ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழியச்சிறை சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழிச்றைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். கடந்த 2012 ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 6 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத்தவிறின் 3 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். குறித்த வழக்கானது சட்டமா அதிபரால் யாழ். மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அது வழக்கு விசாரணை…
-
- 0 replies
- 365 views
-
-
நீண்ட வாள்களுடன் கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்திய மஹிந்தவின் சகா ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவும் அவரது கட்சி உறுப்பினர்களும் கூரிய வாள்களுடன் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உட்பட அக்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு ஆடையுடன் பிரசன்னமாகியிருந்த அதேவேளை, அவர்களது கைகளில் நீண்ட வாள்கள் காணப்பட்டன. …
-
- 0 replies
- 455 views
-
-
யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை மகாநாயக்க தேரர் காலமானார் வடமாகாண தலைமை சங்கநாயக்கர் மற்றும் ஸ்ரீ நாக விகாரையின் தலைமை விகாராதிபதி மீகஹஜதுரே ஞானரத்ன தேரர் நேற்று (19) காலமானார். அவர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வான்படை மற்றும் ராணுவத்தினரின் பங்களிப்புடன் அவரது பூதவுடல் வான் வழியாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நாகவிகாரைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் யாழ்…
-
- 56 replies
- 6.2k views
- 1 follower
-
-
அம்பாந்தோட்டையில் சீனக் கொடி குமுறிக் கொதிக்கிறது புதுடில்லி அம்பாந்தோட்டையில் சீனக் கொடி குமுறிக் கொதிக்கிறது புதுடில்லி இராஜதந்திர ரீதியில் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் தீர்மானம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனா வின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ள விவகாரம் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் இராஜதந்திர முறுகல்நிலையொன்றை ஏற்படுத்தியிருப்பதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த செப…
-
- 2 replies
- 658 views
-
-
வடக்கில் நண்டு வளர்ப்புத் திட்டம் ஆரம்பம்! வடக்கில் நண்டு வளர்ப்புத் திட்டம் ஆரம்பம்! வடமாகாணக் கடல்தொழில் அமைச்சு செயற்படுத்துகின்றது மீனவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டுவதற்கும் முன்வந் துள்ள வடக்கு மாகாணக் கடல்தொழில் அமைச்சு அதன் ஒரு கட்டமாக கடல்தொழிலாளர் மத்தியில் நண்டு வளர்ப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பத்து மீனவர்…
-
- 0 replies
- 340 views
-
-
ததேகூ வேட்பாளர் அலுவலகம் அடித்து உடைப்பு: தவிகூ ஆதரவாளர்களின் செயலா? இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக, போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் 03ம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி ரகுநாதன் என்பவரின் கொக்குவில் பகுதியிலுள்ள அலுவலகமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. நேற்று இரவு 10.30 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், இவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் என தாங்கள் இனங்கண்டுள்ள…
-
- 0 replies
- 265 views
-
-
ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்... முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலில் ஈடபடவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், ரஜினி காந்த் ஆன்மீக அரசியலுக்குள் வருவதை தாம் எப்போதும் வரவேற்பேன், என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபடவுள்ளதாக அண்மையில் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு அரசியல் தரப்புக்களை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக பேசிவரும் நிலையில் நேற்று பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த சீ.வி.விக்னேஷ்வரனிடம் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலுக்குள் வருவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தன…
-
- 0 replies
- 492 views
-
-
34 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் 34 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர், நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்க்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து புதிய கர்தான்குடி 2ஆம் குறிச்சியிலுள்ள சந்தேக நபரின் வீட்டில், காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே, மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், சந்தேசநபர் மறைத்து வைத்திருந்த கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றினர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், சந்தேக…
-
- 0 replies
- 276 views
-
-
வடமாகாண சபை உறுப்பினராக குகதாஸ் ? வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் வெற்றிடத்துக்கு ரெலோ அமைப்பின் எஸ்.குகதாஸ் நியமிக்கப்படுவார் என அறிய முடிகிறது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனொல்ட் தனது பதவியைக் கடந்த மாதம் இராஜினாமா செய்து, உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபைத் போட்டியிடுகின்றார். அந்த உறுப்பினர் வெற்றிடத்திற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எஸ்.குகதாஸ் வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார். என அறிய முடிகிறது. http://globaltamilnews.net/2018/60204/
