ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
சிறுபான்மையினரின் சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தும் அரசியலமைப்பொன்றே தேவை – கிழக்கு முன்னாள் முதலமைச்சர் இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நிரந்தர நீடித்த சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தி உத்தரவாதமளிக்கும் அரசியலமைப்பொன்றே தற்போது நாட்டிற்கு தேவை என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார், ஆகவே ஒருமித்த நாடா அல்லது ஒற்றையாட்சி நாடா என்ற விவாத்திற்கு அப்பால்சென்று தற்போது தமக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா எனவும் அனைத்து இனங்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கப்படும் வகையிலான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்ற விவாதங்களுக்கு சமூகம் முன்…
-
- 0 replies
- 204 views
-
-
ஆளுநரைச் சந்தித்தது மாணவர் ஒன்றியம் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று காலை ஒன்பது மணியளவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு, சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநரின் பங்களாவில் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஐனாதிபதியுடன் பேச சந்தர்பத்தைத் பெற்றுத் தருமாறு சந்திப்பின்போது மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. (படங்கள்: எஸ். நிதர்ஷன், எஸ். ஜெகநாதன்) http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆளுநரைச்-சந்தித்தது-மாணவர்-ஒன்றியம்/71-205626 ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தரவும் : வடக்கு ஆளுநரிடம்…
-
- 0 replies
- 327 views
-
-
வடக்கு கிழக்கு இணைப்பு-கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்துப் பேச முடிவு? வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை வடபகுதியுடன் இணைப்பதற்கு பிரச்சினையில்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன மக்கள் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு கூறியமை தொடர்பாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமானால் கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனியலகு வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் அலகு தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்துடன் பேசியுள…
-
- 0 replies
- 351 views
-
-
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் ஸ்ரீபவன்? வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடமாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நிலவி வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக, அடுத்த தேர்தலில் ஸ்ரீபவனை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 6 replies
- 850 views
-
-
இரு குடிமக்களுக்கு ஒரு இராணுவ வீரராம் முல்லைத்தீவில் வடமாகாணத்தில் இராணுவத்தின் அதீத பிரசன்னத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டுவருவதாக அரசாங்கதரப்பினால் அடிக்கடி செய்யப்பட்டுவந்திருக்கும் அறிவிப்புக்களை அர்த்தமாற்றதாக்கும் வகையான புள்ளிவிபரங்களுடனான அறிக்கையொன்றை இரு சிவில் சமூக அமைப்புகள் வெளியிட்டிருக்கின்றன. கொள்கை ஆராய்ச்சிக்கான அடையாளம் நிலையமும், இலங்கையின் சமத்துவத்திற்கும், நிவாரணத்துக்குமான மக்கள் இயக்கமும் இணைந்து வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு குடிமக்களுக்கு ஒரு படை வீரர் என்ற விகிதாசாரத்தில் இராணுவத்தின் பிரசன்னம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் சனத…
-
- 0 replies
- 311 views
-
-
இராணுவமா? கடற்படையா? பொலிஸாரா? விசாரணைகள் தீவிரம்! ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் காது இராணுவத்தினன் ஒருவரால் கடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஏழாம் திகதி கொழும்பு 7இல் அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர், 10 இராணுவ அதிகாரிகள், 8 கடற்படை அதிகாரிகள் ஆகியோர் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கெதிரான விசாரணையே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று …
-
- 0 replies
- 485 views
-
-
