ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
மாற்றுத் தலைமை குறித்துப் பேச ஈபிஆர்எல்எவ்வுக்கு தகுதி உண்டா? சரவணபவன் எம்.பி. காட்டம் அரசியல் தலைமையைக் குறைகூறுவதற்கும் மாற்றுத் தலைமை பற்றிப் பேசுவதற்கும் ஈபிஆர் எல்எவ் கட்சிக்கோ அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கோ வரலாற்றில் எந்தத் தகுதியாவது இருக்கிறதா? இவ்வாறு காட்டமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் . மாற்றுத் தலைமை குறித்து அண்மையில் தெரிவித…
-
- 0 replies
- 263 views
-
-
நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க புதிய செயலகம்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு புதிய செயலகமொன்று நிறுவப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய இந்த செயலகம் உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பிலான சட்டமூலமொன்றும் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச தர நிர்ணயங்களின் அடிப்படையில் இந்த புதிய செயலகம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக காத்திரமான வி…
-
- 0 replies
- 207 views
-
-
பொருத்து வீட்டுக்குத் தடையுத்தரவு கோரி நீதிமன்றில் மனு கோப்புப் படம் பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தப் பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் காலநிலைக்கு பொருத்தமற்றவை எனப் பல தரப்பினர்கள் சுட்டிக்காட்டியபோதும் பொருத்து வீடுகள் அமைப்பதில் மீள்குடியேற்ற அமைச்சர் விடாப்பிடியாக உள்ளார். அதையடுத்…
-
- 7 replies
- 411 views
-
-
வெலிகடை சம்பவம்: குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பம் 2012ம் ஆண்டு வெலிகடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் வெலிக்கடை சிறைச்சாலையில், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, ஏற்பட்ட முரண்பாட்டில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். இது தற்செயலாக இடம்பெற்ற ஒன்று என தெரிவிக்கப்பட்டாலும், இது திட்டமிட்ட கொலை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்தநிலையில், இந்தச் சம்பவம் …
-
- 0 replies
- 241 views
-
-
புதிய அரசமைப்புக்கு முன்னரே வருகின்றது தேர்தல் சட்டத் திருத்தம் புதிய அரசமைப்புக்கு முன்னதாகவே, தேர்தல் திருத்தச் சட்டவரைவு நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளன. உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தும் நோக்குடனேயே இந்தச் சட்டவரைவைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. புதிய அரசமைப்பில், தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம் 60 சதவீதமும், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 40 சதவீதமுமாகக் கலப்பு முறையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. மாக…
-
- 0 replies
- 172 views
-
-
6 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் Published by RasmilaD on 2017-07-14 09:08:48 தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட ஆறு புதிய அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருந்த 64 அரசியல் கட்சிகளுடன் சேர்த்து தற்போது நாட்டில் 70 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் தேர்தல் ஆணைக்குழு நேற்று விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- இதுவரை இலங்கையில் 64 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டன அந்த வகையில்…
-
- 0 replies
- 162 views
-
-
மாணவ மாணவியர் கைகளை அறுத்துக் கொண்டதுக்கான காரணம் வெளியாகியது.! பொலனறுவை மெதிரிகிரிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஒரு பாடசாலையில் 41 மாணவ, மாணவிகள் தமது கைகளை வெட்டிக் கொண்டிருந்த நிலையில் பொலிஸார் பொறுப்பேற்று பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ள நிலையில் பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் திஸ்ஸ லால் டி சில்வாவின் கீழ் சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒன்றை பயன்படுத்திய மாணவர்கள் அதன் தாக்கத்தால், தமது கைகளில் பிளேட்டாலும், சட்டைப் பின்களாலும் வெட்டிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 244 views
