ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ச முயற்சி தமிழ் மக்களின் ஆதரைவப் பெறும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சில முக்கிய தமிழ் பிரமுகர்களை மஹிந்த ராஜபக்ச சந்தித்து உரையாடுகின்றார். அதேவேளை இன்று வெள்ளிக்கிழமை மாலையும் முக்கியமான தமிழ் பிரமுகர் ஒருவரை மஹிந்த ராஜபக்ச சந்தித்து உரையடினார் என தமிழ் கட்சி ஒன்றின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியதாக ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சிக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெறும் நோக…
-
- 1 reply
- 300 views
-
-
சக்தி டிவி செய்திகள் 29 09 2017 , 8PM
-
- 0 replies
- 201 views
-
-
இலங்கை அகதிகளும் புலம்பெயர்ந்தனர் Share கடந்த காலங்களில் இலங்கையிலிருந்து 20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதைத் தெரிந்து கொள்ளாத பௌத்தவாதிகளே ரோஹிங்ய அகதிகளுக்கு எதிராகக் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவ்வாறு அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அகதிகளைப் பௌத்த பிக்குகள் தாக்கியிருந்தால் அவர்களைக் கைது …
-
- 0 replies
- 400 views
-
-
தமிழ் அரசியற் கைதி ஒருவரின் உடல் நிலை மோசம்; வைத்தியசாலையில் அனுமதி! அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரில் ஒருவர் உடல் நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்திய சாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆண்டு கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40) கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30) நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது 26) ஆகியோருக்கு, கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து வவுனியா நீதிமன்றில் வழக்கு நடைபெற்றது. இந்த வருடம்…
-
- 0 replies
- 305 views
-
-
ஆமை வேகத்தில் இலங்கை சாடுகிறது ஐரோப்பிய ஒன்றியம் Share ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்காக இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சில விடயங்களில் மெதுவான முன்னேற்றங் களே இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. தனது வாக்குறுதிகளை நிறைவேற் றும் ஆற்றல் இலங்கை அரசுக்கு இருப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவுடன் நடந்த சந்திப்பின் போது, ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ்ரோஸ் ஸ்ரைலியனிடெஸ் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 307 views
-
-
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 37 பெண்கள் உட்பட 1167 கைதிகளில் 826 பேர் மேன்முறையீடு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 1167 கைதிகளில் 826 பேர் தமக்கெதிரான மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 37 பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மரண தண்டனை கைதிகள் அனைவரும் வெலிக்கடை, மஹர, பல்லேகலை, அநுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://metronews.lk/?p=14538
-
- 0 replies
- 442 views
-
-
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப பீடம் திறப்பு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப பீடத்தினை இன்று (29) கல்வி இராஜாங்க அமைச்சல் வே.ராதாகிருஸ்ணன் திறந்து வைத்துள்ளார். தேசிய பாடசாலையான கிளிநொச்சி மத்திய மாகா வித்தியாலயத்தில் மத்திய கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப பீடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் பாடசாலை அதிபர் இரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (அத தெரண நிருபர்) http://tamil.adaderana.lk/news.php?nid=95938
-
- 0 replies
- 355 views
-
-
ஜனாதிபதியின் மன்னார் விஜயம் ரத்து: சிவகரன் காரணமா? மன்னார் - மாந்தை - திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை இன்று திறந்துவைப்பதற்காக மன்னாரிற்கு விஜயம் செய்யவிருந்த ஜனாதிபதியின் நிகழ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த விஜயம் தொடர்பாக பல்வேறு நபர்களினால் அதிருப்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. மன்னார் - மாந்தை - திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியாருக்கு சொந்தமான காணியை அபகரித்து பௌத்த விகாரை அமைப்பது நல்லாட்சியா என மன்னார் …
-
- 0 replies
- 383 views
-
-
ஆயுத களஞ்சியம் அறிவுக் களஞ்சியமாறிய அதிசயம் ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தவர்கள் ஜனநாயக வழிக்கு திரும்பி தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல்லும் தொழில்நுட்ப பீடமும் இன்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனினால் திறந்து வைக்கப்பட்டது. இதில் உரையாற்றிய அவர், 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த இடத்தில் பாதுகாப்பு தரப்பினரின் ஒரு ஆயுத களஞ்…
