ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
அதிகார வரம்பை மீறுவது அரசியல்வாதிகளுக்கு தவிர்க்க முடியாதது இப்படி விளக்கமளிக்கிறார் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இயற்கை வளங்களைப் பேணுவதில் அதிகார வரம்பை மீறுவது அல்லது அதிகாரங்கள் இல்லாத விடயங் களில் தலையிடுவது சட்டத்தின் பார்வையில் குற்றமாக இருந்தாலும் அரசியல்வாதிகளாக அவற்றைச் செய்வது தவிர்க்க முடியாது என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் தின நிகழ்ச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள எருமைத்தீவில் நேற்று நடைபெற்றது. ‘மக்களை இயற்கையோடு இணைத்தல்’ என்னும் கருப்பொருளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வா…
-
- 0 replies
- 233 views
-
-
மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேகநபர்கள் அடையாளங் காணப்படவில்லை திருகோணமலை மூதூர் பெருவெளி கிராமத்தில் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று அடையாளங் காணப்படவில்லை. மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போது பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளும் நீதிமன்றமத்தில் ஆஜராகியதை அடுத்து அடையாள அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட சிறுமிகளால் சந்தேகநபர்களை அடையாளம் காணா முடியாது போயுள்ளது. இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விள…
-
- 6 replies
- 667 views
-
-
தொடர்ந்தும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை : 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..! நாட்டில் தென்னிலங்கை மற்றும் மலையாக பகுதிகளில் தொடர்ந்தும் மலையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்வதுடன் ஏழு மாவட்டங்களின் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தில் காணமால் போன 79 பேரை தேடும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 681 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 83 ஆயிரத்து 831 ஆக உள்ளதுடன் 6 ஆயிரத்து 270 குடும்பங்களை சேர்ந்த 21 ஆயிரத்து …
-
- 0 replies
- 132 views
-
-
மக்களே அவதானம் ! பிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி : வர்த்தக, கைத்தொழில் அமைச்சு நாட்டிலுள்ள விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக்கில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நாட்டில் நிலவிய கடும் வறட்சி நிலையை அடுத்து, நிவாரணமாக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட அரசியில் இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு புறக்கோட்டையில் விற்பனை செய்யப்பட்ட அரிசி வகை ஒன்று தொடர்பில் தற்போது சமூகவலைத்தளங்களில் சில காணொளிகள் வெளியாகியதையடுத்து இது பரவலாக பேச்பட்டு வருகின்றது. பாஸ்மதி அரிசி கொள்வனவு செய்த பெண்ணொருவர் அதனை சமைத்த பின்னர் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று ந…
-
- 1 reply
- 589 views
-
-
வறட்சி காரணமாக யாழ். மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு யாழ். மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். தீவகப் பகுதிகளான வேலனை, புங்குடுதீவு, ஊர்காவற்துறை, கரம்பொன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவும் வறட்சியினால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் இப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் குழாய் நீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், நாளொன்றுக்கு அரை மணித்தியாலம் அல்லது ஒரு மணித்தியாலத்திற்கே தற்போது நீர் விநியோகிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 3 replies
- 457 views
-
-
எங்கு பார்த்தாலும் சமூகப் பிறழ்வுகள் தலைவிரித்தாடுகின்றன. களவு, கொலை, வாள்வெட்டு, கலாசார சீரழிவு என்பவற்றின் தாண்டவம் எங்ஙனம் வாழப் போகிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிறழ்வுகள் ஏன் நடக்கின்றன? என்பது தெரியவில்லை. ஓர் ஆசிரியர் அடித்து விட்டார் என்றவுடன் மாணவன் தற்கொலை செய்வதென்பது எத்துணை பயங்கரமானது. ஆசிரியர் அடித்தது தொடர்பில் மேலிடத்தில் முறையீடு செய்வது; தனக்கு ஏற்பட்ட உளத்தாக்கத்தை சீர்மைப்படுத்த பொறுப்பான ஆசிரியரை அணுகுவது; நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற எந்த நடைமுறைகளும் பின் பற்றப்படாமல், அல்லது அதற்கு முயற்சி செய்யாமல் தற்கொலை செய்தல் என்ற முடிவை மாணவன் எடுக்கும் போது, அதனால் அந்தக்…