-
-
வவுனியாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இளைஞர்களின் மோதலின் போது 4 இளைஞர்கள் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 13.07 பிற்பகல் 4 மணியளவில் வவுனியா செட்கட்டிபிலவு பகுதியில் இளைஞர்கள் மீது வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள் சிலர் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இறுதியில் மோதலாக மாறியுள்ளது. இதில் செட்கட்டிப்பிலவு பகுதியைச் சேர்ந்த அ. மயூரன் வயது 28, பி. சுவிதரன் வயது 27, கே. இந்திரன் வயது 27, கே தங்கீதன் வயது 24 ஆகியோர் மீது கம்பி, தடிகள் கொண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் தாக்குதலில் குறித்த நால்வர் காயமடைந்ததையடுத்து தாக்குதல் நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதை…
-
- 0 replies
- 224 views
-
-
குற்றவாளிகளைப் பாதுகாக்க காணாமல்போனோர் அலுவலகமூடாக புதிய சட்டம் – சட்டத்தரணி கே.வி.தவராசா! காணாமல் போனோர் அலுவலகத்தின் மூலம் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் அல்லது குற்றம் இழைத்தவர்களை சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் நிலமை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதப் பரிகாரங்களும் வழங்கப்படாது எனவும் சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில். ணாமல் ஆக்கப்பட்டுள்ள ஒருவா், யாரினால் காணாமல் ஆக்கப்பட்டாா் என்பதை, காணாமல் போனோருக்கான அலுவலகம் தன்னுடைய விசாரணைகளில் கண்டறிந்தாலும் குற்றம் செய்தவருக்கு எதிராக சட்ட ரீதியாக எந்த…
-
- 0 replies
- 384 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (13-07-2017)
-
- 0 replies
- 397 views
-
-
சம்பந்தன் தெரிவித்ததை நிலைநாட்ட நல்லாட்சி முயற்சி (எம்.ஆர்.எம்.வஸீம்) புதிய அரசியலமைப்பினூடாக இனரீதியில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டால் நாடு தென் சூடானின் நிலைக்கு செல்வதை தவிர்க்க முடியாது. தமிழ் தலைவர்கள் வரலாறு ரீதியாக இதனையே கோரி வந்தனர். அத்துடன் ஆயுத முனையால் மேற்கொள்ள முடியாமல்போன எமது இலட்சியத்தை வேறுவழியில் அடைந்துகொள்வோம் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததை நிலைநாட்டவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய அமைப்புகளுக்கான மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த…
-
- 0 replies
- 281 views
-
-
பௌத்தம் இங்கு மதம் அல்ல இனம் இலங்கையில் பௌத்த மதத்துக்கு ஏனைய மதங்களால் அச்சுறுத்தல், ஆபத்து ஏதாவது இருக்கிறதா? இந்தக் கேள்விக்கு நாட்டின் எந்தவொரு குடிமகனாவது ‘‘ஆம்’’ என்று பதிலளிக்கும் நிலை இல்லை என்பது அனைவருக்குமே தெரியும். அப்படியிருக்கும்போது பௌத்தம் எப்படி அரசியல் தீர்வுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது? இலங்கையின் கடந்த கால வரலாறுகளைப் போலவே, தற்போதும் தீர்வை நெருங்கி வரும்போது அதற்கு அச்சுறுத்தலாக பௌத்தம் மேற்கிளம்பி நிற்கின்றது. துட்டகாமினி காலம் தொடக்கம், இனங்களின் ஒற்றுமைக்கு பௌத்தமும் அதன் துறவிகளும் அச்சுறுத்தலாகவே விளங்கி வருகிறார்கள் என்பதை பௌத்த…
-
- 0 replies
- 427 views
-
-
புதிய அரசமைப்பு முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்புக்கள் இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ்மக்களுக்கு, சுயாட்சி வழங்கும், அரசியல் சீர்திருத் துத்துக்கு பௌத்த மதகுருமார்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனாலும், இந்த நாட்டில் மீண்டுமொரு குருதி தோய்ந்த போர் இடம்பெறுவதைத் தடுப்பதற்காகவும், 1972 தொடக்கம் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு போரில் லட்சத் துக்கும் மேலான யிர்கள் காவுகொள்ளப்பட்டமை போன்று நாட்டில் மீண்டும் பிறிதொரு பிரிவினைவாதப் போர் இடம்பெறுவதற்குத் தான் இடமளியேன் எனவும், இதனால் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் சுயாட்சியுடன் கூடிய நிர்வாக அலகின் கீழ் வாழ…
-
- 0 replies
- 372 views
-
-
