ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
"காட்டிக்கொடுக்கும் தமிழனை விட முற்போக்கான சிங்களவர்கள் மேல்" ”காட்டிக்கொடுக்கும் தமிழனை விட முற்போக்கான சிங்களவர்கள் மேல்” நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியினர் அல்ல, பாராளுமன்றத்தில் அவர்களுடன் கூட்டணியில் மாத்திரமே இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என கலந்துரையாடல் சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளை பெற்றுக் கொடுத்தது போல் சம்மாந்துறை மாவட்டத்திலும் பிரதேச சபைகளை பெற்றுக் கொடுங்கள். ஸ்தீரமான அரசாங்கத்தின் அடித்தளமே இந்த உள்ளூராட்சி மன்றங்கள் . அதன்மூலமே கிராம அபிவிருத்தி பணிகள் நடைபெறும் எனவே அதன் அவசிய நிலையறிந்து செயலாற்றுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார். க…
-
- 1 reply
- 404 views
-
-
யானை, வெற்றிலை எல்லாம் அரசாங்கமென்றால் நாம் அங்கு புல்லாவெட்டுகிறோம் ; மனோ கேள்வி யானை, வெற்றிலை மட்டும்தான் அரசாங்கம் என்றால், நாம் என்ன அரசாங்கத்துக்குள்ளும், அமைச்சரவைக்குள்ளும் புல்லு வெட்டிக் கொண்டும், தேங்காய் துருவிக்கொண்டும் இருக்கிறோமா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பினார். கொட்டாஞ்சேனை கிழக்கு, புளுமென்டால் வேட்பாளர்கள் சிவா, பாலசுரேஷ், லுஷாந்தன் கார்த்திக் ஆகியோரை ஆதரித்து கொட்டாஞ்சேனை சந்தியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 1 reply
- 308 views
-
-
மனித உரிமை ஆணைக்குழுவில் ஊவா மாகாண முதலமைச்சர் தெரிவித்த சாட்சியம் என்ன ? (இரோஷா வேலு ) கொழும்பு ஊடகங்கள் சம்பவத்தை திரிபுபடுத்தி செய்தியை நாட்டுக்கு பரப்பியுள்ளன. உண்மையை கண்டறிய பதுளைக்கு வர வேண்டும் என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தினர் செறிந்து வாழும் பிரதேசத்திலேயே குறித்த தமிழ் பாடசாலை காணப்படுகின்றது. இந்நிலையில் கூடிய புள்ளிகளை எடுத்த முஸ்லிம் மாணவியை பாடசாலையில் சேர்ப்பதற்காகவே நான் சென்றிருந்தேன். இதனை தவறாக அரசியல் நோக்குடன் கையாளப்பட்டமையே பிரச்சினைக்கு காரணம். ஒரு மாணவியின் பிரச்சினையை தீர்க்க முடியாதெனில் குறித்த மாகாணத்தில் கல்வி அமைச்சராக நான் இருப…
-
- 1 reply
- 231 views
-
-
லசந்த கொலை தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகப் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை இடம்பெற்ற காலத்தில் கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் குற்ற விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிய துணை காவல்துறைப் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். லசந்த கொலை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது கிடைக்கப் பெற்ற சில சாட்சியங்களை இந்த காவல்துறை உத்தியோகத்தர் மூடி மறைத்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பான மிக முக்கியமான சில சாட்சியங்கள், ஆதாரங்கள் என்ப…
-
- 0 replies
- 265 views
-
-
கூட்டமைப்பு தீர்வு விடயத்தில் அவதானத்துடன் செயற்படவேண்டியதன் அவசியம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட்டு அவர்களுக்கான அரசியல் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பது தொடர்பான கோரிக்கைக்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதும் அது எவ்வாறு அதிகாரத்தில் இருப்போரினால் அணுகப்படும் என்பதுமே தற்போதைய கட்டத்தில் பேசப்படுகின்ற ஒரு முக்கிய விடயமாக காணப்படுகின்றது. தென்னிலங்கையானது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மிகவும் முனைப்புடன் செயற்பட்டபோதிலும் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் கூட அவர்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்…
-
- 0 replies
- 237 views
-
-
நாட்டைத் துண்டாடவோ, பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது : ஜனாதிபதி நாட்டைத் துண்டாடும் அல்லது பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சிலரால் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் நாட்டை துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பொய்ப் பிரசாரங்களிலும் சந்தர்ப்பவாத அரசியல் தந்திர…