-
- 0 replies
- 464 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (05/06/2017)
-
- 0 replies
- 398 views
-
-
பாலித தெவரப் பெருமவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய முஸ்லிம் அரசியல்வாதிகள் இயற்கை மனிதனுக்கு இயல்பாகவே பல படிப்பினைகளை வழங்குகின்றது. அவற்றை மனிதன் கற்றுக் கொள்ளத் தவறுகின்ற சந்தர்ப்பங்களில் கண்டிப்பான முறையில் சில பாடங்களை நடாத்துகின்றது. இயற்கை அனர்த்தங்களையும் அவ்வாறே பார்க்க வேண்டியிருக்கின்றது. இலங்கையில் அரசியல் வேற்றுமைகளும் இன ரீதியான வேற்றுமைகளும் வேரூன்றி இருக்கத்தக்கதாக, இந்த நாடு சிங்களவர்களுக்கு உரியது என்றும் தமிழர்களும் முஸ்லிம்களும் வந்தேறுகுடிகள் என்றும் கடும்போக்குச் சக்திகள், பிரசாரம் செய்து கொண்டிருந்த நிலையில், முஸ்லிம்களின் இன, மத அடையாளங்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்…
-
- 3 replies
- 570 views
-
-
தண்ணீர் உரிமம் தருவதாகக் கூறி பணம் வசூலித்த கும்பலுக்கு யாழில் நடந்த கதி யாழ்.மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் எனக் கூறி பலரிடம் பணத்தை கொள்ளையிட்டவர்கள் யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர். “அக்குவா சேவ்” என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள். தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாகக் கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர். அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன் சிலருக்கு வழங்க…
-
- 2 replies
- 453 views
-
-
பொய்யான தகவலை வழங்கியதாக வடமாகாண சபை உறுப்பினரின் வாகனப் ‘பெர்மிற்’ பறிபோனது வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகை வாகன அனுமதிப் பத்திரத்தை பொய்யான தகவலை வழங்கிப் பெற்றுக்கொண்டார் என்று உறுப்பினர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டது. அவரிடமிருந்து அனுமதிப் பத்திரம் அதிகாரிகளால் மீளப் பெறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 38 உறுப்பினர்களும் வரிச் சலுகை வாகன அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பித்தனர். அவர்களில் ஒருவர் தொழில் தகைமையில் வாகன அனுமதிப் பத்திரத்தை 5 வருடங்களுக்குள் பெற்றிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டு, அவருடைய விண்ணப்பம் நிரா…
-
- 1 reply
- 301 views
-
-
கதிர்காமத்தில் யாழ். யாத்திரிகர்களுக்கு தங்குமிடம் வேண்டும்’ -எஸ்.நிதர்ஷன் “கதிர்காமத்தில் தமிழ் மக்களது பாரம்பரியங்கள் மற்றும் அவர்களது மடலாயங்கள் அழிக்கப்பட்டமை காரணமாகவே, யாழ்ப்பாணத்துக்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டது” என, தெல்லிப்பழை துர்கா தேவஸ்தானத்தின் தலைவர் ஆறுதிருமுகன் தெரிவித்துள்ளார். “அத்துடன், கதிர்காமத்தில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாத்திரிகள் தங்குமிடம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான காணியை கதிர்காம ஆலய நிர்வாகம் வழங்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு டி.பி.குமாரகே, நல்லூர் ஆலயத்துக்குச…
-
- 0 replies
- 437 views
-
-
பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் சதொச நிறுவனம் விளக்கம் இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பான செய்திகள் அனைத்தும் பொய்யான வதந்திகள் என்பதாக வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன வலியுறுத்தியுள்ளன. அண்மைக்காலமாக இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானிலிருந்து சதொச நிறுவனம் பிளாஸ்டிக் கலந்த பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தித் தளங்களில் பரவலான ஒரு செய்தி பரப்பப்பட்டிருந்தது. எனினும் குறித்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று மறுக்கும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன , உரிய பரிசோதனைகளின் பின்னரே பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செ…
-
- 1 reply
- 782 views
-
-
