ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143326 topics in this forum
-
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் வேட்பு மனு கிளிநொச்சியில் இன்று முதலாவது வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் இந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுவினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு சுயேட்சை குழுவாக தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பினர் …
-
- 0 replies
- 282 views
-
-
புலிகளின் தங்கத்தை தேடி அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது.! தமிழீழ விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை தேடும் முகமாக பெகோ இயந்திரம் ஒன்றினை திருடி வந்து, கைவிடப்பட்ட முகாம் ஒன்றின் அருகில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் நபர் ஒருவர் கிணறு வெட்டுவதற்காக பெகோ இயந்திரம் ஒன்றினை அப்பகுதிக்கு கொண்டு சென்ற…
-
- 2 replies
- 387 views
-
-
பெப்ரவரி 10 இல் தேர்தல் உறுதி எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/28367
-
- 0 replies
- 338 views
-
-
சர்வதேசத்தின் அதிருப்திக்கு மீண்டும் ஆளாகிவிடக் கூடாது காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலகம் உடனடியாக தொழிற்படவேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறுதிப்படுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தை செயற்படுத்தும் விடயத்தில் பாதிக்கப்பட்டோர், சிவில் சமூக அமைப்பினர் இடம்பெறவேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக நீக்கவேண்டும். தாமதமின்றி அந்த சட்டத்தை அகற்றிவிடுமாறு அரசாங்கத்தைக் கோருகின்றோம…
-
- 0 replies
- 451 views
-
-
சிங்கள பெண்களுக்கு கருத்தடை, முஸ்லிம்கள் ஒரு வீதமும் இல்லை- ஞானசார தேரர் கடந்த 10 வருடத்தில் சிங்கள மற்றும் தமிழ் பெண்களில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் கருத்தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை சாட்சியுடன் நிரூபிக்க முடியும் எனவும் அவர் சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவா் மேலும் தெரிவிக்கையில் 75 சதவீதமான சிங்களப் பெண்கள் கருத்தடை செய்து கொண்டுள்ளதாகவும் முஸ்லிம் பெண்களில் ஒரு சதவீதமேனும் இந்தக் கருத்தடை செய்யாதவர்களாக உள்ளனர். இலங்கையில் சிங்கள பெண்கள் மாத்திரமின்றி சிங்கள ஆண்கள் கூட ஆண்மை இழக…
-
- 0 replies
- 401 views
-
-
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் கேபிள் இணைப்புக்களை அறுத்தெறிந்தனர்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நேற்றிரவு கும்பலொன்றால் தனியார் நிறுவனத்தின் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வயர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வெட்டிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணத்தில் கேபிள் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இது தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாம்ம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. CAX 9991 என்ற இலக்கமுடைய கறுப்பு நிற காரில் சென்ற வர்களாலேயே இந்த நாசகார வேலை செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் கேபி…
-
- 0 replies
- 339 views
-
-
வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து கூட்டமைப்பு நீதிமன்றை நாடும்! அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை, ஆலையடிவேம்பு ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்காகத் தாக்கல் செய்யப்பட்ட தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது. புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக சகல சட்ட திட்டங்களுக்கும் உட்பட்ட வகையிலேயே தங்களுடைய வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன எனவும், கையளிக்கும்போது ஏற்பட்ட சில குறைபாட்டின் காரணமாகவே தமது வேட்புமனுக்கள் நிரா கரிக்கப்பட்டுள்ளன எனவும் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடா ளும…
-
- 0 replies
- 312 views
-
-
“மத்தியில் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை பெற்றிருப்போம் ஆனால், மாகாணத்தை அடகு வைத்திருப்போம்” மத்திக்கு முன் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை பெற்றிருக்கலாம். ஆனால், சுயமரியாதையை இழந்து மாகாணத்தை தெற்கிற்கு அடகு வைத்திருப்போம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஊடக அமையத்திற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று (17.12.17) விஜயம் செய்திருந்தார். இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகாரப் பகிர்வு குறித்து பேசும் மத்திய அரசு அதிகாரங்களை பகிர முன்வராத நிலையே நீடிப்பதாக கவும், இந்த நிலமை மாற்றமடைய வேண்டுமாயின் உடனடி அரசியல் யாப்பு…
-
- 3 replies
- 959 views
-
-
