ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143356 topics in this forum
-
சுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐ.தே.க துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐக்கிய தேசியக் கட்சி துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் தனித்து ஆட்சி அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி கொண்டுள்ளதாகவும், சுதந்திரக் கட்சியின் நடவடிக்கைகள் கூட்டு எதிர்க்கட்சியை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் …
-
- 0 replies
- 137 views
-
-
வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் - இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேபாளத்தில் வைத்து நேற்று இடம்பெற்றுள்ளது. பிம்ஸ்ரெக் அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டிற்கு அமைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 388 views
-
-
தூய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் சவால் வெற்றி கொள்ளப்படும் : ஜனாதிபதி மேலிருந்து கீழ் வரை மோசடிகள், களவு மற்றும் ஊழல்கள் நிறைந்திருந்த இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஒரேயடியாக மாற்றிவிட முடியாது என்றபோதும் நேர்மையாக செயற்படும், நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை உருவாக்கும் கஷ்டமான பணிக்காக தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அந்த சவாலை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்க்கும் தூய அரசியல் கலாசாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். தலவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மகாவலி எச் வலயத்தில் உள்ள விவசாயிகளுக்கு கா…
-
- 0 replies
- 120 views
-
-
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பது அவசியமற்றது: மனோ கணேசன் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20ஆம் திருத்த யோசனையை கைவிட வேண்டும் என்றும், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவுகளை நாம் வரவேற்கிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி-, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும…
-
- 0 replies
- 216 views
-
-
வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் டெலோவி;ன் தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம் வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அமைச்சு பதவியை உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைமைத்துவ குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் சனிக்கிழமை கூடிய அந்தக் கட்சியின் தலைமைத்துவ குழு ஐந்து மணித்தியாலங்கள் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டெனிஸ்வரனின் இராஜிநாமா விடயம் முக்கியமாக ஆராயப்பட்டதாக அந்தக் சட்சியின் செயலாளர் சிறிகாந்தா கூட்டம் …
-
- 1 reply
- 360 views
-
-
அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நேற்று யாழில் ஆரம்பமாகிய உலக சைவ இளைஞர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. அகில இலங்கை சைவ மகா சபையின் அமைப்பாளர் ப.நந்தகுமார் தலைமையில் இன்று காலை யாழ். நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இரண்டாம் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன. இதன் போது மாநாட்டின் இருநாள் நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்த தமிழக பேரூர் ஆதீன இளைய பட்டம் தவத்திரு மருத்தாச்சலம் அடிகளார் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டார். மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தம் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர். தமிழ் எங்கள் மொழ…
-
- 3 replies
- 741 views
-
-
செயற்றிறன் மிக்க நீதிக்கட்டமைப்பு அவசியம் – மா.இளஞ்செழியன் நாட்டின் நீதி கட்டமைப்பானது மிகவும் செயற்றிறன் மிக்கதாக இருக்க வேண்டும் என்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். ஒரு நாட்டின் அபிவிருத்தி நீதி கட்டமைப்பில் தங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் சங்கத்தின் நீதம் மலர் இன்று வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
- 7 replies
- 594 views
-
-
வாகன விபத்துகளில் ஐந்து மாதங்களில் ஆயிரத்து 270 பேர் பலி (எம்.சி.நஜிமுதீன்) 2017 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரையான முதல் ஐந்து மாத காலப்பகுதயில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி ஆயிரத்து இருநூற்று எழுபது பேர் பலியாகியுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவி தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதயில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் 528 இடம்பெற்றுள்ளதுடன் அதில் சிக்கி 548 பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கையை விட இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 34 மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் போக்க…
-
- 0 replies
- 295 views
-
-
சக்தி டிவி செய்திகள் 12 08 2017 , 8PM
-
- 0 replies
- 366 views
-
-