-
- 0 replies
- 343 views
-
-
ஆயுதப்போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தந்தை செல்வா: சிவசக்தி ஆனந்தன் ஆயுதப்போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தந்தை செல்வா என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா கிடாச்சூரி கிராமத்தில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பிரதேசசபை வேட்பாளர் அருளானந்தம் அருந்தவராசவை ஆதரித்து பேசிய பிரச்சாரக் கூட்டத்திலேயே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் இனக்கலவரம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தமிழ் இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களில் சேர்ந்து ஆயுதம் தூக்கி போராடினார்கள். ஆனால் அந்த இளைஞர்களின் தாய் தந்தையர்கள் சிறிலங்க…
-
- 0 replies
- 440 views
-
-
500 குளங்களைப் புனரமைக்கிறது சிறிலங்கா இராணுவம் சிறிலங்கா இராணுவம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 500 நடுத்தர அளவுடைய குளங்களை புனரமைப்புச் செய்யவுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் களப் பொறியியல் பிரிவு குளங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த 2016ஆம் அண்டு ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 16 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் மூன்றில் ஒரு பகுதி ஆளணியை நாட்டின் அபிவிருத்தி வேலைக்குப் பயன்படுத்தும் திட்டம் ஒன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமையவே, குளங்களைப் புனரமைக்கும்…
-
- 0 replies
- 360 views
-
-
சுமந்திரன் -கஜேந்திரகுமார் இன்று நேருக்கு நேர் கருத்து மோதல் "புதிய அரசியல் யாப்பு எந்த தீர்வையும் தரப்போவதில்லை" என தெரிவிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் "புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையும்" என கூறும் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடலை, நமது வசந்தம் TVல் நாளை(27.12.2017) இரவு 10.00 மணிக்கு http://www.samakalam.com/செய்திகள்/சுமந்திரன்-கஜேந்திரகும/ இன்று இரவு முழுமையாக இணைக்கபடும்
-
- 23 replies
- 2.3k views
-
-
சிறுபான்மை மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை (எம்.எம்.மின்ஹாஜ்) எனது கணவர் மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டபோது . இருந்த அரசாங்கம் எது? அன்றைய ஜனாதிபதி யார்? பாதுகாப்பு அமைச்சர் யார்? பாதுகாப்பு செயலாளர் யார்? அதேபோன்று ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சிறிபத்தி சூரிய ஆரச்சி, ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, மகேஸ்வரன் ஆகியோரை படுகொலை செய்தது யார்?. இவ்வாறான அட்டூழியங்களுக்கு பிராயச்சித்தமாக சிறுபான்மை மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரி…
-
- 0 replies
- 147 views
-
-
முஸ்லிம்களின் வீட்டுத் திட்டத்துக்கு கூட்டமைப்புத் தடை என்பது பொய்!! முஸ்லிம்களின் வீட்டுத் திட்டத்துக்கு கூட்டமைப்புத் தடை என்பது பொய்!! வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவிப்பு வடக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத் திட்டங்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் தடையாக உள்ளது என்பதை ஆதாரத்துடன் கைத்தொழில் அமைச்சர் ரிசாத் நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின். …
-
- 0 replies
- 164 views
-
-
தேசிய அரசாங்கத்துக்குள் நெருக்கடி அமைச்சரவை விரைவில் கலையலாம் : மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் வரும் என்கிறார் அமைச்சர் சரத் அமுனுகம (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்திற்குள் நெருக்கடிகள் அதிகரிக்கும் பட்சத்தில் அமைச்சரவை கலைக்கப் பட்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்படும். கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் இது குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும். அதற்கான சகல அழுத்தங்களையும்…
-
- 0 replies
- 157 views
-
-
இளவரசர் எட்வர்ட் வருகிறார் காலி முகத்திடலில் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின், 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான, சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவுக்கு சிறப்பு அதிதியாக பிரித்தானிய அரச குடும்பத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி இளவரசர் எட்வர்ட் கலந்துகொள்ளவுள்ளார். எட்வர்ட், பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார். பிரித்தானிய அரச குடும்பத்துக்கான அழைப்பு வெளிநாட்டலுவல்கள் அமைச்சால் அனுப…
-
- 0 replies
- 252 views
-
-
அமெரிக்க, இந்திய, பிரித்தானிய நிபுணர்களின் உதவியுடன் தடயவியல் கணக்காய்வு மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படவுள்ள தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து நிபுணர்களின் உதவியைப் பெற சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகளின் மூலம், 11,145 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், மோசடி மூலம் இழக்கப்பட்ட 11,145 மில்லியன் ரூபாவை மீட்பதற்கு, மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தடயவியல் கணக்காய…
-
- 0 replies
- 239 views
-
-
