ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142712 topics in this forum
-
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி! 15 Dec, 2025 | 05:47 PM இலங்கையில் 'திட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்காக அனர்த்த நிவாரண உதவியாக உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக வங்கி குழுமம் ஆழ்ந்த துயரம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. அனர்த்தத்தின் போது, இலங்கையர்கள் காட்டிய குறிப்பிடத்தக்க மீள்தன்மைக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் மீட்பு முயற்சிகளைத் தொடங்குவதற்கும் அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளுக்கும் உலக வங்கி பாராட்டுத் தெரிவிக்கிறது. உலக வங்கியின் 120 மில்லியன் அமெர…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
நிகழ்நிலை முறைமையிலான நிதி மோசடி அதிகரிப்பு ; சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும் - இலங்கை கணினி அவசர தயார்நிலை 15 Dec, 2025 | 05:35 PM (இராஜதுரை ஹஷான்) பண்டிகைக் காலம் மற்றும் அனர்த்த நிலைமைக்கு மத்தியில் நிகழ்நிலை முறைமை ஊடாக நிதி மோசடிகள் அதிகரித்துள்ளன. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது பாதுகாப்பாக இருக்கவும், தெரியாத நபர்கள் அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களை அணுகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTP) ஒருபோதும் வெளியிட வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி விட…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
15 Dec, 2025 | 02:50 AM சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின் படி, டிக்டொக் சமூக வலைத்தளத்தின் மூலம் இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நேரில் சந்தித்துள்ளார். இதன் பின்னர், குறித்த இடத்திற்கு அவரது நண்பர்கள் வருகை தந்ததுடன், குழுவாக பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான…
-
- 0 replies
- 175 views
-
-
மத்திய மலை நாட்டின் தமிழ் மொழி மூல தொழிற்பயிற்சி நிலையமான ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களை அனுமதித்தல் 15 Dec, 2025 | 04:42 PM பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் (TVTC) 2026ம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 16 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட பாடசாலை கல்வியினை நிறைவு செய்து இளைஞர், யுவதிகள் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கேட்டுக் கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/233427
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
5 Dec, 2025 | 12:50 PM அண்மைக்காலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுகுளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் அங்கத்துவக்குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு இதுவரை இழப்பீடுகளோ நிவாரணங்களோ வழங்கப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பினர் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் முத்து ஐயன்கட்டு குளம் நன்னீர் கிராமிய அமைப்பின் முறையீட்டையடுத்து, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நன்னீர் மீன்பிடியாளர்களின் பாதிப்பு நிலமைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்ததுட…
-
- 0 replies
- 86 views
-
-
பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் கையளிப்பு! 15 Dec, 2025 | 03:52 PM பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று திங்கட்கிழமை (15) கையளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானி காரியாலயம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரைகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண பொருட்கள் மற்றும் சேவைகள் கையளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவும் வலுவான இருதரப்பு உறவுகளும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்த நிவாரண சேவைக்காக பாகிஸ்தான் தமது விமானப்படையின் C-130 விமானங்களை அனுப்பியிருந்தது. மேலும், 'தித்வா' புயலின் போது,…
-
- 0 replies
- 79 views
- 1 follower
-
-
15 Dec, 2025 | 02:30 PM பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் என வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சம உரிமை இயக்கம் அவசர கடிதம் எழுதியுள்ளது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் இந்திரானந்த டி சில்வாவின் கையொப்பத்துடனான குறித்த கடிதம் இன்று திங்கட்கிழமை (15) ஜனாதிபதி செயலத்தில் சம உரிமை இயக்கத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டின் மக்கள் தொகையில் 25 சத வீதமானோர் தமிழ் மொழியை தமது தாய் மொழியாகக் கொண்டிருப்பதோடு நாட்டின் அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், 1956 ஆம் ஆண…
-
- 0 replies
- 115 views
-
-
Published By: Digital Desk 3 15 Dec, 2025 | 04:53 PM நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தங்களில் சிக்கி 643 பேர் உயிரிழந்துள்ளதோடு, 183 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டியில் 237 பேரும், நுவரெலியாவில் 89 பேரும், பதுளையில் 88 பேரும், குருநாகலையில் 61 பேரும், புத்தளத்தில் 36 பேரும், கேகாலையில் 32 பேரும், மாத்தளையில் 29 பேரும், கம்பளையில் 17 பேரும், அநுராதபுரத்தில் 13 பேரும், கொழும்பில் 09 பேரும், அம்பாறையில் 08 பேரும், மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் மன்னாரில் தலா 4 பேரும், யாழ்ப்பாணம், பொலன்னறுவையில் தலா மூவரும், இரத்தினபுரியில் இருவரும், அம்பாந்தோட்டை மற்றும் காலியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதேவேளை,…
