ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது.! இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 8 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி - மன்னார் இடையே மீன்பிடியில் ஈடுபட்ட போது இவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். இவர்களின் டோலர் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்துள்ள 8 மீனவர்களையும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/25908
-
- 0 replies
- 179 views
-
-
காணி விடுவிப்பு காலாவதியான கால அவகாசம், சொந்தநிலம் கோரி மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள்.! புதுக்குடியிருப்பில் இராணுவ வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி வீதிமறியல் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் இன்று காலை மக்களால் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் வீதியில் பிரதேச செயலகம் முன்பாக உள்ள 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி 682ஆவது படைப்பிரிவின் முகாமை அமைத்திருந்த நிலையில், தமது சொந்த நிலங்களை தம்மிடம் கையளிக்குமாறுகோரி குறித்த காணிகளின் உரிமையாளர்கள் கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் தொடர்ந்து ஒரு மாதகால போராட்டத்தினை இராணுவ முகாம் முன்பாக முன்னெடுத்திருந்தனர். இதன் பலனாக ஒர…
-
- 0 replies
- 276 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு 9 புதிய அமைப்பாளர்கள் நியமனம்.! ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அம்பாறை, கொழும்பு, மாத்தறை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான அமைப்பாளர்களே இன்றைய தினம் நியமனம் பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை, அம்பாறை மாவட்டத்திற்கு மாத்திரம் ஐந்து அமைப்பாளளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக நியமிக்க…
-
- 0 replies
- 315 views
-
-
இலங்கையில்இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சில புகைப்படங்களை பிரித்தானிய ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் வெளியிட்டு, அவர்களுக்கு என்ன ஆனது என கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதாக குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள், வான் பரப்பில் வெடித்துச் சிதறும் புகைப்படம் ஒன்றையும் பிரான்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=192160&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 444 views
-
-
வாய்ச்சொல்லில் வீரரடி! நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை சொல்வாரடி, கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி. இது புரட்சிக் கவி பாரதியின் வரிகள். இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் அடுத்த ஆண்டு கொண்டாடப்படும்போது புதிய அரசமைப்பின் ஊடாக இனங்களுக்கு இடையில் முழுமையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று நம்புகின்றோம் எனத் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க சொல்லியிருப்பதைப் பார்க்கின்றபோது பாரதியின் இந்த வரிகள்தான் ஏனோ ஞாபகத்திற்கு வருகின்றன. தலைமை அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தீபாவளிப் பண்டிகைக…
-
- 0 replies
- 2k views
-
-
ஜனாதிபதி, பிரதமர் வவுனியா விஜயம் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெறும் நடமாடும் சேவையில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் எதிர்வரும் 21 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி நடமாடும் சேவை இவ் ஆண்டு மூன்று இடங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் முதலாவது ஜனாதிபதி நடமாடும் சேவை பொலனறுவையிலும், இரண்டாவது நடமாடும் சேவை காலியிலும் நடைபெற்ற நிலையில் மூன்றாவதும் இவ்வாண்டின் இறுதியுமான நடமாடும் சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெ…
-
- 1 reply
- 365 views
-
-
சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த பெண் கைது சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த இலங்கைப் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டைத் தயாரித்து கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து ஜேர்மனி செல்வதற்காக கட்டாரில் இறங்கி (ட்ரான்சிட்) மாற்று வழிமூலம் செல்லத் தயாரான நிலையில், சோதனை நடவடிக்கையின் போது போலி கடவுச்சீட்டில் செல்ல முயன்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பெண் முதல் கட்ட விசாரணைகளின் போது உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது தனக்கு வாய்பேச முடியா…
-
- 0 replies
- 455 views
-
-
சு.க.வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கடுமையான விரக்தி நிலையில் (ரொபட் அன்டனி) சுதந்திரக்கட்சியில் இருக்கின்ற பல சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் அதிருப்தியுடனும் விரக்தியுடனுமே காணப்படுகின்றனர். கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்படுகின்றமை என்னைப்போன்ற சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன் செனவிரட்ன தெரிவித்தார். இவ்வாறு நிலைமை நீடித்தால் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினால் 2020 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது. நாம் கட்…
-
- 0 replies
- 280 views
-
-
