ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கிறது கூட்டமைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னதாக சந்திப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத்திட்டத்திற்கு வாக்களிப்பது குறித்த விடயத்தினையும், மக்களின் உடனடிப்பிரச்சினைகளுக்குரிய தீர்வினை வழங்குவது குறித்த விவகாரத்தினையும் இருபடிமுறைகளை அணுகவேண்டுமெனவும் இரண்டையும் ஒன்றையொன்று இணைத்துக்கொண்டு பயணிக்க முடியாது எனவும் உறுப்…
-
- 0 replies
- 289 views
-
-
எந்தவொரு சலுகையும் மக்களுக்கு கிடைக்கவில்லை பட்ஜட் குறித்து பொது எதிரணி கருத்து (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) குதிரை பந்தய வீரர் மாறினாலும் குதிரை மாறவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குண வர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினைப் பார்க்கையில் குதிரை பந்தய வீரர் மாறினாலும் குதிரை மாறவில்லை. பழைய குதிரைதான் தற்போது ஒடுகின்றது. என்பதே எமது நிலைப்பாடாகும். 2015,2016,2017 ஆகிய ஆண்டுக்கான வரவு – செலவுத்தி…
-
- 0 replies
- 249 views
-
-
வரலாற்றை நினைவுபடுத்தி பட்ஜட் சமர்ப்பித்த மங்கள (ஆர்.ராம், எம்.எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டின் பொருளாதாரத்தினை மீளவும் சரியான தடத்தில் முன்னெடுத்துச் செல்வதனை இலக்காகக் கொண்டு நீலப் பசுமை என்னும் தொனிப்பொருளில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியபோதே நிதி அமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்தார். பரபரப்பான பாரளுமன்றம் பாரளுமன்றத்தில் 2018ஆம் ஆண்…
-
- 0 replies
- 243 views
-
-
2 கிலோ ஹெரோயினுடன் நபர் கைது வவுனியா பஸ் நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் நாவற்குளி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை நேற்று மாலை 4 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போதே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 2கிலோ ஹெரோயினை பயணப்பொதியில் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/26843
-
- 0 replies
- 153 views
-
-
கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை.! நாட்டில் அதிகார பகிர்வு தொடர்பாக பல மட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் எங்களுடைய கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை. எனவே எவ்வாறு நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த அரசாங்கம் அதிகார பகிர்வை வழங்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இன்று எங்களுடைய கல்வி அமைச்சில் அனைத்து அதிகாரி…
-
- 0 replies
- 171 views
-
-
ரஷ்யப் போர்க்கப்பல் கொள்வனவு மைத்திரியின் மைத்துனரும் எதிர்ப்பு நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளது. ரஷ் யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரான ரொகான் பலேவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மைத்துனரான பலேவத்த, இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்று மதியாளர் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போதே இந்த எச்ச ரிக்கையை விடுத்துள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் …
-
- 1 reply
- 353 views
-
-
அதிகாரத்தை அறியாமல் சபை செயற்படுகிறது? அரசமைப்பின் பிரிவு 52 இன் 2ஆவது சரத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அறியாமலா 4 வருடங்களாக வடக்கு மாகாண சபையை நடத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா. வடக்கு மாகாணசபையின் 109ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார நியதிச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இடம்பெற்றது. குறித்த நியதிச் சட்ட குழுநிலை விவாதத்தில் நியதிச் சட்டம் ஆராயப்பட்டது. …
-
- 0 replies
- 357 views
-
-
மன்னாகண்டல் குளம் உடைப்பு – 20 ஏக்கர் வயல்கள் அழிவு முல்லைத்தீவில் உடைப்பெடுத்த மன்னாகண்டல் குளத்தால் சுமார் 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்கள் அழிவடைந்துள்ளன என்று மன்னாகண்டல் கமக்கார அமைப்பின் தலைவர் பாலசிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: முல்லைத்தீவு மாவட்டத்தில் மன்னாகண்டல் குளத்தின் கீழ் 21 விவசாயிகள் 100 ஏக்கர் வயல் செய்கையை மேற்கொள்வது வழமை. இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு கால போகத்துக்காக விதைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், குளத்தின் இரு தேவைகளை இனம் கண்டு கமநல சேவைத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந் தோம…
-
- 0 replies
- 568 views
-
-
-
24 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கு: யாழ். மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்கொணர்வு மனு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு நாவற்குழி மற்றும் மறுவன்புலவு பகுதிகளில் வைத்து 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட குறித்த 24 இளைஞர்களில் 9 பேரின் உறவினர்களால் தொடரப்பட்ட வழக்கு 2003 ஆம் ஆண்டு வரை யாழ். நீதிமன்றத்தில் விசாரி…
