ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
றெஜினா விவகாரம் ; சப்பாத்துக்கள் வீட்டுக்குள் இந்ததாக கூறிய சிறுமி, சிறுவனிடம் இரகசிய வாக்குமூலம் யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள காட்டுப்புலம் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக உறவினர்களிடம் வெளிப்படுத்திய சிறுமி மற்றும் சிறுவன் ஒருவனிடமும் நேற்று செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவானின் சமாதான அறையில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அத்துடன், வழக்கின் முக்கியமான சாட்சிகள் இருவரை எதிர்வரும் 11 ஆம் திகதி மன்றில் முன்னிலையாக மல்லாகம் நீதிமன்றால் அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டதுடன் வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்த நீதிவான் அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்…
-
- 0 replies
- 487 views
-
-
கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியில் அத்துமீறிய குடியிருப்புகள் கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் ஒதுக்கீட்டு பகுதிகளும் தனியார்களால் அத்து மீறல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது. ஊடகங்களும், பொது அமைப்புகளும் இதனை சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில் அவை நிறுத்தப்பட்டதாக தெரியவில்லை என மீண்டும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் இருமருங்கிலும் பல தனியார்கள் நிலங்களை அத்துமீறி பிடித்து கட்டடங்கள் மற்றும் மதில்களை அமைத்துள்ளமையினால் மழைக்காலங்களில் வெள்ளம் வழிந்தோடுவதில் நெருக்கடி ஏற்பட்ட சம்பவங்கள் கடந்தகாலங்களில் இடம்ப…
-
- 0 replies
- 416 views
-
-
திருகோணமலையில் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்கப் படை அதிகாரிகள் சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்க படை அதிகாரிகள் குழுவொன்று திருகோணமலையில் ஒருங்கிணைந்த கடல்சார் திறன்கள் பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. திருகோணமலை டொக்யார்ட்டில் உள்ள சிறப்பு படகு படையணியின் அரங்கில் நேற்று முன்தினம் இந்த பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், போதைப்பொருள் முறியடிப்பு படையணி, மற்றும் கூட்டு ஒருங்கிணைப்பு அதிரடிப்படை –மேற்கு ஆகியவற்றின் ஏழு அதிகாரிகள் இந்தப் பயிற்சிகளை வழங்கவுள்ளனர். 4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணியைச் சேர்ந்த 16 பேர் மற்றும் சிறப்பு படகு படையணியைச் சேர்ந்த 16 பேர் உள்ளிட்ட 32 சி…
-
- 0 replies
- 295 views
-
-
முதுகில் குத்த வேண்டிய அவசியம் எமக்கில்லை - சுரேஸ் (ரி.விரூஷன்) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள். நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இதேவைளை, வேண்டுமானால் அவர்களுக்கும் எமக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் அந்த இணக்கப்பாட்டை நாம் மீறியிருந்தால் அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பல வருடங்களாக பேசப்பட்ட போதும் அவ் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலமை தொடர்பாக சிந்தித்து வரும் நிலையில் சிறுபிள்ளை த…
-
- 3 replies
- 836 views
-
-
"காத்தான்குடியில் இயங்கும் ஆயுதக் குழுக்களால் நாட்டுக்கு ஆபத்து" காத்தான்குடியில் இங்கி வருகின்ற ஆயுதக் குழுக்களினால் நாட்டுக்கு பெரும் ஆபத்து என தெரிவித்த பொதுபலசேனா அமைப்பு, இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியபோதும் அவர்கள் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சுட்டிக்கட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அமைச்சர் ஒருவரின் உறவினர், ஐ. எஸ் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
- 1 reply
- 509 views
-
-
ஐ.எஸ் பயங்கரவாதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர் தன் மருமகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தான் நம்பவில்லை எனவும், தனது மருமகன் ஒரு அப்பாவி எனவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அமைச்சரின் மருமகனான 25 வயது முஹமட் நிஜாம்டீன் அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அமைச்சர் பைஸர் முஸ்தபா மறுத்துள்ளார். அவுஸ்திரேலியா டெய்லி மெய்ல் என்ற செய்திசேவை இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் ஐ.எஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக தி…
