ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி. கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 …
-
- 1 reply
- 210 views
- 1 follower
-
-
2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்! போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ பயன்பாட்டைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 46,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகள் தண்டப் பணம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 46,635 வாகன சாரதிகள் ‘GovPay’ செயலி மூலம் அபராதம் செலுத்தியுள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜனவரி 24 வரை போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 11,715 சாரதிகள் ‘GovPay’ செயலியைப் பயன்படுத்தி அபராதம் செலுத்தினர். அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவினால் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://athavan…
-
- 0 replies
- 120 views
-
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்! இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந் நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்புக்கு சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன. இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த போராட்டத்தில் பல்கலைக…
-
- 10 replies
- 590 views
- 2 followers
-
-
சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை -அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம் 03 Feb, 2026 | 04:50 PM (நா.தனுஜா) கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. தமிழர்கள் குடியேற விரும்பாத அப்பகுதியில், அதனையே காரணமாகக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. எனவும் முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் என தமிழ்ப்பிரதிநிதிகள் வலியுறுத்தி…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல் Feb 3, 2026 - 07:21 PM வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டமூலத்தின் நோக்கங்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) விளக்கமளித்தார். இந்த சட்டமூலத்தின் நோக்கமாக அமைவது வீட்டு உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் இடையே உள்ள உறவைப் பாதுகாப்பதாகும் என அமைச்சர் கூறினார். அதன்படி வாடகை அடிப்படையில் வீடொன்றை வழங்கும்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படி செயல்பட வேண்டும் என்றும், எந்த வகையிலாவது அந்த ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமாக செயல்பட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அங்…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு Feb 3, 2026 - 06:28 PM ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (3) ரிட் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய போதே, ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீ…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை Feb 3, 2026 - 06:09 PM 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. 2020 தொடக்கம் 2021 வரை மூன்று தடவைகள் குற்றம் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 27 வயதுடைய நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகேதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அத்துடன் குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் …
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
இலங்கை கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறை Feb 3, 2026 - 04:49 PM இலங்கை கடற்பரப்பிற்கும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மீனவர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (3) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான மீனவர்களுக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து நஷ்டஈடு அறவீடு Feb 3, 2026 - 12:42 PM இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21 ரூபா மின்சார சபையின் நஷ்டஈடாகவும், 2,527,500.00 ரூபா நீதிமன்ற அபராதமாகவும் இவ்வாறு அறவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார மீட்டர்களில் மாற்றங்களைச் செய்து மின்சாரத்தைப் பெற்ற 1,259 சம்பவங்களும், கொக்கிகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 72 சம்பவங்க…
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
கிவுல் ஓயா திட்டத்துக்கு முற்றுப்புள்ளியிடும் பொறுப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உண்டு - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிப்பு 03 Feb, 2026 | 10:34 AM (நா.தனுஜா) புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளும் தமிழ்மக்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் விரோதமானவையாகவே இருக்கின்றன. எனவே தமிழர்களுக்குத் தீங்காக அமையக்கூடிய கிவுல் ஓயா திட்டத்தை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் உண்டு என்பதை சகலரும் மனதிலிருத்திச் செயற்படவேண்டும் என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுற…
-
- 0 replies
- 89 views
- 1 follower
-
-
சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது - தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை ; சாணக்கியன் இராசமாணிக்கம் 03 Feb, 2026 | 01:18 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மணலாறு பிரதேசத்தில் சட்டவிரோதமான குடியேற்றப்பட்ட வெலிஓயா குடியேற்றவாசிகளுக்கு நீர் வழங்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பிரதேசங்களுக்கு நீர் விநியோக திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது. தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை. இது என்ன நியாயம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வ…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-
-
மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025–2030க்கு அமைச்சரவை அனுமதி Published By: Digital Desk 3 03 Feb, 2026 | 03:07 PM (சரண்யா பிரதாப் ) மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பான தேசியக் கொள்கைக்கு அமைய, 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மின்சார தேவையின் 70 சதவீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்வதற்கும், 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைப்பதற்குமான இலக்கை அடைவதற்கும், ‘மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025–2030’அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டம், 2007 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை நிலைபேண்தகு வலுச்சக்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் …
