நடராசா வாய்க்கால் உள்ளிட்ட முக்கிய வாய்க்கால்கள் மற்றும் மதகுகள் யாவும் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏலவே துப்பரவு செய்யப்பட்டு, மீண்டும் குப்பைகளினாலும் மண் த…
-
- 1 reply
- 111 views
- 1 follower
-
-
வவுனியாவில் பாரிய தீ விபத்து - கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை செவ்வாய், 25 நவம்பர் 2025 06:18 AM வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றின் காட்சியறையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வவுனியா - ஹொரவபொத்தானை வீதியில் அமைத்துள்ள சிங்கர் காட்சியறையிலையே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தினை அடுத்து, தீயணைப்பு படையினர் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பெருமளவானோரின் பெரும் போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தில் காட்சியறையில் காணப்பட்ட பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள், தளபாடங்கள் என கோடிக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம்…
-
- 0 replies
- 138 views
-
-
யாழ் பல்கலையின் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி சத்தியகுமார் என்பவரே உடன் அமுலாகும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களில் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களில் பங்கேற்காமை காரணமாக அவரது உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த உறுப்பினரின் எஞ்சிய காலப்பகுதிக்காக 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்துக்காக மூன்று பேரைத் தெரிவு செய்து, ஜனா…
-
- 0 replies
- 108 views
-
-
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணை ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் கள்ளுத் தவறணையில் வைத்து இருவரால் தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு உள்ளான அவர் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர்மீது தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், ஒருவர் நேற்றய தினம் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்…
-
- 0 replies
- 92 views
-
-
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பாதீடு தோற்கடிப்பு! adminNovember 25, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் நேற்றையதினம் திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டது. 13 ஆசனங்களை கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபையில் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 4 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தலா 03 ஆசனங்களையும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சி 2 ஆசனங்களையும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது. அந்நிலையில், தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்றைய தினம் நடைபெற்ற சபை அமர்வில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தபோது அது தோற்கடிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக அகில…
-
- 0 replies
- 75 views
-
-
25 Nov, 2025 | 10:51 AM திருகோணமலையில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். ஹப்புத்தளை மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 41 மற்றும் 44 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு திருகோணமலை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதி…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
25 Nov, 2025 | 09:56 AM யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பாடசாலை மாணவி அதே பிரதேசத்தில் வசிக்கும் இளைஞனுடன் 2 வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில், திடீரென ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https…
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
நாமும் திருப்பி அடிப்போம் – கஜேந்திரகுமாருக்கு சீ.வி.கே எச்சரிக்கை adminNovember 24, 2025 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செயலாளர் கஜேந்திரனும் சொல்வது போல தமிழ் அரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யவில்லை. நியாயமான விமர்சனத்தை ஏற்கலாம். துரோகம் ,காட்டிக்குடுப்பு, இனத்துரோகி என்ற வசனங்களை ஏற்க முடியாது. இனி எந்த தரத்தில் பதில் வருகிறதோ அதே தரத்தில் பதில் கொடுக்கப்படும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கூட்டுத் தலைமையாக பொது விடயங்களில் ஒன்றாகுவோம் என அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில்…
-
- 0 replies
- 155 views
-