ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
அரசியல் வியூகங்களை ஆழமாய் அறிந்திருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன் FacebookTwitterPinterestEmailGmailViber வன்னிப் பெரு நிலப் பரப்பை விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றுமுழுதாக விடுவிப்பதற்கான பெரும் தாக்குதல்களை மகிந்த அரசும் படைகளும் ஆரம்பித்த காலப்பகுதியான 2007ஆம் ஆண் டின் நவம்பர் மாதம் 2ஆம் திகதியன்று அதிகாலை வேளையில் கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் திடீரென பயங்கரமாக குண்டு வீச்சுத்தாக்குதல்களை வான்படை மேற்கொள்கின்றது. அதிகாலை 5.40 மணியளவில் அந்தப் பகுதியிலிருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீது நடத்திய குண்டுவீச்சில் தமிழீழ விடுதலைப் புலிகளி…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையில் உள்ளக சுயநிர்ணயத்துடனான அதிகாரப்பகிர்வு செய்யப்பட்டு நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டும். இதன்போது முஸ்லிம்களும் தமிழர்களுடன் சகோதரர்களாக வாழும் வகையிலான அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியவாறான சுயாட்சி அலகொன்றை வழங்குவதற்கும் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் க…
-
- 1 reply
- 584 views
-
-
கூட்டு எதிரணியினரின் நிலைப்பாட்டிலேயே நாம் பிரதமர் அறிவிப்பு; புதிய அரசியலமைப்்பு குறித்து மக்களே தீர்மானிக்க வேண்டும் என்கிறார் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டில் ஒன்பது மாகாணங்கள் உள் ளன. அதனை எட்டாகுறைக்கவோ அல்லது 15 ஆக கூட்டவோ எம்மால் முடியாது. வடக்கு,கிழக்கு இணைப்பினை பல வந்தமாக செய்ய முடியாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அதனை மக்களே தீர்மானிக்க வேண் டும். அத்துடன் தற்போது இடைக்கால அறிக்கை மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது இது தொடர்பான விவாதம் நிறைவடைந்த பின்னர் அரசியலமைப்பு பணிகளுக்கான அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டின் பின்னரே …
-
- 2 replies
- 335 views
-
-
இந்தியத் துணை தூதரகக் கிணற்றில் மலேரியாவைப் பரப்பும் இந்திய வகை நுளம்பினம் FacebookTwitterPinterestEmailGmailViber யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகக் கிணற்றில் மலேரியாவைப் பரப்பும் இந்தியவகை நுளம்பை டெங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். தற்போது யாழ்ப்பாணக் குடாநாடு எங்கும் டெங்கு மற்றும் மலேரியாத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் டெங்குக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பரிசோதனையை மேற்கொள்ளும் குழு வினர் கடந்த வ…
-
- 1 reply
- 402 views
-
-
கிழக்கு மாகாகணங்களில் காணப்படும்; ஒரு விசேட அம்சம் தமிழ் கிராமங்களும், முஸ்லீம் கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்படுவதாகும்.கிழக்கில் தமிழ்-முஸ்லீம் உறவு வடக்கைவிட மிகவும் நெருக்கமானதுமாகும். குறிப்பாக விவசாய நிலங்களும்.வியாபார மார்க்கங்களும் இரண்டு இனங்களுக்குரிய நிலத் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தில் கிழக்கில் அதிகமான முஸறலீம்களின் உயிர் மற்றும் உடமைகள் விடுதலைப்புலிகளால் சூறையாடப்பட்டன. 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழ் ஆயுதவாதிகளினால் நடாத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையினால் வடமாகாணமானது முற்றும் முஸ்லீம்களற்ற பிரதேசமாக்கப்பட்டது. இப்பெரும் துயரத்தையும் இழப்பையும் தமிழ் மக்களுடைய வி…
-
- 3 replies
- 676 views
-
-
‘அடையாளங்களைக் கைவிடுவதற்கு தமிழர்கள் தயாரில்லை’ “தமிழ் மக்கள், இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, தமிழர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, இலங்கையர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ தயாராக இல்லை. தமிழ் மக்கள், இலங்கையர்களாகவும் அதேநேரம், தமிழர்களாகவுமே வாழ விரும்புகின்றார்கள்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (01) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்க…
-
- 3 replies
- 856 views
-
-
மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவர் கைது மு.இராமச்சந்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவரை கைதுசெய்துள்ள ஹட்டன் பொலிஸார், அவர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார் உட்பட ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சிநிலையத்தின் பெயர் பலகையில் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிராக, கடந்த 26ஆம் திகதி, ஹட்டன் நகர மத்தியில் இலங்கை தொழிலாளர் காங்ஙிரஸின் ஆதரவளர்கள் …
-
- 0 replies
- 277 views
-
-
யாழில் நேற்றிரவு கொட்டித் தீர்த்த பெருமழை; வழுக்கையாறின் நீர்மட்டம் உயர்வு! யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் நேற்று நள்ளிரவை எட்டிய நேரத்தில் கடும் இடி மின்னலுடனான பெருமழை பொழிந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகள் நிரம்பி வழிவதாக ஐபிசி தமிழின் களநிலைச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு பருவப்பெயர்ச்சி ஆரமித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதனிடையே மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு பெய்த கடும் மழையினால் யாழ்ப்பாணக் குடா நாட்டின் பருவகால ஆறான வழுக்கையாறின் நீர்மட்டம…