-
- 0 replies
- 248 views
-
-
தேர்தல் பரப்புரை சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு 100 ரூபாய் தண்டம் : குளோபல் தமிழ்ச் செய்திகள் யாழ். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்ட இருவருக்கு தலா நூறு ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கடந்த 20ஆம் திகதி இரவு காவல்துறையிரால்; கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரையும் கடந்த 21ஆம் திகதி பிணையில் விடுவித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, வழக்கு விசாரணையை இன்று வரை ஒத்திவைத்தது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் ம…
-
- 0 replies
- 149 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவை சிறையிலடைத்தால் பிரச்சினை வெடிக்கும் : ராவணா பலய எச்சரிக்கை (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு மணித்தியாலம் சிறையில் வைக்க முடியுமாயின் கொழும்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறுமென என ராவணா பலய அமைப்பின் பிரதான அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ச தேரர் எச்சரிக்கை விடுத்தார். 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டினை ஒருமைப்படுத்தியவரது குடியுரிமையினை இல்லாதொழிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்துவது அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே காணப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமை இரத்து செய்யப்படவேண்டும் என்றால் பிணைமுறி மோசடிக்கா…
-
- 0 replies
- 256 views
-
-
பாதுகாப்பு படைகளின் பிரதானி - துருக்கி தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கெமால் கஹர்மன் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச் சந்திப்பு பாதுகாப்பு பிரதானியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கீமெல் கஹர்மன் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தில் பங்கேற்பதற்காக இங்கு வந்துள்ளநிலையிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் கேர்ணல் கெமால் கஹர்மன் ஆகியோருக்கிடையில் பரஸ்பர நலன்கள் கு…
-
- 0 replies
- 237 views
-
-
யாழ்ப்பாணம் வருகின்றார் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகின்றார் மகிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர் வடக்குப் பக்கம் தலை வைக்காத மகிந்த ராஜபக்ச, மூன்று ஆண்டுகளின் பின்னர் இன்று யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளார். சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியை ஆதரித்து வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காகவே அவர் வரவுள்ளார். மகிந்தவின் யாழ்ப்பாண வருகையை…
-
- 3 replies
- 577 views
-
-
அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! றிசாட் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வர்த்தக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துகொண்ட கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த தேர்தலிலே பிழையான பாதையி…
-
- 1 reply
- 213 views
-
-
பிரித்தானிய இளவரசர் இலங்கையை வந்தடைந்தார் இலங்கையின் 70 வது சுதந்திர தின விழாவின் சிறப்பு அதிதியாகக் கலந்துக்கொள்ள பிரித்தானிய இளவரசர் எட்வர்டும், இளவரசி பொஷியும் இன்று பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். இன்று பகல் 12.40 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே. 348 என்ற விமானமூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். எதிர்வரும் 5ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள் கண்டி நாளைய தினம் தலதா மாளிகைக்கும், பேராதனை தாவரவியல் பூங்காவுக்கும் விஜயம் செய்யவுள்ளனர். அத்துடன், எதிர்வரும் 3ஆம் திகதி இரத்மலானையில் அமைந்துள்ள பார்வையற்றோர் பாடசாலைக்கு…
-
- 4 replies
- 508 views
-
-
