ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
யாழ். இந்துக் கல்லூரி அதிபர் நியமனம் முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு யாழ். இந்துக் கல்லூரி அதிபர் நியமனம் முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. புதிய அதிபர் நியமனத்தை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் குற்றச்சாட்டு தொடர்பில் அறிவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியை தொடர்பு கொள்வதற்கு பல தடவைகள் நாம் முயற்சித்த போதும் அவை பயனளிக்கவில்லை. http://newsfirst.lk/tamil/2018/01/யாழ்-இந்துக்-கல்லூரி-அதி/ யாழ். இந்துக் கல்லூரியின் தற்போத…
-
- 0 replies
- 511 views
-
-
ஶ்ரீலங்கன் விமான சேவையை புதிய இடைக்கால நிர்வாக சபை பொறுப்பேற்க உள்ளதாக தகவல் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளர் சபையின் இராஜினாமா கடிதங்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதையடுத்து புதிய இடைக்கால நிர்வாக சபை விமான சேவையை பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. முதலீட்டு சபையின் முன்னாள் தலைவரான திலான் விஜேசிங்க இந்த சபையின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்களை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒரு சில தினங்களுக்குள் இடம்பெறும் எனவும் தற்போதைய பணிப்பாளர் சபையின் இராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கம் அறிவித்தவுடன் புதிய அதிகாரிகள் செயற்பாடுகள…
-
- 0 replies
- 280 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டேயாகவேண்டும் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்று நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீபிகா உடகம தெரிவித்து ஒரு நாள் கடப்பதற்குள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 11 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவர் நிரபராதி எனத் தெரிவித்து நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மிக மோசமான விளைவுக்குக் கிடைத்த ஆகப் பிந்திய உதாரணம் இது. …
-
- 0 replies
- 343 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒரு மீது தாக்குதல் நடத்தப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி சிவன் கோயில் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம் பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கா.சற்குணதேவன் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலில் படுகாயமடைந்த சற்குணதேவன் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர். …
-
- 2 replies
- 426 views
-
-
அரசினால் கைவிடப்பட்ட நிலையில் இலங்கை தமிழர்கள் அரசினால் கைவிடப்பட்ட நிலையில் இலங்கை தமிழர்கள் மலர்ந்துள்ள புதிய ஆண்டிலாவது தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீ்ர்வு கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிறையவே காணப்படுகின்றது. நீண்ட ஆயுதப்போராட்டமொன்று இடம்பெற்று முடிவடைந்த நிலையிலும், தமிழர்களின் அவல வாழ்வு தொடரவே செய்கின்றது. அரசு இவர்கள் மீது பாராமுகமாக இருக்கின்ற நிலையில் தமிழ்த் தலைமைகள் செய்வ தறியாது கைகளைப் பிசைந்து கொண்டிருப்பதையே காண முடிகின்றது. இதே வேளை தெற்கில் இனவா…
-
- 0 replies
- 457 views
-
-
வவுனியாவில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் வவுனியாவில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் விழிப்புணா்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. வவுனியா பேருந்து நிலையப் பகுதியில் இன்று காலை முதல் இரு சுவரொட்டிகள் ஒட்டப்ட்டன. இதில் மக்களே, ஏமாறாதீர்கள் இலவச சுகாதாரத்தைச் சிதைக்கும் மாணவர் பாதுகாப்பு காப்புறுதி ஒர…
-
- 0 replies
- 257 views
-
-
பொறுப்பை நிறைவேற்ற தவறிய பிரதமர் : பொறுப்பு கூறவேண்டிய நிலையில் ஜனாதிபதி" (எம்.ஆர்.எம்.வஸீம்) மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஊடகங்களின் தொடர் போராட்டமே அறிக்கை வெளிவர காரணமாகும் என கோப் குழு முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்த அவர், நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க நாட்டின் பணத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய தவறியுள்ளதுடன் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு மாத்திரம் சார்ப்பாக நடந்துகொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார். அத்துடன் பிரதமரின் கீழ் இருக்கும் நிறுவனத…
