ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143324 topics in this forum
-
கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு -க. அகரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தவிசாளராக இருந்த ஒருவர், நேற்று (10) ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார். வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (10) காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இணைந்து கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் என்பவரே, இவ்வாறு இணைந்துகொண்டார். அத்துடன், அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் இணைந்து கொண்டனர். …
-
- 0 replies
- 279 views
-
-
சாதிப்பதற்கு வறுமை தடையல்ல என்பதற்கு முல்லைத்தீவு வலயம் சிறந்த எடுத்துக்காட்டு! மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு வறுமை தடையே அல்ல என்பதற்குச் சிறந்த உதாரணம் முல்லைத்தீவு மாவட்டம். நடந்து முடிந்த புலமைப் பரீட்சையின் பெறுபேறுகளின் படி இலங்கையின் 99 வலயங்களில் 18ஆவது வலயமாக முல்லைத்தீவு தெரிவாகியுள்ளது என முல்லைத்தீவு வலய பிரதிக்கல்விப்பணிப்பா ளர் என்.ஆதவன் தெரிவித்தார். முல்லைத்தீவு, குரவில் தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
-
- 0 replies
- 430 views
-
-
பழக்க தோசம் இன்னும் போகவேயில்லை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளுராட்சித் தேர்தலையொட்டிக் கிளம்பிய குழப்படிகள் ஓய்வுக்கு வந்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 கட்சிகளின் தலைவர்களும் தலைவர் இரா.சம்பந்தர் தலைமையில்கூடிப் பேசி பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்துக்கொண்டனர். இது தொடர்பில் நேற்றுப் பிற்பகலில் விடுக்கப்பட்ட அறிக்கை மிகச் சுருக்கமாக இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிவித்தது. ‘‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலை வர்களான மாவை. சேனாதிர…
-
- 0 replies
- 247 views
-
-
சுமந்திரன் நல்லது செய்ய முடிந்தால் செய்யலாம் இல்லாவிடில், விலத்தியிருப்பதே தமிழர்களுக்கு செய்யும் பெரிய சேவை புதிய கூட்டணிக்கு தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதோடு, அதன் சின்னமாக உதய சூரியன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், இன்று ஈரோஸ் ஜனநாயக முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் தமது புதிய கூட்டணியுடன் இணைய முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஈரோஸ் அம்பாறையில் திருக்கோவில், ஆலையடிவேம்பு போன்ற இடங்களிலும், மட்டக்களப்பு, திருகோணமலை…
-
- 1 reply
- 418 views
-
-
காகிதத்தில் நினைவுகூறப்படும் மனித உரிமைப் பிரகடனம்:- குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்:- ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நாங்கள் யாருடைய உரிமையையும் மறுப்பவர்களல்ல. ஆனால் எங்களுடைய உரிமைகள் இன்னொரு இனத்தால் மறுக்கப்படுகின்றன. இந்த இன உரிமை மறுப்பை இந்த நாளை பிரகடனப்படுத்திய ஐ.நா போன்ற அமைப்புக்களும் தடுத்து நிறுத்தாமல் மனித உரிமை மறுப்பை ஊக்குவித்து வருகின்றன. …
-
- 0 replies
- 312 views
-
-
மட்டக்களப்பில் 31 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் 31 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் ஆண்டுதோறும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் பதினெட்டாயிரம் பேருக்கு எச்ஐவி பிரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொதுச் சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுகளிலும் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றையதினம் அவர் இந்தத் தகவல்களை வெளியட்டுள்ளார். மேலும் இனங…
-
- 0 replies
- 262 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்- ஆசனப் பங்கீட்டு விவரம்!! யாழ்ப்பாணம்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி யாழ்ப்பாணம் மாநகர சபை சாவகச்சேரி நகர சபை பருதித்துறை நகர சபை சாவகச்சேரி பிரதேச சபை பருதித்துறை பிரதேச சபை வலி.வடக்குப் பிரதேச சபை ரெலோ- வல்வெட்டித்துறை நகர சபை ஊர்காவற்துறை பிரதேச சபை காரைநகர் பிரதேச சபை நெடுந்தீவு பிரதேச சபை கலப்பு ஆட்சி…
-
- 1 reply
- 243 views
-
-
ஒற்றுமை கருதி வடக்கு முதல்வருடன் இணங்கிச் செல்கின்றோம் http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-12-03#page-11
-
- 1 reply
- 474 views
-
-
மட்டக்களப்பில் மாபெரும் பேரணி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலிறுத்தியும் அரசாங்கத்தை அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியும், கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை, இன்று காலை நடத்தினர். இந்த பேரணியானது கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி ஊர்வலமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது. அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் மகஜர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இணை…