-
- 10 replies
- 1.1k views
-
-
முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க நினைக்கும் வடக்கு முதல்வர்! தவராசா சாடல் பளை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை விடயத்தில் வடமாகாண அமைச்சர் சபை தவறிழைத்துள்ளது என கூறியது அரசியலுக்காக ஆற்பரிக்கும் அவச் சொல் என கூறியிருக்கும் முதலமைச்சர், முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க நினைக்கிறார். மேற்கண்டவாறு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, தூங்குபவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போன்று பாசாங்கு செய்பவனை ஏழுப்ப முடியாது என்பார்கள். பளைக்காற்றாலை விடயத்தில் முதலமைச்சர் கூறுவது போன்று அத்தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே முதலீட்டுச் சபையின் அனுமதியினைப் பெற்றிருந்தவர்கள் என்பது உண்மைதான…
-
- 0 replies
- 288 views
-
-
மூவினத்தவர்களும் ஒன்று பட்டு புலிகளின் தங்கத்தை தேடினர்….. இறுதி யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரின் காணியில், விடுதைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி எம் டி சரத் சந்திரபால தலைமையிலான அணியினர் இந்த வீட்டின் பின்புறமாக உள்ள காட்டில் இருந்து கடந்த 7 நாட்களாக இவர்களது நடவடிக்கைகளை அவதானித்து, தங்கம் இருப்பதாக கருதப்பட்ட இடத்தை தோண்டும் போது, அந் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பெயரும…
-
- 2 replies
- 808 views
-
-
நல்லூர் உற்சவத்தில் கைக் குழந்தையுடன் விற்பனையில் ஈடுபடும் பெண்கள்!!! நல்லூர் உற்சவ காலத்தின் போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் செய்பவர்கள், மடிப்பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பலராலும் குற்றம் சாட்டபட்டுள்ளது. வவுனியா உள்ளிட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் கைக்குழந்தைகள் சிறுவர்களுடன் ஊதுபத்திகளை விற்பனை செய்வதோடு யாசகம் மற்றும் மடிபிச்சை எடுக்கிறார்கள் என கடமையிலிருந்த யாழ். மாநகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வரியிறுப்பாளர்கள் மற்றும் பொலிஸாரிடமும் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் முறைப்பாடு செய்தும் நடவடிக்…
-
- 1 reply
- 682 views
-
-
கால்கட்டுப் போட்டது முன்னணி அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலில் கலந்துகொள்ளவேண்டாம் என்று தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்குக், கட்சித் தலமை கால்கட்டுப் போட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் அந்தக் கட்சியின் 10 பேர் வரையில்குறித்த கூட்டத்தில் பங்குபற்றமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சாவகச்சேரியில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன்போது ஏனைய கட்சிகளின் பலர் கலந்துகொண்டனர். ஆனால் முன்னணியின் உறுப்பினர்கள்கலந்துகொள்ளவில்லை. அது தொடர்பில் விசாரித்தபோது இந்த விடயம் கூறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. https://newuthayan.com/story/…
-
- 0 replies
- 511 views
-
-
நல்லூர் ஆலயப் பகுதி வர்த்தக நிலையத்தில் எரிவாயுக் கொள்கலன் வெடிப்பு – இருவர் காயம்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… நல்லூர் ஆலய சூழலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த எரிவாயு கொள்கலன் (காஸ் சிலிண்டர்) வெடித்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். நல்லூர் ஆலய சூழலில் அமைந்துள்ள கடை ஒன்றினுள் இருந்த எரிவாயு கொள்கலன் (காஸ் சிலிண்டர்) திடீரென இன்று செவ்வாய்க்கிழமை மாலை மூன்று மணியளவில் வெடித்து சிதறியது. அதன போதே இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் ஆலய சூழலில் முதலுதவி செயற்பாடுகளுக்காக தரித்து நின்ற நோயாளர் காவு வண்டி (அம்ப…
-
- 0 replies
- 321 views
-
-
எனது கையில் எதுவும் இல்லை, பிரதமருக்கே அதிகாரம் உள்ளது : சுவாமிநாதன் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) வடக்கின் வீடமைப்புத்திட்டத்தை முன்னெடுக்கும் நகர்வுகள் இப்போது எனது கையில் இல்லை. வடக்குக்கான வீடுகளை அமைக்கும் திட்டம் பிரதமர் கையிலேயே உள்ளது, என்னால் ஆலோசனைகளை வழங்க மட்டுமே முடியும் என மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டளவில் வடக்கில் உள்ள கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படும் எனவும் அவர் வாக்குறுதி வழங்கினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் ஈ.பி.டி.பி எம்.பி டக்லஸ் தேவானந்த…
