ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143432 topics in this forum
-
அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் அரசியல் தீர்வு உள்வாங்கப்படுவது அவசியம் - கலாநிதி குமாரவடிவேல் குருபரன் 04 Feb, 2026 | 06:23 PM (நா.தனுஜா) தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகும…
-
- 0 replies
- 111 views
- 1 follower
-
-
இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நாட்டின் வளங்கள் சிறுபான்மை மக்களுக்கும் பகிரப்பட வேண்டும் - மேயர் அதாவுல்லா 05 Feb, 2026 | 09:52 AM (ஏ.எல்.நிப்றாஸ்) நாடு சுதந்திரமடைந்து நாம் இன்று 78 வருடங்களைக் கொண்டாடுகின்ற போதிலும் மக்கள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறு காரணங்களினால் இன்னும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர மேயருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார். மூவின மக்களும் இணைந்து காலனித்துவ சக்திகளிடம் இருந்து மீட்டெடுத்த நாட்டின் வளங்கள் சரியான முறையில் பகிரப்படவில்லை. மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை உணரச் செய்வது அவசியம். இதன் ஒரு அங்கமாக நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைவாக அனைத்து வளங்களும் பகிரப்பட…
-
- 0 replies
- 123 views
-
-
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி! செய்திகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள 'AI Impact' உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cml92e02104tuo29n0fquk4up
-
- 0 replies
- 112 views
-
-
யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்! 05 Feb, 2026 | 10:55 AM தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. 04.02.1957 அன்று இலங்கையின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், சிங்கள அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் தேசியக் கொடியுடன் …
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
04 Feb, 2026 | 10:01 AM மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகத்தர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மேற்குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. குறித்த வெதுப்பகம் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை அத்துடன் வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதும…
-
- 0 replies
- 100 views
-
-
04 Feb, 2026 | 10:34 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல் வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் யானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் மின்சாரம்…
-
- 0 replies
- 114 views
-
-
04 Feb, 2026 | 03:44 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புனித தாதுக்கள் கொழும்பு கங்காராம விகாரைக்கு இன்று புதன்கிழமை (04) கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புனித தாதுக்கள் இன்று முதல் 11 ஆம் திகதி வரை பொதுமக்களின் வழிபாட்டிற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த புனித தாதுக்களுடன் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ்வ்ரத் மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி ஆகியோர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்தனர். இந்த புனித தாதுக்கள் பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு கொண்…
-
- 0 replies
- 121 views
-
-
04 Feb, 2026 | 05:55 PM “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் இன்று புதன்கிழமை (04) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது. சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பெண்கள் இயக்கத்தின் நிரோஷா குருகே, தொழிலாளர் போராட்ட மையத்தின் சுகதா நந்த, மலையகத் தமிழ்ப் பெண்களின் சார்பில் ஞானதேவி, மலைநாட்டு மக்களின் நில உரிமைக்கான இயக்கத…
-
- 0 replies
- 110 views
-
-
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி. கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 …
-
- 1 reply
- 206 views
- 1 follower
-
-
78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை) Feb 4, 2026 - 07:44 AM 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறும் இந்நிகழ்வை நேரலையில் பார்வையிட, சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு இன்று காலை 7.45 மணி முதல் டிவி தெரண (TV Derana) மற்றும் அத தெரண (Ada Derana) ஊடாக ஒளிபரப்பப்படும். இன்று காலை சுமார் 7.50 மணியளவில் பிரதம நீதியரசர் திரு. பிரீதி பத்மன் சூரசேன சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்தார். இதேவேளை, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவும் விழா நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்து…
-
- 2 replies
- 189 views
- 1 follower
-
-
நல்லிணக்கத்துக்கு தமிழ் தலைவர்கள் உதவ வேண்டும்; கரும்புள்ளியை ஏற்படுத்தி விடக் கூடாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த வேண்டுகோள் Published By: Vishnu 04 Feb, 2026 | 04:24 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (3) வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ச…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று: 4000 படை வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு; 2000 பேருக்கு அழைப்பு Published By: Vishnu 04 Feb, 2026 | 03:45 AM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் காலை 6.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 2000 பேருக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்! போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ பயன்பாட்டைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 46,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகள் தண்டப் பணம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 46,635 வாகன சாரதிகள் ‘GovPay’ செயலி மூலம் அபராதம் செலுத்தியுள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜனவரி 24 வரை போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 11,715 சாரதிகள் ‘GovPay’ செயலியைப் பயன்படுத்தி அபராதம் செலுத்தினர். அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவினால் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://athavan…
-
- 0 replies
- 118 views
-
-
