ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143326 topics in this forum
-
யாழ். சாவகச்சேரியில் அமையவுள்ள நல்லிணக்கத்தின் அலைவரிசை எனும் தொலைக்காட்சி சேவை! நாட்டில், நல்லிணக்கத்தின் அலைவரிசை என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேவையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(20.12.2017) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் இவ்வாறான தொலைக்காட்சி அலைவரிசையொன்று இருப்பது பெரும் பின்புலமாக அமையும் என்பதினால் நல்லிணக்க தொலைக்காட்ச…
-
- 0 replies
- 297 views
-
-
அரசாங்கத்தினுள் கொடுப்பதை பெற்றுக்கொண்டு வாய்மூடி இருக்க முடியாது.! (ஆர்.யசி) கொழும்பு மாநகர சபையில் " ஒருங்கிணைந்த முற்போக்கு கூட்டணியாக" களமிறங்குகின்றது தமிழர் முற்போக்குக் கூட்டணி. ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்பாடுகள் இல்லை, எனினும் கட்சிக்குள் உள்ள ஒரு சிலருடனே முரண்பாடுகள். தனித்து களமிறங்க இதுவே காரணம் என்கிறார் அமைச்சர் மனோ கணேசன். அரசாங்கத்தின் பங்காளிகள் என்பதற்காக சலுகைகளை பெற்று வாயை மூடி இருக்க முடியாது, தமிழர்களின் உரிமை எமக்கு முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார். தமிழர் முற்போக்கு கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் மகாவலி கேந்திர மையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மனோ கணேசன் இதனை த…
-
- 0 replies
- 288 views
-
-
அவர்கள் திரும்பி வரவே இல்லை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு. அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன்றில்கூட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட …
-
- 0 replies
- 451 views
-
-
ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புளொட் உறுப்பினருக்கு ஆவாவுடன் தொடர்பா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கும் ஆவா வன்முறைக் குழுவுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை காவல்துறையினர் இன்று முற்படுத்தினர். இதன்போதே நீதிமன்றிடம் இந்த விடயத்தைத் தெரிவித்தனர். ‘சந்தேகநபரிடம் துப்பாக்கிகள், அவற்றுக்கான ரவைகள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபடும் ஆவாக் குழுவிடமும் …
-
- 0 replies
- 282 views
-
-
திருகோணமலையில் தமிழ் கூட்டமைப்புக்கு எதிராக சுயேச்சைக்குழுவை களமிறக்க முடிவு (மூதூர் நிருபர்) திருகோணமலை நகர சபைக்கு சிவில் சமூக அமைப்புக்கள் சார்பாக சுயேட்சைக்குழுவொன்றை உள்ளூராட்சித் தேர்தலில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நகர சபை மண்டபத்தில் சிவில் அமைப்புக்களைச் சார்ந்த சுமார் 50 பேர் நேற்று மாலை 4.00 மணியளவில் கூடி இவ் விடயம் குறித்து ஆராய்ந்தனர். இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டு பலர் வேட்பாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். எனவே இதற்கான கட்டுப்பணம் தேர்தல் திணைக்களத்தில் செலுத்தப்பட்டிருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் சார்பில் வர்ணகுலநாதன் தர்மபவன் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 398 views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் பட்டியலை வெளியிடவும் : பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் அல்லது யுத்தத்தின் போது சரணடைந்த தமிழர் பட்டியலை வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தமிழர் குழு கேட்டுக் கொண்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மேற்கொண்டு வரும் கண்டன போராட்டம் 300 ஆவது நாளாக இடம்பெறுவதை ஆதரித்து பிரிட்டிஷ் பாராளுமன்ற தமிழர் குழுவின் தலைவர் போல் கல்லி இக்கோரிக்கையை விடுத்துள்ளார். வயது மூப்பு மற்றும் தொடர் அச்சுறுத்தல் போன்றவற்றிற்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர…
-
- 0 replies
- 164 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விரைவில் எம்.ஆர்.ஐ ஸ்கானர்- சுகாதார அமைச்சர் வட மாகாண மருத்துவர் மன்றத்திற்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனராட்னவுக்குமிடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது யாழ் போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கானரும் (Magnetic resonance imaging (MRI) , கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு சி.ரி. ஸ்கானரும் (CT -Computed tomography) மிக விரைவில் வழங்குவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன உறுதியளித்துள்ளார். வடக்கின் சுகாதார நிலைமைகள் தொடர்பாக கடந்த 2 வருடங்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வடமாகாண மருத்துவர் மன்றம் இது தொடர்பாக அமைச்சர் ராஜிதவுடனும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடனும் இந்தக் கலந்துரையாடலை நடத…