-
- 0 replies
- 252 views
-
-
கிழக்கின் தமிழ்ப் பிரதேசங்களை மட்டும் வடக்குடன் இணைப்பதை அன்றே சிந்தித்த செல்வநாயகம் சிவேந்திரனின் முகநூல் பதிவிலிருந்து கொழும்பு அரசாங்கத்தில் அதிகாரப் பகிர்வை சிந்தித்துக்கொண்டிருந்த தமிழ் அரசியற் தலைமைகளின் இறுகிப்போன சிந்தனையிலிருந்து விலகி தமிழர்கள் தாயகத்தின் அடிப்படையிலான சமஷ்டி அடிப்படையிலான சிந்தனையை உருவாக்கிய முன்னோடி எஸ்.ஜே.வி.செல்வநாயகம். அவர் சிங்கள அரசுகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட்டு அரசியல் யாப்பும் மாற்றப்பட்ட பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்குக்கிழக்கு தனி நாட்டுக்கோரிக்கையை முன்வைத்தது. இங்குதான் அடிப்படையான சிக்கலை தமிழ்த் தலைமைகள் உருவாக்கிக்கொண்டன.கிழக்கு முஸ்லி…
-
- 0 replies
- 318 views
-
-
முஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் மண்ணாக காத்தான்குடி முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கின்ற அரசியல் போராட்டத்தினை முழுத் தேசியத்தையும் மையப்படுத்தி முன்னெடுக்க வேண்டும். அதற்கு தலைமை தாங்குகின்ற மண்ணாக காத்தான்குடி கட்டியெழுப்பப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இதேவேளை, முஸ்லிம்கள் நாட்டின் எந்தவொரு மூலையில் வசித்தாலும் அவர்களுக்கு பிரச்சினையொன்று ஏற்படுமானால் அதற்கு எதிராக குரல் எழுப்பி உதவி செய்யும் முதலாவது பிரதேசமாகவும் காத்தான்குடி மாநகரம் கட்டியெழுப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். …
-
- 0 replies
- 163 views
-
-
மூதூரில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மக்களுக்குமிடையே முறுகல்! மூதூர் பிரதேசத்தில் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைக்கு ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா சென்று உரையாற்றியபோது அப்பிரதேச மக்களுக்கும் அவருக்குமிடையே முறுகல் ஏற்பட்டதுடன், மக்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டதால், அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பிரச்சார நடவடிக்கைக்காக மூதூர் கிராமத்திற்குச் சென்று மக்களுன் உரையாற்றியபோது, மக்களில் ஒருவர் ‘நீங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எமது கிராமத்துக்கு வருகை தந்து ஏனைய அரசியல்வாதிகளைப் போன்றே கருத்துக்களைத் தெரிவித…
-
- 1 reply
- 229 views
-
-
தமிழ் ஈழமா? ஒற்றையாட்சியா? : தேர்தல் தீர்மானிக்கும்; கடவத்தையில் முன்னாள் ஜனாதிபதி எம்.சி.நஜிமுதீன் தமிழ் ஈழமா, ஒற்றையாட்சி இலங்கையா? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அமையவுள்ளது. எனவே நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கு நாம் எதிரானவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று மாலை கடவத்தையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கு…
-
- 0 replies
- 281 views
-
-
கடத்திய இளைஞனின் வாகனம் மனைவியின் பிறந்தநாள் பரிசானது? 11 இளைஞர்களைக் கடத்தி, காணாமல் போகச் செய்த சம்பவத்தின் வழக்கு இறுதியாக கடந்த 2ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், பின்னர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கடற்படை அதிகாரி தசநாயக்க உள்ளிட்டவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 11 இளைஞர்களைக் கடத்தி, காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை இந்தச் சம்பவங்கள் தொடர்ந்துள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. பல சந்தர்ப்பங…
-
- 0 replies
- 419 views
-
-