இராணுவம் மீதான யுத்த குற்றச்சாட்டுக்களை மன்னிக்க தமிழ்க் கூட்டமைப்பு தயாரா ? விடுதலை புலிகளை அரசியல் கைதிகளாக அர்த்தப்படுத்தி விடுதலை செய்யக்கோருவோர் இராணுவத்தை தண்டிக்க கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியாது. புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதென்றால் இராணுவத்தின் மீதான யுத்த குற்றச்சாட்க்டுகளையும் மன்னிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டினை கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். மாகாண முதலமைச்சரின் விருப்பத்திற்கு அமைய ஆளுநரை நியமிக்கும் யோசனை ஒன்று புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்…
-
- 1 reply
- 434 views
-
-
தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதவரளிக்கப் போவதில்லை – சுமந்திரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாகாணசபைகளுக்கு நிதி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தில் மாகாணசபைகளுக்கு நிதி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதவரளிக்கப் போவதில்லை என சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://…
-
- 0 replies
- 237 views
-
-
ஓமந்தை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 20 பேர் கைது.! ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் பாடசாலைக்கு அருகே காணப்படும் அபிராபி விலாஸ் உணவகத்திற்கு முன்பாக கடந்த (13.10.2017) அன்று நண்பகல் புதிய சின்னகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கும் நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி வாள் வெட்டுச் சம்பவத்தில் முடிவடைந்தது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சின்ன புதுக்குளம் பகுதியை சேர்ந்த 15 நபர்களையும் நொச்சிமோட்டையை சேர்ந்த 5 நபர்களையும் ஓமந்தை பொலிஸார் (15.10.2017) கைது செய்து நேற்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய சமயத்தில் குறித்த 20 நபர…
-
- 0 replies
- 343 views
-
-
வடமராட்சியின் சில பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ள குற்றச் செயல்களைத் தடுக்கும் பெருட்டு வடமராட்சியின் சில பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அச்சுவேலி மற்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பயணங்களின்போது சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/37723.html
-
- 0 replies
- 224 views
-
-
என்னை பகடைக்காயாக பயன்படுத்தி தேர்தலை பிற்போட அரசு முயற்சிக்கவில்லை நுவரெலியா,அம்பகமுவை எல்லை நிர்ணயம் குறித்து இன்று பேச்சு; அதன் பின் வர்த்தமானி அறிவித்தல் என்கிறார் அமைச்சர் மனோ (ஆர்.யசி) நுவரெலியா, அம்பகமுவை பிரதேசசபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பில் இன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இதற்கு தீர்வு கண்டபின்னர் மாநகர, நகர மற் றும் பிரதேசசபை திருத்த சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். என்னை பகடைக்காயாக பயன்படுத்தி தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கவில்லை, என…
-
- 0 replies
- 476 views
-
-
புதிய தகவலொன்றை வெளியிட்டார் மஹிந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு தனக்கு போதுமான கால அவகாசம் இருக்கவில்லையென்றும் அதை ஒழிக்கும் முகமாகவே தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரு வருடங்கள் மீதியாக இருந்த நிலையில், முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமும் மக்களின் ஆணையும் இருந்த போதிலும், நீதியான சமுதாயத்துக்கான தேசிய இயக்கம் கேட்டுக்கொண்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஆட்சி முறையை ஏன் ஒழிக்கவில்லை என்று மஹிந்த ராஜபக் ஷவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர் …
-
- 0 replies
- 476 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளுடன் உறவுகள் உருக்கமான சந்திப்பு உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரையும் அவர்களது உறவினர்கள் நேற்று நேரில் பார்வையிட்டனர். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவர்களை உறவினர்கள் நேரில் பார்ப்பது இதுவே முதல் தடவை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோலத்தைக் கண்டதும் உறவினர்கள் அவர்களைக் கட்டிக்கொண்டு கதறி அழுதனர். தமது பிள்ளைகளை இந்தக் கோலத்தில் காணவா இங்கு வந்தோம் என்று அவர்கள் கண்ணீர்விட்டழுத சம்பவம் பார்ப்பவர்கள் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. வவுனியாவில் முன்னெடுக்கப்பட…
-
- 0 replies
- 392 views
-
-
மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரவா முயல்கிறீர்கள் சுரேஷ், கஜேந்திரன், சிவாஜிலிங்கத்திடம் டிலான் பெரேரா கேள்வி (ரொபட் அன்டனி) ஜனாதிபதியின் யாழ்.விஜயத்திற்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் மீண் டும் மஹிந்த ராஜபக் ஷவை பதவிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்களா என்று நாங்கள் நேரடியாகவே அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றோம் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்த…
-
- 0 replies
- 448 views
-
-
இடைக்கால அறிக்கைக்கு மஹிந்த எதிர்ப்பு அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரைவு அறிக்கையின் பல்வேறான விடயங்களுக்கு, தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பாக, அறிக்கையொன்றை நேற்று (16) வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்துக்கு, தேர்தல் முறைமையை மாற்றவும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் மாத்திரமே மக்களாணை கிடைத்தது எனவும், இருக்கின்ற அரசமைப்பை இல்லாது செய்து, புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கு ஆணை கிடைத்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 411 views