-
- 0 replies
- 216 views
-
-
முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு உதயம் நமது நிருபர் முஸ்லிம்களின் நீண்டகால அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதை நோக்காகக் கொண்டு முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக, முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று உதயமாகின்றது. இக்கூட்டமைப்பை அறிவிக்கும் உத்தியோகப+ர்வ நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எம்.ரி.ஹசன்அலி மற்றும் பசீர் சேகுதாவ+த் ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஒன்றிணைந்தே இப் புதிய கூட்டமைப்பு இன்று பிர…
-
- 0 replies
- 291 views
-
-
கொள்கையில் ஒன்றுபட்டவர்கள் சிறுவிடயத்துக்காக பிரியக்கூடாது : பங்காளிகளை வலியுறுத்திய சம்பந்தன் ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்கள் சிறுவிடயங்களுக்காக பிரிவடைந்து செல்லக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் பங்காளிக்கட்சிகளிடத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்து…
-
- 0 replies
- 160 views
-
-
மகிந்த இணைவு முயற்சிகள் தொடர்கின்றன! மைத்திரி – மகிந்த இணைவு முயற்சிகள் தொடர்கின்றன! சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி, மகிந்த அணிகளை இணைப்பது தொடர்பிலான இறுதிக்கட்டப் பேச்சு நேற்றைய தினமும் கொழும்பில் இடம்பெற்றது. இதற்காக இம்முறை, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்தின தேரரும், முன்னாள் அயலுறவுத்துறை அமைச்சரும் மகிந்த அணியின் முக்கியஸ்தருமான ஜி.எல்.பீரிஸ் ஆகிய இருவர் மட்டும் சந்தித்துப் பல முக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாடினர் என்று தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 230 views
-
-
ஒரே வருடத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் டெங்கு நோயாளர்கள் நாட்டில், கடந்த ஓராண்டு காலப் பகுதியில் மட்டும் ஒரு இலட்சத்து 76,248 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், மேல் மாகாணத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் அது 42.93 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 8 ஆயிரத்து 340 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http…
-
- 0 replies
- 166 views
-
-
“ரயில்வே திணைக்களத்தை இழுத்து மூட வேண்டிவரும்”: ஊழியர்கள் எச்சரிக்கை பணியாளர்கள் தமது வேலையை இழந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தபோதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக இல்லை. “ரயில்வே ஊழியர்களின் சர்வ சாதாரணமாக வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இது மிகவும் ஆபத்தான ஒரு சூழல். பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சின் செயலாளர் டி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பணிக்குத் திரும்புவதற்கு நாளை (11) திங்கட்கிழமை வரை அவகா…
-
- 0 replies
- 105 views
-
-
வரவு-செலவுத் திட்டத்தை யதார்த்தபூர்வமாக எதிர்க்க எதிர்க்கட்சிகளால் முடியவில்லை: பிரதியமைச்சர் அரசு முன்வைத்த 2018க்கான வரவு-செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சியால் யதார்த்த ரீதியாக எதிர்க்க முடியாமல் போய்விட்டது என, கொள்கை வரைவுத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மேற்படி வரவு-செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் இறுதி நாளான நேற்று பாராளுமன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “அரசுகள் முன்வைக்கும் வரவு-செலவுத் திட்டங்கள் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைப் பெறுவது இயல்பானதுதான். ஆனால், இம்முறை அவ்வாறான யதார்த்தமான எதிர்ப்பை நாம் காணவில்லை. இது குறித்து நிதியமைச…
-
- 0 replies
- 128 views
-
-
93 உள்ளூராட்சி சபைகளுக்கு 14 ஆம் திகதி வரை வேட்புமனு ஏற்பு 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நாளை 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி பகல் 12.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும். தேர்தல் நடைபெறும் திகதியை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் அன்றைய தினம் அறிவிப்பார்கள். வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட கச்சேரி சூழலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. http://www.virakesari.lk/article/28066
-
- 0 replies
- 118 views
-
-
போர் நல்லதல்ல – புலிகளுடன் போரிட்ட இந்தியத் தளபதி கூறுகிறார் சிறிலங்காவில் ஒப்பரேசன் பவான் நடவடிக்கையில் ஈடுபட்டு, வலது கண்ணையும், இடதுகை விரல்களையும் இழந்த, இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரியான கேணல் அனில் கௌல் போர் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார். சண்டிகரில் நடந்த இராணுவ இலக்கிய விழாவில், சிறிலங்காவில் இந்தியப் படையினரின் போர் அனுபவங்கள் தொடர்பாக விபரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த இராணுவ இலக்கிய விழா, கடந்த 7ஆம் நாள் ஆரம்பித்து, நேற்று நிறைவடைந்தது. நேற்றுமுன்தினம் இந்த நிகழ்வில், 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்காக இந்திய அ…