சரலா அதுலத்முதலி, பொதுஜன முன்னணி வேட்பாளர்கள் நால்வர் ஜனாதிபதி பக்கம் முன்னாள் அமைச்சர் லலித் அதுலத்முதலி மற்றும் ஶ்ரீமதி அதுலத்முதலி ஆகியோரின் புதல்வியான சரலா அதுலத்முதலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இதன்போது அவர், ஜனாதிபதியின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இதேவேளை, பொதுஜன முன்னணி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த நால்வர் நேற்று ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். இதற்கமைய, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அனைத்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே இவ்வாறு சுதந்திரக் கட்சியில் இணைந்து கொ…
-
- 0 replies
- 255 views
-
-
பிணைமுறி அறிக்கை சரியா, தவறா? குழப்பும் ரவி! பிணைமுறி விவகாரம் குறித்து ஆராயவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கையளித்திருக்கும் அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் அறிக்கையில், வங்கிக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்பட்டுள்ளதை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஐ.தே.க. வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் ஒன்று கொழும்பு ப்ளூமெண்டோல் பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “குடும்பம் என்று ஒன்று இருந்தால் அங்கே குழப்பம் என்ற ஒன்றும் இருக்கும் என்பார்கள். இரண…
-
- 0 replies
- 247 views
-
-
போதை மருந்து, திருக்கைவால் சுறா கடற்படையினரால் மீட்பு யாழ் வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதியில், 90 கிலோ எடையுடைய கேரள கஞ்சா, நான்கு கிலோ ஹாஷிஷ் மற்றும் 4 கிலோ அபின் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. தமக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியபோதே மேற்படி போதை மருந்துகளை மீட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, திருகோணமலை துறைமுகப் பகுதியில், தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனையிட்ட கடற்படையினர், சட்ட விரோதமான முறையில் திருக்கைவால் சுறா ஒன்று விற்கப்படவிருந்ததைக் கண்டுபிடித்தனர். சுமார் நாற்பத்தைந்து கிலோ எடையுள்ள இந்த சுறாவை விற்க முயன்ற நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/29062
-
- 1 reply
- 418 views
-
-
ஆசியாவின் பொருளாதாரக் கேந்திரமாக சிறிலங்காவை மாற்றுவதற்கு ஜப்பான் உதவும் சிறிலங்காவை ஆசியாவின் பொருளாதாரக் கேந்திரமாக மாற்றுவதற்கு ஜப்பான் உதவும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்றுமுன்தினம் அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, அரசியல் உறவுகளை மேலும் பலப்படுத்தும், நம்பிக்கையுடனேயே தாம் சிறிலங்காவுக்கான பயணம்ரைத மேற்கொண்டிருப்பதாக இந்தச் சந்திப்பின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழ…
-
- 0 replies
- 172 views
-
-
கூட்டமைப்பின் சமகால நகர்வுகள் குறித்து புலம்பெயர்ந்தவர்களுடன் கலந்துரையாடவுள்ள சுமந்திரன் (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமகால அரசியல் நகர்வுகள் மற்றும் தேசிய இனப்பிரச்சினை குறித்த முயற்சிகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுடனான இருவேறு கலந்துரையாடல்களில் பங்கெடுப்பதற்காக சுமந்திரன் எம்.பி. எதிர்வரும் 19ஆம் திகதி லண்டன் நோக்கி பயணமாகவுள்ளார். குறித்த தினமன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளையின் ஏற்பாட்டில் தேசிய பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நகர்வுகள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் என…
-
- 1 reply
- 178 views
-
-
விக்கியை நிராகரித்த, ரணில் ஜெயவர்த்தன உள்ளிட்ட UK நாடாளுமன்ற குழுவினர்… யாழ்ப்பாணத்துக்கு, இன்று காலை சென்ற பிரித்தானிய அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தமையை சுட்டிக்காட்டிய பிரித்தானிய அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் முதலமைச்சரை சந்திப்பது தேவையற்றது என தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் ஜெயவர்த்தன, திருமதி மைக்கெலி டொலினி, கிரிஸ் கிறீன் திருமதி கெல்லி டொல்கேட்ஸ் மற்றும் டான் கார்டன் ஆகிய…
-
- 3 replies
- 472 views
-
-
தேர்த்தல் வருவதால் சில நினைவூட்டல்கள் அவசியமாகின்றன.தேர்த்தல் வருவதால் சில நினைவூட்டல்கள் அவசியமாகின்றன. சிலரின் பல்டி அடிப்புகள்,மற்றவர்களின் மேல் பிழையை போடல், பொய்கள் என்பனவற்றை அறிய இவை உதவும் என நம்புகிறேன்.
