ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்தார் அனந்தி முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று சந்தித்துள்ளார். முல்லைத்தீவில் காணாமல் போனோரின் உறவுகள் கொட்டகை அமைத்து அங்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களை வைத்து கோராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குறித்த கொட்டகைக்குச் சென்ற அமைச்சர் அனந்தி சசிதரன் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அவர்களின் உறவுகளுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/30078.html
-
- 0 replies
- 217 views
-
-
புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கையை அங்கீகரிக்கவேண்டாம் சபைக்கு வரமுன்னரே சன்னதம் கொள்கிறது விமல் அணி அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவைக் கைவிடுமாறும், வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் எனக் கோரியும் விமல்வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அரச தலைவர் மைத்திரிபாலவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது. பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து சகல ஆள்களையும் பாதுகாக்கும் பன்னாட்டுச் சமவாயச் சட்டவரைவானது படையினரைப் பலிக்கடாவாக்கும் நோக்கிலேயே கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அ…
-
- 0 replies
- 278 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியட முடியாது முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலமே முஸ்லிம் காங்கிரஸ் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். எனவே அந்தக் கட்சியுடன் சேர்வதுதான் பொருத்தமாகும். இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மையக் குழு உறுப்பினருமான கலீல் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில்…
-
- 0 replies
- 364 views
-
-
டெனீஸ்வரனின் மனு தொடர்பில் ஒக். 3இல் உத்தரவு வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில், இடைக்காலத் தடையுத்தரவு மற்றும் பிரதிவாதிகளுக்கான நோட்டீஸ் பிறப்பிப்பது தொடர்பான உத்தரவு, ஒக்டோபர் 3ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (19) அறிவித்தது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராகவே மனுத்தாக்கல் செய்திருந்தார். தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான ஜி.குணசீலன் மற்றும் கே.சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்குமாறும் அந…
-
- 0 replies
- 308 views
-
-
கூட்டாட்சிக்கு ஏன் எதிர்ப்பு? வடக்கு மாகாணத்துக்குச் சிறப்பு அதிகாரங்களை வழங்கினால், மலையகம் போர்க் களமாக மாறிவிடுமென அஸ்கிரிய பீடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை அவர்கள் தேவையற்ற விதத்தில் அஞ்சுவதைக் காட்டுகின்றது. இதைவிட சமஷ்டி நாட்டைப் பிளவுபடுத்தாதென்ப தில் தமக்கு நம்பிக்கையில்லையெனத் தெரிவித்து தாம் இன்னமும் மாறவில்லையென்பதையும் அவர்கள் எடுத்துக் காட்டிவிட்னர். அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்து உரையாடியிருந்தார். இந்தச் சந்திப்பின்ப…
-
- 0 replies
- 388 views
-
-
ஆளும்தரப்பிலிருந்து முதன் முதலாக ஒருவர் இன்று எதிரணிக்கு தாவல்! விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆளும்தரப்பிலிருந்து பலர் எதிரணிக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் அண்மையில் கிறிஸ்தவ மத மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்ட அருந்திக பெர்னாண்டோ இன்று எதிரணியில் சென்று அமர்ந்துள்ளார். http://www.virakesari.lk/article/24632
-
- 0 replies
- 231 views
-
-
மானம் இல்லாதவர்கள் மானநஷ்ட வழக்குகினை தாக்கல் செய்கின்றனர் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் மானம் இல்லாதவர்களெல்லாம் மானநஷ்ட வழக்குகளை தாக்கல் செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற தமிழ் பத்திரிகை ஒன்றின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஊடகங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உண்மைகளை வெளியிடுவதை தவிர்க்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். எதிர்ப்புக்களை தாண்டி…
-
- 0 replies
- 337 views
-
-
தென்கொரியாவில் செல்வம்... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன், தென்கொரியத் தலைநகர் சியோலில் இடம்பெற்றுவரும், சமயங்களின் சமாதானத்துக்கான உலகக் கூட்டணியின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தென்கொரியாவுக்குச் சென்றுள்ளார். இந்த மாநாடு, நேற்று (18) இடம்பெற்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தென்கொரியாவில்-செல்வம்/46-204066
-
- 2 replies
- 547 views
-
-
20 ஐ அமுல்படுத்த பாரளுமன்றின் 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் 20 ஆவது திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உரியது அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் தெரிவித்தார். அதன்பிரகாரம், சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்பிற்கு முரணாக காணப்படுவதாகவும் அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் பாரளுமன்றின் 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்றைய அமர்விலேயே மேற்கண்டவாறு சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் அறிவித்தார். http://www.virakesari.lk/article/24631
