ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
அரசுக்கெதிரான முதலாவது அரசியல் கூட்டம் இன்று அ’புரத்தில்! நல்லாட்சி அரசைத் தோற்கடிக்கும் முயற்சியின் முதற்கட்டமாக, கூட்டு எதிரணியினர் இன்று (12) தமது முதலாவது அரசியல் கூட்டத்தை நடத்துகிறார்கள். இக்கூட்டம் அனுராதபுரவில் நடைபெறுகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான திகதி நேற்று வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியது. இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளுக்கும் தேர்தல் திணைக்களம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் நல்லாட்சி அரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் கூட்டு எதிரணி தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு படியாக, தமது முதலாவது அரசியல் கூட்டத்தை அனுராதபுரத்தில் கூட்டு எதிரணியினர் நடத்தவுள்ளார்க…
-
- 1 reply
- 440 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம் – மாற்று அணி உருவாகுமா? தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டமொன்று, யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் பேரவையின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது குறித்த கூட்டத்தில் பேரவையின் இணைத் தலைவர்களான லக்ஷ்மன், வைத்தியர் வரதராஜன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், பொது அமைப்புக்களின் கூட்டணி என்ற பெயரில் …
-
- 5 replies
- 1k views
-
-
வவுனியாவில் பெருந்தொகை கஞ்சா மீட்பு -இருவர் கைது! வவுனியாவில் பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த குளிரூட்டி பேருந்தில் கொண்டு வரப்பட்ட 93 கிலோ 278 கிராம் நிறையுடைய கஞ்சாவே கைப்பற்றப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வெல்கமவின் வழிநடத்தலில் கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்து தலைமையிலான குழுவினரே பேருந்தை வழி மறித்து சேதனை நடத்தியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டனர். இதன்போது பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்களையும் கைது செய்துள்…
-
- 0 replies
- 651 views
-
-
2025 இல் வடக்கு – கிழக்கு மக்களின் நிலை என்ன? வளம் மிக்க இலங்கை -2025’ என்கிற கொள்கைத் திட்ட முன்மொழிவை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்டார். நாட்டை வளம்மிக்கதாக மாற்றுவது இதன் நோக்கம். இந்து மா கடலின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாக இலங்கையை மாற்றுவதன் மூலம் இந்த நோக்கத்தை அடைவது அந்தத் திட்டத்தின் வழி. எல்லா மக்களும் உயர்ந்த வருமானத்தையும் சிறப்பான வாழ்க்கையையும் பெறத்தக்க சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது இந்தக் கொள்கையின் நோக்கம் என்று தலைமை அமைச்சர் அ…
-
- 0 replies
- 420 views
-
-
மாவீரர் நாளுக்கு தயாராகும் கிளிநொச்சி:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. எதிர்வரும் இருபத்தி ஏழாம் திகதி நடைபெற இருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக கிளிநொச்சி தயாராகி வருகிறது. கிளிநொச்சியில் உள்ள மூன்று மாவீரர் துயிலுமில்லங்களான கனகபுரம், முழங்காவில் தேராவில் துயிலுமில்லங்களில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மாவீரர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு மேற்படி மாவீரர் துயிலுமில்லங்களில் பொது மக்கள் சிரமதானப் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் இதே வேளை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு அரசியல் மயப்படுப்படுவதனை விரும்பாத மாவீர்களின் உறவினா்கள், 2009 க்கு முன் எவ்வாறு மாவீர்ர நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெ…
-
- 1 reply
- 690 views
-
-
மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாட்டம். யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் புகையிரத நிலையத்தினரின் அசமந்தப்போக்கினால் குடாநாட்டில் பொழியும் மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. யாழ்ப்பாணம் புகையிரதப் பாதையில் நாவற்குழிப் பகுதியில் புகையிரத பாதையில் இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் பொருத்தும் பணிகள் ஒக்டோபர் மாதம் 23ம் திகதிமுதல் ஒரு வாரமாக இடம்பெற்று தொடரூந்துப் பாதை சீரமைக்கப்பட்டு தொடரூந்து சேவைகள் இடம்பெறுகின்றன. இருப்பினும் குறித்த பகுதியில் இருந்த பழைய பாலம் அகற்றப்படவில்லை இதன் காரணத்தினால் நாவற்குழிப் பகுதியில் உள்ள தடுப்புக் கதவுகள் திறக்கப்பட முடியாத நிலமை ஏற்பட்டு …
-
- 0 replies
- 541 views
-
-
தொடருந்து மோதி ஒருவர் சாவு! – மீசாலையில் சம்பவம்!! மீசாலையில் தொடருந்து மோதி ஒருவர் உயிரழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். பிற்பகல் 2 மணியளவில் விபத்து நடந்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த கடுகதி தொடருந்தே மோதியுள்ளது. பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார்சைக்கிளில் கடக்க முற்பட்டபோது விபத்து நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/46267.html
-
- 0 replies
- 272 views
-
-
வடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கில் வாழ்;ந்து வரும் சில தமிழர்கள் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடிதம் ஊடாக தாம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்ததாகவும் துரதிஸ்டவசமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அண்மையில் சர்வதேச ஊட…
-
- 2 replies
- 425 views
-
-