-
- 0 replies
- 383 views
-
-
யாழ்ப்பாணத்தில் பெயரளவிலா இந்தமுறை மரநடுகைத் திட்டம்? வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கார்த்திகை மாத மரம் நடுகைத் திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும் பகுதி மக்களுக்கு இல்லையா என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் மரநடுகை மாதமாக நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு அதன்கீழ் மரம் நடுகைத் திட்டமானது வருடந்தோறும் முன்னெடுக்கப் படுகின்றது. இதன் அடிப்படையில் வடக்கில் உள்ள 5 மாவட்டங்களிலும் மரநடுகைத்திட்டம் முன்னெடுக்கப்படுவது வழமையான ஒரு பணியாகும். இருப்பினும் இந்த ஆண்டு மர நடுகைத் திட்ட மானது வடக்கு மாகா…
-
- 0 replies
- 357 views
-
-
யாழ். சிறைச்சாலைக்குள் கைதிகளிடம் கைபேசி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதியாக இருந்து கொண்டு ஏனைய கைதிகளுக்கு தொலைத் தொடர்பு சேவைகளை நடாத்தி வரும் றஜிந்தன் என்பவர் தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையினுள் உணவுப் பொதியினுள் கஞ்சாவை கொண்டு செல்ல முயன்ற வன்னிப் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அவரை பிணையில் விடுவிப்பது தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 313 views
-
-
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரே பார்வையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் 71 ஆவது வரவு- செலவுத் திட்டமும் நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு - செலவுத்திட்டமுமாக அமைந்த வரவு-செலவுத்திட்டத்தின் விபரம் வருமாறு, வரவு - செலவுத் திட்ட சமர்ப்பிப்பில் பங்குகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியினர் சைக்கிளில் பாராளுமன்றிற்கு வருகை தந்தனர். நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றிற்கு வருகை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை கூடியது 2018 ஆண்டுக்கான தேசிய …
-
- 0 replies
- 490 views
-
-
தமிழ் அரசியல்வாதிகள், மக்களிடையே கசப்புணர்வை வளர்க்க முற்படுவது கண்டிக்கத்தக்கது கல்முனையின் வரலாறு தெரியாமல் கல்முனை தமிழர்களை முஸ்லிம்கள் அடிமைகளாக்க முயல்கிறார்கள் என தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறுவதன் மூலம் மீண்டும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே கசப்புணர்வை வளர்க்க முற்படுவது கண்டிக்கத்தக்கதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது, சமீப காலத்தில் ஏற்பட்ட சாய்ந்தமருது கல்முனை பிரிப்பு விடயத்தில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி போன்றோர் தாம் இனவாத புலிகளாக இருந்த போது தமிழ் முஸ்லிம் பிரிவினவாதத்தை முன்னெடுத்தது போல் ஜனநாயகத்துக்கு வந்…
-
- 3 replies
- 635 views
-
-
இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் – ஐ.நா இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜொரிக் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் சித்திரவதைகளுடன் தொடர்புபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் படையினர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த போது அவர் குறித்த பதிலை அளித்துள்ளார். இலங்கைத் தமிழர…
-
- 0 replies
- 469 views
-
-
மாற்றுக்கருத்துக்களை ஏற்க வேண்டும். சி.வி. தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று வடக்கு மாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழில். நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போது தமிழ் அரசுக் கட்சியுடன் இணங்கிச் சென்று தேர்தலில் போட்டியிட முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விகே அவ்வாறு பதிலளித்தார். மேலும் தெரிவிக்கையில், ‘மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக் கூடியளவு ஒரு நிலையிலே நாம் இருக்கா…
-
- 0 replies
- 444 views
-
-
சிங்கள இனவாதத்தை அரசு கட்டுப்படுத்தட்டும்! தனிநாடு ஒன்று இல்லாததே இலங்கையில் உள்ள தமிழர்களின் முதன்மைப் பிரச்சினை. தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லை என்று நாம் கூறக்கூடாது. நாடு இல்லை என்பதுதான் அவர்களின் முக்கிய பிரச்சினை. அவர்கள் தமிழ் நாட்டுக்குச் சென்று அல்லது மலேசியா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு ஒரு பகுதியைத் தனிநாடாகக் கோரவேண்டும். இலங்கையை விடவும் அதிகளவான தமிழர்கள் வாழ்கின்ற நாடுகள் உள்ளன. அங்கு சென்று சுயநிர்ணய உரிமையுடன் அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள். இப்படித் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் மெதகொட அபயதிஸ்ஸ தேரர். சிறிலங்கா ப…
-
- 0 replies
- 351 views
-
-
