Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்! adminMay 14, 2025 கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தமது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இதற்கான எதிர்ப்பை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்தும் தாம் கவலையடைவதாக நாமல் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர்…

  2. முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலில் அஞ்சலி செலுத்திய பேரறிவாளனின் தாயார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுதலைப்பெற்ற பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுத் திடலுக்கு வருகைத்தந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுத் திடலுக்கு சென்று நினைவேந்தலை முன்னெடுத்துள்ளார். வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் அவரின் வருகை முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக நிலம் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொது அமைப்புக்கள், அரசியல் ஆதரவாளர்கள், பல்கலை …

  3. கனகராசா சரவணன் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் துறை எடுத்த முடிவு, தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இமேஷ முத்துமால, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திஸாந…

  4. Published By: DIGITAL DESK 2 16 MAY, 2025 | 03:04 PM இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர் சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து துறைகளிலும் இந்திய அரசாங்கம் அனைத்து வகையான ஆதரவையும் தொடர்ந்தும் வழங்கத் தயாராக உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகரான சந்தோஷ் ஜா வியாழக்கிழமை (15) மத்திய மாகாணத்திற்கு தனது விஜயத்தினை மேற்கொண்டார். இவ் விஜயத்தின் போது, இரு வேறு நிகழ்வுகளின் மூலம் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான பல்வேறு உதவிகளை வழங்கினார். கண்டி பேராதெனிய இந்துக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், கல்லூரியின் கோரிக்கையின் பேரில் மாணவர்களுக்கு கணினிகள், இசைக்கருவிகள், நூலகத்துக்கு நூல்கள் மற்…

  5. 16 MAY, 2025 | 01:32 PM உலகின் பல நாடுகளை போல இலங்கை பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை இஸ்ரேலுடனான உறவை திடீர் என துண்டித்தால், பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும், இதன் காரணமாக இஸ்ரேலில் வேலைபார்க்கும் பல இலங்கையர்கள் வேலையை இழக்கும் நிலையேற்படும். எங்களால் இதனை செய்ய முடியாது. உலகின் பல நாடுகளை போல நாங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்போம், ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணுவோம். பாலஸ்தீனிய விவகாரத்திற்காக இலங்கை இஸ்ரேலுடனான பொருளாதார இராஜதந்திர உறவினை துண்டித்தால், அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு…

  6. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம் Digital News Team 1 மே, 2025 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. மே முதலாம் திகதியான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி உறவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317469

  7. Published By: DIGITAL DESK 2 16 MAY, 2025 | 10:17 AM பாலஸ்தீனத்திற்கான 77வது அல்-நக்பா நினைவு தின நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார். 'நக்பாவை முடிவுக்குக் கொண்டு வருதலும் பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை அடைவதற்கான சர்வதேச நடவடிக்கையும்' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நினைவு நிகழ்வு, விளாழக்கிழமை (15) கொழும்பு 07 இல் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகம் மற்றும் பாலஸ்தீன பேரழிவை நினைவுகூரும் இலங்கை ஒருமைபாட்டுக் குழு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் சமயத் தலைவர்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான …

  8. உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க திணறும் தமிழரசுக் கட்சி: சிறிநேசன் எம்.பி விடுத்த அழைப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசிய உணர்வைக் கொண்டவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சில சூழ்நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் முடிவுற்ற நிலையில் சபைகளை அமைக்கின்ற செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்ற பிரதிநிதித்துவ முறை என்பது ஒரு சிக்கலான பிரதிநி…

  9. முள்ளிவாய்க்காலில் திருச்சடங்கு; அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான நீத்தார் திருச்சடங்கு (இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிராத்தணை) இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சைவ தமிழ் மன்றத்தின் செந்தமிழ் ஆகம அருச்சுனைஞர்கள் சிவத்திரு ந.குணரட்ணம் மற்றும் சிவத்திரு இ. றமேஸ்குமார் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்தனர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த அழைப்பை விடுத்தனர் https://akkinikkunchu.com/?p=324771