-
- 0 replies
- 488 views
-
-
கண்டிய நடனத்தை தெருவிலே ஆடட்டும் – பரதநாட்டியத்தை தெருவிலே ஆடமுடியாது… இனிவரும் காலங்களில் பரதநாட்டியத்தை தெருவிலே ஆட முடியாது அதற்கான சுற்று நிருபத்தினை வடக்கு மாகாண கல்வி அமைச்சு விரைவில் வெளியிட உள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்தும் “தெய்வீக சுகானுபவம்” இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுவருகின்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்…
-
- 0 replies
- 628 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வுத் தலைவருக்கு எதிராக முறைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வுத் தலைவரும், புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தற்போதைய தலைவருமான திருகோணமலையைச் சேர்ந்த கந்தசாமி இன்பராசாவுக்கு எதிராக ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலையங்களில் இருவேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் கூறி இன்பராசாவுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடுகள் இருவேறு சமூக ஆர்வலர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் கொழும்…
-
- 0 replies
- 664 views
-
-
மியன்மார் இராணுவத்தலைவர்களுக்கு நேர்ந்ததைச் சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை! மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை விசாரணையை முன்னெடுக்க ஐ.நா அழைத்துள்ளது. இதுபோன்றே இலங்கைக்கும் ஏற்படும் இதற்கான வழிமுறைகளை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்கும் என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், "மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டினை விசாரிக்க ஐ. நா அழைத்துள்ளமையானது எ…
-
- 14 replies
- 1.5k views
-
-
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் -யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!! பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகளை கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று போராட்டம் இடம்பெற்றது. https://newuthayan.com/story/12/பெண்களுக்கு-எதிரான-வன்முறைகள்-யாழ்ப்பாணத்தில்-கண்டன-ஆர்ப்பாட்டம்.html
-
- 0 replies
- 668 views
-
-
நல்லாட்சியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தமிழர்களை பாதிக்கும்: ஜயம்பதி நல்லாட்சி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அது தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார். நல்லாட்சியின் கடந்த கால வாக்குறுதி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டின் நீண்டகால அரசியல் பிரச்சினை மற்றும் தமிழ் மக்களின் நெருக்கடிகளுக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வை பெற்றுத் தருவதாக கடந்த 2015ஆம் ஆண்டு அதிகாரத்தை பொறுப்பேற்ற நல்லாட்சி அரசாங்கம் வாக்குறுதி அளித்திர…
-
- 0 replies
- 311 views
-
-
இலஞ்சத்துக்கு எதிராக மரத்தில் ஏறி முதியவர் போராட்டம் – கிளிநொச்சியில் பரபரப்பு!! பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் இன்று கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் முதியவர் ஒருவர் இலஞ்சத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். கிளிநொச்சியில் பொலிஸார் ஒருவர் இலஞ்சம் பெறுவதாகக் குற்றஞ்சாட்டி முதியவர் போராட்டத்தில் ஈடுபட்டார். கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்காக அடிக்கல் நடும் நிகழ்வுக்காக வருகை தந்திருந்த பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உரையாற்றிக் கொண்டிருந்தார். இதன் போது மேடையி…
-
- 1 reply
- 490 views
-
-