50 சீன இணையர்களுக்கு கொழும்பில் திருமணம் – சிறிலங்கா அரசே நடத்தி வைத்தது 50 சீன இணையர்களுக்கு நேற்று கொழும்பு நகரசபை மைதானத்தில் பிரமாண்ட திருமண விழா இடம்பெற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த திருமணவிழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். சீனாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், இந்த திருமண விழாவுக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. சிறிலங்கா முறைப்படி இந்தத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் செய்து கொண்ட சீன இணையர்களுக்கான திருமணச் சான்றிழ்களை அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ஜோன் அமரதுங்க ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வு சீன- சிறிலங்கா உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று அமைச்சர்…
-
- 0 replies
- 342 views
-
-
தமிழீழம் உருவாக முன்னர் ஆட்சி மாற்றம் வேண்டும் : புலிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இராணுவத்திற்கு இல்லை என்கிறார் விமல் வீரவன்ச (ஆர்.யசி) விடுதலைப் புலிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இராணுவத்திற்கு கொடுக்கப்படவில்லை. இராணு வத்தை தண்டித்து புலிகளை நியாயப்படுத்தவே அரசாங்கமும் சர்வதேச தரப்பும் முயற்சித்து வருவதாக தேசிய சுதந்திர முன்ன ணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார். புதிய அரசியலமைப்பின் மூலமாக தமிழீழம் உருவாகும். ஆகவே அதற்கு முன்னர் ஆட்சியினை மாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு நாட்டினை பிளவுபடுத்தும் என்ற தொனிப்…
-
- 0 replies
- 183 views
-
-
வேட்புமனுத் தயாரிப்புக்கள் சுமுகமாகவே இடம்பெறுகின்றன (ஆர்.ராம்) உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இரண்டாவது கட்டமாக தாக்கல் செய்யப்படவுள்ள வேட்பு மனுக்களுக்கான தயாரிப்புக்கள் அனைத்தும் சுமகமாகவே இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆசனப்பங்கீடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான இலங்கை தமிழரசுக்கட்சி புளொட் ரெலோ ஆகிய கட்சிகளுக்கிடையில் ஆரம்பத்தில் ஏற்பட்ட முரணப்பாடுகளுக்கு இணக்கப்பாடு எட்டப்…
-
- 0 replies
- 238 views
-
-
புட்டினுடன் பேசுவேன் தேயிலை இறக்குமதி தடை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு (அப்புத்தளை நிருபர்) தேயிலை ஏற்றுமதி நிறுவனமொன்றின் கவனயீனத்தின் காரணமாக எமது நாட்டு தேயிலையை ரஷ்யா தற்காலிகமாக ஏற்க மறுத்திருக்கிறது. இதுவொரு தற்காலிக விடயம் மாத்திரமேயாகும். ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி விவகாரத்தில் எழுந்துள்ள அசௌகரிய சூழலை மாற்றியமைப்பதற்கு சடுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன். அந்த வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீன் புட்டினை சந்தித்து சுமுகமான பேச்சுவார்ததையொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோரை எனது பிரதிநித…
-
- 0 replies
- 182 views
-
-
புதுவிதமான காய்ச்சலால் முல்லைத்தீவில் 9பேர் சாவு புதுவிதமான காய்ச்சலால் முல்லைத்தீவில் 9பேர் சாவு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாள்களுக்குள் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக 9பேர் உயிரிழந்தனர். திடீர் உயிரிழப்புத் தொடர்பில் கொழும்பு அரசின் மருத்துவக் குழு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. முல்லைத்தீவு நகரப் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்தக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். தொடர்ச்சியான காய்ச்சலின் பின்னர் மருத்துவமனையில்…
-
- 2 replies
- 480 views
-
-
மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில் தண்டனை! மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில் தண்டனை! மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொள்வதும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்செயல் என்ற அடிப்படையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. குற்றவியல் சட்டத்தில் விரைவில் இது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். திர…
-
- 23 replies
- 1.7k views
-
-
சில கொலைகள் தொடர்பில் போலியாக குற்றம் சுமத்தப்படுகின்றன – ஈ.பி.டி.பி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சில கொலைகள் தொடர்பில் போலியாக குற்றம் சுமத்தப்படுவதாக ஈ..பி.டி.பி கட்சி தெரிவித்துள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் தமது கட்சி மீது போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்கள் தமக்கு எதிராகவே தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏனைய தமிழ் பத்திரிகைகளின் கொள்கைகளுக்கு முரணான வகையில் தாம் ஒரு தனிப்பத்திரிகை நடத்தி வருவதனால் இவ்வாறு தம்மீது குற்றம் சுமத்தப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்…
-
- 2 replies
- 507 views
-
-
சின்னங்கள் ஆதிக்கம் செலுத்துமா? http://www.virakesari.lk/
-
- 1 reply
- 297 views
-
-
