ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
விகிதாசார முறைப்படி மாகாணசபைத் தேர்தல் – ரணிலிடம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் வலியுறுத்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ், முஸ்லிம் கட்சிகள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈபிடிபி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போதே மாகாணசபைத் தேர்தலை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்துமாறு, மேற்படி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்தச் சந்திப்பின் பின…
-
- 0 replies
- 172 views
-
-
புத்தாண்டு முடிந்ததும் வெளிநாடு பறக்கிறார் சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ஆம் நாள் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அவர் எந்த நாட்டுக்குப் பயணமாகவுள்ளார் என்று அந்தச் செய்தியில் கூறப்படவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பங்கள் உச்சமடைந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்த வெளிநாட்டுப் பயணம் இடம்பெறவுள்ளது. கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா என்று முடிவு செய்வதற்காக நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடத்தப்படவிருந்த நிலையில், திடீரென அந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது. இந்த நிலைய…
-
- 0 replies
- 154 views
-
-
வடக்கு முதல்வர் பதவிக்கு டக்ளசும் போட்டி வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் ஆயுள் காலம் எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுடன் காலாவதியாகவுள்ளது. இந்தநிலையிலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து வருவதாக டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியுள்ளார். “மாகாணசபைகளின் ஊடாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன். எனவே, எனது சாட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏன் நான் போட்டியிடக் கூடாது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். …
-
- 3 replies
- 618 views
-
-
கூட்டமைப்பின் குழப்பநிலை மக்களால் ஏற்க முடியாதது!! கூட்டமைப்பின் குழப்பநிலை மக்களால் ஏற்க முடியாதது!! தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மா னத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ரணில் விக்கிரமசி்ங்கவுடன் கூட்டமைப்பால் உடன்படிக்கை எதுவும் செய்யப்படவில்லையென கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தள்ளமை , மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 277 views
-
-
ஆதரவாக வாக்களித்த சு.கவைச் சேர்ந்த 16 பேரும் இராஜினாமா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தங்களுடைய இராஜினாமாக் கடிதங்களை, ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டனரென தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அந்த 16 பேருக்கும் இடையில், நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே, இராஜினாமா கடிதங்களை அவர்கள் கையளித்துள்ளனரென அந்தத் தகவல் தெரிவித்தது. நேற்றிரவு நடைபெற்ற சுதந்தி…
-
- 0 replies
- 324 views
-
-
யாழ். ஐந்து சந்திப்பகுதியில் மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை! யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் இன்று மாலை (10-04-2018) முற்றுகையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது அந்த நிலையத்தை நடத்தியவர் எனத் தெரிவிக்கப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரும் மாவா போதைப் பொருளை வாங்குவதற்கு வந்த 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர். அங்கிருந்து பெருமளவு மாவா போதைப் பொருள் பொட்டலங்களும் மாவா போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பால…
-
- 1 reply
- 455 views
-
-
சுன்னாகம் வாழைக்குலை சந்தைப்பகுதி வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறதா? யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வர்த்தக நகரான சுன்னாகத்தின் சந்தைப்பகுதியில் ஒருபகுதியை வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு தாரைவார்க்கும் செயல்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச வர்த்தகர்களினால் கவலை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந் நடவடிக்கையை முற்றாகக் கைவிடேவண்டுமென சுன்னாகம் மத்திய சந்தை உட்புற வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை குறித்த வியாபாரிகள் சங்கம் வெளியிடப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 410 views
-
-
விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி – சுயாதீன ஊடகவியலாளரிடம் விசாரணை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்டமை தொடர்பில் ஊடகவியலாளரை இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றும் த.வசந்தரூபனையே இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழுவினர் இன்று (11) யாழ்.மாநகர சபையில் வைத்து விசாரணை முன்னெடுத்துள்ளனர். இணையத்தளம் ஒன்றில் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி பிரசுரித்த குற்…