புத்த பெருமானின் சின்னங்களை அவமானப்படுத்திய தேரர் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார் புத்த பெருமானின் புனிதச் சின்னங்களையும், தலதா மாளிகையையும் பகிரங்கமாக விமர்சனங்களை மேற்கொண்டுவந்த பிட்டிதுவே சிறிதம்ம தேரர், மல்வத்துப்பீட மகாநாயக்கரிடம் மண்டியிட்டு மன்னிப்புக்கோரிய சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மல்வத்துப்பீட மகாநாயக்கர் முன்பாக மண்டியிட்டு மன்னிப்புக் கோரியதோடு, எழுத்து மூலமும் தனது மன்னிப்பை அவர் கேட்டதை அடுத்து மல்வத்துப்பீடம் அவருக்கான மன்னிப்பை கடும் எச்சரிக்கையுடன் வழங்கியுள்ளது. பகிரங்க மேடைகளிலும் பல இடங்களிலும் தலதா மாளிகை, மல்வத்துப்பீடம் மற்றும் புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை அவமானப்படுத்தியும், பகிரங்கம…
-
- 0 replies
- 648 views
-
-
ஒருமித்த நாடு என்பதை ஒருபோதும் அனுமதியோம் தினேஷ் சூளுரை; வடக்கு,கிழக்கு பிரிந்து செல்லும் அபாயம் என்கிறார் (ரொபட் அன்டனி) ஒருமித்த நாடு என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பை முன்வைத் தால் அதனை நிச்சயமாக கூட்டு எதிரணி தோற்கடிக்கும். விசேடமாக சர்வஜன வாக்கெடுப்பின் போது நாங்கள் அதனை தோற்கடிப்போம் என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். ஒருமித்த நாடு என்பது சமஷ்டி முறைமைக்கு சமனானதாகும். எனேவ ஒரு மித்த நாடு என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வந்தால் நிச்சயம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கையிலிருந்து பிரிந்து சென்று விடும் …
-
- 0 replies
- 289 views
-
-
இலங்கை கடலில் அத்துமீறினால் என்ன நடக்கும்.? எல்லைதாண்டி மீன்பிடித்தால் ரூ.6 கோடியே 75 லட்சமாக அபராத தொகை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. வங்காளவிரிகுடா கடலில் பாக்.ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அத்துமீறி இலங்கை கடலில் மீன்பிடிப்பதாக கூறி அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதுடன் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக மீனவர்களை மிரட்டும் வகையில் இலங்கை அரசு சமீ…
-
- 0 replies
- 254 views
-
-
தேசிய பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு தீபாவளி நிகழ்வில் பிரதமர் அறிவிப்பு (எம்.எம்.மின்ஹாஜ்) சுதந்திர இலங்கையின் 70 வருட பூர்த்தி யின்போது புதிய அரசியலமைப்பின் ஊடாக இனங்களுக்கு இடையில் பூரண நல்லிணக் கத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கின் றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு பணிகளை வேக மாக செய்துவிட முடியாது. அனைத்து விடய தானங்கள் குறித்தும் ஆராய்ந்து கலந்து ரையாடியதன் பின்னரே பிரச்சினைகளை தீர்க்க முடியும் என் றும் அவர் குறிப்பிட்டார். தேசிய தீபாவளி விழா நேற்று அலரிமாளி கையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு …
-
- 0 replies
- 382 views
-
-
நாமல் உள்ளிட்ட 8பேருக்கு பிணை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8பேருக்கு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிநீதிமன்ம் இன்று(16) பிணை வழங்கியுள்ளது http://www.tamilmirror.lk/செய்திகள்/நாமல்-உள்ளிட்ட-8பேருக்கு-பிணை/175-205620
-
- 0 replies
- 167 views
-
-
தாயகம் திரும்பிய இளைஞன் கட்டுநாயக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளார் சுவிஸர்லாந்திலிருந்து பல தசாப்தங்களுக்கு பின்னர் தாயகம் திரும்பிய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒக்ரோபர் 15 ஆம் திகதியான நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுவிட்ஸர்லாந்திலிருந்து வந்த இவரை விமான நிலையத்திலுள்ள ஸ்ரீலங்கா விஷேட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். யுத்தம் காரணமாக ஏழு வயதில் பெற்றோருடன், சுவிடஸர்லாந்து சென்று அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ள யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சொந்த இடமாக கொண்ட தேவன் கமலீசன் 27 வருடங்களுக்கு பின்னரே தெனது பூ…
-
- 0 replies
- 437 views
-
-