-
-
நாட்டை சீரழிக்கும் நடவடிக்கையில் தென்பகுதி இனவாதிகள் சிங்கள மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் உருவாகி விட்டது.இவ்வாறு கூறியவா் இந்த நாட் டின் இனவாத அரசியல்வாதி ஒருவரல்ல. அகிம்சையையும் தா்மத்தையும் போதிக்க வேண்டிய பௌத்த தேரா் ஒருவரே இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளாா். பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரா் இனவாதக் கருத்துக்களைத் தெரிவிப்பதில் பிரசித்தி பெற்றவா்.இவரது நடவடிக்கைகளும் தான்தோன்றித்தனமானவை. பௌத்த மக்களின் ஆதரவு இவருக்குப் பெருமளவில் இருப்பதால் இவா் எவருக்குமே அஞ்சுவதில்லை.ஆட்சியாளா்கள்கூட இவருக்கு அ…
-
- 0 replies
- 356 views
-
-
‘அரசியல் கைதிகள் விவகாரம் சட்டமா அதிபருக்கு மாத்திரமல்ல’ அரசியல் கைதிகளின் விடயத்தில், அரசியல் அடையாளங்களும் காணப்படும் நிலையில், இவர்கள் தொடர்பான வழக்குகள், சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானவையாகக் கருதப்பட முடியாது என, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ள சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையின் வலியுறுத்தவுள்ளார். இப்பிரேரரணை சமர்ப்பிக்கப்படுமென, ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில், பிரேரணையின் உள்ளடக்கங்கள், நேற்று (16) வெளியிட்பட்டுள்ளன. “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள் அனைவரும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே கைது செ…
-
- 1 reply
- 218 views
-
-
ஹம்பாந்தோட்டைத் தாக்குதல்: தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணை ஹம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைப் பொலிஸார் தாக்கினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைகளை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று (16) ஆரம்பித்தது. தங்காலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்த மீதே, இவ்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை, இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயலப்படுகிறது எனத் தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், ஒக்டோபர் 6ஆம் திகதி, ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். நீதிமன்ற உத்தரவை மீறி இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தடுத…
-
- 0 replies
- 328 views
-
-
முல்லைத்தீவு பெருங்காட்டுப்பகுதியில் அபாயகரமான பொருட்கள்: பீதியில் மக்கள் முல்லைத்தீவு பெருங்காட்டுப்பகுதியில் அபயகரமான இராணுவ வெடிபொருட்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. காட்டுப்பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் இறுதி யுத்தத்தின் போது இந்த பகுதியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்றை வைத்திருந்திருந்திருக்காலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதே வேளை குறித்த காட்டடுப்பகுதியில் இருந்து வவுனியா நெடுங்கேணி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு கனரக வாகனங்களின் ஊடக வெடிபொருட்களை கொண்டு செல்லக்கூடிய தரைவழிப்பாதைளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் ய…
-
- 0 replies
- 447 views
-
-
2017ம் ஆண்டுக்கான சமாதான தூதுவர் விருது இம்முறை வீ.ஆனந்த சங்கரிக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊழரnஉடை ழக துரளவiஉந ழக Pநயஉந வின் 2017ம் ஆண்டுக்கான சமாதான தூதுவர் விருது இம்முறை வீ.ஆனந்த சங்கரிக்கு வழங்கப்பட்டது. கடந்த 14.10.2017 அன்று மாலை அக்கரைப்பற்று மெங்கோ கார்டன் ஹோட்டலில் இடம்பெற்ற தேசகீர்த்தி விருதுகள் வழங்கும் நிகழ்வில் குறித்த விருது அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது. நல்லிணக்க மற்றும் சமத்துவத்துக்காக பாடுபட்ட ஏனைய 30க்கும் மேற்பட்ட சமாதான நீதவான்களுக்கும் கவுன்சிலின் தலைவர் மஹேஸ்வரன் ஆகியோருக்கும் தேசகீர்த்தி விருதுகள் வழங்க்கப்பட்டது. நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட கூலியற்று வேலைசெய்யும் சமாதான தொண்டர்களான (…
-
- 4 replies
- 833 views
-
-
சக்தி டிவி செய்திகள் 16-10-2017
-
- 0 replies
- 475 views
-
-
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழா இன்று( 16-10-2017) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில இடம்பெற்றது. பிற்பகல் ஒரு மணிக்கு பாடசாலையின் முதல்வர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலை மாணா்களின் நடனங்கள். இசை, நாடகம், பேச்சு உள்ளிட்ட பல நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. மாகாண மற்றும் தேசிய ரீதியில் பாடசாலை மட்டங்களில் வெற்றிப்பெற்ற சிறப்பாக பல கலை நிகழ்வுகளும் முத்தமிழ் விழாவில் அரங்கேறின. இந்த நிகழ்வில் கல்வி அதிகாரிகள் பாடசாலைகளின் அதிபா்கள், வைத்தியர்கள், ஆசியரியர்கள் பெற்றோர்கள் மாணவா்கள் என பலா் கலந்துக…
-
- 0 replies
- 253 views
-
-
வடக்கு - கிழக்கு தொடர்பில் எமது நோக்கம் இதுவே ; கூறுகிறார் கருணா அம்மான் வட,கிழக்கு இணைந்திருக்க வேண்டும் அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் என கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் மதுரோயா திட்டம் என்னும் பெயரில் கீழ் பாரிய நில அபகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ மாகாணசபை உறுப்பினர்களுக்கோ எதுவும் தெரியாது எனவும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று நித்திரை தூங்…
-
- 3 replies
- 629 views
-