-
- 0 replies
- 89 views
-
-
15 Dec, 2025 | 03:52 PM 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 21 இலட்சத்து 73 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 489,948 ஆகும். மேலும், ஜெர்மனியிலிருந்து 137,012 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 166,626 சுற்றுலாப் பய…
-
- 0 replies
- 79 views
-
-
15 Dec, 2025 | 05:53 PM யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 26 கிலோ 900 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ஆறு மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் 6 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றல்! | Virakesari.lk
-
- 0 replies
- 83 views
-
-
15 Dec, 2025 | 02:45 PM (எம்.மனோசித்ரா) போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வீதி மூடல்கள், சேதங்கள், விபத்துகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் போன்ற வீதி நிலைவரங்கள் குறித்த நிகழ்நேரத் தகவல்கள் இல்லாததை நிவர்த்தி செய்வதற்காகவே இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தத் தளத்தை https://road-lk.org என்ற இணைய முகவரியில் அணுகலாம். இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வழிசெலுத்தல் (Navigation) செயலிகள் இவ்வாறான பிரச்சினைகள் குறித்து முறையான புதுப…
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
உங்கள் சொத்துக்களை விற்று வீடற்ற மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை வாங்கித் தருகிறோம் என ராமநாதன் அருச்சுனா எம்.பி, மனோ கணேஷன் எம்.பியிடம் கேட்டுக் கொள்வதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கண்டியில் மனோ கணேஷன் எம்.பி மலையகத்தில் காணி இல்லாவிட்டால் வடக்கு கிழக்கில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் காணிகளை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையிலே அர்ச்சுனா எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிடிருந்தார். மலையக மக்களுக்கு அன்பான கோரிக்கை அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், மலையக மக்கள் எங்கள் இரத்த உறவுகள், அவர்களை பார்த்து கொள்ள வேண்டியது எமது கடமையாகும். அதனால் உங்களுக்கு மலையகம் வேண்டாம்…
-
- 0 replies
- 226 views
-
-
சுதந்திர இந்தோ-பசிபிக் திட்டத்தின் மையமாக இருக்கும் இலங்கை ; அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர் 14 Dec, 2025 | 10:46 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர், செனட் வெளியுறவு உறவுகள் குழுவிடம் சாட்சியமளித்த போது, இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்குக்கு எதிர்வினையாற்றுவது என்பவற்றுக்கே வாஷிங்டன் முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் இந்த ஆண்டு ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியின் பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், எரிக் மேயரின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம்…
-
-
- 2 replies
- 271 views
- 1 follower
-
-
கல்வி மறுசீரமைப்பில் மாற்றமில்லை! நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுப் பாதிப்புகள் காரணமாக, 2026 ஜனவரியில் தொடங்கத் திட்டமிடப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் பாதிக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஜனவரியில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது, முன்னர் அறிவிக்கப்பட்ட அனைத்து மாற்றங்களும் சம்பந்தப்பட்ட வகுப்புகளில் நடைமுறைக்கு வரும் என அவர் கூறியுள்ளார். மேலும் முழுமையான அமுலாக்கம் ஜனவரி 22 ஆம் திகதிக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய கட்டமைப்புக்கு இணங்க செயற்படுமாறு சுற்றறிக்கைகள் மூலம் பாடசாலைகளுக்கு ஏற்கனவே அற…
-
- 0 replies
- 102 views
-
-
யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்! adminDecember 14, 2025 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை – வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது. அன்ரன் பாலசிங்கம் https://globaltamilnews.net/2025/224165/
-
- 2 replies
- 159 views
-
-
நிவாரணங்களை வழங்க கோரி வெருகல் பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை 14 Dec, 2025 | 01:30 PM திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை வழங்கக் கோரி போராட்டத்தில் மக்கள் நேற்று சனிக்கிழமை (13) ஈடுபட்டனர். சீரற்ற கால நிலை காரணமாகவும் மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுப்பு தொடர்பில் பல சேதங்கள் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணங்களை அலுவலகத்தில் பூட்டி வைக்காது பகிருமாறும் கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் பிரதான நுழைவாயிலை மறித்து போராடினர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வெருகல் பிரதேச செயலக வளாகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க…
-
- 0 replies
- 127 views
-
-
ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்! 14 Dec, 2025 | 02:11 PM ஆபாச படம் காண்பித்து மகளை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவத்துடனான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (12) சம்மாந்துறை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்றைய தினம் சந்தேக நபர்களான நால்வரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய…