கச்சதீவு திருவிழாவில் 9 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் - டி.விஜிதா வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், இம்முறை 9 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக யாழ்.மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (01) நடைபெற்றது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் இம்முறை இலங்கையில் இருந்து 6 ஆயிரத்து 500 யாத்…
-
- 0 replies
- 292 views
-
-
ராஜபக்ச ஆட்சிக்கால ஊழல் வழக்குக்கு சிறப்பு நீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயின் ஆட்சிக்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைMAHINDA RAJAPAKSHA இந்த வழக்குகளை பிரத…
-
- 1 reply
- 390 views
-
-
‘அதிகாரங்களைப் பகிர்ந்தாலும் ஒற்றையாட்ச தான் தீர்வு’ நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருப்பதாகக் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார். “ஒன்றையாட்சிக்குள் தான் நாம் இருக்க வேண்டும். அதற்காக, அதிகாரங்களைப் பகிரக் கூடாதெனக் கூறவில்லை என்றும் கூறிய பிரதமர், ஒற்றையாட்சிக்குப் பங்கம் ஏற்படாத வகையில், அதிகாரங்கள் பகிரப்படல் வேண்டுமென்றும் அப்போது தான் தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கலாமென்றும்” கூறினார். தமிழ்மிர…
-
- 0 replies
- 359 views
-
-
மாற்று சமுகத்துக்கு காணிகளை விற்றவர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள் தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும், மாற்றுச் சமூகத்துக்கும் ஆயிரக்கணக்கான காணிகளை வழங்கியவர்கள் தற்போது தேர்தலில் வாக்கு கேட்டு வந்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன் தெரிவித்தார். வாகரை, மாங்கோணி பாம்கொலணியில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. பல உயிர்களை, பல தியாகங்களை செய்திருக்கின்றோம். இன்று அதை எல்லோரும் மறந்து விட்டு, பல கட்சிகள் வந்து அபிவிருத்தி செய்தோம், செய்யப் போகின்றோம் என்ற…
-
- 0 replies
- 295 views
-
-
கோட்டா மீதான குற்றச்சாட்டு நிரூபணம், கைது உறுதி- ராஜித விளக்கம் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கிரில்லவெல பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னணி பத்திரிகையொன்றின் ஆசிரியர் ஒருவர் முதல் தடவையாக கொலை செய்யப்பட்டது மஹிந்த ஆட்சியிலாகும். அவர் லசந்த விக்கிரமதுங்க. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினால் கொள்வனவு செய்யப்பட்ட மிக் ரக யுத்த விமானத்தில் இடம்பெற்ற கொடுக்க வாங்கள் தொடர்பில் ஊடகத்தில் எழுதியதே இவ…
-
- 0 replies
- 297 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கால ஊழல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் – அரசாங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வழக்குகளை பிரத்தியேகமாக விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றங்கள் மூன்று நீதிபதிகளை கொண்டிருக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. அரசு கருவூலத்தில் இருந்து பெரும் தொகையை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை விசாரிப்பதற்கான நடவடிக்கை மெதுவாக நடைபெறுவதாக விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 314 views
-
-
நந்திக்கடலில் மெளனித்த போராட்டம் உயிர்பெறும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரச தரப்பு வெற்றிபெற்றால் நந்திக்கடலில் மௌனிக்கச் செய்யப்பட்ட தமிழ் பிரிவினைவாதப் போராட்டம் மீண்டும் உயிர்பெறும். இவ்வாறு மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித் தார். அவர் தெரிவித்ததாவது-:பெப்ரவரி 10ஆம் திகதி மகரகம நகர சபை இலகுவாக தன்வசமாகிவிடும் என்று சில தரப்புகள் வேடிக்கை பார்த்தன. ஆனால் அவர்களுக்குத் தற்போது ஏமாற்றம் கிட்டியுள்ளது. பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது குட்டித்தேர்தல். இது சாதாரண தேர்தல் என்று கூறிக்கொண்டா லும…
-
- 0 replies
- 312 views
-
-