மைத்திரியும் பலவீனமும் தன்னைப் பலவீனப்படுத்தினால் பேய்தான் பலம் பெறும் என்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடந்த தேசிய தமிழ் மொழித் தின விழாவில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் பேய் எனச் சொன்னது முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைத்தான் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. அவரது யாழ்ப்பாணம் வருகைக்கு முன்பாக வடக்கு முழுவதும் நடத்தப்பட்ட ஒருநாள் முழு அடைப்பு மற்றும் அவரது வருகையின் போது இடம்பெற்ற கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் என்பவற்றை மனதில் கொண்டே அவர் இந்தக் கருத்தைத…
-
- 0 replies
- 483 views
-
-
டெங்கு நோய்த் தாக்கம்: யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி பலி டெங்கு நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை மாணவி ஒருவர் இன்று யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார். யாழ் புனித ஜோன் போஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவி கே. சரா உயிரிழந்துள்ளார். கடந்த 11,12,13 ஆம் திகதிகளில் காய்ச்சல் காரணமாக சோர்வடைந்து காணப்பட்டதுடன் தனியார் வைத்திய சாலையில் மாத்திரை பெற்று வந்துள்ளார். நேற்று 14 ஆம் திகதி காய்ச்சல் தீவிரமடைந்து காணப்பட்டதால், தனியார் வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்கு அன்றைய தினமே உடனடியாக யாழ் போதனாவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் சி…
-
- 1 reply
- 512 views
-
-
சிறையில் சுந்தரகாண்டம் வாசிக்கும் நாமல் எம்.பி. தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக் ஷ எம்.பி. இராமாயணத்தின் சுந்தர காண்டம் பகுதியை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றாராம். மத்தள விமான நிலையம் உட்பட நாட் டின் வளங்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்வதை கண்டித்து கடந்த ஆறாம் திகதி அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக கடந்த 10ஆம் திகதி மாலை கலகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற மூன்று மணி நேர விசாரணைகளை அடுத்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ஐக…
-
- 0 replies
- 375 views
-
-
வடக்கு கிழக்கில் துரித வீட்டுத் திட்டம் வடகிழக்கில் 2 ஆயிரம் மில்லியன் ருபா நிதியில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் உட்பட வாழ்வாதார திட்டங்களை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வடகிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம், ப…
-
- 0 replies
- 253 views
-
-
பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் இலங்கை பயணம் செய்ய உள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் தெஹ்மினா ஜானுவா ( Tehmina Janjua ) இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் தற்பொழுது ஓமானுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓமான் பயணத்தினை முடித்துக் கொண்டு அவர் இலங்கைக்கான பயணத்தினை மேற்கொள்வார் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் இந்த பயணத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/archives/45511
-
- 0 replies
- 565 views
-
-
யாழ் பாசையூர் அந்தோணியார் ஆலயத்தில் இனந்தெரியாத நபர்கள் அடாவடி யாழ் பாசையூர் அந்தோணியார் தேவாலயத்தில் நேற்று மாலை (15) வழிபாடு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழ் பாசையூர் பகுதியில் கடந்த சில வருடங்களாக இரு குழுக்களுக்கிடையே முரண்பாடு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் நேற்று ஒரு விளையாட்டு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று மாலை தேவாலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றிருந்த போது இனம்தெரியாத குழுக்கள், பொல்லு, வாள், கற்கள் போத்தல்கள் கொண்டு தேவாலயத்தினுள் இருந்தவர்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பின்னர் அவ் இடத்தை விட்டு தப்பி ச…
-
- 0 replies
- 430 views
-
-
பேசாமல் சென்ற ஜனாதிபதி பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து, அலரி மாளிகையில் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்த தேசிய தீபாவளிப் பண்டிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை இடம்பெறுமென, பண்டிகையின் நிகழ்ச்சிநிரலில் இடம்பெற்றிருந்தது. நேற்றைய நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த போதிலும், தனது பேச்சை, ஜனாதிபதி தவிர்த்துக்கொண்டார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பேசாமல்-சென்ற-ஜனாதிபதி/175-205593
