ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
பயன்படுத்தப்படாத ஸ்ரீலங்கன் விமானங்களால் பாரிய இழப்பு! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று விமானங்கள் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த போதிலும், மாதாந்தம் 9 இலட்சம் டொலர்களை தவணை முறையில் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான மொத்த விமானங்களின் எண்ணிக்கை 22 ஆகும். பிரதான விமான சேவையில் தற்போது 3,194 ஊழியர்களும், மூலோபாய வணிக பிரிவுகளில் 2,862 ஊழியர்களும் பணிபுரிகின்றனர். விமான சேவையை வலுப்படுத்தும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாது. அதன்படி, இந்த…
-
- 1 reply
- 212 views
-
-
ரெலோவுக்கு அழைப்பு விடுத்த - தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் Vhg பிப்ரவரி 25, 2025 எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) கலந்துரையாடலுக்கு வருமாறு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற அமர்வுகள் இட…
-
-
- 2 replies
- 312 views
-
-
சிறீதரன், கஜேந்திரகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! பெரமுன கோரிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிறீதரன் ஆகியோர், தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அந்த விகாரை உடைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டில் இன்று இனவாதத்தைப் பரப்புவது யார்? தேவநம்பியதீசன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு முன்னால் வந்து சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் போராட்டம் நடத்துகின்றனர். அதுமட்டுமல்ல விகாரை இடிக்கப்படும் எனவும்…
-
- 1 reply
- 242 views
-
-
ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 6 மணி நேரம் விசாரணை! ‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்’ என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை கடந்த வௌ்ளிக்கிழமை (21) பெற்றுள்ளனர். ‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்..’ என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன. குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பு ஒன்றினையும் நடாத்தி அது போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். அந்நிலையில் கடந்த வ…
-
- 0 replies
- 144 views
-
-
Published By: VISHNU 25 FEB, 2025 | 02:35 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சையளிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பிச்சை எடுப்பதற்கு தயராக இல்லையென்பதனை உங்களுக்கு சொல்லுகின்றேன். எமது சகோதரர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். நாங்கள் பில்லியன், ரில்லியன் கணக்கான நிதியை கொண்டு வருகின்றோம். பிச்சை போடுகின்றோம். தலதா மாளிகைக்கு குண்டுவைத்த ரோஹன விஜேவீர பயங்கரவாதியல்ல, ஆனால் எமது பிரபாகரனை பயங்கரவாதி என்பீர்கள் ஏனெனில் நாங்கள் தமிழர்கள் என யாழ் மாவட்ட சுயேட்சை உறுப்பினர் இராமநாதன் அச்சுனா கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற …
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
பொலிஸ் காவலின் கீழான கொலைச் சம்பவங்களால் நீதிக்கட்டமைப்பின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பு; பக்கச்சார்பற்ற உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 10:33 PM (நா.தனுஜா) நாட்டின் சட்டவாட்சி மீது வலுவான அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ள அண்மைய பொலிஸ்காவலின் கீழான கொலைச் சம்பவங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இச்சம்பவங்கள் குறித்து உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் தோற்றுவிக்கும் வகையில் அண்மையில் பதிவான கொலைச் சம்பவங்கள் …
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
24 FEB, 2025 | 10:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் தோட்ட மக்களுக்கு ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கும் 7322மில்லியன் ரூபாவில் 4100 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். வீட்டுத்திட்டத்துக்கான இந்திய அரசாங்கத்தின் 3500 மில்லியன் ரூபாவும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுத்ததாகும். அந்த பெருமை எங்களுக்கே சேரவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவி்த்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் …
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார் February 24, 2025 5:27 pm வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறைப் போராட்டத்தின் 3000 ஆவது நாளான இன்று, தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த மாரி அம்மா என்றழைக்கப்படும் வேலுசாமி மாரி என்பவரே தனது 79 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரின் மகனான வேலுச்சாமி சிவகுமார் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டார். இந்நிலையில், மாரி அம்மா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார். வவுனியா ஏ – 9 வீதியில் சுழற்சி முறையில் இடம்பெற்று வரும் போரா…
-
- 5 replies
- 433 views
-
-
Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 10:44 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்படுத்தப்படும். வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பொதுஜன அபிப்ராயத்துக்கு போதுமான காலவகாசம் வழங்கப்பட்டு, பாராளுமன்றத்தில் விரிவான கலந்துரையாடலுடன் புதிய அரசியலமைப்பினை உருவாக்க தயாராகவே இருப்பிறோம். இதற்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும், சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறி…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 04:51 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் வரைக்கும் அதிகரிக்க நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. இதற்காக நாங்கள் முறையான பல நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து, பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளை சபைக்கு தெளிவுபடுத்துமாறு கேட்ட கோரிக்கைக்கு பதிலளித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து க…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 24 FEB, 2025 | 05:47 PM பிரதமர் பதவியுடன் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பல பொறுப்புகளுக்கு மத்தியில் இந்தப் பொறுப்பைப் பற்றியும் அறிந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தெற்கில் பிறந்து வளர்ந்து கொழும்பு நகரில் வாழ்ந்தாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் மற்றும் அடமஸ்தானத்தின் மீது எனக்கு தனியான அன்பும் மரியாதையும் உண்டு. ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேய அருகில் இருப்பதை விட எனது மனதிற்கு ஆறுதலை தரும் வேறெதுவும் இல்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி வளாகத்தில் உள்ள சன்னிபாத மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாட…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
24 FEB, 2025 | 04:52 PM தையிட்டி விகாரை பிரச்சினையை நாங்கள் ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (2) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம். அவர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும் பௌத்த மத தலைவர்களுடனும் பேசி, விகாரை தொடர்பான பிரச்சினையை முடிவுறுத்துவோம். அதற்கு எமக்கு குறைந்தது ஆறு மாத காலமாவது தேவை. அதற்குள் அரசியல் செய்ய முயன்று அதனை யாரும் குழப்ப வேண்டாம் என கோருகிறோம்…
-
-
- 5 replies
- 442 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து 222 தனிநபர்களின் பெயர் விபரங்களையும் உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அநுர அரசு எடுத்துள்ள இத்தீர்மானத்தின் பின்னணி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள அதேவேளை இது தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் பாதிப்பாக அமையுமோ என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது. இதற்கிடையில், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் முந்தைய அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் எவ்வித வித்தியாசங்களும் இல்லை. 15 அமைப்புகள் மற்றும் 222 தனிநபர்களுக்கும் தடை தடை விதித்து தேடுதல் அறிக்கையை இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 315 views
-
-
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேக நபரான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியின் சமீபத்திய புகைப்படங்களை பொலிஸார் திங்கட்கிழமை (24) வெளியிட்டுள்ளதுடன் அவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். சந்தேக நபர், 243/01, ஜெயா மாவத்தை, நீர்கொழும்பு வீதி, கட்டுவெல்லகம என்ற முகவரியில் வசிக்கும் 25 வயதான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது தேசிய அடையாள அட்டை எண் 995892480V. ஆகும். வழக்கறிஞர் போல் நடித்த செவ்வந்தி, நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு ரிவால்வரை கடத்தி வந்து கொலையில் ஈடுபட்ட துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவ…
-
-
- 20 replies
- 827 views
-
-
எம்.கே.சிவாஜிலிங்கம் மருத்துவமனையில் அனுமதி! தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். கொழும்புக்கு பயணித்த வேளையில், சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில், அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எம்.கே.சிவாஜிலிங்கம் ம…
-
- 0 replies
- 157 views
-
-
'க்ளீன் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது இன்றைய தினம் (23.02.2025) காலை 7.30 மணி முதல் நண்பகல் 11.30 மணிவரை அந்தந்த பிரதேச செயலக ரீதியாக நடைபெற்றது. அந்தவகையில் மாவட்ட நிகழ்வானது பருத்தித்துறை பிரதேதச செயலக பிரிவில் உள்ள சக்கோட்டை கடற்கரைப்பகுதியின் 2 கி.மீ பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினரகளாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடமாகாணப் கடற்படைகளின் பிரதித்…
-
- 1 reply
- 428 views
- 1 follower
-