-
- 0 replies
- 298 views
-
-
வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு இந்தியா உதவுமாம் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு உதவிகளை வழங்க இந்தியா இணங்கி யுள்ளதாகக் கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், அரச தலைவர் மைத்திரிபால மற்றும் தலைமை அமைச்சருடன் நடத்திய பேச்சுக்களின் போதும், இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன கடந்தவாரம் புதுடில்லிக்கு மேற்கொண்ட பயணத்தின் போதும் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போதும், இதற்கான இணக்கப்பாடுகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இந்தியப் பெருங்கடல் மாநாட்டுக்காகக் கொழும்பு வந்திருந்த போது, அயலுறவுத்துறை அமைச்சு …
-
- 2 replies
- 422 views
-
-
சுமந்திரன் மீதான கொலை முயற்சியுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் விடுவிப்பு! பாராளுமன்ற உறுப்பினர், சுமந்திரன் மீதான கொலை முயற்சியுடன் சம்மந்தப்பட்ட, குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் யாழ்.மேல் நீதிமன்றால் சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். https://news.ibctamil.com/ta/politics/suspects-involved-murder-of-Sumanthiran-release
-
- 1 reply
- 362 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வந்த பாம்பால் பரபரப்பு பாம்புக் கடிக்கு இலக்காகிய ஒருவர், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தன்னைத் தீண்டிய பாம்பை போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்கு எடுத்துவந்துள்ளார். அந்தப் பாம்பு போத்தலுக்குள்ளேயே 10 குட்டிகளைப் போட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம், காரைநகரில் நேற்று முன்தினம் ஒருவருக்குப் பாம்பு தீண்டியுள்ளது. அவர் சிகிச் சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சம்பவத்தில் காரைநக…
-
- 4 replies
- 724 views
-
-
வடக்கு - தெற்கு இனவாதிகளிடையே இரகசிய தொடர்பை அம்பலப்படுத்திய மனோ நாட்டில் இனவாதத்திற்கு உரமூட்டுவதற்காக வடக்கிலுள்ள இனவாதிகளுக்கும், தெற்கிலுள்ள இனவாதிகளுக்கும் இடையே உத்தியோகபூர்வற்ற உடன்படிக்கைகள் காணப்படுவதாக தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சகவாழ்வு பற்றி தெரியாத இனவாதிகளே ஐ.நா பொதுச் சபை அமர்வில் ஸ்ரீலங்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் உரை நிகழ்த்தவுள்ள நிலையில் அங்குகூடி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையர் எம் அடையாளம், பல இனங்கள் எம் சக்தி என்ற தொனிப்பொருளில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்க விழிப்புணர்வு நடவடிக்கை பதுளை…
-
- 0 replies
- 365 views
-
-
அண்மைக்காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் நிலைப்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்திருந்தால், உங்களுக்கு நிச்சயமாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதார செயல்பாடுகளானது கவலைக்குரியதாகவே இருக்கிறது. குறிப்பாக, 2015ம் ஆண்டு முதல் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி என்பதற்கு பதில் வீழ்ச்சி எனும் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் மாத்திரமே பொருளாதார வளர்ச்சியானது 3.8%மாக வளர்ச்சி கண்டிருக்கிறது. (இங்கு குறிப்பிடப்படும் பொருளாதார வளர்ச்சி என்பது, கடந்த ஆண்டுடன் அல்லது கடந்த காலாண்டுடன் ஒப்பிடுமிடத்து பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளதா? அல்லது அதே அளவு வளர்ச்சியை கொண்டுள்ளதா? என்பதையே குறிப்பிடுகிறது) …
-
- 0 replies
- 633 views
-
-
அமெரிக்க நுழைவிசைவு பொன்சேகாவுக்கு மறுப்பு ராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டுகளே அதற்குக் காரணம் “இலங்கை இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் என்மீதும் குற்றச்சாட்டுக் கள் உள்ளன. இதனாலேயே அமெரிக்காவுக்குச் செல்வதற்கு எனக்கு நுழைவிசைவு (விசா) மறுக்கப்பட்டிருக்கலாம்” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ‘அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் அமெரிக்காவுக்கு நீங்கள் செல்லவிருந்ததாகவும், உங்களுக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதாலேயே ச…
-
- 1 reply
- 611 views
-
-
மட்டக்களப்புக்கு விஜயம் செய்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக, பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களைப் பார்வையிடவுள்ளதுடன் வாழ்வாதார உதவி வழங்கல் மற…
-
- 0 replies
- 365 views
-
-
மண் கடத்தல்: தேடப்பட்டோர் கைதாகினர் - கே. மகா யாழ். துன்னாலை பகுதியில், மணல் கடத்தல் சம்பந்தமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்களில், சந்தேகநபர்கள் மூவர், நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் இன்று காலை ஏழு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்துள்ள சந்தேகநபர்கள் மூவரையும், விசாரணையின் பின் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக, நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மண்-கடத்தல்-தேடப்பட்டோர்-கைதாகினர்/71-203992
-
- 1 reply
- 167 views
-
-
