ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142726 topics in this forum
-
நாவற்குழியில் பாலியல் விடுதி; மூன்று பெண்கள் கைது யாழ்ப்பாணம் - நாவற்குழிப் பகுதியில் இயங்கிவந்த விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே, மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 40, 42 மற்றும் 53 வயதுடையவர்கள் என்றும், விடுதியை நடத்திவந்த உரிமையாளர் 68 வயதுடையவர் என்றும் பொலிஸார் தமது விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. https://newuthayan.com/article/நாவற்குழியில்_பாலியல்_விடுதி;_மூன்று_பெண்கள்_கைது
-
- 1 reply
- 202 views
-
-
யாழ் – கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்! April 10, 2025 ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 30 ஆம் தேதி ஆரம்பமாகிறது. யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட 59 நாள் பாதயாத்திரை யூலை மாதம் 26ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையும். அதற்கான முன் ஏற்பாடு ஒழுங்கு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் புனித பாதயாத்திரைக் குழுவில் பக்திபூர்வமான முறையில் பங்குபெறவிரும்பும் அடியவர்கள் ( 0763084791 ) குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார். மகிமைகள் பொருந்திய இவ்வருட 2025 கத…
-
- 0 replies
- 88 views
-
-
09 APR, 2025 | 03:58 PM 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை உண்மைக்கு புறம்பான முறையில் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் 2 பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் …
-
- 1 reply
- 297 views
- 1 follower
-
-
சி.ஐ.டி.யில் ஆஜரான கெஹெலிய! முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார். தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது. இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை ஒரு மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடி வ…
-
- 0 replies
- 170 views
-
-
Published By: VISHNU 09 APR, 2025 | 07:24 PM இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில் சரியான பாதைக்கு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அதற்காக இதுவரையான 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதிகாரிகளின் பொறிமுறை சரியாகாத பட்சத்தில், எதிர்வரும் மே மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்ற…
-
-
- 5 replies
- 297 views
- 1 follower
-
-
யாழில் கடற்றொழில் அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்த மீனவர்களுக்கு ஏமாற்றம்! யாழ், சுழிபுரத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவரது வருகைக்காக வெகுநேரம் காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று முன் தினம் சுழிபுரம் காட்டுப்புலம் மீனவர்களை காலை 10 மணியளவில் கடற்தொழிலாளர் மண்டபத்தில் ஒன்று கூடுமாறும், கடற்றொழில் அமைச்சர் உட்பட்ட குழு மூன்று வாகனங்களில் வருகை தரவுள்ளனர் எனவும், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு பிரதேச கடற்றொழில் பரிசோதகர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சரின் வருகைக்காக காலை 10 மணியிலிருந்…
-
- 0 replies
- 97 views
-
-
ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் 44% அமெரிக்க வரியை ஒரே நாளில் நீக்கியிருப்பார் – ராஜித ரணில் விக்ரமசிங்க இன்னும் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இலங்கை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 44% வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். யூடியூப் அலைவரிசை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது பேசிய அவர், பில்லியனர் தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஆலோசனையின் பேரில் ட்ரம்ப் நிர்வாகத்தின் போது இந்த வரி விதிக்கப்பட்டதாகக் கூறினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர்களில் எலோன் மஸ்க் ஒருவர் என்றும், அந்த வலுவான நட்பைப் பயன்படுத்தி இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு…
-
- 0 replies
- 97 views
-
-
09 APR, 2025 | 02:08 PM இந்தியாவுடன் பல உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ளதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டிற்கு துரோகமிழைத்துள்ளது என சில எதிர்கட்சி அரசியல்வாதிகள் தெரிவித்திருப்பதை ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா நிராகரித்துள்ளார். இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்தில் ஏதாவது உடன்படிக்கையில் அரசாங்கம் கைசாத்திட்டுள்ளதா என்பதை எதிர்கட்சிகள் நிரூபிக்கவேண்டும் என அவர் சவால் விடுத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்தைய விஜயத்தின் போது செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை உடனடியாக பொதுமக்களிற்கு அரசாங்கம் பகிரங்கப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர் இந்த உடன்படிக்கைகள் இரண்டு நாட்டிற்கும் நன்மை பயக்ககூடியவை என தெரிவித்துள்ளார். கடந்த காலங்கள…
-
-
- 4 replies
- 548 views
- 1 follower
-
-