மக்களுக்காக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் மாற்றுத் தலைமை பற்றி இப்போது சிந்திப்பது என்பதற்கு அப்பால், தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிச் சிந்திப்பதே பொருத்தமானது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இது அவரின் பெருந்தன்மை எனலாம். தனக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இளைஞர்கள் தம்பக்கம் நிற்கின்றனர். தமிழரசுக் கட்சி தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து எனக்குத் துரோகம் இழைத்தது. தமிழ் மக்கள் கடையடைப்புச் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியதனால்தான் இன்று நான் முதலமைச்சராக இருக்கிறேன். எனவே மாற்றுத் தலைமை பற்றி…
-
- 0 replies
- 357 views
-
-
புனானையில் நிர்மாணிக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில், வாழைச்சேனை வெலிகந்தை – புனானையில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால், ஒரு இனம் இன்னொரு இனத்தோடு மோதி இரத்தம் சிந்தும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார். மேலும், தமிழ் மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டு, அவர்கள் காடுகளிலும் வசதியற்ற பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். கரையோரப் பகுதியான அறுகம்ப…
-
- 3 replies
- 511 views
-
-
படையினரின் சேவை... பூநகரி பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த 1,000 பேருக்கு, பூநகரி மகாவித்தியாலயத்தில் கடந்த 8ஆம் திகதி நடமாடும் வைத்திய சிகிச்சைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 66ஆவது படைத் தலைமையகம் இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந்தன. இந்த வைத்திய சிகிச்சைகள், வைத்தியர் லக்ஷ்மன் வீரசேன உட்பட 25 வைத்தியர்களால் 3 இலட்சம் பெறுமதி வாய்ந்த மருந்து உபகரணங்களுடன் இடம்பெற்றன. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவின் ஆலோசனைக்கு அமைய 66ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்படிவலானவின் வழிக்காட்டலின் கீழ் இரா…
-
- 0 replies
- 357 views
-
-
சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் இந்துக்களாயின் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேச வேண்டும் சம்பந்தனும், விக்கினேஸ்வரனும் இந்து கலாசார ஆடையை அணிந்துகொண்டு குங்கும பொட்டு வைத்திருப்பதால் மாத்திரம் இந்துவாகிவிட முடியாது. அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தனி நாட்டு கோரிக்கையை கைவிட்டு தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் இந்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். ராஜகிரிய சத்தர்மாராம விஹாரையில் இடம்பெற்ற சத்தர்மாராஜித விஹாரையில் இடம்பெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கெ…
-
- 8 replies
- 501 views
-
-
‘ஜனாதிபதியின் அலுவலகத்தை முடக்குவோம்’ - எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன் “முதலமைச்சர் நிதியம் தொடர்பாக, அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில், ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், வடக்கு ஆளுநர் அலுவலகம், வட மாகாண பேரவைச் செயலகம், முதலமைச்சர் அலுவலகம், மாவட்டச் செயலகம் ஆகியவற்றை முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போதுமான உதவிகள் இதுவரை வழங்கப்படவில்லை. அதனை நிறைவு செய்யும் பொருட்டு, கடந்த 3 …
-
- 0 replies
- 201 views
-
-
‘தலைவர்களின் செயற்பாடுகளே இன விரிசலுக்கு வழிவகுத்தது’ சுதந்திரத்துக்குப் பின்னரான பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இன ரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சியே இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமென்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வத்தளை, ஹுணுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்தின் புதிய நுழைவாயிலை இன்று (13) திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலை அதிபர் எம்.எம். கலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் மே…
-
- 0 replies
- 224 views
-
-