துப்பாக்கி முனையில் இளைஞன் கடத்தல் முயற்சி : வவுனியாவில் சம்பவம் (படங்கள்) வவுனியா புகையிரத நிலைய வீதி சுத்தானந்த மண்டபத்திற்கு முன்பாக இன்று காலை 5.45 மணியளவில் இளைஞனொருவன் துப்பாக்கி முனையில் கடத்த முயற்சித்த சம்பவம் பொதுமக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வாகனத்தில் பயணித்த வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த கஜேந்திரன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் வடமாகாண அமைப்பாளர் பொன்னுத்துரை அரவிந்தன் ஆகியவர்களை இரு சொகுசு வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் வழிமறித்து தங்களது வாகனத்தில் ஏறுமாறு தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த இளைஞர் வாகனத்தில் ஏறமறு…
-
- 0 replies
- 355 views
-
-
புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்கு முயற்சித்தால் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் – எல்லே குணவங்ச:- புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்h. புதிய அரசியல் அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு காணி உரிமை வழங்கப்படும் பட்சத்தில் திருகோணமலை உள்ளிட்ட கடல் மற்றும் நில வளங்களை இழக்கும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்த அவர் புதிய அரசியல் அமைப்பினை எரித்து நாசமாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 262 views
-
-
கூட்டுறவு சங்க கிளை உடைத்து கொள்ளை : நால்வர் கைது.! (படங்கள் இணைப்பு) வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையை உடைத்து திருடிச்சென்ற நான்கு திருடர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையின் கதவின் பூட்டினை உடைத்து உட்சென்ற திருடர்கள் அங்கிருந்து உலர் உணவு பொருட்கள், மீள்நிரப்பு அட்டை மற்றும் பணத்தினை எடுத்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் கல்மடு வீதியின் ஊடாக தப்பித்துச்சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற முச்சக்கரவண்டியினை அதிகாலை 2.00 மணியளவில் கல்மடு கட்டடையர்குளத்தில் ரோந்த…
-
- 0 replies
- 448 views
-
-
வடகிழக்கு இணையாவிட்டால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே வடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியான பின்னிபிணைந்த உறவு இருந்து வருகின்றது. வடகிழக்கு இணையாவிட்டால் அந்த உறவு இல்லாமல்போகும் நிலையேற்படும். இதனால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே இவ்வாறானதோர் நிலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லவே காராணமாக அமைவார் என கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் பிசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடரந்து …
-
- 0 replies
- 235 views
-
-
வெளிநாட்டில் இருந்து யாழ். திரும்பிய இளைஞன் கைது! [Sunday 2017-11-12 09:00] வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்த இளைஞன் ஒருவரை வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து சோதனை மேற்கொண்ட பொலிஸார் அவரிடம் மதுபானம், சிகரட் என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளனர். கட்டார் நாட்டிலிருந்து இலங்கை வந்த யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டு மதுபானம் மற்றும் இலங்கை வானூர்தி நிலையத்தில் வாங்கிய 10 பெட்டி சிகரட் என்பனவற்றை எடுத்துச் சென்றபோது வவனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் வைத்து போதை ஒழிப்பு பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது கைது செய்ய…
-
- 0 replies
- 555 views
-
-
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணிக்கு வவுனியாவில் உள்ள வன்னி இன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் பங்கேற்கவுள்ளார். இந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் விசேடமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தில் எழுந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களை தரமுயர்த்துதல் தொடர்பான விடயங்கள் குறித்தும், இடைக்கால …
-
- 1 reply
- 255 views
-
-
இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – அஹமட் ஜவாட் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கனேடிய தமிழ் அமைப்புக்கள் சில அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தன. எதிர்வரும் 14ம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் சர்வதேச மாநாட்டில் இலங்கைப் படையதிகாரிகள் பங்கேற்பதற்கு அனுமதிக்கக் கூடாது என கனேடிய பிரதமரிடம் குறித்த நிறுவனங்கள் எழுத்து மூலம் கோரியிருந்தன. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என உ…
-
- 0 replies
- 398 views
-
-
யாழில் 456 குடும்பங்கள் இடம்பெயர்வு – 46வீடுகள் முற்றாக சேதம் SAMSUNG CAMERA PICTURES குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக 456 குடும்பங்களை சேர்ந்த 1, 724 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்து உள்ளது. மேலும் யாழில்.மழை காரணமாக 2, 727 குடும்பங்களை சேர்ந்த 9 , 894 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் அதில் 456 குடும்பங்களை சேர்ந்த 1, 724 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன் 46 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 172 வீடுகள் பகுதிகளவில் பாதிப்படைந்துள்ளன. மேலும் மழை த…
-
- 0 replies
- 206 views
-
-