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ! இன்று காலை 9.30 பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிரிருந்தார் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர் அங்கு இருந்து வெளியேறியுள்ளார் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் தம்மால் வருகை தர முடியாது எனவும், அதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் ஷிரந்தி ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். மேலும் இன்று ராஜபக்ச ஆதரவாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பெருமளவானவர்கள் விசாரணைப் பிரிவிற்கு முன்னால் ஒன்று திரண்டிருந்தமையும் குறிப்ப…
-
-
- 2 replies
- 272 views
-
-
விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு adminFebruary 3, 2026 யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை சம்பிரதாயபூர்வமாகச்…
-
- 0 replies
- 118 views
-
-
அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது Feb 3, 2026 - 06:58 AM அரசியலமைப்புச் சபை இன்று (03) கூடவுள்ளது. அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்து இன்றைய தினம் அரசியலமைப்புச் சபை கவனம் செலுத்தவுள்ளது. அதன்படி, புதிய கணக்காய்வாளர் நாயகத்தைத் தெரிவு செய்யும் பணிகள் இன்றைய தினத்திற்குள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதல் கணக்காய்வாளர் நாயகம் பதவ…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
நாமல் ராஜபக்ஷ சி.ஐ.டியில் முன்னிலை! 03 Feb, 2026 | 11:03 AM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ அத்திணைக்களத்தில் இன்று காலை 10.15 மணியளவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237678
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
கிவுல் ஓயா திட்டத்தினால் கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய, குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயம் 02 Feb, 2026 | 07:02 PM கிவுல் ஓயா திட்டத்தினால் பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான சமூக, நில உரிமை மற்றும் பண்பாட்டு பாதிப்புகள் குறித்து நேற்றைய தினம் (01) இடம்பெற்ற சமூக மட்ட விழிப்புணர்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் மாநாடு ஹட்டனில் ஏற்பாடு 02 Feb, 2026 | 05:57 PM மலையகத் தமிழ் மக்களின் காணி, வீட்டு உரிமை, முறையான மாதாந்த சம்பளம் மற்றும் குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சம உரிமை இயக்கம் மற்றும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து எதிர்வரும் புதன்கிழமை (04) ஹட்டனில் மாபெரும் மக்கள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 'மலையகத் தமிழ் மக்களே தளராது போராடுவோம்' எனும் கருப்பொருளின் கீழ் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஹட்டன் கிருஷ்ணபவன் கலாசார மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் இம்மா…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி வலி கிழக்கில் கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை நிறைவேற்றம் 02 Feb, 2026 | 03:58 PM தமிழ் மக்களின் பூர்விக தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாகவே கிவுல் ஓயாத்திட்டம் அமைகிறது எனத் தெரிவித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சபைக் கூட்டம் இடம்பெற்றது. கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான பிரேரணை சபையில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்னால் முன்வைக்கப்பட்டது. இப் பிரரேரணையினை சபையில் முன்வைக்க முடியாது என மத்தியில் ஆளும் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு Feb 2, 2026 - 07:22 PM 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனியார் விண்ணப்பதாரர்கள் தமது அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திணைக்கள இணையத்தளத்திற்குச் சென்று தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் கால அவகாசம் 2026.02.10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும். திருத்தங்களுக்கான இந்தத் திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி நபரொருவர் பலி! 02 Feb, 2026 | 04:55 PM பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) மதியம் இராணுவ வாகனம் மோதியதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் வீதியை கடக்க முயன்றபோது அவர்மீது இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தை செலுத்திய பெண் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பலாலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/237632
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு Feb 2, 2026 - 06:50 PM 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, அவர்கள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், 75,000 ரூபாவுக்கும் குறைந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலமும் ரத்து செய்யப்படவுள்ளது. http…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு 02 Feb, 2026 | 04:34 PM மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை இந்தியப் பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய மீட்புப் பணியைச் செய்து முடித்துள்ளது. பாகிஸ்தான் கரையில் இருந்து சுமார் 1,500 கி.மீ (800 கடல் மைல்) தொலைவில், நடுக் கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இலங்கை பிரஜை ஒருவரை பாகிஸ்தான் கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சர்வதேச அளவில் விடுக்கப்பட்ட அவசர அழைப்பை ஏற்று, மிக விரைவாகச் செயல்பட்டு இந்த நீண்ட தூர மருத்துவ மீட்புப் பணியை அவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்தச் செயல் பாகிஸ்தான் கடற்படையின் திறமையை உலகிற்குக…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு 02 Feb, 2026 | 03:56 PM சுதந்திர தினத்தை “கரிநாள்” என பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இவ்விதமாக அழைப்பு விடுத்தனர். மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர். https://www.v…
-
- 2 replies
- 248 views
- 2 followers
-
-
கச்சத்தீவில் அரசியல் வேண்டாம் - வட மாகாண மீனவர் சங்கம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாம் என வட மாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வட மாகாண கடற்றொழில் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான அன்னலிங்கம் அன்னராசா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். கச்சத்தீவு வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக கச்சத்தீவு வரும் இந்திய மீனவர்கள், அங்கு இலங்கை - இந்திய மீனவ விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் அதனை யாத்திரைத் தளமாக மாத்திரம் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ள…
-
- 0 replies
- 162 views
-