உடுத்துறை கடல் பகுதியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு! வடமராட்சி-உடுத்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடலின் போது, சுமார் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, கேரள கஞ்சா கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கு படகுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி-உடுத்துறை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் பெறுமதியானது 121 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லியான் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம்…
-
- 1 reply
- 172 views
-
-
09 APR, 2025 | 07:20 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வவுனியா கணேசபுரத்தில் வனவளத்துறை திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட எல்லை கற்கள் நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசேட கோரிக்கையை முன்வைத்து உரையாற்றுகையில், வவுனியா கணேசபுரம் மக்கள் தற்போது ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். வன இலாகா திணைக்களத்தா…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
09 Apr, 2025 | 05:13 PM (எம்.நியூட்டன்) உரிமையாளரால் மேய்ச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் அந்த பசுவை பிரதேச சபையினர் சட்டத்தின்படி பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை நகர்ப்பகுதியில் கால்நடை பண்ணை நடத்திவரும் பெண் உரிமையாளர் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து இன்று புதன்கிழமை (9) ஆர்ப்பாட்டம் செய்ததால் அப்பகுதியில் சில மணிநேரம் குழப்பநிலை ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது : வேலணை நகர்ப் பகுதியில் பால் உற்பத்தியை சுயதொழிலாகக் கொண்டு பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவரது பசு கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், வேலணை நகர் பகுதியில் அமைந்துள…
-
- 0 replies
- 135 views
-
-
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது : முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் - பீற்றர் புரூவர் மற்றும் மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் தெரிவிப்பு. 09 Apr, 2025 | 08:33 PM இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது என்றும் முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் என்றும் இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் முன்னாள் சிரேஷ்ட பணிக்குழுப் பிரதானி பீற்றர் புரூவர் மற்றும் இலங்கையிலுள்ள பன்னாட்டு நாணய நிதியத்தின் தற்போதைய வதிவிடப் பிரதிநிதியான மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் நான்கு ஆண…
-
- 0 replies
- 104 views
-
-
09 Apr, 2025 | 05:16 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ச்சியாக சில மாதங்களாக கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் மீனவ அமைப்புகள் விசேட அதிரடிப்படை கடற்படை என அனைத்து தரப்பினரும் இணைந்து பல்வேறு சுற்றி வளைப்புகளையும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு மற்றும் கைது நடவடிக்கைகளில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு நிர்மாண விதிகளுக்கு முரணாக தயாரிக்கப்பட்ட வெட்டு வள்ளங்கள் எனப்படுகின்ற 20 வள்ளங்…
-
- 0 replies
- 245 views
-
-
09 Apr, 2025 | 03:08 PM யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் பாத்தீனிய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புகுழு கூட்டம் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பாடசாலை இடைவிலகல் மற்றும் ஒழுங்கீனங்கள், சிறுவர்கள் பாடசாலைகளில் சமூகத்தில் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், சிறுவர்கள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களின் முக்கியத்துவம் தொடர்பாகவும், பாடசாலையில் புதிய மாணவர்களை இணைக்கும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதேவேளை பாடசாலை மட்டத்தில், கிராம மட்டத்தில் பாதீனியம் அதிகளவு காணப்படுவதனால் அவற்றை கட்ட…
-
- 0 replies
- 168 views
-
-
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் கசிப்பு வியாபாரம் அதிகரித்து காணப்படுவதாக கடந்த 6 ஆம் திகதி மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று குடும்பங்கள் மக்களால் இனங்காணப்பட்டு அவர்களின் வீட்டுப் படலைகளில் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில் இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் வீடுகளில் வைத்து கசிப்பு வியாபாரம் செய்து வந்த குறித்த மூன்று குடும்பங்களின் வீடுகள் புதுக் குடியிருப்பு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிப்படையினரின் சுற்றி வளைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (9) காலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமைய…
-
- 0 replies
- 154 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக கூட்டமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) அன்று பிற்பகல் 3 மணியளவில் செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற உள்ளது. மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வுகள் இம்முறை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச சபை பிரிவிலும் தனித்தனியாக நடாத்தப்பட்டு வரும் நிலையில் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், சிறிநேசன், வைத்திய…
-
- 0 replies
- 132 views
-
-