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆதரவளிக்கமாட்டோம்! சுமந்திரன் உறுதி எந்தவொரு சூழ்நிலையிலும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் தற்போதைய வடிவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மாகாண சபைகளை நேரடியாக நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது, மற்றும் ஒரே நேரத்தில் அனைத்து மாகாண சபைகளையும் கலைத்து, தேர்தலை நடத்துவது தொடர்பான 20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தினை அரசாங்கம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்த திருத்த யோசனை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா…
-
- 1 reply
- 280 views
-
-
விஜயதாஸவை தூக்குவதில் ஐ.தே.கவினர் விடாப்பிடி நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுப்பதற்கு தயாராகி வருகின்றது என்று அந்தக் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இது தொடர்பில் ஆராய்வதற்காகக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் கூடவுள்ளது. இதன்போது விஜயதாஸ ராஜபக்சவிடமிருந்து அமைச்சுப் பதவியைப் பறிக்கும் யோசனை முன்வைக்கப் பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தத் த…
-
- 2 replies
- 444 views
-
-
நல்லூர் புத்தகத் திருவிழாவை ஆரம்பது வைத்தார் வட மாகாண முதலமைச்சர் யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவினை முன்னிட்டும் இந்திய சுதந்திர தின 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் இந்தியத் துணைத்தூதரகமும் யாழ்.மாநகர சபையும் இணைந்து நடாத்தும் புத்தகத் திருவிழா வை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரம்பது வைத்தார். இந்த புத்தகத் திருவிழா நல்லூரிலுள்ள யாழ்.மாநகர சபை சுகாதாரப் பணிமனையில் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வட மாகாண மகளீர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, வடக்குக் கிழக்கு ம…
-
- 2 replies
- 271 views
-
-
போர் விதவைகள் அடிமைகளாக மத்திய கிழக்கிற்கு கடத்தப்படுகின்றனர் இலங்கையின் மூன்று தசாப்தகால போர் காரணமாக கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்படுவதாக தொம்சன் ராய்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட போர் விதவைகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ள போதிலும் 2011 ஆம் ஆண்டில் 300 பேர் வரையில் மாத்திரமே பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ளது. நீண்ட போரினால் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்தும் சுமார் 65 ஆயிர…
-
- 16 replies
- 1k views
-
-
சற்றுமுன் விஷேட அதிரடிப்படையினருக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் ; நீர்கொழும்பில் பரபரப்பு குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், எவ்வித உயிரிழப்புக்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ............................................. சற்றுமுன் வேனில் வந்த இனந்தெரியாத குழுவினருக்கும் விஷேட அதிரடிப்படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம் நீர் கொழும்பு குறன பகுதியில் வைத்து இடம்பெற்று வருவதாகவும், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். விஷேட அதிரடிப்ப…
-
- 1 reply
- 339 views
-
-
சிவம் கச்சாய் குமரன் சர்ச்சை : பொங்கி எழுந்த மலையக இளைஞர்கள் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் மலையக மக்கள் அடங்கலாக தமிழ் மக்களை இழிந்த வார்த்தை பிரயோகத்தைப் பயன்படுத்தி தூசித்தமை தொடர்பில் கச்சாய் சிவம் குமரன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கை வைத்திருக்கும் நபருக்கு எதிராக ஜேர்மன் தூதகரத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இழிந்த சொற் பிரயோகங்களை பயன்படுத்தி, பேஸ்புக் கணக்கொன்றின் ஊடாக காணொளிகளை பதவிட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டு, மலையக இளைஞர் தமிழ் சங்கத்தினர் இந்த முறைப்பாட்டு கடிதத்தை கையளித்துள்ளனர். சமூகத்தின் சுபீட்சத்தை மோசமடையச் செய்யும் இவ்வாறான காணொளிகள் வெளியிடப்படுவதை தடைசெய்வதற்கு ஜேர்மன் தூதரகம் நடவடிக்கை எடுக்க வ…
-
- 5 replies
- 1.7k views
-
-
‘கிழக்கில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்’ வேலை வாய்ப்புகள், காணி விடயங்கள், வியாபாரங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதனால் பாரியளவில் காணிகள் பறிபோய்கொண்டிருப்பதுடன், வியாபாரத்திலும் தமிழர்கள் பின்தங்கியுள்ளார்கள் எனவும், தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்தார். திருகோணமலை விசேட தேவையுடையோர் மண்டபத்தில் இன்று (12) காலை இடம்பெற்ற கட்சியின் திருமலைக்கான முதலாவது கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, “வட, கிழக்கில்…
-
- 0 replies
- 237 views
-
-
சுவிஸிலிருந்து பேஸ்புக் ஊடாக இயக்கப்படும் ஆவா குழு! கொழும்பு ஊடகம் தகவல் வடக்கில் செயற்படும் ஆவா குழு பேஸ்புக் ஊடாக ஒன்று சேர்வதாக பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த குழுவின் தற்போதைய தலைவர் நிஷா விக்டர் உட்பட பிரதான சந்தேக நபர்கள் நான்கு பேர் கொழும்பில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆவா குழுவை செயற்படுத்திய தலைவர் சன்னா என்பவர் சுவிட்சர்லாந்தில் மறைந்துள்ளார். அங்கிருந்து பேஸ்புக் ஊடாக ஆவா குழுவை இணைத்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கில் வாழும் இளைஞ…
-
