ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
தெற்காசியாவின் மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீன நிறுவனம் தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை சீன நிறுவனம் ஒன்று கொழும்பில் அமைக்கவுள்ளது. இந்தக் கட்டடத்தை அமைக்கும் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்டதாக இந்தக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது. கொழும்பு 1, ட்ரான்ஸ்வேக்ஸ் சதுக்கத்தில் மூன்று கோபுரங்களைக் கொண்ட இந்தக் கட்டடம் கட்டப்படவுள்ளது. THE ONE என்று அழைக்கப்படவுள்ள இந்தக் கட்ட்டம், பணியகங்கள், வதிவிடங்கள், ஆடம்பர சில்லறை வணிக வளாகம், பல மாடி வாகனத் தரிப்பிடம், மண்டபம், உலங்குவானூர்தி இறங்குதளம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டதாக இருக்கும். …
-
- 0 replies
- 252 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்....சிவாஜிலிங்கம்
-
- 1 reply
- 512 views
-
-
பேரவையின் அனுசரணையுடன் – முதலமைச்சர் வேட்பாளராம் -வடக்கு முதல்வர் தெரிவிப்பு வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையில் வரக்கூடும் என்று வடக்கு முதலமைச்சர் ஊடகங்களுக்கு நேற்றுத் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் நிறைவடைய வுள்ள நிலையில் வடக்கின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி மக்களிடையே பரவலாகப் பேசப்படுகிறது. அரசியல் வட்டாரங்களிலும் அது தொடர்பான விடயங்கள் சூடுபிடித்துள்ளன. இந்த நிலைமையில் வட…
-
- 1 reply
- 334 views
-
-
புதிய கட்சியா என்பதை பார்க்கக் காத்திருங்கள் -வடக்கு முதல்வர் மழுப்பல் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் பொறுத்திருந்து பார்ப்போம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டும் நிலையில் அவர் நேற்று இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாட்டுக்கான ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்த…
-
- 2 replies
- 707 views
-
-
சீனாவின் அனுசரணையில் விசேட பொருளாதார வலயம் ஹம்பாந்தோட்டையில் (இராஜதுரை ஹஷான் , கே.லாவண்யா) சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விசேட பொருளாதார வலயமொன்றை ஹம்பாந்தோட்டையில் ஸ்தாபிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக சீன அரசாங்கத்தின் மூலம் வைனா இன்ஜினியரின் கோபரேஷன் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இலங்கை மற்றும் சீனா வழங்கல் மற்றும் கைத்தொழில் வலயங்களை ஸ்தாபிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை 03 கட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தினை மிகவும் திட்டமிடப்பட்ட நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதனை உறுதி செய்வதற்காக ஹம்பாந்தோட…
-
- 0 replies
- 325 views
-
-
க.பொ.த. சாதாரண தர பாட திட்டத்தில் முக்கிய மாற்றம் சுகாதார பாடத்தினை க.பொ.த. சாதாரண தர பரீட்சை விடய பரப்பில் கட்டாய பாடமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2023ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பாடத்திட்ட சீர்த்திருத்தின் போது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கல்வி மறுசீரமைப்புக்கான அறிஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளையும், தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபார்களையும் உள்ளடக்கி குறித்த விடயத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சுகாதார…
-
- 0 replies
- 463 views
-
-
மருதங்கேணியில் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அத்துமீறல்- டக்ளஸ் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) மருதங்கேணி பகுதியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடற்றொழில் முயற்சிகளுக்கு சட்ட ரீதியிலான அனுமதிகள் ஏதும் வழங்கப்பட்டுள்ளனவா? அவ்வாறு வழங்கப்பட்டுள்ளதெனில், அவை எவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் அங்குள்ள மக்களின் காணிகளில் பலவந்தமாக வாடிகளை அமைத்…
-
- 1 reply
- 213 views
-
-
எனக்கும் மகேந்திரனிற்குமிடையில் எந்த தொடர்புமில்லை- ரணில் எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் என்னிடம் கூறிவிட்டு சிங்கப்பூர் செல்லவில்லை. தற்போது அவர் எனது பொறுப்பில் இல்லை. மத்திய வங்கியில் பணிபுரியும் போது என்னிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் தற்போது அவர் மத்திய வங்கியில் சேவையில் இல்லை. எனது நண்பர் என்பதற்கான அவர் செல்லுமிடங்களை கூறவேண்டியதில்லை. ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நான் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை. தற்போது எமக்கிடையில் எந்த தொடர்பும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். அத்துடன் உதயங்க வீரதுங்க, அர்ஜூன மகேந்திரன்…
-
- 0 replies
- 326 views
-
-