4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ! இன்று காலை 9.30 பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிரிருந்தார் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர் அங்கு இருந்து வெளியேறியுள்ளார் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் தம்மால் வருகை தர முடியாது எனவும், அதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் ஷிரந்தி ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். மேலும் இன்று ராஜபக்ச ஆதரவாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பெருமளவானவர்கள் விசாரணைப் பிரிவிற்கு முன்னால் ஒன்று திரண்டிருந்தமையும் குறிப்ப…
-
-
- 2 replies
- 266 views
-
-
சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை -அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம் 03 Feb, 2026 | 04:50 PM (நா.தனுஜா) கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. தமிழர்கள் குடியேற விரும்பாத அப்பகுதியில், அதனையே காரணமாகக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. எனவும் முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் என தமிழ்ப்பிரதிநிதிகள் வலியுறுத்தி…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல் Feb 3, 2026 - 07:21 PM வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டமூலத்தின் நோக்கங்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) விளக்கமளித்தார். இந்த சட்டமூலத்தின் நோக்கமாக அமைவது வீட்டு உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் இடையே உள்ள உறவைப் பாதுகாப்பதாகும் என அமைச்சர் கூறினார். அதன்படி வாடகை அடிப்படையில் வீடொன்றை வழங்கும்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படி செயல்பட வேண்டும் என்றும், எந்த வகையிலாவது அந்த ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமாக செயல்பட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அங்…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு Feb 3, 2026 - 06:28 PM ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (3) ரிட் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய போதே, ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீ…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை Feb 3, 2026 - 06:09 PM 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. 2020 தொடக்கம் 2021 வரை மூன்று தடவைகள் குற்றம் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 27 வயதுடைய நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகேதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அத்துடன் குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் …
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
இலங்கை கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறை Feb 3, 2026 - 04:49 PM இலங்கை கடற்பரப்பிற்கும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மீனவர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (3) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான மீனவர்களுக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து நஷ்டஈடு அறவீடு Feb 3, 2026 - 12:42 PM இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21 ரூபா மின்சார சபையின் நஷ்டஈடாகவும், 2,527,500.00 ரூபா நீதிமன்ற அபராதமாகவும் இவ்வாறு அறவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார மீட்டர்களில் மாற்றங்களைச் செய்து மின்சாரத்தைப் பெற்ற 1,259 சம்பவங்களும், கொக்கிகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 72 சம்பவங்க…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
கிவுல் ஓயா திட்டத்துக்கு முற்றுப்புள்ளியிடும் பொறுப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உண்டு - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிப்பு 03 Feb, 2026 | 10:34 AM (நா.தனுஜா) புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளும் தமிழ்மக்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் விரோதமானவையாகவே இருக்கின்றன. எனவே தமிழர்களுக்குத் தீங்காக அமையக்கூடிய கிவுல் ஓயா திட்டத்தை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் உண்டு என்பதை சகலரும் மனதிலிருத்திச் செயற்படவேண்டும் என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுற…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-
-
சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது - தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை ; சாணக்கியன் இராசமாணிக்கம் 03 Feb, 2026 | 01:18 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மணலாறு பிரதேசத்தில் சட்டவிரோதமான குடியேற்றப்பட்ட வெலிஓயா குடியேற்றவாசிகளுக்கு நீர் வழங்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பிரதேசங்களுக்கு நீர் விநியோக திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது. தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை. இது என்ன நியாயம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வ…
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025–2030க்கு அமைச்சரவை அனுமதி Published By: Digital Desk 3 03 Feb, 2026 | 03:07 PM (சரண்யா பிரதாப் ) மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பான தேசியக் கொள்கைக்கு அமைய, 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மின்சார தேவையின் 70 சதவீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்வதற்கும், 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைப்பதற்குமான இலக்கை அடைவதற்கும், ‘மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025–2030’அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டம், 2007 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை நிலைபேண்தகு வலுச்சக்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் …
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு adminFebruary 3, 2026 யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை சம்பிரதாயபூர்வமாகச்…
-
- 0 replies
- 116 views
-
-
அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது Feb 3, 2026 - 06:58 AM அரசியலமைப்புச் சபை இன்று (03) கூடவுள்ளது. அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்து இன்றைய தினம் அரசியலமைப்புச் சபை கவனம் செலுத்தவுள்ளது. அதன்படி, புதிய கணக்காய்வாளர் நாயகத்தைத் தெரிவு செய்யும் பணிகள் இன்றைய தினத்திற்குள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதல் கணக்காய்வாளர் நாயகம் பதவ…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-