- 15 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் இராணுவத்தினரால் 200 பேருக்கு மூக்கு கண்ணாடி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- விசன் கெயாா் நிறுவனத்தின் அனுசரணையில் கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் 200 பேருக்கு இன்று மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை கிளிநொச்சி இரணைமடு தாமரைத் தடாக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பார்வை குறைபாடுகள் உள்ள 200 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி படையினரின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன விசேட அதிதீயாக கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு மூக்குகண்ணாடிகளை வழங்கி வைத்துள்ளாா். …
-
- 0 replies
- 353 views
-
-
காணி அத்துமீறலுக்கு கடும் எதிர்ப்பு மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கோவில்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியில், சிலரின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். குறித்த தனியார் காணிக்குள் தமக்கும் காணிகள் உள்ளதாக கூறிய சிலர், அங்கிருந்த வேலிகளை அகற்ற முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து சென்றனர். குறித்த பகுதி, சிலர் பரம்பரையாக வாழ்ந்த பகுதியெனவும் சிலருக்கு 1973ஆம் ஆண்டு மரமுந்திரிகை செய்கையை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்ட காணியெனவும் அதற்கான உறுதிகள் உள்ளதாகவும் காணி உரிமையாள…
-
- 0 replies
- 222 views
-
-
முட்டி மோதும் முதல்வரும் தமிழரசுக் கட்சியினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட, வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அந்த மாகாண சபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரையும் கடந்த புதன்கிழமை கொழும்புக்கு அழைத்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவசர கூட்டமொன்றை நடாத்தியிருப்பது வடக்கின் அரசியல் களத்தை எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வடமாகாண சபை நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த ஞாயி…
-
- 0 replies
- 267 views
-
-
ரெலோ அவசரக் கூட்டம் – தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் எனத் தகவல்! தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ கட்சி) முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நோக்கில் இன்று வவுனியாவில் கூடியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. வவுனியா – வைரவபுளியங்குளத்தில் உள்ள அலுவலகத்தில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்தில் வட மாகாண அமைச்சராக உள்ள ரெலோ கட்சியை சேர்ந்த பா. டெனிஸ்வரன் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவுள்ளது என்றும், சம கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது என்றும் அந்தக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் த…
-
- 0 replies
- 185 views
-
-
மொழிக் கொள்கையை முறையாக அமுலாக்கினால் தேசிய பிரச்சினையில் 51 வீதத்திற்கு தீர்வு கிட்டும் எம்.பி.க்களுக்கான மொழி பயிற்சி வகுப்பு அங்குரார்ப்பணத்தில் அமைச்சர் மனோ (எம்.ஆர்.எம்.வஸீம்) அரச மொழிக்கொள்கை சரியான முறை யில் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு 51வீதம் தீர்வு கிடைக்கும். மீதியை அதிகாரப்பகிர்வின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய மொழிக் கல்வி, பயிற்சி நிறுவனம் மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தமிழ், சிங்கள மொ…
-
- 0 replies
- 190 views
-
-
வடக்கு, தெற்கு மக்கள் சம உரிமைகளை பெற்றுக்கொள்ளவே புதிய அரசியலமைப்பு மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க (ஆர்.யசி) நாட்டை பிளவுபடுத்தவோ, சர்வதேச சக்திகளுக்கு வாய்ப்பை வழங்கவோ புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை. வடக்கு, தெற்கு மக்கள் அனைவரும் சம உரிமைகளை பெற்றுக்கொள்ளவே புதிய அரசியல் அமைப்பு அவசியப்படுகின்றது என புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பின் மூலமாக நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்ற வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்க…
-
- 0 replies
- 235 views
-
-
நான் திருடன் அல்ல என எத்தனை அரசியல் வாதிகளுக்கு சொல்ல முடியும்? அமைச்சர் மனோ கணேசன் கேள்வி (நமது நிருபர்) நான் ஒரு திருடன் அல்ல, என இந்த நாட்டில் இருக்கும் எத்தனை அரசியல் வாதிகளுக்கு சொல்ல முடியும் என எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் அத்தகைய ஒரு அரசியல் கட்சி தலைவர் என்று எனக்கு சொல்ல முடியும் என நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழகத்தின் பிரபல தலைமைத்துவ பயிற்சியாளர் பாரிவள்ளலினால் ஜன நாயக இளைஞர் இணைய அங்கத்தவர்களுக்கு பயிற்சி செயலமர்வு நடத்தப்பட்டது. தேசிய சகவாழ்வு கலந்து…
-
- 0 replies
- 283 views
-
-
நோர்வேத் தூதுவர், எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்துப் பேச்சு இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே இன்று சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பு நாடாளுமன்றிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் சந்திப்பில் கலந்துகொண்டார். http://newuthayan.com/story/18409.html
-
- 2 replies
- 365 views
-