டாக்கா சென்றடைந்த அரச தலைவருக்கு அமோக வரவேற்பு பங்களாதேஷ் நாட்டுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். பங்களாதேஷின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச தலைவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வருகைத் தந்திருந்தனர். டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த அரச தலைவரை பங்களாதேஷின் அரச தலைவர் மொஹமட் அப்துல் ஹமீட் மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புடன் கோலாகல வரவேற்பும் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுக…
-
- 0 replies
- 318 views
-
-
புலிகளின் போர்க்கப்பல் வேறு பகுதிக்கு மாற்றம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு , புதுமாத்தளன் பகுதியில் இதுவரை இராணுவக் காட்சியறையில் இருந்த விடுதலைப் புலிகளின் ‘இசையரசி’ எனும் போர்க்கப்பல், முல்லைத்தீவு யு35 பிரதான வீதிக்கு நேற்று மாலை நகர்த்தப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர் குறித்த கப்பல் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய ஆயுதங்களை, கடந்த எட்டு வருட காலமாக இராணுவத்தினர் மந்துவில் பகுதியில் காட்சியப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் இராணுவத்தினரால் இக் கப்பல் நகர்த்தப்பட்டுள்ளது. போர் காலத்தில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினரால் இக் கப்பல் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்…
-
- 0 replies
- 392 views
-
-
பௌத்த மதத்தைப் பாதுகாத்து அதற்குரிய கௌரவத்தை வழங்கி ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே அரசமைப்பு உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன், முப்படைகளை அரசு ஒருபோதும் காட்டிக்கொடுக்காது என்றும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை மீட்டெடுத்த படையினரைப் பாதுகாப்பதற்காக அரசு என்ற வகையில் நாம் உறுதி கொண்டுள்ளோம். இனவாதத்தைத் தூண்டிவிட்டு நாடு என்ற வகையில் எம்மால் முன்னேறிச் செல்ல முடியாது. நாம் எல்லோரும் ஒரே தேசத்தினராக முன்னேறிச் செல்ல வலுவான ஆட்சி முறைமை அவசியம் என்ற தீர்மானத்துக்கு வரவேண்டும். பௌத்த மதத்துக்குரிய கௌரவம் பெற்றுக்கொடுக்கப்படும். ஒற்றையாட்சி முறைமை சவாலுக்குட…
-
- 2 replies
- 327 views
-
-
பொறிவெடியில் சிக்கி கண்ணிவெடி அகற்றும் பணியாளர் படுகாயம் முகமாலையில் நேற்றுச் சம்பவம் யாழ்ப்பாணம், முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் பொறி வெடி வெடித்ததால் இரு கைகளிலும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரின் இரு கைகளும் சத்திரச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. இந்தச் சம்பவத்தில் எஸ்.தினேஸ்குமார் (வயது-43) என்பவரே படுகாயமடைந்தார். போர்க் காலத்தில் விடுதலைப்புலிகள் மற்றும் இராணுவத்தினரின் முன்னணிக் காவ…
-
- 1 reply
- 305 views
-
-
போர் உளவியலிலிருந்து வெளியேறட்டும் பொலிஸ் பொலிஸார் சுட்டதில் மற்றொரு உயிர் வடக்கில் பறிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கில் நடந்த சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஸ் (வயது 24) என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஒரு வருட காலத்திற்குள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட இரண்டாவது சம்பவம் இது. இதற்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் துன்னாலை இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்திலும், தப்பிச் செல்வதற்கு அவர்கள் முயன்றபோது அவர்களை நோக்…
-
- 5 replies
- 457 views
-
-
இந்திய மீனவர்கள் அத்து மீறுவதற்கு வடக்கு மீனவர்களே காரணம் – இராணுவத் தளபதி இந்திய மீனவர்கள் அத்து மீறுவதற்கு வடக்கு மீனவர்களே காரணம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனை அநேகமாக நிறுத்திக் கொண்டுள்ளதனால்தான் இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பினை ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் தற்பொழுது மிகவும் குறைந்தளவான நபர்களே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர்களும் வலைவீசி மீன்பிடியில் ஈடுபடுவோர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் அதிகளவான மீன் லொறிகள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு வந்ததாகவும்…
-
- 6 replies
- 797 views
-