-
- 0 replies
- 427 views
-
-
தமிழர் தாயகத்தை பிரிப்பதற்கான அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கப்படுமானால் அது ஆபத்தில் முடியும்…. தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும் அரசியலமைப்புக்கு தமிழ் தலைமைகள் ஆதரவளிக்கக் கூடாதென, தமிழ் சட்டத்தரணிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது. தமிழர் தாயகத்தை பிரிப்பதற்கான அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கப்படுமானால் அது இலங்கையின் சமகால அரசியற் சூழலுடன் தமிழ் மக்கள் திருப்தியடைகிறார்கள் என்ற தவறான செய்தியை சர்வதேச சமூகத்துக்கு வழங்கி விடும் என சட்டத்தரணிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பாக, தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ரட்ணவேல் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த…
-
- 0 replies
- 215 views
-
-
கிளிநொச்சியில் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜேவிபி வேட்பு மனு தாக்கல் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உள்ளுராட்சி தேர்தல் கிளிநொச்சியில் இன்று(20) தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜேவிபி என்பன வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களான கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று சபைகளுக்கும் வேட்பு மனுத் தாக்ககல் செய்யப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேசசபைகளுக்குமான வேட்பு மனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் இன்றைய தினம் தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசசபையில் 21 வட்டார வேட்பாள…
-
- 0 replies
- 280 views
-
-
தேயிலை விற்பனைக்காக புற்றுநோய் தடுப்பை கைவிட்ட மைத்திரி அரசு! ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்துவதற்கு, நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் தேயிலைக்குத் தடை விதிப்பதற்கு, ரஷ்யா எடுத்த முடிவின் பின்னணியிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட தேயிலைத் தொகுதியில், வண்டொன்று காணப்பட்டது எனத் தெரிவித்தே, இலங்கைத் தேயிலைக்குத் தடை விதிக்கும் முடிவை, ரஷ்யா எடுத்திருந்தது. ஆனால், 2024ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டாஸ் கூ…
-
- 0 replies
- 392 views
-
-
யாழில் உள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!! யாழ் நகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒருதொகை ஆயுதங்கள் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது. வீட்டின் அலுமாரி ஒன்றிலிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, வாள்கள் இரண்டு, வோக்கி டோக்கி இரண்டு, மகஸின் ஆறு, பொஞ்ச் இரண்டு,பிஸ்டல் ஒன்று, 394 ரவைகள் போன்ற ஆயுதங்களே மீட்கப்பட்டன. சந்தேகத்தின்பேரில் வீட்டில் வசித்த ஒருவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் உரிமையாளர் லண்டனில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/56010.html …
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
பாதுகாப்புக் கருதியே வெள்ளவத்தையில் தகவல் சேகரிப்பு; வெளிநாட்டிலிருந்து வருவோரில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்வதாக பொலிஸ் அதிகாரி தெரிவிப்பு! (எம்.எப்.எம்.பஸீர்) வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தகவல் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி தகவல்களைப்பெற விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு பொலிஸாரால் வழங்…
-
- 0 replies
- 210 views
-
-
கொழும்பு மாநகரசபை விவகாரம் மனோ – ரவி கடும் வாக்குவாதம் தனித்து ஏணிச்சின்னத்தில் களமிறங்க தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு; இன்று அறிவிப்பு வெளியாகும் (நமது நிருபர்) எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாவட்டத் தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்படாததையடுத்து அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பு மாநகரசபையில் தனித்து ஏணிச்சின்னத்தில் களமிறங்குவதற்கு முடிவு செய்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்…