-
- 0 replies
- 212 views
-
-
காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை 14 Dec, 2025 | 03:07 PM காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு , மயானத்தை மீள பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் 1990ஆம் ஆண்டு கால பகுதியில் யுத்தம் காரணமாக காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் அப்பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அதன் போது, காங்கேசன்துறை இந்து மயானம் அமைந்துள்ள காணியும், அதனை சூழவுள்ள காணிகளும் விடுவிக்கப்பட…
-
- 0 replies
- 121 views
-
-
அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை 14 Dec, 2025 | 04:09 PM ‘டித்வா’ புயல் தாக்கத்தையடுத்து நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்மா சாந்தியடைய வேண்டியும் , பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி சபரிமலை சபரீச ஐயப்பன் ஆலயத்தில் பிரார்த்திக்கப்பட்டது. யாழ்ப்பாணம், கோண்டாவில் அமைந்துள்ள ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (13) விசேட புஷ்பாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்கார பூஜைகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. அதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் கலந்…
-
- 0 replies
- 125 views
-
-
மகேஸ்வரன் கொலை வழக்கு: குற்றவாளிக்கான மரண தண்டனை உறுதி 14 December 2025 ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர் என்று கூறப்படும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 'வசந்தன்' என்ற ஜோன்சன் கொலின் வலன்டினோ என்ற குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்தநிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை இரத்து செய்யக் கோரி குற்றவாளி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். நீதியரசர்களான …
-
- 0 replies
- 191 views
-
-
கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம். பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வீதிகளைத் திருத்துவதற்குத் தேவையான நிதியை வடக்கு மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அத்தியாவசியத் தேவையாகக் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பதே எமது தற்போதைய முக்கிய இலக்காகும் கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம் எனச் சுட்டிக்காட்டியதுடன் பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் சனிக்கிழமை (13.12.2025) மாலை மன்னார் மாவட்டச்…
-
- 0 replies
- 104 views
-
-
மலையக மண்ணை வெளியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதா அல்லது பாதுகாப்பதா எமது பொறுப்பு : மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி நாயுடு கேள்வி Published By: Digital Desk 1 14 Dec, 2025 | 09:08 AM அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய மாற்றிடம் இல்லாவிட்டால் அவர்களை வடபகுதியில் குடியேற்ற வேண்டும் என சில அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அரசியல் களத்தில் எதையும் பேசலாம் என்ற நிலையே இன்றுள்ளது. புதிதாக அரசியல் செய்ய வந்தவர்களுக்கு மலையக வரலாறும் மலையக மண்ணை பாதுகாக்க எத்தகைய தியாகங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது பற்றியும் தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட பிரமுகரும் மத்திய ம…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
பேரனர்த்த முகாமைத்துவத்திற்காக ஸ்டார்லிங்க் இணைய சேவை 100 அலகுகளை இலவசமாக வழங்குகிறது Published By: Digital Desk 3 14 Dec, 2025 | 09:43 AM அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் நிறுவனம், நாட்டில் பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக இணைய சேவைக்கு 100 அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நன்கொடை தகவல் தொடர்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்த உதவும் எனவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மிகவும் திறம்பட மேற்கொள்ள உதவும் எனவும் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். சனிக்கிழமை (13) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். இணையச் சேவைக்கான வன்பொருள் அலக…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
அனர்த்த நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு Dec 13, 2025 - 09:44 PM அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்காக இதுவரையில் மொத்தமாக 13 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். நிவாரண வேலைத்திட்டத்திற்கு உதவியாகக் கிடைத்த நிதியுதவி மற்றும் திறைசேரியிலிருந்து வழங்கப்பட்ட நிதி உள்ளிட்டதாகவே இந்த மொத்தத் தொகை நிவாரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இதனைத் தெரிவித்தார். மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொ…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு யாழ் சிறையின் நிவாரண உதவி Dec 13, 2025 - 03:43 PM டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (13) கையளிக்கப்பட்டன. சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கி 180 பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அத்தியட்சகர் சீ.இந்திரகுமார், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து இந்த உதவிகளை கையளித்தமை குறிப்பிட…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-