Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் - அமைச்சர் விஜித்த ஹேரத் 06 JUL, 2025 | 09:33 AM (எம்.வை.எம்.சியாம்) பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் இயக்கம் எமதாகும். இந்த சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டமொன்றும் அவசியமாகும். எனவே இந்த புதிய சட்டத்தை மூன்று மாதங்களில் அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவது எமது இலக்காகும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் விஜித்த ஹ…

  2. 05 JUL, 2025 | 07:45 PM புதிய சுற்று நிருபத்தில் 1756 பட்டதாரி ஆசிரியர்கள் வடக்கு மாணத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களுக்கான போட்டிப் பரீட்சையின் போது மாவட்ட ரீதியில் தேவைக்கு ஏற்ப வெட்டுப் புள்ளிகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் உலக வங்கி பிரதிநிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுனர் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. அந்த கூட்டத்தில் எங்களது அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு பில்லியன் டொலர் நிதி உதவி வடக்கு - கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட…

  3. 06 JUL, 2025 | 11:05 AM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் தற்போதுள்ள சட்டத்துக்கு அமைய 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளை விரும்பியோ விரும்பாமலோ பாலியல் உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் துஷ்பிரயோகமாகவே கருதப்படும். இதற்காக 10 வருட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருமான ரங்க திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் பிரஜை ஒருவர் சுதந்திரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வதற்கு போதுமான அனைத்து சட்டங்களும் உள்ளன. நான் கடந்த 20 வருடங்களாக நீதிபதியாக கடமையாற்றினேன். இந்த …

  4. சிறையில் இருக்கும் உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் ! குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்! சிறைகளுக்குள் கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(5) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை, ஜனநாயக சோசலிச குடியரசு எனும் பெயரை தாங்கி நிற்கிறது. ஆனாலும் இந்த ஜனநாயக சோசலிசம் வெளிப்படுத்தும் விழுமியங்களுக்கு மாறாக ஒடுக்கும் அரசாகவே இவ்அரசு பரிணமித்துள்ளது. இந்த அரசினது இரும்…

  5. ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து! முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தநிலையில், தற்போது அப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவருகின்றனர் இந்நிலையில் குறித்த பகுதியை வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையிலேயே குறித்த குளங்களை விடுவிப்புச்செய்து மக்களின் விவசாய பயன்பாட்டிற்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒட்டுசு…

  6. வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்த நடவடிக்கை! வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்துவதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரின் தலைமையில் திறக்கப்பட்டது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் கைத்தொழில் அமைச்சு ஜனாதிபதியிடம் முன்வைத்த முன்மொழிவைத் தொடர்ந்து இத் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறுமதி சேர் வரியை திரும்ப வழங்குவதே இதன் ந…

  7. பட மூலாதாரம், BBC SINHALA கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 ஜூலை 2025, 10:55 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துப்பாத்தி பகுதிகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியில் சிறுவர்களின் எலும்புகள், பொம்மைகள், புத்தகப் பைகள் கிடைத்துள்ள நிலையில், இவை இறுதி யுத்தக் காலத்தில் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகளுடையதா என்ற சந்தேகத்தை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எழுப்பியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இலங்கையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 40 எலும்புக்கூடுகள் அடையாள…

  8. Published By: DIGITAL DESK 2 05 JUL, 2025 | 08:08 PM வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு பகுதியில் மகாவலி திட்டத்தின கீழ் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மகாவலி திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பரப்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் கொக்கச்சான்குளம் அபகரிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ என்னும் பெயரில் புதிய குடியேற்றம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மற்றொரு கிராமமான திரிவைச்சகுளம் பகுதியில் 350 ஏக்கர் நிலம் மகாவலி வலயம் என்ற போர்வையில் உள்வாங்கப்பட்டு துப…

  9. விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை July 5, 2025 9:01 am இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (04) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பாக, 1990 களில் துணுக்காய் பகுதியில் உள்ள நெற்களஞ்சிய சாலை கட்டிடத் தொகுதியில் விடுதலைப் புலிகளால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாமில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் பவானி குளம், சிவபுரம் பகுதி…

    • 1 reply
    • 360 views
  10. நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம் - தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து! Published By: VISHNU 05 JUL, 2025 | 12:03 AM தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த உப்பளமே மீண்டும் திடீரென இயங்கு நிலைக்கு செயற்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் குறித்த உப்பளத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரோடு உப்பளத்திற்கு சென்று நிலைம…

  11. தொழிற்கல்வியை தீர்க்கமான பாடமாக மாற்றவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். முறையான, கவர்ச்சிகரமான நிறுவன அமைப்பைக் கட்டமைப்பதற்காக நாடு தழுவிய தொழிற்கல்வி நிறுவனங்களை மையமாக வைத்து ஜூலை 4 ஆரம்பிக்கப்பட்ட "ஸ்ரம மெஹெயும" (உழைப்பு நடவடிக்கை) திட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்றபோது, கம்பஹா தொழில்நுட்பக்கல்லூரியில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்: "தொழிற்கல்வியை மையமாக வைத்து பிரதி அமைச்சர் நலின் ஹேவகே அவர்களின் கருத்துப்படி…

  12. வெள்ளை ஈ தாக்கத்திலிருந்து தென்னைகளை பாதுகாக்க 2 வார வேலைத்திட்டம்! தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் “வெள்ளை ஈ” இன் தாக்கமானது அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார். நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தென்னை உற்பத்தியில் வெள்ளை ஈயானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தென்னை வளர்ப்பாளர்கள் பல்வேறு அசோகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். வேறு மாகாணங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் கட்டுப்பாட்…