இரணைத்தீவு மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க முடியாது -: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரணைத்தீவில் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசின் வீட்டுத்திட்டங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட செயக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1992 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக இரணைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பூநகரியில் இரணைமாதாநகர் எனும் கிராமத்தை உருவாக்கி அங்கு குடியேறினார்கள். அன்று முதல் கடந்த மாதம் 15 ஆம் திகதி வரை இவர்கள் இரணைமாதாநகரில் வாழ்ந்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இரணைத்தீவுக்கு மின் பிடி படகுகளில் சென்று குடியேறிய மக்களுக்கு மே மாதம் 15 ஆ…
-
- 0 replies
- 357 views
-
-
வவுனியா சிறைச்சாலைக்குள் கைதிகள் – விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்… குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்… வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள், சிறு குற்றங்கள், கடத்தல்கள், கஞ்சா, போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்களே பெருமளவில் காணப்படுகின்றனர். இங்குள்ள சிறைக் கூடத்திற்குள் 50 கைதிகள் இருப்பதற்கான வசதிவாய்ப்புகளே அதிகம் என்ற போதிலும் நூற்றுக்கு மேற்பட்ட கைதிகள் ஒரே தடவையில் வைத்திருப…
-
- 1 reply
- 474 views
-
-
90 வருடங்கள் பழைமையான இராமர் சிலையைக் காணவில்லை ஹேவஹெட்ட - ஹோப் தோட்டத்தில் அமைந்துள்ள இராமர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த, 91 ஆண்டுகள் பழைமையான இராமர் சிலை, இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதென, ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கும் காலை 7 மணிக்கும் இடையிலான காலப்பகுதியிலேயே, இது கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் பிரதம குருக்கள், நேற்று முன்தினம் (05) அதிகாலை 2 மணயளவில் இராமர் சிலை இருப்பதை அவதானித்துள்ளதாகவும், எனினும் காலை 7 மணியளவில் சிலை காணாமற்போயிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுத் தொடர்பில் ஹங்குரன்கெத்த பொலிஸில், நேற்று முன்தினம் (05…
-
- 0 replies
- 453 views
-
-
அல்லைப்பிட்டிக் கடற்கரையில் – கரையொதுங்கிய டொல்பின்!! யாழ்ப்பாணம் அல்லைபிட்டி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனின் உடற்பகுதி இன்று கரையொதுங்கியுள்ளது. மீனவர்கள் காணப்பட்ட டொல்பினின் உடலை, மக்கள் பலர் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டுள்ளனர். தற்போது டொல்பினின் உடல் கடற்கரையில் மீனவர்கள் புதைக்கப்பட்டது. http://newuthayan.com/story/16/அல்லைப்பிட்டிக்-கடற்கரையில்-கரையொதுங்கிய-டொல்பின்.html
-
- 0 replies
- 414 views
-
-
8 ஆவது நாளாகவும் தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 8ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியை மோற்கோள்வதற்காக யாழ் பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளனர். மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று காலை 7.30 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் 8 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இதன் போது விசேட சட்ட வைத்திய நிபுனர் ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமை…
-
- 0 replies
- 427 views
-
-
உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்: இன விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமரன் நினைவிடத்திலேயே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஜூன் 5 1974இல் பொன் சிவகுமாரன் வீரமரணம் அடைந்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டச் செயல்களைப் புரிந்த சிவகுமாரன் பிற்கால ஈழ விடுதலைப் போராட்ட எண்ணத்திற்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக செயற்பட்டார். இவரது 44ஆவது நினைவு தினம் நாளை ஆகும். இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், முன…
-
- 9 replies
- 1.9k views
-
-
பேச்சுப் பல்லக்கு -தம்பி கால்நடை -விக்கியை விமர்சிக்கிறார் தவராசா இராணுவத்தை வெளியேற்றவேண்டும் என்று மேடையில் ஒரு பேச்சும், அவர்களுடன் இணைந்து மரம் நடுவதுமாக, சொல் வேறு செயல் வேறாகவே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடந்து கொள்கின்றார் என்று விமர்சித்துள்ளார் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா. சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தின நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் மரம் நட்டார். அது தொடர்பிலேயே வடக்கு மாகாண சபை எதி…
-
- 1 reply
- 837 views
-
-
வடமாகாண கல்வி அமைச்சரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைக்கிறது : வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனுக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஆண்டு வவுனியா ஈரப்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் இலங்கை தேசியக் கொடியை ஏற்ற மறுத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி இந்த விசாரணை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரின் தலைமையகத்தில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கான அழைப்பாணையை பயங்கரவாத தடுப்பு…
-
- 0 replies
- 314 views
-
-
யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலை வழக்கின் சந்தேக நபர்களான ஐந்து காவற்துறையினரில் மூவர் வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்.பல்கலைகழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகிய இரு மாணவர்கள் மீது கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி அன்று யாழ்.காவற்துறை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்திருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட ஐந்து காவற்துறையினர் கைது …