“எதனை நாங்கள் புறக்கணித்தோம்? எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை.” வாரத்துக்கொரு கேள்வி வடக்கு முதல்வரின் வாரம் ஒரு கேளிவியும் பதிலும் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாரக் கேள்வி வேலைப்பளுக்களின் நிமித்தம் சற்றுத் தாமதமடைந்தே பதிலிறுக்கப்பட்டது. அந்த வகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் வழங்கிய முக்கிய பதில் இங்கு தரப்படுகிறது. கேள்வி – வடக்கு மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் உதவிகளை நீங்கள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறதே? அதற்கு உங்கள் விளக்கம் என்ன? பதில் – எதனை நாங்கள் புறக்கணித்தோம்? எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவ்வாறான பேச்சுக்கள் எழ காரணங்கள் இருக்கத்தான் செய…
-
- 0 replies
- 401 views
-
-
அரசியல் தீர்வு தொடர்பில் தேர்தலின் பின்னர் பேசுவேன் எதிர்க்கட்சியும் இணக்கப்பாட்டை எட்டினால் தீர்வு உண்டு என்கிறார் ஜனாதிபதி (ஆர்.யசி) தேசியப்பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் பூரண ஒத் துழைப்புகளை வழங்க நான் தயாராகவே உள்ளேன். அரசாங்கமாக நாம் முயற்சிப்பதை போலவே எதிர்க்கட்சியும் ஒத்துழைப்புகளை வழங் கினால் தீர்வுகளை விரைவில் எட்ட முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார். தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வு குறித்து உரிய தரப்புடன் நா ன் பேசத்தயார் எனவும் அவர் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஜ…
-
- 0 replies
- 122 views
-
-
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அரசியல் தீர்வு தருவேன் உறுதியாக கூறுகிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பு பணிகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஆரம் பிக்கப்படும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதில் இரா.சம்பந்தன் மாத்திரமல்ல நானும் பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றேன். ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வடக்கிலும் தெற்கிலும் உள்ள எமது பிரதிவாதிகளை இணைத்துக் கொண்டே நாம் பயணிக்க வேண்டியுள்ளது. இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டு தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் ரண…
-
- 0 replies
- 138 views
-
-
ரவி ஐ.தே.க.வின் உப தலைவர் பதவியை வகிக்கக்கூடாதென மாரப்பன குழு பரிந்துரை பெப்ரவரி மாதம் கூடவுள்ள செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படும் என்கிறது கட்சி (எம்.எம்.மின்ஹாஜ்) பேப்பச்சுவல் டிசரிஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனத்தினால் வீட்டு வாடகை செலுத்தியமை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுமுன் பொய்யான சாட்சியமளித்தமை விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நிறைவு பெறும்வரை ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியின் பொறுப்புகள் எதனையும் வகிக்ககூடாது என திலக் மாரப்பன தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளத…
-
- 0 replies
- 160 views
-
-
நேவி சம்பத்தை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் சி.ஐ.டி. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 5 மாணவர்கள் உள்ளிட்ட 11பேரை கடத்திச் சென்று கப்பம் கோரி பின்னர் கொலை செய்தமை தொடர்பில் தேடப்படும் பிரதான சந்தேக நபரான, கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆரச்சி அல்லது நேவி சம்பத்தை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த சந்தெக நபர் தொடர்ச்சியாக தலைமறைவாகியுள்ள நிலையில், கோட்டை நீதிவானால் அவரைக் கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொது மக்களின் உதவியை இந்த விடயத்தில…
-
- 0 replies
- 304 views
-
-
மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட யோசனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி அது தொடர்பில் பேரவையில் விவாதம் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு அறிக்கை குறித்த விவாதம் நடத்தப்படவுள்ளது. இதன்போது இலங்கை தரப்பிலும் விடயங்கள் முன்வைக்…
-
- 0 replies
- 166 views
-