  13. Published By: VISHNU 04 JUL, 2025 | 10:25 PM நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், மறுபுறம், பொருளாதாரத்தை விரிவுபடுத்தி கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து, அவர்களை பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார். அலரி மாளிகையில் வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் நடைபெற்ற "சமூக சக்தி" தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ…

  14. Published By: VISHNU 04 JUL, 2025 | 09:22 PM முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததாக தெரியவந்துள்ளது. கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219209

  15. Published By: DIGITAL DESK 2 04 JUL, 2025 | 08:54 PM லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார். இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்…

  16. முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா! ஒருவர் உயிரிழப்பு ,ஒருவர் படுகாயம்! முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Athavan Newsமுள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா!...முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர…

  17. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா தொடக்க நிகழ்வு; மக்கள் அவதானம்! தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) 2025 ஆகஸ்ட் 2 அன்று அதிகாரப்பூர்வமான ஆரம்ப விழா தனிப்பட்ட அழைப்பின் பேரில் மாத்திரம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, பிரமாண்டமான திறப்பு விழாவிற்கான அங்கீகரிக்கப்படாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அழைப்பின் பேரில் மட்டுமே என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். மேலும் எந்த மூன்றாம் தரப்பினரும் டிக்கெட்டுகளை வழங்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்கவோ அங்கீகரிக்கப்படவ…

  18. மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை! செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான தகவலை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அத்துடன் மொரட்டுவ பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள், தனியார் துறையுடன் இணைந்து இந்த மென்பொருளை உருவாக்க ஒத்துழைத்து வருவதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த மென்பொருள் பொதுமக்கள் பாவனைக்கு விடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய மென்பொருள் பேசும் சிங்கள உள்ளடக்கத்தை சில நொடிகளில் தமிழில் மொழிபெயர்க்கும் திறனைக் கொண்டிருக்…

  19. இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீதிபதியும் எழுத்தாளரும் கைது! இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொலன்னறுவை – கதுருவெல காதி நீதிமன்றத்தின் நீதிபதியும் எழுத்தாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளால் இன்று (04) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் தங்களது அலுவலகத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். விவாகரத்து வழக்கு ஒன்று தொடர்பில் விரைவாக தீர்ப்பை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கதுருவெல…

  20. Published By: VISHNU 03 JUL, 2025 | 08:04 PM (செ.சுபதர்ஷனி) நாட்டில் வருடாந்தம் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், அவர்களில் 35 சதவீதமானோர் அதாவது 800 பேர் சிறுவர் புற்றுநோயாளர்கள் என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் இந்திரா டிரேடர்ஸ் தனியார் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுவர் நோயாளர்களுக்கான ஐந்து மாடிக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (3) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அமைச்சர், மருத்துவமனை கட்டுமானப்பணிகளால் சுகாதார அமைச்சு பல கடுமையான பிரச்சின…

  21. வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்! - திலகநாதன் 04 JUL, 2025 | 02:46 AM வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் 3ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. வவுனியா மாவட்டத்தில் வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணியற்ற மக்களுக்கும் புதிதாக திருமணம் முடித்து காணிகள் அற்ற குடும்பங்களினதும் நன்மை கருதி அவர்களுக்கான ஒரு தீர்வினை வழங்…

  22. ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் காலமானார் 04 JUL, 2025 | 06:03 AM கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக வியாழக்கிழமை (03) காலை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த நடராசா கிருஸ்ணகுமார் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரையும் புலிகளின் குரல் வானொலி வர்த்தக சேவையான தமிழீழ வானொலி ஆகியவற்றின் அலுவலக செய்தியாளராகவும் நிகழ்சிகள் பலவற்றுக்கு குரல் வழங்குபவராகவும் பல்வேறு நெருக்கடிகள் விமானக் குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் என்பன வற்றுக்கு மத்தியில் செய்தி செய்தியாளராக பணியாற்றியவர். குறிப்பாக பல்வேறு பட்டவர்களுடைய உறவினையும் தொடர்புகளையும் பேணிய நல்ல ஒரு செய்தி தொடர்பாளராகவும் 2010ம் ஆண்டு முதல் தினக்குரல் வலம…

  23. முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது 04 JUL, 2025 | 10:55 AM முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04 ) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் எஸ்.எம் சந்திரசேன கைதுசெய்யப்பட்டுள்ளார். எஸ்.எம் சந்திரசேன இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்த போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/219154

  24. IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும் இலங்கை அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை இலங்கை அதிகாரிகளால் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று கூறும் நாணய நிதியம், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் கலந்துரையாடலுக்கு பின்னர், துணை முகாமைத்துவப் பணிப்பாளரும் தற்காலிக தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்ட அறிக்கையில் பின்வரும…

  25. அம்ஷிகா விவகாரத்தில் தாமதம் ஏன்? பம்பலப்பிட்டி ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 10 ஆம் வகுப்பு மாணவி 15 வயது தில்ஷி அம்சிகாவின் துயர தற்கொலை தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு உரையாற்றிய CTU பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பல உயர் மட்ட விவாதங்கள் மற்றும் பொதுமக்களின் கோபத்திற்குப் பிறகும், இந்த வழக்கில் பொலிஸார் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். 2024 ஒக்டோபரில் தனது முன்னாள் கணித ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தில்ஷி அம்ஷிகா ஏப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.