தப்பியோடிய மஹிந்தவுக்கு கிராமங்களை வழங்கலாமா? பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் மஹிந்த ராஜபக் ஷ பயந்து ஓடினார். கிராம பொருளாதாரத்தை பொறுப்பேற்க தவறினார். அவ்வாறான ஒருவருக்கு மீண்டும் கிராமங்களை வழங்குவதா? அவருக்கு கிராமங்களை கட்டியெழுப்ப முடிந்திருக்க வேண்டும். ஏன் தப்பித்துஒடினார்? எனவே தப்பித்து ஒடிய மஹிந்த ராஜபக் ஷவிற்கு கிராமத்தின் பலத்தை மீண்டும் வழங்கினால் என்ன நடக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். உள்ளூராட்சி மன்றங்களில் தலைவர்கள் ஏதாவது குற்றச்சாட்டுக்கு உள்ளானால் விசாரணை முகங்கொடுக்க நேரிடும் என்பதனை நினைவில் வைத்து கொள்ளு…
-
- 0 replies
- 210 views
-
-
வியாழன், வெள்ளியில் விசேட பாராளுமன்ற அமர்வு மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விசாரிக்கும் நோக்கில் பாராளுமன்றம் எதிர்வரும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கூட்டப்படும் என தெரியவருகிறது. விசேட பாராளுமன்ற அமர்வைக் கூட்டி இது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடத்தவிருக்கிறார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றில் நடைபெறவுள்ள இந்தக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்துக் கட…
-
- 0 replies
- 368 views
-
-
சுமந்திரனுக்கு போராட்டத்தைப் பற்றி என்ன தெரியும்? சுரேஸ் காட்டம்! போராட்டமும் அதன் வலியும் தெரியாத சுமந்திரனே தமிழர்களுக்கு விரோதமாக செயற்படுகின்றார் என ஈழமக்கள்புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் கிடாச்சூரி வட்டாரத்தில் போட்டியிடும் அ.அருந்தவராசாவை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்கு சரியான தீர்வ வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் தமது உடமைகள் உறவுகளை இழந்திருக்கின்றனர் என்று தெரிவித்த அவர், சுமந்திரன் என்ற நபருக்கு வடக்கு கிழக்கை பற்றி, போராட்டத்தை பற்றி, அதன் வ…
-
- 3 replies
- 498 views
-
-
யாழ் மாநகர சபையின் முஸ்லிம் பிரதிநிதிகளை அறிமுகம் யாழ் மாநகர சபையின் முஸ்லிம் பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் ஒஸ்லானிய கல்லூரி வீதியில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ.சுமந்திரன் ,வடமாகண சபை பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வடமாகண சபை உறுப்பிணர்களான ஜெயசேகரம், அஸ்மின் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். உள்ளுராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில போட்டியிடும் அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதற்கமையவே தமிழ் தேசியக் கூட…
-
- 2 replies
- 381 views
-
-
80% வாக்காளர்களுக்கு போதிய விளக்கமில்லை- பவ்ரல் 80% வாக்காளர்களுக்கு போதிய விளக்கமில்லை- பவ்ரல் இலங்கையின் புதிய தேர்தல் முறை தொடர்பாக 80 வீதமான வாக்காளர்கள் சரியான விளக்கமின்றி இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப் பான பவ்ரல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி, புதிய தேர்தல் முறை தொடர்பாக நாடு முழுவதும், விளக்கமளிக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சில வேட்பாளர்கள…
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கை இராணுவத்துக்குள் அமெரிக்க உளவாளிகளா? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இராணுவத்திற்கு சாதகமான ஓர் அறிக்கையை விடுத்துள்ளார். யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படமாட்டார்கள் என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார். எனவே, இராணுவத்திற்கு உள்நாட்டு விசாரணைகளுக்கு முகங்கொடுக்க இலகுவாக இருக்கும். ஆனாலும் யுத்தக்குற்றம் நாட்டில் இடம்பெறவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும் என்று இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்க இராணுவம் தம்மிடத்தில் உள்ள திறமைகளைக்கொண்டு பயனடைந்ததாகவும், அதனால் தாம் அமெரிக்க உளவாளி என்று அர்த்தப்படுத்தப்படுவதும் போலியான கு…
-
- 1 reply
- 428 views
-
-
கூட்டமைப்புடன் செல்ல முடியாதவர்கள் எவ்வாறு தலைமை தாங்க முடியும் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை, உத்தேச அரசியல் யாப்பாக மாற்றுவதற்கு உள்ளுராட்சி சபைத் தேர்தலை மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் வலியுறுத்தியுள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது பலத்தை நிருபிப்பதன் ஊடாக உத்தேச அரசியல் யாப்பை பலமான யாப்பாக உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு ஊரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் நேற்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. …
-
- 0 replies
- 335 views
-
-
தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தவேண்டுமா? சுமந்திரன் கேள்வி! தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை விட்டுக் கொடுக்காமல் வேறு சில விடயங்களில் விட்டுக் கொடுப்புக்களை செய்து வருகின்றது. அது தவறு என விமர்சிப்பவர்கள் தமிழர்களின் நீண்டகால அபிலா ஷைகளை பெற்றுக் கொடுப்பதற்கு என்ன வழி என்பதை சொல்லவேண்டும். தமிழ் மக்கள் மீண்டும் ஆ யுத ங்களை ஏந்தவேண்டுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் எ.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பிருக்கிறார். பருத்துறை பகுதியில் நேற்று(05) உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இப்பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்…
-
- 5 replies
- 836 views
-