கிளிநொச்சியில் நீதிமன்ற தொகுதி -சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார், மு. தமிழ்ச்செல்வன்,எஸ்.என்.நிபோஜன் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர். சட்டத்தரணி தலதா அத்துகோரலவின் அழைப்பின் பேரில், கிளிநொச்சியில் புதிய நீதிமன்றத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, பிரதம நீதியரசர் பியசாத் டெப் தலைமையில் இன்று (03) நாட்டப்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்ட மேற்படி கட்டடத்தொகுதிக்கு 380 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் நீதவான்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் இரண்டு, இந்த புதிய தொகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளன. வட மாகாணத்தில் நீதிமன்ற உட்கட்டமைப்பு…
-
- 1 reply
- 575 views
-
-
வடக்கில் 25,000 கல்வீடுகள் நிர்மாணப் பணி சில வாரங்களில் ஆரம்பம் வடக்கில் 25 ஆயிரம் நிரந்தர கல்வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மைலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அண்டிய கலைமகள் மகாவித்தியாலயத்தை இராணுவக்…
-
- 0 replies
- 314 views
-
-
மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த மைத்திரியும், சிங்கள குடியேற்றங்களுக்கு பொறுப்பு கூறவேண்டும்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான ஆட்சியில் சிங்கள குடியேற்றங்கள் நடக்கவில்லை. என்பது தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய ஒரு விடயமல்ல. காரணம் அத்தனை சிங்கள குடியேற்றங்களையும் செய்தவர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவேயாகும். என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் எவையும் இடம்பெறவ…
-
- 0 replies
- 190 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு யாரும் வேலைவாய்ப்பு கொடுக்கிறார்கள் இல்லை…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.மாவட்டத்தில் 2900 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் வரவு செலவு திட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்போது அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் 50 வீதத்தை அரசாங்கம் செலுத்தும். என கூறப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் தேடி பார்த்தபோது சுமார் 100 பேர் வரையிலேயே கண்டறியப்பட்டார்கள். அவர்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் பல இடர்பாடுகள் உள்ளது. குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக யாரும் வேலைவாய்ப்பு கொடுக்கிறார்கள் இல்லை. மேலும் அவர்களுக்கு வேலைவ…
-
- 0 replies
- 425 views
-
-
சிறிலங்காவின் கடன் சுமைக்கு சீனா காரணமல்ல – வெளிவிவகார பேச்சாளர் சீனாவின் கடன்கள், சிறிலங்காவுக்குப் பிரதான கடன்சுமையை ஏற்படுத்தவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவாசுன்யிங் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் கடந்த 31ஆம் நாள் நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ”கடந்த ஆண்டு சிறிலங்காவின் மொத்த வெளிநாட்டுக் கடன்களில் 10 வீதம் மாத்திரமே சீனாவிடம் பெறப்பட்ட கடன்களாகும். சீனா வழங்கியுள்ள கடன்களில் 61.5 வீதம், அனைத்துலக சந்தை வீதத்தை விடவும் குறைவான வட்டிக்கு வழங்கப்பட்ட முன்னுரிமைக் கடன்களாகும். சிறிலங்கா மத்திய வங்கியின் அறிக்கையின் படி, கடந்த ஆண்டில் சி…
-
- 0 replies
- 355 views
-
-
விக்னேஸ்வரனை முதலமைச்சராக நீடிக்கவிட்டமையே தவறு – சுமந்திரன் வடமாகாணத்தில் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை நீடிக்க விட்டமையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறாகும் என அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மேலும், சமஸ்டித் தீர்வு வேண்டாம் என தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் எவ்வாறாயினும், இவ்விடயத்தை வைத்துக்கொண்டு சிலர் தற்போது அரசியல் செய்கிறார்கள் என்றும் அவர் கடுமையான சாடினார். நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். h…
-
- 3 replies
- 1.2k views
-
-
அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிக்கை எரிப்பு…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது அங்கு கருத்து தெரிவித்த அஸ்மின், ” மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மாறாக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போல் செயற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் சில தீர்மானங்களை அப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்து இருந்தார்கள். அவை மக்கள் ஆட்சிக்கு பு…
-
- 5 replies
- 1.7k views
-