தெற்கில் கடல் கொந்தளிப்பு தென்மாகாணத்தின் பல பிரதேசங்களில், இன்று (05) காலை, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டுள்ள அதேவேளை, சில பிரதேசங்களில் காலி வீதியை நோக்கி, கடல்நீர் பாய்ந்ததால், மக்கள் பெரும் பதற்றமடைந்துள்ளனர். கஹாவ சந்தியிலிருந்து காலி, ஹிக்கடுவ, கொட்டகமுவ பாலம் வரையான காலி வீதிக்குள், கடல் நீர் பாய்ந்ததாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். கஹாவ, கொடகம, தெல்வத்த, பெரேலிய மற்றும் தொட்டகமுவ போன்ற பிரதேசங்களில், மழைக்காலங்களில் இவ்வாறாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், கடல் நீர் காலி வீதியை நோக்கிப் பாயும் என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/தெ…
-
- 0 replies
- 264 views
-
-
"எந்த தடைகள் வந்தாலும் உடைத்துக்கொண்டு முன்செல்வோம்" (எம்.ஆர்.எம்.வஸீம்) இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் எமது பயணத்துக்கு எந்த தடைகள் வந்தாலும் அதனை உடைத்துக்கொண்டு முன்செல்வோம் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள மீள் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/20638
-
- 0 replies
- 379 views
-
-
பொதுபலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்தே தீருவோம் : பொலிஸ் மா அதிபர் பூஜித பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை மிக விரைவில் கைது செய்தே தீருவோம் எனவும் அது தொடர்பில் யாரும் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவை இல்லை என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு நான்கு விசேட பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ள நிலையில் குற்றமிழைத்த எவரையும் தப்பிக்க விடப் போவதில்லை, ஞானசாரரின் கைது உறுதியானது எனவும் நீதிமன்ற உத்தரவுகள், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக சிறப்பு நடவடிக்கையாக அது இடம்பெறும் என்றும் பொலிஸ் …
-
- 1 reply
- 425 views
-
-
விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்! சிறிலங்காவில் விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஜப்பானில் வாழும் சிறிலங்கா நாட்டவர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ அங்கிருந்தவாறு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களினால் நாட்டை சீராக வழிநடத்த முடியாமல் உள்ளதால், ஆட்சியாளர்கள் மீது ஜப்பானில் உள்ள சிறிலங்கா நாட்டவர்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும், இதனால் சிறிலங்காவில் உடனடியாக ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தற்ப…
-
- 0 replies
- 412 views
-
-
இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கை தூதுவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையின் மூன்று தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்று ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு கண்டறிந்துள்ளது. பங்களாதேஷ், பிரான்ஸ், மற்றும் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இலங்கை தூதுவர்களே இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பங்களாதேஷுக்கான இலங்கை தூதுவராகப் பணியாற்றி வரும் வை.கே.குணசேகர, பிரித்தானியா மற்றும் இலங்கை குடியுரிமை கொண்டவர். பிரான்ஸுக்கான இலங்கை தூதுவராகப் பணியாற்றும் திலக் ரணவிராஜா அமெரிக்க குடியுரிமையைக் கொண்டுள்ளவர். லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கொன்சூல் ஜெனரலாகப…
-
- 1 reply
- 210 views
-
-
ஞானசார தேரரை தேடி பொலிஸார் வலை வீச்சு.! (எம்.எப்.எம்.பஸீர்) கைது செய்வதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர். குறிப்பாக ஞானசார தேரர் சிகிச்சைப் பெறுவதாக நம்பப்படும் மூன்று இடங்களிலும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு சோதனைகளை நடத்தியுள்ளது. எனினும் இதன்போது ஞானசார தேரர் அங்கு இருக்கவில்லை என உயர் மட்ட பொலிஸ் தகவல்கள் கேசரிக்கு தெரிவித்தன. http://www.virakesari.lk/article/20610
-
- 5 replies
- 470 views
-
-
பளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சந்தேக நபர் யாழில் கைது பளையில் சுற்றுக் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனத்தின் மீது பற்றைக்குள் மறைந்திருந்த இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பதற்றத்தையும் – பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பின்னர் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தகவல் வெளியிட்…
-
- 6 replies
- 1.2k views
-
-