-
- 0 replies
- 349 views
-
-
தரம் 5 புலமைப்பரிசில் : பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு (எம்.எம்.மின்ஹாஜ்) 2017 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகளின் பெறுபேறுகளுக்கு அமைய, 2018 ஆம் ஆண்டில் தரம் 6க்கான மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான, பாட சாலைகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் வெட்டுப் புள்ளி விபரம் கீலே தரப்பட்டுள்ளது. ஆண்கள் பாடசாலை தமிழ்மொழி மூலம் 1.றோயல் கல்லூரி கொழும்பு – 182 2. புனித சில்வெஸ்டர் கல்லூரி கண்டி 176 3. டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி கொழும்பு 173 4.இசிபத்தான கல்லூரி கொழும…
-
- 0 replies
- 276 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுவதில் இருந்து புளொட் வெளியேறியுள்ளது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இணங்கிக் கொண்டதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசன ஒதுக்கீடு வழங்கப்படாததை அடுத்து அந்த மாவட்டத்தில் போட்டியிடுவதில் இருந்து புளொட் வெளியேறியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர் பதவிகளும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே வழங்கப்பட்டன. எனவே, ஒப்பந்தப்படி அந்தக் கட்சி 60 சதவீதமான வேட்பாளர்களையும், ஏனைய இரண்டு கட்சிகளும் தலா 20 சதவீதமான வேட்பாளர்களையும் நிறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசனப் பங்கீடு தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்…
-
- 1 reply
- 402 views
-
-
ஜனவரி 1 முதல் கொழும்பில் யாசகத்துக்குத் தடை கொழும்பின் வீதிகளிலோ அல்லது பொதுப் போக்குவரத்திலோ யாசகம் கேட்பதற்கு, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடைவிதிக்கப்படும் என, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நேற்று (19) தெரிவித்தார். தமது அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, கொழும்பு நகர எல்லைக்குள் சுமார் 600 யாசகர்கள் காணப்படுகிறார்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும், அமைச்சர் குறிப்பிட்டார். யாசகம் கேட்பவர்களால் தொந்தரவு ஏற்படுகிறது எனவும், அதைத் கருத்திற்கொண்டும், கொழும்பை அழகாக்கும் திட்டத்தின்படியும், கொழும்பு நகர எல்லைக்குள் யாசகம் கேட்பதற்குத் தடை விதிக்கப்…
-
- 0 replies
- 210 views
-
-
“ விக்கினேஸ்வரன் தனிநபர் : மக்கள் கட்சி சார்ந்தவர்களையே தெரிவுசெய்ய வேணடும் ” வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டார். அவர் தனி நபராக போட்டியிட்டிருக்கவில்லை. எனவே மக்கள் தாம் ஏற்கும் கட்சி சார்ந்தவர்களையே தேர்வு செய்யவேண்டும். தனிநபர்களை அல்ல. என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். உள்ளூராட்சி சபை தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பாராமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மக்கள் கட்சிகளை பார்க்காமல் தமக்கு சிறந்த சேவையாற்றக் கூடிய தனிநபர்களை தேர்வு செய்யவேண்டும் என கூறியிருந்தா…
-
- 1 reply
- 404 views
-
-
கோத்தாவின் திடீர் முடிவினால் ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபா இழப்பு – விசாரணைக்கு நடவடிக்கை? பாதுகாப்புத் தலைமையகங்களை கொழும்பு நகரில் இருந்து அகற்றும்- முன்னைய அரசாங்கத்தின் திட்டமிடப்படாத – திடீர் முடிவினால் சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் வாடகைக்குப் பெற்றுள்ள 15 கட்டடங்களுக்காக ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபாவை வாடகைக் கொடுப்பனவாக வழங்க வேண்டியுள்ளது. அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த தகவலை வெளியிட்டதாக, அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார். ”பாதுகாப்புத் தலைமையகங்களை அகற்றுவது தொடர்பாக பொருத்தமாக நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் பாதுகாப்புத் தலைமையகங்களினால் 15 கட்டட…
-
- 0 replies
- 216 views
-
-
மஹிந்தவின் படத்தை பொதுஜன முன்னணி பயன்படுத்தக்கூடாது கட்சியை பிளவுபடுத்தும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை என்கிறது சு.க. (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சின்னத்தையோ, கொள்கையையோ அல்லது கட்சியின் தலைவர்களின் புகைப்படங்களையோ வேறு கட்சியினர் பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புகைப்படத்தை கூட பொதுஜன முன்னணியினர் பயன்படுத்த உரிமை இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது. கட்சியை பிளவுபடுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான தீர்மானம் எடுக்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அக்கட்சியினர் தெரி…
