ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
தனது பாதுகாப்பிற்காக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தமை குறித்து நீதிபதி இளஞ்செழியன் கண்ணீருடன் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவம் உள்நாடு மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையின் பிரபல நீதிபதியும் எழுத்தாளரும் கவிஞரும் மனித உரிமை ஆர்வலருமான பசில் பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார். அவர் எழுதியுள்ள கட்டுரையில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். நீதிபதி எம்.இளஞ்செழியன் கடந்த பல தசாப்த காலங்களில் இலங்கையில் உருவாகிய சிரேஷ்ட நீதிபதி ஒருவராகும். சமகாலத்தில் மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்படும் அவருக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகு…
-
- 0 replies
- 383 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம் நினைவில் வருகின்றது - மஹந்த ராஜபக்ஷ எச்சரிக்கை (லியோ நிரோஷ தர்ஷன்) யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது. நாட்டின் சட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்தி பரந்தளவில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றால் அதனை பாதாள உலகக் குழுக்களை காரணம் காட்ட முடியும். ஆனால் வடக்கின் நிலைமை அவ்வாறானது அல்ல. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலம் இவ்வாறான சம்பவங்களையே வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார…
-
- 7 replies
- 1.5k views
-
-
பொலிஸ் ஊடகபேச்சாளரின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். யாழ் நல்லூரில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் இறுதி நிகழ்வு சிலாபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று சென்ற போது, நீதிபதி இளஞ்செழியன் தனது கண்டனத்தை வெளியிட்டார். தன்னை கொலை செய்யும் நோக்கிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தில் பிரதானமாக பாதிக்கப்பட்டவர் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளுக்கமைய இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். அங்கு பொலிஸ் அதிகாரிகள் இருவரும் முடிந்தளவு தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு முயற்சித்ததாக நீதிபதி குறிப்பிட்டுள்…
-
- 0 replies
- 304 views
-
-
கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களிற்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது . குறித்த நிகழ்வு மாலை 3 மணியளவில் அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிராந்திய பயிற்சி நிலைய மண்த்திடபத்தில் இடம்பெற்றது. குறிதத் நிகழ்வில் பிரதம விருதந்தினராக வடமாகாண முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான சி வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார். இதன்போது தெரிவு செய்யப்பட்ட 56 பயிற்சியாளர்களிற்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. வடம…
-
- 0 replies
- 319 views
-
-
கிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதியின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 2016 இல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனம் இராஜகோபால் ( வயது 59) என்பவருக்கு கிடைத்துள்ளது. இதில் முதலாம் இடம் களுத்துறையைச் சேர்ந்த விவசாயிக்கு கிடைத்துள்ளது. இரண்டாம் இடத்தினை பெற்ற இவருக்கு சான்றிதழ் விருது உட்பட நான்கு இலட்சம் ரூபா பணமும் வழங்கி கௌரவிக்க…
-
- 0 replies
- 521 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 260717
-
- 0 replies
- 179 views
-
-
ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகள் இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன. அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இன்றைய தினம் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. இவர் கடந்த 15 வருடங்களாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டு வந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நீதிபதி இளஞ்செழியனின் நீண்ட கால பாதுகாப்பு உத்தியோகத்தரான சரத் ஹேமச்சந்திர, யாழ். நல்லூர் வீதியில் கடந்த சனிக…
-
- 3 replies
- 906 views
-
-
சக்தி டிவி செய்திகள் 26th July 2017, 8PM
-
- 0 replies
- 222 views
-
-
ஜனாதிபதி மைத்திரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் நாட்டுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளின் கொள்கைகளை அமுல்படுத்தி வருவதாகவும், இதனால் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கமும் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். http://gl…
-
- 0 replies
- 308 views
-
-
தேசியக் கொடியைக் கழற்றியவர் கைது -க. அகரன் வவுனியா மாவட்ட செயலகக் கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியைக் கழற்ற முற்பட்ட சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட செயலகத்தின் கொடிக் கம்பத்தில், கீழ் இறக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டிருந்த, தேசியக் கொடியை மாவட்ட செயலகத்துக்கு வந்த நபர் ஒருவர், கழற்ற முற்பட்டு, அதை அவமதித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதை அவதானித்த மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், இது தொடர்பில் அரச அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி…