சுன்னாகம் கழிவு ஒயில் விவகாரம்: நொதேர்ன் பவர் நிறுவனத்தின் சீராய்வு மனு நேற்றுத் தள்ளுபடி மேன்முறையீட்டு நீதிமன்று கட்டளை சுன்னாகம் நொதேர்ன் பவர் மின் உற்பத்தி நிலையத்தை இழுத்து மூடுமாறு உத்தரவிட்ட மல்லாகம் நீதிமன்றின் கட்டளைக்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை மீளவும் மல்லாகம் நீதிவான் மன்றுக்கே பாரப்படுத்தியது மேன்முறையீட்டு நீதிமன்று. சுன்னாகம் உள்ளிட்ட பிரதேசங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணை கலந்த வழக்கில், சுன்னாகம் நொதேர்ன் பவர் தனியார் மின் உற்பத்தி நிலையம் …
-
- 0 replies
- 334 views
-
-
நாளை புதிய சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு தீர்மானம் ஆளுங்கட்சி தலைவர்கள் விரிவாக ஆராய்வு (எம்.எம்.மின்ஹாஜ்) மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே முறையில் நடத்துவதற்கு ஏற்ற வகையில் 20ஆவது திருத்தத்திற்கு பதி லாக புதியதொரு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 20ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தில் தீர்மானம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பாராளுமன்றத்தில் சபநாயகர் இன்று அறிவிக்கவுள்ளார். ஆனாலும் 20ஆவது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பரிந்துரை …
-
- 0 replies
- 306 views
-
-
ஐ நா முன்றலில் இலங்கை இன அழிப்பு தொடர்பில் வைகோ
-
- 2 replies
- 510 views
-
-
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாடு இன்று ஆரம்பம் டொனால்ட் ட்ரம்ப், மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் முதல் நாளில் உரை (நியூயோர்க்கிலிருந்து ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகளின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொட ரின் அரச தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இன்று 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டடத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடர் அதன் தலைவர் மிரோஸ்லோவ் லஜ்கெக் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. கூட்டத் தொடரின் முதல்நாள் அமர்வில் பல முக்கிய தலைவர்களின் உரைகள் இடம்பெறவுள்ளன. ஐக்கிய நாடுகள் செயலாளர் நா…
-
- 0 replies
- 533 views
-
-
20 ஆவது திருத்தத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம் மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சி; பொது எதிரணி குற்றச்சாட்டு (எம்.சி.நஜிமுதீன்) அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளது. அத்தீர்ப்பினை சபாநாயகர் பாராளுமன்றில் நாளை (இன்று) அறிவிக்கவுள்ளார். அத்தீர்ப் பின் பிரகாரம் பதவிக்காலம் நிறைவடையவுள்ள கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்.எனினும் அரசாங்கம் மற்றுமொரு சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்து மாகாண சபைத் தேர்தலை பிற்போடு வதற்க…
-
- 0 replies
- 309 views
-
-
ஜெனிவாவில் பேரணி வைகோ, கௌதமன் உட்பட பெருமளவானோர் பங்கேற்பு (நமது விசேட நிருபர்) இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்களுக்கு நீதி வழங்கக்கோரி ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு முன்பாக நேற்று புலம்பெயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டப் பேரணியையும் எதிர்ப்புக் கூட்டத்தையும் நடத்தியிருந்தன. ஜெனிவா புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் உள்ள பூங்காவில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் ஒன்றுகூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் பெருமளவானோர் பேரணியாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முன்னாள் உள்ள முருகதாஸன் திடலை நோக்கி வருகை தந்தனர்.…
-
- 0 replies
- 265 views
-
-
வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படுவதில் குளறுபடிகள் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (18) இடம்பெற்றது. இக்கூட்டத்தை, இணைத் தலைவர்களான, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தலைமையேற்று நடாத்தினர். அங்கு விசேட பிரேரணையாக, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத் திட்டம் சார்ந்த விடயங்களை வட மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் முன்வைத்திருந்தார். குறித்த விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, “1990களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 3,417 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந…
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கையில், அகதிகளாக வந்துள்ள மியன்மார் மக்களுக்கு அந்த நாட்டிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமயம். படகுமூலமும் – விமானம் மூலமும் இலங்கைக்கு வந்த மியன்மார் மக்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தினால் (UNHCR) இலங்கையில் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுக் கொண்டு வருகிறது. இலங்கை அரசுக்கு ஒரு சதம்கூட செலவு இல்லை. ஒரு சில முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்களும், தனவந்தர்களும் இவர்களுடைய விடயங்களில் உதவி ஒத்தாசைகள் செய்து வருகின்றனர். ஐரோப்பிய நாடோன்றிற்கோ அல்லது அவர்களது சொந்த நாட்டின் நிலைமை சுமுகம் ஆகும் வரை இவர்கள் தற்காலிகமாக இலங்கையில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களின் முழு செலவையும் ஐக்கிய நாடுகளின் …
-
- 4 replies
- 568 views
-