-
- 0 replies
- 399 views
-
-
-
- 1 reply
- 541 views
-
-
மஹிந்தவிற்கு சார்பாக தொடுத்த வழக்கு தள்ளுபடி.! ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்ககோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு போட்டியிட்டவரே கட்சியின் தலைவராக இருக்க முடியும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவ நகரசபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட இருவர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25079
-
- 0 replies
- 271 views
-
-
பௌத்தர்களா நாங்கள்? பிக்குகளின் செயற்பாடு குறித்து அமைச்சரின் சந்தேகம் புகலிடம் தேடி ஸ்ரீலங்காவுக்குவந்த ரோஹிங்கியா முஸ்லிம்களை கடும்போக்குவாத பிக்குகள் விரட்டியடிக்க முயற்சித்த செயற்பாட்டினால் தாங்களும் சிங்கள பௌத்தர்களா என்று ஒருதடவை சிந்திக்கத் தோன்றுகிறது என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சர் வஜித அபேவர்தன தெரிவித்துள்ளார். கடும்போக்குவாத பௌத்த பிக்குகளின் இவ்வாறான செயற்பாட்டின் ஊடாக ஒட்டுமொத்த பௌத்த மக்களுக்கே பேரவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பு கல்கிஸை பகுதியில் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் 30 பேரை நாடு கடத்தும்படி தென்னிலங்கையைச் சேர்ந்த கடும்போக்குவாத பௌத்…
-
- 0 replies
- 295 views
-
-
இலங்கை குறித்த உபகுழு கூட்டத்தில் பெரும் களேபரம் ரத் வீரசேகரவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற உப குழு கூட்டமொன்றில் இலங்கையிலிருந்து கலந்து கொண்டிருக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினருக்கும் புலம்பெயர் தமிழர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் உப குழு கூட்டத்தில் பெரும் களேபரமான நிலைமை ஏற்பட்டதுடன் இரண்டு தரப்பினரும் கடும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர். ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போது…
-
- 0 replies
- 249 views
-
-
மேலும் 5 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில்.! வடமத்திய மாகாண சபையின் அநுராதபுர மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 5 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர். வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்ட 5 பேர் இவ்வாறு பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/25075
-
- 0 replies
- 191 views
-
-
நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப ஏற்றப்பட்ட அணையாத விளக்கு அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையினூடாக ஏற்றப்பட்டிருக்கும் விளக்கை அணைய விடாமல் மேலும் பல விளக்குகளை ஏற்றுவதற்கான முயற்சிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியிருக்கின்றார். வருடத்திற்கு ஒரு தடவை தீபாவளி தினத்தன்று ஏற்றப்படும் தீப ஒளி போன்று நாடு முழுவதிலும் அணையாத விளக்குகளை பிரகாசிக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தி இருக்கின்றார். கொழும்பு மாநகர சபையினூடா…
-
- 0 replies
- 325 views
-
-
95 மில்லியன் ரூபா செலவில் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் மலையத்தில் உள்ள பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் (950 இலட்சம்) ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஓப்பந்த கைச்சாத்திடல் நேற்று கொழுப்பு இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் நடைபெற்றதாக ராஜாங்க கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். இந்த ஓப்பந்தம் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித்சந்துக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் சுணில் ஹெட்டியாராச்சிக்கும் இடையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரின் பிரத்திய…
-
- 0 replies
- 326 views
-
-
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் மீதான அத்துமீறல்: குற்றத்தடுப்பு பிரிவிடம் விசாரணை கையளிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீர வெளியிட்டு அறிவித்துள்ளார். இந் நிலையில் நேற்று முதல் விசாரணைகளை ஆரம்பித்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ் , மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்து மீறல்கள் தொடர்…
-
- 0 replies
- 291 views
-
-
வடக்கு கிழக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது.! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது ஒரு இலட்சத்து 80ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டிருக்கவில்லை. அங்குள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது நல்லதல்ல. அவர்களை அகற்றும் நோக்கமும் எமக்கு இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் அடிப்படையிலேயே படையினர் செயற்பாடுவகின்றனர். எனினும் இராணுவம் தொடர்பில் அவர்களுக்கு ஏதேனும் தெரிந்துகொள்ளவேண்டிய தேவை இருப்பின் வௌிப்படையான கலந்துரையடலுக்கு தாம் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டுகளில் கலந்துகொண்ட தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேன…