-
- 0 replies
- 582 views
-
-
வாள்வெட்டு ஜவர் கொண்ட வாள்வெட்டுக் குழுவினர் வீதியால் சென்றவரை வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று நெல்லியடி – மாலுசந்தியில் நடந்துள்ளது. 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே காயத்துக்கு இலக்கான நிலையில் மந்திகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் http://newuthayan.com/story/42657.html
-
- 0 replies
- 324 views
-
-
அரசியலமைப்பு குறித்த பேச்சுக்கள் ஏப்ரல் வரை நீளும் – சிறிலங்கா பிரதமர் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுடனும், ஏனைய மதத் தலைவர்களுடனும், பரந்துபட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம் நடத்தவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவையின் அமர்வில் உரையாற்றிய அவர், “நாங்கள் மகாநாயக்க தேரர்களையும், ஏனைய மதத் தலைவர்களையும், பொதுமக்களையும் சந்திக்கவுள்ளோம். நாங்கள் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளோம் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். தேசிய அளவிலான ஒருமித்த கருத்தை அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம். ப…
-
- 0 replies
- 249 views
-
-
நிலையான அதிகாரப்பகிர்வு சமாதானம் உடன் அவசியம் சம்பந்தன் வலியுறுத்து: பிரச்சினைகள் தீர்க்கப்படாது விட்டால் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அரசாங்கம் சர்வதேசத்திற்கும் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த நாட் டில் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்தும் வகையில் நிலையானதும் நியாயமானதுமான அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலை வர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். நாட்டில் உயர் ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புச் செய்வதாகவும், பிரச்சினைகளை உ…
-
- 0 replies
- 244 views
-
-
கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்றமும் இல்லை : அமைச்சர் பைஸர் முஸ்தபா திட்டவட்டம் (எம்.சி.நஜிமுதீன்) ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கமைவாக சாய்ந்தமருது பிரதேச சபையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தயாராக இருந்தோம். எனினும் கல்முனை மாநர சபையை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக பிரிக்குமாறு தற்போது அப்பிரதேச மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் அபிப்பிராயம் பெறாது அதனை நிறைவேற்ற முடியாது. ஆகவே தற்போதைக்கு கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்…
-
- 0 replies
- 231 views
-
-
தமிழ்க் கூட்டமைப்புக்குள் பிளவு : தமிழரசுக்கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்கிறது ஈ.பி.ஆர்.எல்.எப். (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் மற்றுமொரு பிளவு ஏற்பட்டுள்ளமை பகிரங்கமாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக செயற்பட்டு வரும் இலங்கை தமிழரசுக்கட்சியானது ஏதேச்சதிகாரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் அக்கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்து பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி அறிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன…
-
- 0 replies
- 262 views
-
-
விக்கினேஸ்வரனின் சிறையில் சிக்கியுள்ள தமிழ் கூட்டமைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) விடுதலை புலிகளின் சிறைக்குள்ளிருந்து விடுபட்டு வந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது வடக்கில் சி.வி விக்கினேஸ்வரன் தரப்பினரினதும் புலம்பெயர் அமைப்பினதும் சிறைகளுக்குள் சிக்கியுள்ளது. எனவே தீர்வுக்கான பாதையை முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த சிறையில் இருந்து மீண்டு வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸநாயக்க கோரினார். அத்துடன் வடக்கில் தனிநாடு கோருபவர்கள் தற்போது எவரும் இல்லை. எனினும் தனிநா…
-
- 0 replies
- 416 views
-
-
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசுடன் கூட்டமைப்பு இணையவேண்டும் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைய வேண்டும். வரலாற்றை மறந்து விட்டு புதிய அரசியல் நீரோட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரவேசிக்க வேண்டும். அரச நிர்வாக கட்டமைப்பில் இணைவதன் மூலம் வடக்கு மக்களின பிரச்சினையை தீர்க்க முடியும் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அத்துடன் வடக்கு மாகாணத்திற்கு அதிகாரத்தை பகிர்வதன் மூலம் தமிழர்களின் பிரச்சினை தீர்க்க முடியாது. மேலும் பாராளுமன்றத்தை பலப்படு…
-
- 0 replies
- 284 views
-
-
வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தவறான பிரசாரம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வடகிழக்கு இணைப்பு விடயத்தில் கிழக்கு மாகாணத் தில் உள்ளவர்களின் இணக்கப்பாட்டினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனையே வடகிழக்கு இணைப்பு எனவும் சுட்டிக்காட்டினார். வடகிழக்கு இணைப்பு தொடர்பில் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் திட்டமிட்டு செயற்படுவதாக தவறான பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த நாட்டில் உள்ள மாகாணங்கள் எவையும் இணைக்…