-
- 0 replies
- 249 views
-
-
கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட மு.கா. முயற்சி! கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட மு.கா. முயற்சி! எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிடுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்காக முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் சிறப்பு உலங்குவானூர்தி மூலம் நேற்று மன்னாருக்கு வந்து சேர்ந்தார்கள். எனினும் எதிர்பார்த்தபடி நேற…
-
- 0 replies
- 284 views
-
-
நுவரெலியாவில் அடை மழை நுவரெலியா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்து வருகின்றதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலவாக்கலை, அட்டன், கொட்டகலை, டயகம, எல்ஜின் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்வதோடு கடும் பனி மூட்டமும் நிலவுகின்றதுடன் தலவாக்கலை பிரதேசத்தில் மின்சார விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. மேலும் அட்டன் - நுவரெலியா, அட்டன் - கினிகத்தேனை, தலவாக்கலை - நாவலப்பிட்டி, தலவாக்கலை - பூண்டுலோயா ஆகிய வீதிகளில் பனி மூட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதான…
-
- 0 replies
- 527 views
-
-
3 மாவட்டங்களில் இன்று கூட்டமைப்பு வேட்புமனு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் வேட்புமனுக்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை இன்று தாக்கல் செய்யப்படக்கூடும் என்றும் அறியமுடிகின்றது. உள்ளுராட்சித் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்புமனுத் தாக்கல் நாளை மதியத்துடன் நிறைவடையவுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. ஆசனப் பங்கீடு விவகாரங்களில் பங்காளிக் கட்சிகளுடன் சில இடங்களில் முரண்ப…
-
- 0 replies
- 185 views
-
-
விவசாயத்தில் ஏற்பட்ட நட்டத்தினால் யாழில் விவசாயி தீக்குளிப்பு! inioru admin கடந்த 14ஆம் நாள் வடமராட்சி அல்வாய், வதிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயத்தினால் ஏற்பட்டுள்ள நட்டம் காரணமாக தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த விவசாயி 60 வயதுடைய உதயராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த விவசாயி கடந்த வருடம் வெங்காயப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தும் மழையின்மையால் குறித்த பயிர்ச்செய்கை பாதிப்படைந்துள்ளது. இந்தவருடம் கத்தரி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தும், அதுவும் அழிவடைந்த நிலையில் சில நாட்களாக விரக்தியடைந்திருந்ததாக மக்கள் தெரிவித்…
-
- 3 replies
- 368 views
-
-
வீட்டுத்திட்டம்: வட மாகாண முதல்வரின் அபிவிருத்தி அதிகாரி தன்னிச்சையாக செயற்பட்டாரா? வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காகவே அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வவுனியா – மருக்காரம்பளை, கணேசபுரம் 40 வீட்டுத்திட்டம் பகுதியில் பாதிக்கப்பட்ட 36 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வட மாகாண சபை வளாகத்திற்கு சென்று தங்களுக்கான வீடுகளை வழங்குமாறு கோரியிருந்தனர். அதற்கமைய, 32 பேரினுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கான வீடமைப்புத் திட்ட கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த பகுதியில் 9 வீடுகள் கட்டிக…
-
- 0 replies
- 272 views
-
-
UN அலுவலகத்தில் பணிபுரியும் தமிழர்கள் மீது குற்றச்சாட்டு இலங்கையிலுள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ் அலுவலர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களாக செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு குறித்த அலுவலர்களை உடனடியாக பதவி நீக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியட் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். “எளிய“ அமைப்பு இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “ ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளை சந்திப்பதுக்கு முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரின் மகள் சென்ற வேளை அவரை …
-
- 1 reply
- 643 views
-