-
- 1 reply
- 350 views
-
-
தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக 214 பேர் தகவல்கள் கோரியுள்ளனர்.! தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருட காலப்பகுதிக்குள் குறித்த சட்டமூலத்தின் ஊடாக 214 பேர் தகவல்கள் கோரியுள்ளனர். இதன் மூலமாக 176 பேருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 20 தகவல் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி இவர்களிடம் இருந்து தகவல்களை வழங்குவதற்கு மொத்தமாக 933 ரூபா அறவிடப்பட்டுள்ளதாக தகவல் வழங்கல் அதிகாரியும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளருமான பி.எம்எம்.எம் பஸ்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு நிதி மற்றும் ஊட…
-
- 0 replies
- 423 views
-
-
எம்.பி.க்களை விலைக்கு வாங்கியுள்ள அரசு.! நாட்டை பிளவுபடுத்தும் பிரிவினைவாத அரசியல் அமைப்பை உருவாக்க அரசாங்கம் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கியுள்ளது. மாகாணசபை சட்டத்தை நிறைவேற்ற எவ்வாறு விலை பேசப்பட்டதோ அதேபோல் புதிய அரசியலமைப்பு விடயத்திலும் சதிகள் இடம்பெறுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அரசியல் அமைப்பை உருவாக்கும் விடயத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிராகரிக்க மக்கள் விடுதலை முன்னணி துணைவரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியல் அமைப்பை தடுக்கும் மக்கள் தெளிவூட்டல் செயற்பாடாக தே…
-
- 0 replies
- 193 views
-
-
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான யுத்தத்தில் இலங்கையும் சிக்கக்கூடும் அமெரிக்காவின் தேவைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தை விடவும் தற்போது நாட்டில் பாதுகாப்புச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேவைக்கு அமையவே இலங்கையில் பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகம் தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திட்டு அரசாங்கம் அமெரிக்காவின் தேவைக்கு அமைய படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ள…
-
- 0 replies
- 358 views
-
-
மக்கள் இயக்கத்தின் அடுத்த சத்தியாக்கிரக போராட்டம் கண்டியில் அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னின்று உழைத்த 62 இலட்சம் மக்கள் இயக்கத்தின் இரண்டாவது சத்தியாக்கிரக போராட்டத்தை எதிர்வரும் 3ஆம் திகதி கண்டி ஜோர்ஜ் ஆர்.டி. சில்வா மாவத்தையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் மூலம் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதுடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இனவாத சாயம் பூசுபவர்களுக்கு பதில் அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இவ் அமைப்பின் அங்கத்துவ கட்சியான நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன த…
-
- 0 replies
- 238 views
-
-
ரஷ்யாவிடம் இருந்து ஆழ்கடல் ரோந்து கப்பல் கொள்வனவு செய்யப்படுமா? ரஷ்யாவிடம் இருந்து ஆழ்கடல் ரோந்துக்கப்பல் வாங்கும் திட்டம் பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ளபோதிலும் அரசாங்கத்திடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் தேவைக்காக ரஷ்யாவிடம் இருந்து 158.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஜிபார்ட் 5.1 (Gepard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த முயற்சிகள் இன்னமும் பூரணமடையவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. எனினும் இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த…
-
- 0 replies
- 177 views
-
-
பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதி ஒருவர் பலி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான விமலவீர திஸாநாயக்கவின் கார் மோதியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளை செலுத்தியநபர் உயிரிழந்துள்ளார். எனினும் படுகாயமடைந்த மற்றைய நபர் அம்பாறை மாவ…
-
- 0 replies
- 132 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதில் இறந்தகாலத்திற்கான நீதி! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கண்டறிவதற்கான உடன்படிக்கை, எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இறந்த காலத்திற்குரியதல்ல என்றும் இலங்கைப் பிரதமர் கூறியிருக்கிறார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் ரணில் இவ்வாறு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சிகரமானது. ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது, பல்லாய…
-
- 0 replies
- 418 views
-