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், சில தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் நேற்றுக் கலந்துரையாடல் நடைபெற்ற நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை இணைந்து எதிர்கொள்வது என்று அவை தீர்மானித்துள்ளன. இந்தக் கூட்டணியில் 9 கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் சக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஏற்கனவே உள்ள, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுடன் தற்போது தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், சமத்துவக் கட்ச…
-
- 0 replies
- 227 views
-
-
நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி பகுதியை சேர்ந்த இளைஞன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இளைஞன் மேலும் தெரிவிக்கையில், கடந்த 18ஆம் திகதி எனது அம்மா வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்னால் நின்ற போது, முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸார், என் மீது தாக்குதல் மேற்கொண்டு, கைவிலங்கு இட்டு, முச்சக்கர வண்டியின் உள்ளே கீழே போட்டு, தமது கால்களுக்குள் என்னை அழுத்தி பிடித்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு எதற்காக என்னை தாக்கி, கைது செய்தீர்கள் என கேட்ட போது, கேபிள் வயர்கள் வெட்டிய சம்பவம் தொடர்பில் என கூறினார்கள். என…
-
- 0 replies
- 223 views
-
-
காணாமல் ஆக்கப்பட் டோரின் 3000 ஆவது நாள் நிறைவடையும் தினத்தில் பிரிந்த தாயின் உயிர்! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி தொடர்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 3000 ஆவது போராட்ட நாளான இன்று தமிழர் தாயக காணமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தாயொருவர் இன்று உயிரிழந்துள்ளார். வவுனியா தோனிக்கல் பகுதியைச் சேர்ந்த 79 வயதான குறித்த பெண் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மகன் கடந்த 2009 ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட உறவுகளின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் பலவற்றில் த…
-
- 2 replies
- 211 views
-
-
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த (19.02.2025) அன்று மாலை நால்வர் மீது வவுனியாவில் இருந்து வந்தவர்களால் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும்,சகோதரனின் மனைவி மீதும் வவுனியா பகுதியில் இருந்து (NP CAH – 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி,கற்களால் தாக்குதல் நடத்தியிருந்தார். அடி காயங்களுக்குள்ளான நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை ப…
-
- 1 reply
- 470 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது அமர்வு இதுவாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவினர் ஜெனீவா சென்றுள்ளனர். இதில் பங்கேற்றுள்ள, இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நட்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதி…
-
- 1 reply
- 249 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 10:28 AM வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எறிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை வவுனியா - பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும், பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. இதனை அடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கு குழுமிய மக்களினால் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
24 FEB, 2025 | 10:22 AM பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் செயற்படும் பாதாள உலக கும்பல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உத்திகளை மேற்கொள்வதே பாதுகாப்பு அமைச்சின் முக்கிய நோக்கம் ஆகும். மேலும், பாதுகாப்பு செயலாளர் கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண…
-
- 3 replies
- 390 views
- 1 follower
-
-
24 FEB, 2025 | 11:26 AM மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் ஆராயவில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐலண்டிற்கு கருத்து தெரிவித்துள்ள நீதியமைச்சர் மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் ஆராயவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ள ஜனாதிபதி மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களிற்கு தண்டனையை நிறைவேற்றுவது ஒரு வழிமுறையில்லை என்பது குறித்து தெளிவாக உள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற கொலைகளின் பின்னர் இது குறித்து ஆராயவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கின்றோம் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் மூலோபாயம் ஒன்றை வகுப்பதற்கான…
-
-
- 2 replies
- 302 views
- 1 follower
-
-
23 FEB, 2025 | 08:52 PM (செ.சுபதர்ஷனி) நரம்பியல் சத்திர சிகிச்சை முதுகலைப் பட்டப்படிப்பை தொடர எதிர்பார்த்துள்ள இளம் மருத்துவர்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி உள்ளது. ஆகையால் வைத்தியர்கள் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான ஆதரவையும், அனைத்து வளங்களையும் சுகாதார அமைச்சு தொடர்ச்சியாக வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் வருடாந்த கல்வி அமர்வு மாநாட்டில் கலந்துக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கை…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-