-
- 0 replies
- 382 views
-
-
வெளிப்படைத் தன்மையும் நீதியும் முக்கியம்!! வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது இப்படிப்பட்ட மோசடி அல்லது முறைகேட்டுக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே இருந்த அமைச்சர்களும் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன. இதையடுத்து அந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்தார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட அந்த மூவர் குழு வழங்கிய விசாரணை அறிக்கையில் அமைச்சர்கள் நால்வரில் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்ட…
-
- 0 replies
- 226 views
-
-
தியாக தீபத்துக்கு சிலை – கிட்டு பூங்கா புனரமைப்பு – வீதிகளுக்கு மாவீரர்களின் பெயர் யாழ் மாநகர முதல் அமர்வில் வி.மணிவண்ணன் கோரிக்கை தியாக தீபம் திலீபன் அண்ணாவிற்கு யாழ் மாநகரசபை சிலை வைத்தால் அதனை வரவேற்பதோடு அதற்கான ஒத்துளைப்பும் வழங்குவோம். அதேபோன்று மாவீரர்களின் பெயரில் முன்னர் இருந்த வீதிகளுக்கு மீண்டும் அவர்களது பெயர்கள் சூட்டப்படவேண்டும் என்றும் கிட்டு பூங்கா புனரமைக்கப்பட்டு மீண்டும் கிட்டு பூங்க என பெயர் சூட்டப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அரச இயந்திரத்துடன் சேர்ந்து இயங்கி தமிழ் மக்களின் அழிவிற்குக் காரணமாகியவர்கள…
-
- 0 replies
- 319 views
-
-
பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைப்பது என்ன நியாயம்? ராஜித்த கேள்வி (ரொபட் அன்டனி) வடக்கில் பொது மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். தெற்கு மக்களின் காணிகளை இராணுவம் அபகரித்தால் அவர்கள் வெறுமனே இருப்பார்களா? பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைத்து வியாபாரம் செய்வது சரியா என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன கேள்வியெழுப்பினார். அத்துடன் வழக்கு தொடுக்கப்படாத அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கல…
-
- 1 reply
- 255 views
-
-
வடக்கு முதல்வர் ஆன்மிகப் பயணம்!! வடக்கு முதல்வர் ஆன்மிகப் பயணம்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு இருவார கால ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தங்கியிருந்து ஆன்மிகப் பயணத்தை அவர் மேற் கொள்வார் என்று தெரியவருகின்றது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் சந்திப்புக்களிலும் அவர் ஈடுபடக் கூடும் என்று அறியமுடிகின்றது. …
-
- 6 replies
- 726 views
-
-
லசந்த விக்ரமதுங்க கொலை – சரத் பொன்சேகாவும் கைதுசெய்யப்பட வேண்டும்… ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவத்திற்கு கட்டளையிட்ட குற்றச்சாட்டில் இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரி அமல் கருணாசேகர கைதுசெய்யப்பட்டது போல், அந்த குற்றச்சாட்டின் கீழ் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட வேண்டும் என ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவத்திற்கு சரத் பொன்சேகா பொறுப்புக் கூறவேண்டும் என ரணில் விக்ரமசிங்கவும் குற்றம் சுமத்தியிருந்தாக கூறியுள்ள வீரசேகர, நாடாளுமன்ற குறிப்பேட்டில் அது பதிவாகியுள்ளதாகவும் இதனால், கொலைக்கு கட்டளையிட்ட குற்றச்சாட்டின் கீழ் பொன்சேகாவை கைது செய்ய வ…
-
- 0 replies
- 240 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீது அதிருப்தி கொண்டுள்ள ஜனாதிபதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி மக்கள் அளித்த ஆணை தொடர்பில் சந்திரிக்கா வெளியிட்டு வரும் கருத்துக்கள், ஜனாதிபதியை அதிருப்தி அடையச் செய்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது சந்திரிக்கா, கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். அரசாங்கத்தில் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். …
-
- 0 replies
- 280 views
-
-
சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக வாக்களித்த இந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு தேவையில்லை எனக் கூறப்பட்டாலும் இவர்களை நாட்டு மக்கள் அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக…
-
- 0 replies
- 164 views
-
-
யாழ்.மாநகர முதல்வர் உரை எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு தொடங்குகின்றேன்… எமது மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த அனைத்து மாவீரர்களினதும், மக்களினதும் ஆத்மாக்களையும் நினைவில் நிறுத்தியவனாக… மதிப்பிற்குரிய உறவுகளே! யாழ் மாநகரசபையின் கௌரவ உறுப்பினர்களே!! ஆணையாளர்! செயலாளர்! துறைசார் தலைவர்கள்! அதிகாரிகள்! அன்புக்குரிய ஊழியர்கள்! ஊடகவியலாளர்களே! இது எனது தொடக்க உரை, யாழ் மாநகரத்தின் முதன்மை மகனாக நான் முன்வைக்கும் எனதும் நான் சார்ந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் கொள்கை விளக்கவுரை. நான் தமிழ்த் தேசியத்தின…
-
- 0 replies
- 239 views
-
-