-
- 5 replies
- 959 views
-
-
மாணவியின் கர்ப்பத்திற்கு ஆசிரியர் காரணமானார் – நீதி வேண்டி ஓமந்தையில் ஆர்ப்பாட்டமும் பேரணியும்… மாணவி ஒருவர், ஆசிரியர் ஒருவரால் ர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்தும், அதற்கான நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரசே மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது வவுனியா ஓமந்தை கல்லுப் போட்ட குளத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி வயிற்றுவலி காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஒருவர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர், கர்ப்பமடைந்துள்ளமை கண்டறியப்பட்டது இந்த விடயம் குறித்து ஓமந்தை காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணை மற்றும் குறித்த மாணவியிடம் பெ…
-
- 4 replies
- 691 views
-
-
தவராசாவின் பதவிக்கு மீண்டும் ஆபத்தா? வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவின் தலைவர் பதவியைப் பறிப்பதில் ஈ.பி.டி.பி. தொடர்ந்தும் முனைப்புக் காட்டுகின்றது. வடக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவராக ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த தவராசா தற்போது வரையில் அந்தப் பதவி யிலேயே இருந்து வருகின்றார். உட்கட்சி முரண்பாடு காரணமாக குறித்த பதவியினை தவராசாவிடம் இருந்து பிடுங்கி கிளிநொச்சி மாவட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவநாதனுக்கு வழங்க முயற்சிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி தோல்வி அடைந்து…
-
- 0 replies
- 467 views
-
-
நடக்கப்போவது என்ன? தற்போதைய நிலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியும் ஒன்றிணையப்போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் இன்னும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த முயற்சிகள் கைகூடாது என்றே தற்போதைய அரசியல் சூழலில் தெளிவாகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியும் இணையாவிடின் இம்முறை தேர்தலானது மும்முனை போட்டி…
-
- 1 reply
- 451 views
-
-
புலிக்கொடி அரசியல்! புலிக் கொடியைத் தூக்கிக் கொண்டு சிங்கள, முஸ்லிம் மக்களிடமிருந்து நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொண்டாடியதையும் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிடும் அறிக்கைகளையும் கோடிகாட்டியே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை…
-
- 0 replies
- 504 views
-
-
கூட்டமைப்பில் சமரசம்: வீட்டுச் சின்னத்தில் புளொட், ரெலோ உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடகிழக்கில் தனித்துக் களமிறங்க தீர்மானித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட ஆசனப் பகிர்வு தொடர்பான முரண்பாடுகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது. http://www.virakesari.lk/article/28055
-
- 3 replies
- 628 views
-
-
இராணுவத்தின் பிடியில் சிக்கிய யாழ் ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவு தண்ணீமுறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றமை தொடர்பில் தாம் செய்தி சேகரிப்பதற்கு சென்றதாகவும் அது தொடர்பில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை அழித்த இராணுவம் மற்றும் பொலிஸார் கடுமையான எச்சரிக்கை செய்து விடுவித்ததாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு சென்ற கு.செல்வக்குமார்…
-
- 1 reply
- 390 views
-
-
தமிழ் கட்சிகளுக்குள் அதிகரித்து வரும் முரண்பாடுகள் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து வடக்கு, கிழக்கில் தமிழ் கட்சிகள் மத்தியில் முரண்பாடான நிலைமைகள் அதிகரித்துள்ளதுடன் ஏட்டிக்குப் போட்டியான குற்றச்சாட்டுக்களை ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் நிலைமையும் உருவாகியிருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளூராட்சி தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டு விடயத்தில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் ஏனைய பங்காளி கட்சிகளான ரெலோ, புௌாட் ஆகிய கட்சிகளுக்குமிடையில் பெரும் முரண்பாடு இந்த விடயத்தில் ஏற்பட்டிருக்கின்றது. பங…
-
- 0 replies
- 365 views
-
-
‘யாழ்., கிளியில் கை சின்னத்தில் போட்டியிடுவோம்’ -எஸ்.நிதர்ஷன் “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில், வேறு பகுதியில் ஒவ்வொரு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ஆனாலும் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து வெற்றிலைச் சின்னம் இல்லாமல் கை சின்னத்தில் போட்டியிடும்” என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாவகச்சேரியில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேற்று (08) காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியிருந்தது. …
-
- 0 replies
- 226 views
-