-
- 0 replies
- 178 views
-
-
‘வவுனியா என்பது தமிழீழமா?’ வவுனியா நீதிமன்ற வழக்குகளை, அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றியமையானது, ஒரு மாபெரும் அனர்த்தத்துக்கும் அழிவுக்கும் சமமானதாகும் என, அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “வவுனியா என்பது தமிழீழமா, அநுராதபுரம் என்பது தென்பகுதியின் நிஜ பூமியா என்ற கேள்வியைக் கேட்க வைக்கிறது. காரணம், எவ்வித நீதி நியாயமின்றி, வவுனியா நீதிமன்ற வழக்குகளை, அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றியமையானது, ஆரோக்கியமான செயல் அல்ல. http://www.tamilmirror.lk/செய்திகள்/வவுனியா-என்பது-தமிழீழமா/175-205606
-
- 0 replies
- 241 views
-
-
மொழியால் மக்களை வேறுபடுத்தியோர் யார்? போராட்டங்கள், கறுப்புக்கொடி காட்டல்கள் என்ற பதற்றத்துக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி யாழ்ப்பா ணத்திற்கு நேற்று வந்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. இந்தப் பதற்றமான, அரசியல் சூடான கள நிலவரத்தில் இந்தப் பயணத்தைக் கூடுமான வரையில் தவிர்ப்பதே நல்லது என்று அவரது பாதுகாவலர்கள் அவருக்கு அறிவுறுத்தியிருப் பார்கள் என்பது நிச்சயம். திட்டமிட்டபடி தேசிய தமிழ் மொழித் தின விழா யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறாமல் உள்ளரங்கத்திற்கு இறுதிநேரத்தில் மாற்றப்பட்டதில் இருந்தே அதனை நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும். அந்தத் தடைகளை எல்லாம் மீறி தமிழ் மக்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தலாக மாட்டார்கள் என்று அவர் நம…
-
- 1 reply
- 731 views
-
-
மட்டக்களப்பு புதிய அரச அதிபராக மா.உதயகுமார்? மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் நியமனத்திற்கு இதுவரை இருந்துவந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது மட்டுநகர் மாநகர ஆணையாளராக ஏற்கனவே கடமையாற்றி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற மா.உதயகுமார் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக நியமனம் பெற்று விரைவில் கடமையை பொறுப்பேற்கவுள்ளதாக நம்பகமாக அறியமுடிகிறது. ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய திருமதி சாள்ஷ் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாக இடமாற்றலாகி கடந்ந 01/10/2017,ம் திகதி சென்றபின் முல்லைத்தீவு அரச அதிபரான திருமதி ரூபாவதி கேதீஷ்வரனை மட்டக்களப்பு அரச அதிபராக நியமிக்க சில அரசியல் வாதிகள் முயற்சியில் இறங்கியபோதும் இது கைகூடவில்லை. இந்நிலையி…
-
- 0 replies
- 485 views
-
-
பிணைமுறி ஆணைக்குழுவின் முன் ஆஜராக பிரதமர் தயார் பிணைமுறி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எப்போதும் தயாராக இருக்கிறாரென, பிரதமர் அலுவலகம், நேற்று (15) தெரிவித்தது. ஆணைக்குழுவின் அண்மைய அமர்வுகளில், பிரதமரின் பெயர் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஊடகக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பான ஊடகக் குறிப்பில், “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிணைமுறி ஏலங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு, அண்மைய நாட்களில் அவரைப் பற்றிய சுட்டிக்காட்டல்கள் இடம்பெற்ற நிலையில், அது தொடர்பான விளக்கங்களை அளிப்பதற்கு…
-
- 0 replies
- 365 views
-
-
சக்தி டிவி செய்திகள் 15-10-2017
-
- 0 replies
- 834 views
-
-
அப்துல் கலாமின் பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் 0 SHARES ShareTweet இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 86ஆவது பிறந்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் அப்துல் காலாமின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும், இந்தியச் சொற்பொழிவாளர் சுகி சிவத்தின் சொற்பொழிவு என்பன நடைபெற்றன. யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சியூலர் ஆ.நடராஜன்…
-
- 3 replies
- 390 views
-