-
- 0 replies
- 359 views
-
-
ரவூப் ஹக்கீம் – றிசார்ட் பதியூதீன் மோதல் – அமைச்சரவைக் கூட்டத்தில அமளி….? வடக்கில் சிங்கள மக்களை மீளகுடியேற்றுவது தொடர்பாக ஆராய ஜனாதிபதி, அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை நியமித்துள்ளார்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் ஆகியோர் இடையில் வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதமும் அமளியும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக…
-
- 0 replies
- 364 views
-
-
கூட்டமைப்பின் சூழ்ச்சியே என் வீழ்ச்சிக்குக் காரணம் -முகநூல் பக்கத்தில் அங்கஜன் கருத்து!! 48 ஆண்டுகளின் பின்னர் நாடாளுமன்றத்தில் பிரதிச் சபாநாயகராகத் தமிழர் ஒருவர் வருவதற்கான வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சூழ்ச்சியால் இல்லாமல் போயிருக்கின்றது. இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 387 views
-
-
"சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தோல்வியடையவில்லை" (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக போட்டியிட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தோல்வியடையவில்லை, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் பிரதிநிதியே இன்று தோற்க்கடிக்கப்பட்டுள்ளார் என சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர் தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே 53 வாக்குகளை பெற்ற போதிலும் 97 வாக்குகளை பெற்ற ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவானார். இதன் பின்னர் சபையில் அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூற…
-
- 1 reply
- 483 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நபரின் அதிர்ச்சி வாக்குமூலம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை கலேவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் 25.253 கிராம் ஹெரோயினை கொண்டுசென்றுகொண்டிருந்தவேளை குறிப்பிட்ட நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பை சேர்ந்த 26 வயது இளைஞனையே கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறிப்பிட்ட இளைஞன் போதைப்பொருளிற்கு அடிமையானவர் எனவும் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபர் தனது கையடக்கத்தொலைபேசியை பேருந்திற்குள் வைத்துவிட்டு நடத்துனரிடம் சண்டையிட்டார் என தெரிவித்துள…
-
- 0 replies
- 533 views
-
-
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை விழா - எஸ்.ஜெகநாதன் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ் மாநகரசபை, வடமாகாண விவசாய அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் யாழ் பிரதேச செயலகம் ஆகியன ஒன்றிணைந்து முன்னெடுக்கும் மரம் நடுகை விழா யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலில் இன்று (05) இடம்பெற்றது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மரம்-நடுகை-விழா/71-217124
-
- 2 replies
- 513 views
-
-
கடலட்டைத் தொழிலுக்கான நிபந்தனை பின்பற்றப்படும் – கூட்டமைப்புக்கு உறுதியளித்தார் கடற்றொழில் அமைச்சர் சொய்சா!! கடலட்டை பிடிப்பதற்கு விதிக்கப் படும் நிபந்தனைகள் உரியமுறையில் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது என்று கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் காமினி விஜித் விஜிதமுனி சொய்சா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்தி…
-
- 0 replies
- 160 views
-
-
மருதங்கேணிப் பிரதேச செயலகத்தை முற்றுகையிடும் மீனவர்கள்- கடலட்டை பிடிக்க எதிர்ப்பு!! கடலட்டை பிடிப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று இடம்பெறவுள்ள போராட்டத்துக்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர். ஆயினும் திட்டமிட்டவாறு மருதங்கேணிப் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் இன்று இடம்பெறும். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் வே.தவச்செல்வம் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை கடலட்டையை பிடிப்பதை எதிர்த்து கலந்துரையாடலின் போது இந்த தீர்மா…
-
- 0 replies
- 295 views
-
-
சபையில் ரணில், சம்பந்தன் முறுகல்; நடந்தது என்ன? (எம்.எம்.மின்ஹாஜ் ,ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டு அடிப்படையில் சுதந்திர கட்சிக்கே பிரதி சபாநாயகர் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் சபையில் கோரிக்கை விடுத்த போதும் எதிர்க்கட்சிக்கு இரண்டு பதவிகள் வழங்க முடியாது, பிரதி சபாநாயகர் ஆளும் தரப்பின் ஒருவராகவே இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் கூறினார். இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி சபையில் கருத்து தெரிவித்த எஸ்.பி. திசாநாயக எம்.பி :- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வசம் இருந்த பிரதி சபாநாயகர் பதவியிலேயே தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே நாமே மாற்று நபரை நியமிக்க வேண்டும். ஆக…
-
- 4 replies
- 898 views
-