-
- 1 reply
- 545 views
-
-
தங்க புத்தர் சிலையை கொள்ளையிட முயற்சி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி (எம்.எப்.எம்.பஸீர்) மீகளேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லஸ்ஸன கம பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இருக்கும் தங்க புத்தர் சிலை மற்றும் மாணிக் கக்கற்களை கொள்ளையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வரு கை தந்த கொள்ளையர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கொள்ளையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பொலிஸ் காவலின் கீழ் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. லஸ்ஸனகம விகாரையில் உள்ள தங்க புத்தர் சிலையையும், மாணிக்கக் கற்களையும் க…
-
- 3 replies
- 447 views
-
-
’மட்டக்களப்பிலிருந்து விசேட அதிரப்படிடை வெளியேற வேண்டும்’ மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரைப் பலப்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது. அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், மணல் ஏற்றுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றும் கேள்வியெழுப்பினார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் தொடர்பாக, ஊடகங்களுக்கு இன்று (26) கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "யாழ். நல்லூரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், ந…
-
- 1 reply
- 469 views
-
-
‘அரசியல் கைதிகளே இல்லையென்பது தமிழ் அரசியலை இல்லாது செய்வதாகும்’ -எஸ்.நிதர்ஷன் நாட்டில் அரசியல் கைதிகள் தற்போது இல்லை என்று அரசாங்கம் கூறுவது, தமிழ் மக்களின் அரசியலை இல்லாமற்செய்வதற்குச் சமனாகும் என, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்பு, நல்லை ஆதீன குரு முதல்வரை, நல்லை ஆதீனத்தில் இன்று (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளது. சந்திப்பு தொடர்பாக அருட்தந்தை மா.சக்திவேல் கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கம், அரசியல் ரீதியாகத் தீர்மானங்களை மேற்கொண்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.…
-
- 1 reply
- 294 views
-
-
யாழ் முஸ்லிம் வர்த்தகர்கள் ஒரு மணி நேர கதவடைப்பு. IMAGE யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் கடைகளைப் பூட்டி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட உபபொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரவிற்கும் இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் – ஐந்து சந்தி பகுதியில் ஒன்றுகூடிய முஸ்லிம் மக்களால் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறுவதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் இன்றைய தினம் ஒரு மணி நேரம் கடைகளை மூடி தமது எதிர்ப்பை வெளியி…
-
- 0 replies
- 560 views
-
-
நல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தேன்! – சந்தேகநபர் வாக்குமூலம்!! Share “நல்லூரில் உள்ள வீட்டில் தண்ணியடிச்சுட்டு (மதுபோதை) அந்தச் சந்தியில் வந்து நின்றம். பொலிஸ்காரன் வரேக்க, உனக்கு தைரியம் இருந்தா அவன்ர துவக்கை எடுத்துச் சுடடா பார்ப்பம் என்று மச்சான் சொன்னான். பொலிஸ்காரன்ர துவக்கை எடுக்கேக்க தெரியாமல் சுடுபட்டுட்டுது” இவ்வாறு நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முதன்மைச் சந்தேகநபர், பொலிஸில் நேற்றுச் சரணடைந்து வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்தார். சந்தே…
-
- 2 replies
- 556 views
-
-
கொலன்னாவையில் தொடர்ந்தும் பதற்றம் ; 15 பௌசர்களில் எரிபொருள் விநியோகம் , 10 பேர் கைது கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. பொற்றோலிய ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களால் குறித்த ரயில் இடைமறிக்கப்பட்டு தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தாம் அங்கிருந்து அகலமாட்டோமென மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததையடுத்து அவர்களை பொலிஸார் அகற்றமுற்படுகையில் பதற்றநிலை உருவாகியது. இந்நிலையில் கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து …
-
- 0 replies
- 284 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நாடாளுமன்றில் பிரேரணை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தப் பிரேரணையை முன்வைத்தார். நேற்று நாடாளுமன்றம் ஒத்திவைப்பு வேளையின்போது அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையாக இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரேரேணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- “காணாமல் போன ஆள்கள்” தொடர்பான விடயம் இலங்கையில், குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பாரதூரமான ஒரு பிரச்சினையாகச் சில காலமாக இருந்து வருகின்றது. அத்தோடு, காணாமல் போன ஆள்களுடைய குடும்பங்கள்…
-
- 0 replies
- 213 views
-
-
முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் காலமானார் (நமது நிருபர்) முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சரும் முன்னாள் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் நேற்றுக் கொழும்பில் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 84. சுகவீனம் காரணமாக கடந்த சில வாரங்களாக கொழும்பு பொரளையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் மன்சூர் மேலதிக சிகிக்சைகளுக்காக கொழும்பிலுள்ள மற்றுமொரு தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டிருந்தார். அங்கும் அவருக்கு சிகிச்சை பயனளிக்காத நிலையிலேயே நேற்று செவ்வாய்க்கி…
-
- 0 replies
- 440 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை சனிக்கிழமை கைச்சாத்தாகும் அமைச்சரவை அங்கீகாரம் என்கிறார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க (எம்.சி.நஜிமுதீன்) அமைச்சரவையில் இன்று (நேற்று) சமர்ப்பிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள் ளது. எனவே, எதிர்வரும் சனிக்கிழமை குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச் சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச் சில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரி…
-
- 0 replies
- 468 views
-
-
ரவி கருணாநாயக்கவுக்கும் அலோஷியஸுக்கும் இடையில் எவ்வாறான தொடர்பு உள்ளது? உடனடியாக வெளிப்படுத்தவேண்டும் என்கிறது தேசிய சுதந்திர முன்னணி (ஆர்.யசி) மத்திய வங்கி பிணைமுறி விடயத்தில் தனிப்பட்ட திருட் டுகள் இடம்பெறவில்லை. இதன் பின்னணியில் நல்லாட்சி அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு இருக்க வேண்டும். அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் அர் ஜுன் அலோசியஸுக்கும் இடையிலான உறவு என்னவென்பது உடனடியாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்தது. மத்திய வங்கி ஊழல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். குற்றவா…
-
- 0 replies
- 321 views
-
-
பளையில் பெறுமதிமிக்க முதிரை மரக்குற்றிகள் மீட்பு கிளிநொச்சி, பளை பகுதியில் பெறுமதி மிக்க முதிரை மரக் குற்றிகள் நேற்று இரவு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. மல்லாவி பகுதியிலிருந்து எருவுக்குள் மறைத்து பார ஊர்தி ஒன்றில் கடத்த முற்பட்ட குறித்த குற்றிகளே இவ்வாறு பொலிஸாரால் கைப்பெற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கமைய பளை இத்தாவில் பகுதியில் வைத்து சோதனையிடப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதி விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/22349
-
- 0 replies
- 199 views
-
-
அரசாங்கம் அவசர நடவடிக்கையாக (1), (2), (3)ல் குறிப்பிடப்பட்டுள்ள அதன் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் செயற்பாடுகளைத் தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்:- இலங்கைப் பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரை:- 2017 ஜுலை 25ந் திகதி பாராளுமன்றம் ஒத்திவைப்பு வேளையின்போது அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் பிரேரணையை முன்வைப்பதற்கான அறிவித்தலை ,இத்தால் தருகின்றேன். ‘காணாமல் போன ஆட்கள்’ தொடர்பான விடயம் , இலங்கையில், குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பாரதூரமான ஒரு பிரச்சினையாகச் சில காலமாக இருந்து வருகின்றது. அத்தோடு, காணாமல் போன ஆட்களுடைய குடும்பங்கள், வடக்குக் கி…
-
- 0 replies
- 184 views
-
-
நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மைச் சந்தே நபர் இன்று காலை 8.20 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்சரணடைந்துள்ளார். அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. http://uthayandaily.com/story/13666.html
-
- 14 replies
- 1.2k views
-
-
அனைவரையும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரிக்கை : கடமைக்கு திரும்பாதோர் தாமாகவே விலகியதாக கருதப்படுவர் பொதுமக்களின் நலன்கருதி அனைவரும் பணிக்குத்திரும்புமாறு பெற்றோலியத்துறை ஊழியர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். எரிபொருள் விநியோக நடவடிக்கைளை அத்தியாவசிய சேவையாக நேற்று நள்ளிரவு முதல் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களின் நன்மை கருதியும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை புரிந்துகொண்டும் பெற்றோலியத்துறை ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இணைந்து கொள்ளாத தனியார் எரிபொருள் பௌசர்களின் அனும…
-
- 0 replies
- 230 views
-
-
யாழ்.வேம்படி பாடசாலையில் வானிலிருந்து வீழ்ந்த திரவம் அமில மழையாக இருக்காது பல்கலைப் புவியியலாளர் கூறுகிறார் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் சில நாள்களுக்கு முன்னர் மஞ்சள் நிற திரவம் வானிலிருந்து வீழ்ந்தமையானது, அமில மழையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருக்கும். இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, குறித்த பாடசாலை வளாகத்தில் நின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மஞ்சள் நிறத்திலான திரவம் வீழ்ந்தது. …
-
- 2 replies
- 607 views
-