  10. ஊழலைத் தடுப்பதற்காக மாகாணசபைகளில் புலனாய்வுப் பிரிவு! ஜனாதிபதி அநுர நடவடிக்கை ஊழல்களையும் மோசடிகளையும் தடுப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் அமைச்சு மட்டத்திலான புலனாய்வுப் பிரிவுகளை ஏற்படுத்த ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஜனாதிபதிக்கும், ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே, ஜனாதிபதியால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மாகாணங்களில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை தொடர்பிலான சவால்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கு ஜனாதிபதியால் தீர்வுகளும் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு நிதி மாகாண சபைகளுக்…

  11. ஆனையிறவு உப்பள ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி போராட்டம்! 14 May, 2025 | 10:35 AM ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தற்போதுள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் எம்மை பழிவாங்குவது போல் செயற்படுகின்றனர். எமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை. எமக்கான மருத்துவ வசதிகள் உப்பளத்தில் இல்லை. குடிநீர் பிரச்சினை காணப்படுகிறது. குடிநீரை வெளியே உள்ள தாங்கியில் இருந்துதான் உள்ளே எடுத்து செல்ல வேண்டும். முற்பகல் 10 மணியானதும் நாங்கள் எடுத்துச் செல்லுகின்ற குடிந…

  12. 15 May, 2025 | 06:09 PM கொழும்பு கொட்டாஞ்சேனையில் மாணவி உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பான சாட்சி விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (15) நடத்தப்பட்டன. கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னிலையில், கொட்டாஞ்சேனை பொலிஸாரினால் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. முதலாவதாக, மாணவி உயிர்மாய்த்துக்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினது தலைவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அடுத்ததாக, மாணவியின் தாயாரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது, மாணவியின் மரணம் தொடர்பில் மேலதிகமாக சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்துள்ளார். அன்றைய தினம் மாணவியின் தாயாரிடமி…

  13. பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்ட உயரதிகாரிகள் ஏழுபேரின் பதவிகள் பறிக்கப்பட்டன! ஆளுநர் அதிரடி நடவடிக்கை பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேசசபைச் செயலாளர்களின் பதவிகள் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் பறிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளரின் பதவி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், ஒரு நகரசபைச் செயலாளர் மற்றும் மூன்று பிரதேசசபைச் செயலாளர்கள் ஆகியோரின் பதவிகள் பதவிகள் திரும்பப் பெறப்பட்டு, அவர்கள் வேறு திணைக்களங்களுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள…

  14. 15 May, 2025 | 01:18 PM யாழில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர், வகுப்பு ஒன்றுக்குச் சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி கேட்டபோது மாணவர்கள் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீது கதிரையால் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்கியது உண்மை எனவும் ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார். சம்பவம் தொடர…

  15. போதைப்பொருள் கடத்தல்; மூவருக்கு மரண தண்டனை! ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது. இவர்கள் மூவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் 179 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலின் போது கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் ஐந்து பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார். https://athavannews.com/2025/1432010

  16. வல்வெட்டித்துறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது! யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு நபர்களும், சம்பந்தப்பட்ட குழுவை அழைத்து வர இந்த நாட்டிலிருந்து படகில் சென்றவர்கள் ஆவர். மேலும் விசாரணையில், மற்ற நால்வரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக பயணம் செய்த ஒரு குழு என்பதும், அங்குள்ள இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் பிடிக்கப்பட்…

  17. ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று! ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து வாகனங்களும் பத்து வருடங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதுடன் அதற்கமைவான விலைக் கோரல் நேற்று (14) முடிவுற்றது. இன்றைய தினம், பீ.எம்.டபிள்யூ.மோட்டார் வாகனம் 01, போர்ட் எவரெஸ்ட் ஜீப் 01, ஹுண்டாயி டெரகன் ஜீப் 01, லேண்ட் ரோவர் ஜீப் 01, மிட்சுபிஷி மொண்டெரோ ஜீப் 01, நிசான் பெற்றல் ஜீப் 03, நிசான் வகை மோட்டார் கார்கள் 02, போர்ஷ் (Porsche) கெயின் மோட்டார் வாகனம் 01, சென்யோன் ரெக்ஸ்டன் வகை ஜீப் 05, லேண்ட் குரூஷர் சஹரா வகை ஜீப் 01, வீ 08 வாகனங்கள் …

  18. செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம். யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டு அமைய, விடயத்தை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியைஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் …

