ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
சுயாட்சி இன்றேல் தமிழரின் தனித்துவம் பறிபோய்விடும் முதலமைச்சர் நேற்றுத் தெரிவிப்பு புதிய அரசமைப்பில் சுயாட்சி உள்ளடக்கப்படாவிட்டால் தமிழர்களது தனித்துவம் பறிபோய்விடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் கூட்டாட்சி அரசமைப்பு மற்றும் வடக்கு – கிழக்கு இணைப்பு என்பனவும் கட்டாயம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். சமகால அரசியல் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தீர்வுத் திட்டம் எந்த நிலைக்கு வந்துள்ளது என்று எனக்குத் தெரியாது. என…
-
- 2 replies
- 518 views
-
-
மன்னாரில் சக்தி வாய்ந்த வெடிபொருள்கள் மீட்பு மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாப்பாமோட்டை கிராம அலுவலர் பிரிவில் சக்திவாய்ந்த வெடிபொருள்கள் சில மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாப்பாமோட்டை கிராம அலுவலகர் ஊடாக காட்டுப்பகுதியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடி பொருள்கள் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக வெடி பொருள்கள் நேற்றுக் காலை மீட்கப்பட்டன. http://newuthayan.com/story/16486.html
-
- 0 replies
- 249 views
-
-
பயணிகள் பேருந்து தொடருந்துடன் விபத்து – 7 பேர் படுகாயம் வவுனியா, செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று மாலை 4மணியளவில் பயணிகள் பேருந்து தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரியவருகின்றது வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த அரச பேருந்து ஒன்று தொடருந்துக் கடவையை கடக்க முயன்றபோது மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகின்றது. விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 7பேர் படுகாயமடந்துள்ளனர் என்றும், பேருந்தின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்றும் கூறப்படுகின்றது. பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையிலேயே விபத்து நடந்துள்ளது என்றும் த…
-
- 0 replies
- 287 views
-
-
‘நிலாவரை’ புதிர் அவிழ்ந்தது குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை. அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பறிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது. …
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் உயர்நீதி மன்றம் தீர்ப்பு தேசிய வருமான சட்டமூலம் திருத்தமின்றி நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் தொடர்பான சட்டமூலம் திருத்தமின்றி நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்றம் இன்று ஆரம்பமாகிய போது சபாநாயகர் கருஜயசூரிய இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22737
-
- 0 replies
- 326 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைகளின் கண்ணோட்டம் 04-08-2017
-
- 0 replies
- 170 views
-
-
சுன்னாகம் வாள்வெட்டு ; மூவர் கைது சுன்னாகம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் முறையே 21,23,24 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. நேற்று இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின்போது வாள்வெட்டுக் காயமடைந்த இருவர் யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். http://uthayandaily.com/story/15980.html
-
- 4 replies
- 560 views
-
-
வடக்கின் பாதுகாப்பு நிலையை ஆராய்கிறது அமெரிக்கா வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், ஆராய்ந்துள்ளார். அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகராகக் கடந்த மாத இறுதியில் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் பொறுப்பேற்றிருந்தார். முதலில் பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசிய அவர், அடுத்த கட்டமாக வடக்கிலுள்ள படைத் தளங்களுக்கான பயணத்தை மேற்கொண்டார். கடந்த 30 ஆம் திகதி கிளிநொச்சிப் படைகளின் தலைமையகத்துக்கு சென்று, அதன் கட்டளை அதிகார…
-
- 2 replies
- 341 views
-
-
அம்மாச்சி உணவகத்துக்கு சிங்களப் பெயர் திணிக்க முயற்சி என்கிறார் விக்கி அம்மாச்சி உணவகத்துக்கு சிங்களத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று கொழும்பு அரசு வற்புறுத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலும் இதைப்போன்ற உணவகம் அமைப்பதற்கு நடுவண் அரசிடம் நிதி கோரப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே கொழும்பு அரசு மேற்படி நிபந்தனை விதித்துள்ளதை முதலமைச்சர் நேற்று வெளிப்படுத்தினார். …