இலங்கைக்கு மீண்டும் ஜெனீவாவில் கண்டம் விஷேட குழுவை தூது அனுப்பியது அரசாங்கம் லியோ நிரோஷ தர்ஷன் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் புதன் கிழமை மீளாய்வு செய்யப்பட உள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடர் கடந்த திங்கட் கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியது. சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் மற்றும் அமைப்புகள், சிறப்பு அறிக்கையாளர்கள், ஐ.நா அமைப்புகளின் தகவல்களை உள்ளடக்கிய அறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்ட அறிக்கை உள்ளிட்ட சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய பங்காளர்களின் அறிக்கைகள் என்பனவற்றின் அடிப்படையி…
-
- 0 replies
- 279 views
-
-
தேர்தல் தினம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியானது எம்.சி.நஜிமுதீன் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவுசெய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அடங்கிய 2043/56 மற்றும் 57 என்ற இலக்கங்களையுடைய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத்திணைக்களத்தின் பிரதானி கங்காணி கல்பனி தெரிவித்தார். எனவே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதியினை அறிவிக்கும் பொறுப்பு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் செல்கிறது…
-
- 0 replies
- 212 views
-
-
யாழ். மாவட்டத்தில் தொடர்மழை : வெள்ளப்பெருக்கு அபாயம்; வான் கதவுகள் திறப்பு யாழ். மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. குடாநாட்டில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை குறைப்பதற்கு வசதியாக தொண்டமனாறு, அராலி, அரியாலை நாவற்குழி பகுதியில் உள்ளவான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் சமுத்திரத்துக்கு வெளியேற்றப்படுகின்றது என தடுப்பு அணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி அறிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் கடல் நீர் ஏரியின் உவர்ப்புத்தன்மையை நீக்கி நன்னீர் ஏரியாக மாற்றுவதற்கும் ஏரியுடன் சேர்ந்த கரையோரப்பகுதியை மேய்ச்சல் நிலங்களாகவும் ப…
-
- 0 replies
- 297 views
-
-
தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியே தமிழ் மக்களது எதிர்பார்ப்பு தேசியம் என்பது, ஒரு இனம், தான் வாழ்வதற்காக நீண்ட கால மாக ஒரு பாரம்பரிய நிலத்தில், தனக்கெனத் தனியான மொழி, பண்பாடு,கலாசாரம், பொருண்மிய வளம் என்பவை கொண்டதாக இயங்குதல் என்பதாகும். அதன் விரிந்த உண்மையான உட்பொருள், இன்னும் விசாலமானது. குறித்த பாரம்பரிய நிலத்தில், அவர்களின் ஆள்புல எல்லை,ஆகாயம் , கடல், வளிமண்டலம், இயல் தாவரங்கள், விலங்குகள், பறவைகள், அவர்தம் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைமைகள் என்று அத்தனை விசேட அம்சங்களும் தேசியத்தின் அர்த்தக் கூறுகளாகும். அதன் மெய்ப்பொருள் உணர்த்துவது தான், தமிழர்கள் தனிய…
-
- 1 reply
- 465 views
-
-
கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் இராணுவத்தால் கையக்கப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தலைமைக் கட்டளை அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரினால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு, 133 ஏக்கர் க…
-
- 9 replies
- 832 views
-
-
இலங்கை: 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கை கெக்கிராவ பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பள்ளி மாணவியொருவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பரிமாறப்பட்டது. பசி காரணமாக அம்மாணவி வாந்தி எடுத்ததாக மருத்துவ பரிசோதனையின் பின்னர் தெரிய…
-
- 0 replies
- 356 views
-
-
சாவகச்சேரி மருத்துவமனைக்கு இன்னும் மருத்துவர்கள் தேவை சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பற்றாக்குறை யாகவுள்ளனர் மேலும் சில மருத்துவ அதிகாரிகளை நியமிக்குமாறு பிரதேச மக்கள் மாகாண சுகாதார அமைச்சரைக் கோரியுள்ளனர். மருத்துவமனையில் தினமும் வெவ் வேறு கிளினிக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரதி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பொது மருத்துவம் மற்றும் நீரிழிவு சிகிச்சை கள் நடத்தப்படுகின்றன. இந்த கிளினிக்குகளில் வாராந்தம் 500 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற வரு கின்றனர். ஆனால் கடமையில் இருக்கும் மருத்துவர்களின…
-
- 0 replies
- 325 views
-
-
மயிலிட்டி காசநோய் மருத்துவமனை பிரதேசம் விரைவில் ஒப்படைக்கப்படும் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையின் நிலப் பிரதேசம் படையினரால் விரைவில் சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. வலிகாமம் வடக்குப் பகுதியின் எஞ்சிய பகுதி நிலம் விடுவிப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட நிலங்களில் உள்ள நெருக்கடிகள் தொடர்பில் வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் சங்கத் தலைவர் குணபாலசிங்கம் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் இராணுவத் தளபதியைச் சந்தித்து உரையாடினர். இதன்போதே மேற்படி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகா…
-
- 0 replies
- 348 views
-
-
கண் சத்திரசிகிச்சையில் கோளாறு: விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழு நியமனம் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட கோளாறுகள் தொடர்பான விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பரீட், டொக்டர் மங்களா கமகே மற்றும் டொக்டர் குமுது கருணாரத்ன ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இந்த குழுவினர் அடுத்த வாரமளவில் யாழ்ப்பாணத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சத்திரசிகிச்சை தொடர்பில் தன…
-
- 0 replies
- 312 views
-