  19. Published By: DIGITAL DESK 2 15 MAY, 2025 | 04:41 PM விசேட தேவையுடைய நபர்களுக்குத் தாக்கம் செலுத்தும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் விசேட தேவையுடைய நபர்கள் குழுக்களின் பிரதிநிதிகளுடன் விசேட தேவையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடியது. இந்த ஒன்றியம் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அந்தப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது. ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தப் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றியத்தை அறிவுறுத்தியதுடன், இவ்வாறு முன்வைக்கப்படும் அனைத்து கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வதாகவும், அது தொடர்பில் எடுக்கக்கூடிய பொருத்தமான நடவடிக்கை…

  20. Published By: DIGITAL DESK 2 15 MAY, 2025 | 04:53 PM 2024 (2025) க. பொ. த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செயன்முறைப் பரீட்சைகள் இம் மாதம் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்ட அறிக்கையின் படி, செயன்முறைப் பரீட்சைகள் மே 21 முதல் 31 வரை நாடு முழுவதும் 1,228 பரீட்சை மையங்களில் இந்த செயன்முறைத் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இதில் சுமார் 1,71,100 பரீட்சார்த்திகள் பங்கேற்க உள்ளனர். செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறும் பாடங்கள்: இசை (Eastern Music) – 40 இசை (Western Music) – 41 கார்நாடக இசை (Carnatic Music) – 42 உள்ளூர் நடனம் (Local Dancing) – 44 பரதநாட்டியம் ( Bharatha Dancing) – 45 நாடகம் மற்றும் நாட…

  21. 15 MAY, 2025 | 04:00 PM இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு மில்லியன் டொலர் (299 மில்லியன் ரூபா) பெறுமதியான கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவியினை இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளது. தனது கடல்சார் களத்தில் அணு, கதிரியக்க மற்றும் இரசாயன அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதற்கான பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் திறனை குறிப்பிடத்தக்க அளவில் இது அதிகரிக்கிறது. அமெரிக்க சக்தி திணைக்களத்தின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் (DOE/NNSA) மற்றும் அதன் அணுக்கடத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு அலுவலகத்தினால் விநியோகிக்கப்பட்ட இம்மேம்பட்ட கருவியானது, வியாழக்கிழமை (15) இலங்கை கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்க…

  22. சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது தமிழ்த் தேசிய பேரவை! http://seithy.com/img/icons/photo.png http://seithy.com/siteadmin/upload/TNC-met-ambasidors-150525-seithy%20(3).jpg வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டி விகாரை விவகாரம் என்பன தொடர்பில் கொழும்பிலுள்ள சர்வதேச இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், இவ்விடயங்களில் சர்வதேச சமூகம் தலையீடு செய்து, உரிய அழுத்தங்களை வழங்கி, தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ்த்தேசிய பேரவையில் அங்கம்வகிக்கும் …

  23. என்பிபிக்கு எதிராக கூட்டாக ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகள் முடிவு! http://seithy.com/siteadmin/upload/joint-hands.jpg தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று ஒரு உடன்பாட்டை எட்டினர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பிளவர் வீதியில் உள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அங்கு எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆட்சி அமைக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பெயர் பட்டியலைத் தயாரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் இன்று கூடவுள்ள…

    • 0 replies
    • 159 views
  24. தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மிரட்டுகிறார் என தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில்பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியிருந்தார். இந்த உரை குறித்து தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில்பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சுமந்திரன்; “தங்களிடம் முன்ற…

  25. 15 May, 2025 | 04:38 PM நாட்டில் நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் GPS மற்றும் CCTV கருவிகள் விரைவில் பொருத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்ப இணைப்புகள் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளில் இணைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேருந்து ஓட்டுநர்களை கண்காணிக்கவும் அதனூடாக வீதி விபத்துக்களை குறைக்கவும் இந்த இணைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். ஓட்டுநர்கள் சோர்வாக இருக்கிறார்களா, தூக்கத்தில் பேருந்தை செலுத்துகிறார்களா, பணியில் ஈடுபடும்போது கைப்பேசி பயன்படுத்துகிறார்களா போன்ற விடயங்களை கண்டறிய இந்த தொழில்நுட்ப அமைப்புகள் உதவும். தற்போது ஓட்டுந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.