-
- 2 replies
- 629 views
-
-
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர் கட்சியை சேர்ந்த 34 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை பாராளுன்ற செயலாளரிடம் கையளிக்கப்ட்டுள்ளது. http://www.virakesari.lk/article/22691
-
- 2 replies
- 258 views
-
-
லெப்டினன்ட் கேர்னல் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் லெப்டினன்ட் கேர்னல் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி காணாமற்போயுள்ளதாக அவரின் மனைவி முறைப்பாடு செய்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தனர். பல தடவைகள் நீதிமன்றத்தைப் புறக்கணித்ததன் காரணமாக, மேன்முறையீட்டு மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாக இருக்கும் போது, மேல் நீதிமன்றத்தால் விடுதலை செ…
-
- 1 reply
- 400 views
-
-
மனித உரிமை மீறலில் பொலிஸ் என குற்றச்சாட்டு “பொலிஸார் ஆதாரமில்லாமல் எங்கள் பிள்ளைகளைக் கைது செய்கின்றனர். நாங்கள் பயத்தில் உறைந்து போயுள்ளோம். அதற்கெதிராக நடவடிக்கை எடுங்கள்” என்று வடமராட்சியைச் சேர்ந்த தாய்மார்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்தியக் கிளையில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். வடமராட்சியில் கடந்த சில தினங்களாகப் பொலிஸார் தொடர் தேடுதல் நடத்தி வருகின்றனர். பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் 17 பேரை இதுவரை கைது செய்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில், கைது செய்யப்பட்டுள்ளவர்களின் குடும்பத்…
-
- 0 replies
- 296 views
-
-
ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ அமைதிகாக்கும் படை உள்ளிட்ட தூதுக்குழு - இராணுவத் தளபதி சந்திப்பு ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் தலைநகரத்தைச் சேரந்த இராணுவ அமைதி காக்கும் படையினர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இராணுவத் தளபதி, கடந்த ஐந்து வருட காலமாக ஐக்கிய அமெரிக்காவுடனான அமைதிகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் தொடர்பாக விளக்கமளித்தார். இதன்போது, லெப்டினன்ட் கேணல் கால்ஸ் வாஸ் (தூதுக்ககுழுத் தலைவர் ) , லெப்டினன்ட் கேணல் டொங்லின் டொனமு, மேஜர் கால்ஸ் ரொ…
-
- 1 reply
- 266 views
-
-
கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி ஆபத்தில் முடியும் சுதந்திரக் கட்சியில் இருந்து அமைச்சர்கள் விலகினால் தனிக் கட்சி ஒன்று ஆட்சி அமைக்க நேரிடலாம். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத்தான் பெற வேண்டியேற்படும். அப்படி நடந்தால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு-ம் பிரச்சினை களுக்கும் எம்மால் இலகுவில் முகம் கொடுக்கமுடியாது. ஆகவே,கூட்டு அரசுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே வழி. இவ்வாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். கூட்டு அரசைத் தொடர்வது குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடாளுமன்றில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா…
-
- 0 replies
- 284 views
-
-
முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – ஸ்ரீகாந்தா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. உடனடியாகத் தேவைப்படுவது எல்லாம், பொதுமக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் பொலீசார் பெற்றுக்கொள்வதே ஆகும். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோவின்) செயலாளர் ந. ஸ்ரீகாந்தா குறிப்பிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டு உள்ளதாவது , “இராணுவத்தில் இருந்து ஓடிப் போனவர்…
-
- 3 replies
- 380 views
-
-
கிளிநொச்சியில் பஸ் விபத்து ; சாரதி உட்பட ஆறுபேர் வைத்தியசாலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி உட்பட காயமடைந்த ஆறுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறையுக்குள் மின்சார கம்பங்களையும் அருகில் இருந்த கடைத்தொகுதியையும் உடைத்துக்கொண்டு புகுந்ததில் சாரதி உட்பட ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்க…
-
- 0 replies
- 155 views
-
-
அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறச்சென்ற 15 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது. அவுஸ்திரேலியாவின் விசேட விமானத்தின் மூலம் குறித்த 15 பேரும் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 15 பேரும் விசாரணைகளின் பின்னர், விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு குடியேறச்சென்று திருப்பியனுப்பப்பட்ட 15 பேரும் ஆண்கள் என்பது குறிப்பி…