-
- 0 replies
- 294 views
-
-
எமது கைகளைக் கொண்டே கண்களை குத்துவதற்கு பல தரப்புக்களும் முயற்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு ஓமந்தை, எமது மக்கள் உதயசூரியனுக்கு அளிக்கும் வாக்கானது இந்த தேர்தலில் மறைமுக நிகழ்ச்சி நிரலைத் தடுக்க உதவும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். சாஸ்திரி கூளாங்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உள்ளூராட்சி தேர்தல் என்பது கிராமத்தில் அவைகளின் அதிகார எல்லைகளுக்கு உட்பட்டு அவைகளின் வருமானத்தைக் கொண்டும் மத்த…
-
- 0 replies
- 581 views
-
-
அபிவிருத்தி அரசியலை ஏற்று தமிழ் காங்கிரஸ் திட்டவரைவு! அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முதன்முறையாக அபிவிருத்தி அரசியலை இலக்குவைத்து திட்டவரைவை முன்வைத்துள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையை தமிழ் தேசியப் பேரவையைக் கைப்பற்றினால், முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான வரைவை அந்த கட்சி இன்று(06) ஊடகங்கள் முன் வெளியிட்டது. யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ் தேசிய பேரவை என்ற தேர்தல் கூட்டின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் இந்த அபிவிருத்தி திட்டவரைவை முன்வைத்தார். திட்டவரைவை தயாரித்தவர்கள் வேலைப்பழு காரணமாக வருகைதரவில்லை எனத் தெரி…
-
- 1 reply
- 392 views
-
-
பிளவடைவதன் இறுதிக்கட்டத்தில் தேசிய அரசாங்கம் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அரசாங்கம் எங்கே முடிவுக்கு வரப்போகின்றதோ என்பதே தற்போது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. குறிப்பாக மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான அறிக்கை குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து இரண்டு தரப்புக்களுக்குமிடையிலான பிளவு உறுதி ஆகிவிடுமா என்ற சந்தேகமும் வலுவாகியிருக்கிறது. அதாவது நல்லாட்சி அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வி பரவலாக எழுகின்றது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஆரம்…
-
- 0 replies
- 302 views
-
-
இலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தம் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் – ஹரி ஆனந்தசங்கரி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பதற்காக வருகை தந்து அவர்களுடன் உரையாடிய கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் இலங்கை அரசாங்கத்திலும், சர்வதேசத்திலும் நம்பிகையிழந்தே காணப்படுகின்றனர் எனவும் கனடா , இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டையே கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 321 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற் இடத்திற்குச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட…
-
- 0 replies
- 214 views
-
-
நடக்கமுடியாத விடயத்துக்காக தமிழர்களின் அபிலாஷையில் மண்ணை போட வேண்டிய தேவை கிடையாது …. அரசியல் பிழைப்புக்காகவே முஸ்லிம் காங்கிரஸ் வடக்கையும் கிழக்கையும் இணைக்கப்போகிறது என்று பிரசாரம் செய்துவருகின்றனர். சமகாலத்தில் நடக்கமுடியாத ஒரு விடயத்துக்காக தமிழர்களின் அபிலாஷையில் மண்ணை அள்ளிப்போடவேண்டிய தேவை எங்களுக்கு கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நிந்தவூர் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும்வகையில், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தலைமையில் நிந்தவூரில் நேற்றிரவு (05) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்…
-
- 0 replies
- 361 views
-
-
தமிழ் சமூகத்தினை படுகொலைசெய்தபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் சமூகத்தினை படுகொலை செய்தபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவி பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டிவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன் தெரிவித்தார்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை மாலை பட்டிருப்பு சந்தியில் திறந்துவைக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் முதன்மை வேட்பாளர் வடிவேல் மணிகரன் தலைமையில் நடைபெற்றது. …
-
- 0 replies
- 301 views
-