09 APR, 2025 | 02:41 PM இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி.சமந்த வித்யாரத்ன குழுவினருக்கும் இடையே அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. மலையக மக்களுக்காக கொண்டுவரப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தையும், மலையக பாடசாலைகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கும் செயற்றிட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் வினைத்திறன் குறித்து மகிழ்ச்சியடைவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இச்சந்திப்பின்போது தெரிவித்தார். அதேவேளை அவர், இந்த அரசாங்கம் மக்கள் அரசாங்கமாக பிரபல்யமடைந்துள்ளதாகவும் அதனால் தான் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தான் நம்புவதாகவும…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழப்பு; சட்டத்தரணிகள் சங்கம் கவலை! கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அதிகாலை அதிகாலை வெலிக்கடை சிறைச்சாலையின் தடுப்புக் காவலில் இருந்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. காவலில் இருந்தபோது அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான காயங்களை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அவை குறித்த இளைஞன் தானே ஏற்படுத்திக் கொண்டதாகவும், அந்த நேரத்தில் அவர் சரியான மனநிலையில் இல்லை என்றும் வெலிக்கடை பொலிஸார் கூறுகின்றனர். எவ்வாறெனினும், கடுமையான காயங்களுக்கு உள்ளான இளைஞன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார். இந்த நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின…
-
- 3 replies
- 318 views
-
-
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு! ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய அரச நிறுவனமாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் கடன் முகாமைத்துவத்துக்கான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கு சாத்தியமான அனைத்து நடவடி…
-
- 0 replies
- 92 views
-
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது. இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஏப்ரல் 5 ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் ந…
-
-
- 41 replies
- 1.7k views
- 1 follower
-
-
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி Saturday, April 05, 2025 செய்திகள் இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் மோடி தமிழ் தலைவர்களை சந்தித்துள்ளார். சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம், நீதி நிறைந்த வாழ்க்கைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக தனது X தளத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். https://www.jaffnamuslim.com/2025/04/blog-post_92.html?m=1 .
-
-
- 22 replies
- 1.3k views
- 1 follower
-
-
குடியிருக்க வீடு காணி இல்லை, பேருந்து நிலையத்திலேயே சில வாரமாக தங்கியிருந்த நிலையில் ஜனாதிபதிக்கு தமது நிலை சென்றடையும் வரை நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர். நேற்று (06) மாலை அச்செழு, அச்சுவேலியில் இருந்து நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். ஏழு வயதான ஆண் பிள்ளை மற்றும் ஆறு வயதுடைய பெண் பிள்றையுடன் கணவன், மனை நால்வராக குறித்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இந் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்காவின் கவனத்திற்கு சென்றடையும் வரை நடை பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இ.கலீபன் நடைபயணி தெரிவித்தார். ஆனாலும் இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வடமாகாண ஆளுநரை சந்தித்துள்ளனர். இதன் போது ஆளுநர் நா.வேதநாயகன் இவர்களுக்கான காணியனை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு மருதங்கேணி பிரதேச செயலர் க…
-
- 2 replies
- 278 views
-
-
Published By: DIGITAL DESK 2 08 APR, 2025 | 04:51 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முறையற்ற சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த சட்டமூலத்தில் காணப்படும் ஒருசில தொழில்நுட்ப சிக்கல்களுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, எவரேனும் நபர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியிருந்தால் அவற்றை சட்டத்தின் ஊட…
-
- 3 replies
- 181 views
- 1 follower
-
-
08 APR, 2025 | 07:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2005ஆம் ஆண்டு ரணில் - சந்திரிக்காவை தோற்கடிப்பதற்காகவே ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளித்தோம். வடக்கு மற்றும் கிழக்கு மக்களை அழித்த ராஜபக்ஷர்களுக்கும் பிள்ளையானுக்கும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நான் இந்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
08 APR, 2025 | 07:29 PM (நா.தனுஜா) இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தம் இன்மை என்பவற்றின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடியைச் சீரமைப்பதற்கு துரதிர்ஷ்டவசமாக தற்போது மக்கள் அதிக விலையைச் செலுத்திவருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான முன்னாள் செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் எழுப்பப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: இன்றளவிலே அத்தியாவசிய சேவை வழங்கலுக்கு நிதி அளிக்கக்கூடிய மட்டத்துக்கு அரசாங்கத்தின் இயலுமை விரிவடைந்…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-