-
- 0 replies
- 147 views
-
-
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து 13வது உலக தமிழராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் 5ம், 6ம் திகதிகளில் நடாத்த விருக்கின்றது. இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 200 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலக தமிழராய்ச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து மேற்படி 13வது உலக தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. இதன்படி 5ம் திகதி 1வது மாநாடு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறும். இம் மாநாட்டில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரத்னம் விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள…
-
- 6 replies
- 1k views
-
-
நம்ம பள்ளிகளும் படிப்பும் ; நம்ம பயல்களும் ; பரீட்சைகளும் பெண் பிள்ளைகளும் பெடியளும் பொதுப் பரீட்சை மண்டபங்களில் பெண்பிள்ளைகளும் பெடியளும் (ஆண்பிள்ளைகளும்) தமக் குரிய வினாத்தாள் களைப் பெற்றுக்கொண்டு விடைகளை எழுதத் தொடங்கும்போது பின்பற்றும் சில படிமுறைகளை ஒருவர் வரிசைப்படுத்துகிறார். பெண்பிள்ளைகள் (1) எழுதுவார்கள் (2) முடியை காதுக்குப் பின்னால் எடுத்து செருகுவார்கள் (3) மீண்டும் எழுதுவார்கள் (4)பேனாவில் மையிருக்கா என்று பார்ப்பார்கள் 5)மீண்டும் எழுதுவார்கள் (6)கூடுதலாக பேப்பர் கேட்டு வாங்குவார்கள் (7)மீண்டும் எழுதுவார்கள். பெண்பிள்ளைகளின் மேற்சொன்ன படிமுறையை பெடியளோடு ஒப்பிட்…
-
- 0 replies
- 330 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 03-08-2017
-
- 0 replies
- 166 views
-
-
சக்தி டிவி செய்திகள் 03 08 2017 , 8PM
-
- 0 replies
- 231 views
-
-
‘மகேஸ்வரனின் குடும்பத்தை மண்ணிலிருந்து அகற்ற முயற்சி’ - எஸ்.நிதர்ஷன் மகேஸ்வரனின் குடும்பத்தை இந்த மண்ணிலிருந்து அகற்றுவதற்கும் அரசியலிலிருந்து ஒதுக்குவதற்கும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் உண்மையற்ற கருத்துக்கள் பரப்பப்படுகின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மகேஸ்வரனின்-குடும்பத்தை-மண்ணிலிருந்து-அகற்ற-முயற்சி/71-201820
-
- 1 reply
- 440 views
-
-
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் குப்பைத்தளம் பாரிய தீப்பிளம்புடன் எரிகிறது! யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கல்லுண்டாய் குப்பைத்தளம் சற்று முன்னர் பாரிய தீப்பிழம்புகளுடன் எரிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். வழமைக்கு மாறான இந்த தீப்பிளம்பானது பல கிலோமீட்டர்கள் தாண்டியும் தெரிவதால் எங்கேயோ பெரிய தீவிபத்து நேர்ந்துவிட்டதோ என்று பொதுமக்கள் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகரசபைக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படும் முக்கிய குப்பைத் தளமாக இது விளங்குகின்றது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளின்மூலம் இயற்கைப் பசளை…
-
- 0 replies
- 589 views
-
-
தேவை எது? கூட்டமைப்பு என்ற அரசியல் பலம் சிதறடிக்கப்படக் கூடாது; மழுங்கடிக்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். சில வாரங்களுக்கு முன்னர் வரைக்கும் கூட்டமைப்பின் ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படுத்திவிடுவாரோ என அச்சப்பட வைத்துக் கொண்டிருந்தவர் அவரே! இப்போது ஒற்றுமை குலையக்கூடாது என்றும் மாற்றுத் தலைமைக்குத் தான் ஆள் இல்லை என்றும் அவர் கூறிவருவது மட்டற்ற மகிழ்ச்சிக்குரியது. அரசியல் தலைவர்களான தங்களுக்குள் பிரிவினையும், கருத்து மோதல்களும் உருவாகி வருகின்றன என்று மிகைப்படுத்தியும் திரித்தும் ஊடகங்கள்தான…
-
- 0 replies
- 487 views
-
-
ரோந்துக் கப்பலில் அரசதலைவர் – இலங்கை வரலாற்றில் புதிய சம்பவம் இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் நடைபெற்றது. அந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கப்டன் நிசாந்த அமரோச நியமிக்கப்பட்டுள்ளார். கப்டனுக்கான ஆணையிடும் அதிகாரத்தை வழங்கிய அரசதலைவர் கப்பலின் பெயர்ப்பலகையையும் திறந்தார் கப்பலின் இயந்திர அறைக்குள் சென்று அதனை செயற்பாடுகளைப் அரசதலைவர் பார்வையிட்டார். கப்பலை உத்தியோகபூர்வமாக இயங்க வைத்தார். இலங்…
-
- 1 reply
- 325 views
-