சங்கானைக்காக மாவை சேனாதிராஜாவை மிரட்டும் சரவணபவன்! உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர் நியமனத்தில் சர்ச்சைகளும், அடிதடிகளும் நடைபெற்றுவரும் நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதிக்குள் சங்கானை பிரதேசம் வருவதால் அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக சரவணபவன் மாவை சேனாதிராஜாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியானது முதல் இரண்டு வருடங்களும் புளொட்டுக்கும், அடுத்த இரண்டு வருடங்களும் தமிழரசுக் கட்சிக்குமென தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…
-
- 0 replies
- 352 views
-
-
பிளவுகளை ஏற்படுத்திவிட்ட உள்ளூராட்சி தேர்தல் களம் பிளவுகளை ஏற்படுத்திவிட்ட உள்ளூராட்சி தேர்தல் களம் உள்ளூராட்சித் தேர்தல் களம் தமிழர்களை மேலும் பிளவுபட வைத்துவிட்டது. கூட்டமைப்பி னுள் ஏற்படவிருந்த பிளவுகள் ஓரளவு சரிசெய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், வலி.மேற்குப் பிரதேச சபை குறித்த முரண் பாடு தொடர்பாக புளொட் தற்போது அதிருப்தி வெளியிட்டுள்ளது. சிலவேளை அந்தக் கட்சி தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது. இவ்வாறு நடந்த…
-
- 0 replies
- 237 views
-
-
“எங்கள் குழந்தைகளை கண்டுபிடித்து தாருங்கள்” சர்வதேச சமூகத்திடம் இரந்து நிற்கும் இலங்கைத் தாய்மார்கள்:- ஆங்கிலத்தில் இருந்து தமிழில் – குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கையில் காணாமற்போனமை தொடர்பாக 65,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (மூலம்: Shutterstock) உரிமை மீறல் குறித்துப் பொறுப்புக் கூறல் தொடர்பான கேள்விகளுக்கு உலகலாவிய காலக்கிரம ஆய்விற்கு (UPR) கடந்த நவம்பர் மாதம் இலங்கை ஆற்றிய எதிர்வினை மழுப்பலானதாகவும் மெய்நிலையைத் திரிபு செய்யும் எண்ணத்தினாலானதாகவும் இருந்தது. வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் படியும் அந்தக் குற்றங்களுக்குப் (காணாமலாக்கப்பட்டமை மற்றும் ஏனைய உரிமை மீறல்கள்) பொறுப்பானவர்களை…
-
- 0 replies
- 622 views
-
-
கிளிநொச்சியில் 23 கட்சிகள் கட்டுப்பணம் உள்ளூராட்சித் தேர்தலுக்காக கிளி நொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் 23 கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர். சு.அருமைநாயகம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை கட்டுப் பணம் செலுத்தமுடியும். இதுவரை கரைச்சிப் பிரதேச சபைக்காக 7 கட்சிகளும் – 2 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை க…
-
- 0 replies
- 277 views
-
-
பின்னால் யாருமில்லை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் அனந்தராஜ்ஜின் பின்னணியிலேயே வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தலில் இம்முறை போட்டியிட சுயேட்சைக் குழுவொன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம் .கே சிவாஜிலிங்கம் வெளியிட்ட கருத்தில் எவ்வித உண்மையுமில்லை. அவரோ அல்லது வேறு எவருமோ எம் பின்னாலில்லை என வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தலில் சுயேட்சையாகைப் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் கட்டியுள்ள சுயேட்சைக் குழுவின் தலைவரும் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் தலைவருமாகவிருந்த சபாரட்ணம் செல்வேந்திரா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 359 views
-
-
யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன! இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23 ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் வைபவத்தில் பங்கேற்பதற்காகவே அவர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதோடு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்குரே உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம…
-
- 0 replies
- 472 views
-
-
கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவை துரத்தி அடித்த மக்கள்! கோண்டாவில் பகுதியில் சாகசம் காட்ட முற்பட்ட வாள்வெட்டு குழுவினரை அப்பகுதி மக்கள் துரத்தி துரத்தி அடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய பொதுமக்கள் கோப்பாய் பொஸிசிடம் பாரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாகவும் இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா். கோண்டாவில் குட்சட் வீதி பகுதியில் சற்று முன்னர் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த வாள்வெட்டு குழுவினர் அப்பகுதி மக்களை அச்சுறுத்த முற்பட்டுள்…
-
- 2 replies
- 1.2k views
-
-
மக்கள் முன்னால் மைக் - ஜெரா ஒப்பனா கதைப்போமா - ஜெரா
-
- 3 replies
- 510 views
-
-
சுதந்திரக் கட்சியா பொதுஜன பெரமுனயா? சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகிறது எம்.சி.நஜிமுதீன் வேறு கட்சிகளின் செயற்பாடுகள் மற்றும் கொள்கைகளை பிரசாரப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு ஏனைய கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடல் மற்றும் அக்கட்சிக் கொள்கைகளை பிரசாரம் செய்தல் என்பன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கமைவாக தடை…
-
- 0 replies
- 276 views
-