-
- 0 replies
- 265 views
-
-
இலங்கை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்.! அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த அவர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருநாட்டுக்குமிடையில் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் நடாத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பாக ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை நிறுத்த இரு நாடுகளும் இனைந்து செயற்பட வேண்டியதன் முக்கியம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டன்புல் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/ar…
-
- 0 replies
- 346 views
-
-
முல்லைத்தீவுக்கு 9ஆயிரம் வீடுகள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 2018ஆம் ஆண்டில் 9 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாக இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன என மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தற்போது 14 ஆயிரம் வீடுகள் தேவை. இந்த நிலையில் 2018ஆம் ஆண்டில் தேசிய நல்லிணக்க அமைச்சு 9 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளது. அந்த வீடகள் கிடைக்கப்பெற்றால் மாவட்டத்தில் வீடு தொடர்பில் உள்ள நெருக்கடி 75 வீதம் தீர்த்து வைக்கப்படும். இதேநேரம் எமது மாவட்டத்துக்குக் கிடைத்த 9 ஆயிரம் …
-
- 0 replies
- 321 views
-
-
என்னதான் செய்யப்போகிறார்கள்? FacebookTwitterPinterestEmailGmailViber புதிய அரசமைப்புக்கான விவாதம் தொடர்ந்து நடக்கிறது. இடைக்கால அறிக்கையின் மீதான விவாதம் என்று கூறப்பட்டாலும்கூட, இடைக்கால அறிக்கையின் பின்னிணைப்பில் தத்தமது கட்சிகள் தெரிவித்திருக்கக்கூடிய விடயங்களை அழுத்திக் கூறியே கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் உரையாற்றுகிறார்கள். அதனால் இடைக்கால அறிக்கையின் பின்னிணைப்புகளில் காணப்படும் அதேயளவு முரண்பாடுகள் இந்த விவாதத்திலும் எதிரொலிக்கின்றன. இந்த விவாதத்தில் ஒலிக்கக்கூடிய ஒரே ஒற்றுமைக் குரல், தேசியப் பிரச்சினையான தமிழர்களின் பிரச்சினை…
-
- 1 reply
- 454 views
-
-
சக்தி டிவி செய்திகள் 01 11 2017 , 8PM
-
- 0 replies
- 610 views
-
-
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு – கிழக்கில் முதலீடு செய்வதில்லை FacebookTwitterPinterestEmailGmailViber வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு –– கிழக்கில் முதலீடு களை மேற்கொள்வதில்லை என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். இந்தியாவின் அவுரங்காபாத் நகரில் நடைபெற்ற இரண்டாவது பன்னாட்டு பௌத்த மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கொழும்பில் வானுயர்ந்த கட்டடங்கள் பல எழுந்துள்ளன. வெளி நாடுகளில் உள்ள தமிழ் மக்களால் தான் கொழும்பில் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எழுச்சி தோ…
-
- 1 reply
- 353 views
-
-
இலங்கையில் எதிர்க்கட்சிகள் குறுகிய நோக்கத்துடன் செயற்படுகின்றன – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் எதிர்க்கட்சிகள் குறுகிய நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி துங் லாய் மர்கு தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பிலான சர்வதேச சமூகத்தின் அபிலாஸைகளை பூர்த்தி செய்யும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்தநிலையில் இலங்கையின் எதிர்க்கட்சிகள் குறுகிய நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஹோப் புகைப்படக் கண்காட்சியில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசியல் தீர்வுத் திட்ட…
-
- 0 replies
- 259 views
-
-
தொடரும் யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்...! யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் நேற்றுமுன்தினம் தொடக்கம் கதவடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள். குறித்த அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தே இந்த மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் வணிக பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/26545
-
- 1 reply
- 526 views
-
-
கப்பம் கேட்டு சாரதி கடத்தல் : ஆயுத கும்பலோடு மது அருந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பஸ் சாரதி ஒருவரை கடத்திய ஆயுத கும்பல் குறித்த சாரதியை கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து துன்புறுத்தி 20 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற்றுக் கொண்டு விடுதலை செய்துள்ளனர். ஆயுத கும்பலால் கடத்தப்பட்டவர் 28 வயதுடைய எலிஸ்டன் விமல் என்பவராவார். விடுவிக்கப்பட்ட விமல் “தன்னோடு இன்னும் இரண்டு இளைஞர்களை குறித்த வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் அவர்களிடமும் கப்பம் கேட்டு ஆயத கும்பல் துன்புறுத்தியதாகவும் அதற்கு குறித்த இரு இளைஞர்களும் இங்கிலாந்திலுள்ள தமது உறவினர்களிடம் பணம் கேட்டு இருப்ப…
-
- 0 replies
- 192 views
-
-
தீபாவளியன்று தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை ; ஏறாவூரில் சம்பவம் தாயும் மகனும் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு கொலைசெய்யப்பட்டவர் இளம் தாயெனவும் கணவ…
-
- 8 replies
- 1.4k views
-