திருகோணமலை பள்ளிவாசல் மீதான தாக்குதல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் 3 சிறப்புக் குழுக்கள் விசாரணை (எம்.எப்.எம்.பஸீர்) திருகோணமலை நீதிமன்ற வீதியில் கடற்படை தளத்தை அண்மித்துள்ள பெரியகடை ஜும் ஆ பள்ளிவாசல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு மூன்று சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் மேற்பார்வையில், திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.எம்.என்.ஜி.ஓ. பெரேராவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த மூன்று பொலிஸ் குழுக்களும் நியமிக்கப்ப்ட்டுள்ளன. திருமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்திர குமாரவின் வழ…
-
- 1 reply
- 212 views
-
-
புலிகள் இராணுவத்திடம் சரணடைய விரும்பவில்லை மூன்றாம் தரப்பிடம் சரணடையவே விரும்பினர். அதனை அரசாங்கம் விரும்பவில்லை நேர்காணல் ரொபட் அன்டனி புலிகள் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைய ஒருபோதும் விரும்பவில்லை. மாறாக மூன்றாம் தரப்பிடம் சரணடையவே விரும்பினர். அதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்று கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சரவை பேச்சாளரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். செவ்வியின் முழு வடிவம் வருமாறு: Q :…
-
- 1 reply
- 562 views
-
-
மூன்று பிரதான கங்கைகளுக்கு அணை கட்டியிருந்தால் வெள்ளம் ஏற்பட்டிருக்காது பிரதமர் 2001 லேயே திட்டமிட்டிருந்தார் என்கிறார் அமைச்சர் (க.கமலநாதன்) களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வள கங்கை ஆகியவற்றின் நீரை முறையாக முகாமைத்துவம் செய்யாமையே கடந்த நாட்களில் ஏற்பட்டிருந்த பெரு வெள்ளத்திற்கு காரணமாகும். 1968 இல் ஐக்கிய அமெரிக்க நிறுவனமொன்றினால் விடுக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் 2001 ஆம் ஆண்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்த திட்டத்தை நிறுவியிருந்தால் வெள்ளம் ஏற்பட்டிருக்காது எனவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்தார். ஐக்கிய தேச…
-
- 0 replies
- 349 views
-
-
அரசாங்கம் அதிரடி : ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தை அமுல்படுத்த தீர்மானம் : சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் எச்சரிக்கை இன, மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் குழுக்கள் மற்றும் தனிநபர்களை கைது செய்ய அரசாங்கத்தினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தை (INTERNATIONAL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS (ICCPR) ACT, No. 56 0F 2007) Article 3. (1) No person shall propagate war or advocate national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence. அமுல்படுத்துமாறு, நாடளாவிய ரீதியில் உள்…
-
- 3 replies
- 327 views
-
-
"வீடுகளை அமைத்து எங்களுடைய உயிர்களை காப்பாற்று" மலையக அரசியல் தலைமைகளிடம் புலம்பும் தோட்ட மக்கள் நாட்டில் சில பாகங்களில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக அடைமழை பெய்து வருவதோடு மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கினால் பலர் பலியாகியுள்ளதுடன் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள இதேவேளை தங்களுடைய சொத்துக்களையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்து எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். மலையக அரசியல்வாதிகளை பொருத்தவரையில் மலையக மக்களுடைய தேவைகளை அல்லது அவர்களுடைய ஆபத்துகளை கேட்டு அறிந்து செயல்படுகின்றார்களா என அக்கரப்பத்தனை போட்மோர் தோட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டத்தில் கடந்த …
-
- 0 replies
- 162 views
-
-
தமிழர் தாயகப் பகுதிகளில் புத்தர் சிலைகள் புதிதாக வைக்கப்படுவது அசௌரியங்களை ஏற்படுத்துகிறது:- கதிர்காம பஸ்நாயக்க நிலமேயுடனான சந்திப்பில் இந்து மாமன்றத்தின் உப தலைவர் ஆறு திருமுருகன்:- தமிழர் தாயகப் பகுதிகளில் புத்தர் சிலைகள் புதிதாக வைக்கப்படுவதால், தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌரியங்கள் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பீ.குமாரகேயிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நேற்று சென்றிருந்த கதிர்காம பஸ்நாயக்க நிலமேயுடனான சந்திப்பின் போது, இந்து மாமன்றத்தின் உப தலைவர் ஆறு திருமுருகன் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இந்து மா மன்றத்தில் பௌத்த மதத்திற்கு மதிப்பளிப்…
-
- 0 replies
- 435 views
-