கடும் போட்டியின் மத்தியில் நானாட்டன் பிரதேச சபை கூட்டமைப்பிடம்!! நானாட்டான் பிரதேச சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கடும் போட்டியின் மத்தியில் திருவுலச்சீட்டின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. நானாட்டான் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் இன்று நானாட்டான் பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம் பெற்றது. அதில் தவிசாளர் பதவிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் றோஜர் ஸ்ரலின் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழிய…
-
- 0 replies
- 672 views
-
-
வாள்வெட்டுக்களில் இருவருக்குக் காயம்!! வாள்வெட்டுக்களில் இருவருக்குக் காயம்!! கொடிகாமம், மற்றும் தெல்லிப்பழைப் பகுதிகளில் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந் துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமத்தில் மந்துவில் கிழக்குப் பகுதியில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. வீதியருகே நின்றிருந்த இளைஞர்…
-
- 1 reply
- 518 views
-
-
முல்லைத்தீவுக் கடலில் ஏற்படும் திடீர் மாற்றம்!! முல்லைத்தீவுக் கடலில் ஏற்படும் திடீர் மாற்றம்!! முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கக் குழு ஒன்று முல்லைத்தீவுக்கு வருகை தந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருந்து முல்லைத்தீவு கடல் தன்மையில் மாற்றம் உள்ளதாகவும், நீர் மட்டம் 5 அடி அதிகரித்ததாகவும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 412 views
-
-
கிண்ணியா நகர சபை ஐ.தே.க. வசம்!! கிண்ணியா நகர சபை ஐ.தே.க. வசம்!! கிண்ணியா நகர சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எஸ்.எச்.எம் நளீம் தெரிவு செய்யபட்டுள்ளார். தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுக்கான ஆரம்ப அமர்வு இன்று நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அதிக வாக்குகளால் நளீம் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல சபைகளில் ஐக்கிய தேசி…
-
- 0 replies
- 203 views
-
-
மன்னார் பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சியின் வசம் : மன்னார் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். -இதன் போது மன்னார் பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் எஸ்.எச்.முஜாஹிர் மற்றும் உப தலைவராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு இன்று செவ்வாய்க்கிழமை(10) மாலை 2.30 மணியளவில் மன்னார் பிரதேச சபையில் உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் இடம் பெற்றது. குறித்த சபையின் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்ப…
-
- 2 replies
- 476 views
-
-
சென்றார்கள் – பார்த்தார்கள் – திரும்பினார்கள்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முல்லைத்தீவில் சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயவென சென்ற வடமாகாண சபை உறுப்பினர்கள் அது தொடர்பில் உரியமுறையில் செயற்படவில்லை என சக உறுப்பினர்களே குற்றம் சாட்டி இருந்தனர். முல்லைக்கு படையெடுப்பு. முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதமான சிங்கள குடியேற்றங்கள் , சட்டவிரோத மீன் பிடிமுறைமைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராயவென வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் முல்லைத்தீவுக்கு படைஎடுத்திருந்தனர். முன்னதாக காலை 09 மணிக்கு முல்லைத்தீ…
-
- 0 replies
- 503 views
-
-
குடாக்கடலில் இரு மீனவர்கள் மாயம்!! குடாக்கடலில் இரு மீனவர்கள் மாயம்!! யாழ்ப்பாணம் குருநகர் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர் என்று அவரது உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். இதுவரையில் அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என்று தெரிவிக்்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 241 views
-
-
அமைச்சர் எஸ்.பி வீட்டில் நேற்றிரவு இரகசிய ஆலோசனை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு பத்தரமுல்லையில் உள்ள அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவின் வீட்டில் இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மீண்டும் நடைபெறவுள்ள நிலையில், நேற்றிரவு நீண்ட நேரமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த, சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். இவர்கள், கூட்டு அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் எ…
-
- 0 replies
- 245 views
-
-
யாழ்ப்பாணம் வந்தார் நடிகர் ஆர்யா!! இந்திய முன்னனி நடிகரான ஆர்யா இன்று யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டார். வானொலி ஒன்றின் அனுசரணையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்கு இலங்கை வந்துள்ள அவர் தொழுகைக்காக வந்திருந்ததுடன் அங்கிருந்த இளைஞர்கள் நடிகருடன் செல்பி எடுக்க முயற்சித்தனர். எனினும் நடிகர் அவ்விடத்தில் இருந்து இளைஞர்களை நோக்கி கை அசைத்து விரைவாக நகர்ந்து சென்றதைக் காண முடிந்தது. …
-
- 24 replies
- 3.4k views
-