இரணைமடு குளத்திற்கருகில் இருந்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியது இரணைமடு குளத்திற்கு அருகில் முகாம் அமைத்திருந்த இராணுவத்தினர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடுக்குளத்தின் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசன திணைக்களத்தின் விடுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை குறித்த இரணைமடுக் குளத்திற்கு சுற்றுலாவாக வருகை தரும் பிரயாணிகளிற்கு சிற்றுண்டிச் சாலை அமைத்து வியாபாரமும் செய்து வந்த நிலையில் குறித்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளது. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் நி…
-
- 3 replies
- 686 views
-
-
”ஏக்கிய இராச்சிய’ என்பது ஒற்றையாட்சி தான். – சி.வி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ”ஏக்கிய இராச்சிய’ என்பது ஒற்றையாட்சியைத்தான் குறிக்கும். அதன் அடிப்படையில் அரசு தற்போது முன்வைத்துள்ள அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு போதாது. சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களுக்கு போதியளவான அதிகாரங்களை வழங்கும் என்பதில் நாம் தெளிவாகவே உள்ளோம்’ என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ‘அரசு தம்மால் வழங்கக் கூடியதையே வழங்கத் தயாராகியுள்ளது. நாம் பிரச்சினைக்கு தீர்வைக் காணவ…
-
- 3 replies
- 699 views
-
-
ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் மோடி எரிபொருள் நெருக்கடிக்கு உதவுவதாக உறுதி (ரொபட் அன்டனி) இலங்கையில் ஏற்பட்டுள்ள எரி பொருள் நெருக்கடி தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று மாலை தொலைபேசியூடாக உரையாடியுள்ளார். இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க இயலுமான அனைத்து வகைகளிலும் உதவுவதாக இந்திய பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார். மேலும் இலங்கையின் அவசர பெற்றோல் தேவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண…
-
- 1 reply
- 438 views
-
-
‘சுமந்திரனுக்கு சுதந்திரமில்லையா?’ “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் சுதந்திரமாக வசிக்கவில்லையா?” எனக் கேள்வியொழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, “எங்களை விட அவருக்குச் சுதந்திரம் இருப்பதாகவே கருதுகிறேன்” என, நேற்று (08) தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்பு சபையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று (08) இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசமைப்பின் ஊடாக நாட…
-
- 1 reply
- 348 views
-
-
யாழில் டெங்கினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதிகம் யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் 2016 ஆம் ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டு 4700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார். புதிதாக மலேரியா நுளம்புகளின் பெருக்கமும் யாழ் மாவட்டத்தில் அதிகரித்திருப்பதாக கூறி யுள்ளதுடன் நுளம்பிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ம…
-
- 0 replies
- 180 views
-
-
வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம்:சந்தேகத்துக்கிடமான பல தொலைபேசி இலக்கங்களை கண்டுபிடித்துள்ள சி.ஐ.டி. பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் சந்தேகத்துக்கு இடமான பல தொலைபேசி இலக்கங்களை கண்டுபிடித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கிக்கு அறிவித்தது. வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே விசேட மேலதிக அறிக்கை ஊடாக இதனை குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது. அதன்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்தேகத்துக்கு இடமான தொலைபேசி இலக்கங்களுக்கு உரிய நபர்களின் அடையாளம் …
-
- 0 replies
- 218 views
-
-
யாழ்.மேல்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு யாழ்ப்பாண மேல் நீதிமன்றின் கட்டளைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு ஆளுநரின் தீர்மானத்துக்கு எதிராக அமைகிறது. அதனால் அது தொடர்பில் ஆராயப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, ஆஸ்திரேலியாவில் கல்வியைத் தொடர வெளிநாடு செல்லும் விடுப்பைக் கோரியிருந்தார். எனினும் அவரது வ…
-
- 0 replies
- 197 views
-
-
த.தே.கூட்டமைப்பில் இருந்து ஒரு கட்சி விலகுவது நல்லதல்ல! தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஒரு கட்சி விலகுவதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ் மக்களுக்கோ நல்லதல்ல என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்; தெரிவித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நேற்றையதினம்(08.11.2017) புதன்கிழமை வவுனியா கோயில்குளத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் நிலைப்பாடுகள் பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டபோது இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்...... …
-
- 0 replies
- 525 views
-