ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
8 தமிழர் சுட்டுக்கொலை : 11 பேருக்கும் மறியல் தம்புத்தேகம, பாரதிபுரம் பகுதியில் தமிழர்கள் எட்டுப்பேரைச் சுட்டுக்கொன்றார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர், உப-பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட 11 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், நிராயுதபாணிகளாக நின்றிருந்த, அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது-14), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது-18), முருகேசு ஜனகன் (வயது -17), நாதன் பவளநாதன் (வயது-45), சுப்பிரமணியம் திவாகரன், குணரத்தினம் சிவராஜன், ஆறுமுகம் சேகர் மற்றும் பொன்னம்பலம் கனகசபை ஆகிய எட்டுப் பேரே இவ்வாறு சரமாரியாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களாவர். …
-
- 1 reply
- 803 views
-
-
பல இலட்சம் இலங்கையர்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டுசெல்வதில் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர். அவர்கள் கையிலுள்ள பணம் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதற்கு போதிய பெறுமதியைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் உழைக்கும் வருவாயிலும் பார்க்க பொருட்கள், சேவைகளின் செலவினம் துரிதமாக அதிகரித்துச் செல்கின்றது. அரசாங்க மற்றும் தனியார்துறைகளின் உண்மையான ஊதியம் குறைவடைந்திருக்கின்றது. அதேவேளை, உத்தியோகப்பற்றற்ற வகையில் தனியார் துறையில் கட்டணங்கள் அதிகரித்துச் சென்றுள்ளன. வீட்டு வசதிகளை நிறைவேற்றுதல், கல்விக்கான செலவினம், பஸ் , ரயில் கட்டணங்கள், மருந்துப் பொருட்களுக்கான செலவு, சமையல் வாயு, மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள், பெற்றோல் போன்ற எரிபொருள் கட்டணங்கள் என்பனவற்றுடன் அரி…
-
- 0 replies
- 440 views
-
-
தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வ…
-
- 5 replies
- 1.7k views
-
-
சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் முப்பது கள் விற்பனை நிலையங்கள் சட்டரீதியான அனுமதிகளோடு இயங்கிவருகின்றன. இதில், 650 இற்கும் மேற்பட்ட பனை தென்னை வள தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தொழிலாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் கள்ளினை குறித்த நிலையங்களில் வழங்கியே பிள்ளைகளின் …
-
- 0 replies
- 118 views
-
-
பொலிஸ் உத்தியோகத்தை வழங்க கோரி போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (05) மாலை தொடக்கம் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த தமிழ் இளைஞன் கடந்த 2011 ம் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து சாதாரண பொலிஸ் உத்தியோகத்தராக யாழில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றியுள்ளார். பொலிஸ் சேவையிலிருந்து அண்மையில் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்.இன்று மாலை 6 மணியிலிருந்து குறித்த இளைஞன் தனது பொலிஸ் வேலையை மீண்டும் வழங்க கோரி யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=92120
-
- 0 replies
- 348 views
-
-
ஊர்காவற்துறையில் மூன்று மாணவர்களை தகாத உறவுக்குட்படுத்திய ஐவர் கைது பாடசாலை மாணவர்கள் மூவரை தகாத உறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 5 நபர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியைச் சேர்ந்த 5 நபர்களே நேற்று திங்கட்கிழமை ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 ல் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரையும் 8 நபர்கள் அப்பிஜரதேசத்திலுள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி தகாத உறவுக்கு உட்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களும் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பொலிஸார் சம்பவம் நடந்த…
-
- 0 replies
- 211 views
-
-
இலங்கை - கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை கட்டாருக்கான ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைகள் வழமைபோன்று நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக, ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கின் சில நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளன என, நேற்றையதினம் செய்திகள் வௌியாகின. தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டியே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதனையடுத்து, அந்த…
-
- 0 replies
- 205 views
-
-
வடக்கில் சுங்கப் பணியகம் திறப்பு! 33 ஆண்டுகளின் பின்னர் வட மாகாணத்தில் முதன்முறையாக சுங்கத் திணைக்களத்தின் பணியகம் ஒன்று இந்த மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுங்கத் திணைக்களத்தின் பணியகம் காங்கேசன்துறையில் இயங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் ஆயுதப்போர் ஆரம்பித்தபின்னர் சுங்கத் திணைக்களத்தின் பணிகள் அனைத்தும் வடக்கில் முடக்கப்பட்டன. தற்போது போர் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், வடக்கில் கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் காங்கேசன்துறையில் மீண்டும் தமது பணியகத்தை திறக்க சுங்கத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. முன்னர், வடக்கில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை…
-
- 0 replies
- 403 views
-
-
வாருங்கள் சுத்தம் செய்வோம்... களுத்துறை மாவட்டத்தில், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட புளத்சிங்கள, யட்டகம்பிற்றிய மற்றும் நாஹகதொல பிரதேசங்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (05) முற்பகல் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கு, அழிவடைந்த வீடுகள் மற்றும் காணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார். இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தையொட்டி, சுற்றாடல் அமைச்சினால் அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். இராணுவத்தினர் மற்றும் சீன உதவிக் குழுவின் பங்களிப்புடன் இந்தச் சிரமதான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேள…
-
- 0 replies
- 394 views
-
-
ஐங்கரநேசன், குருகுலராசா அமர்வில் பங்கேற்பு பதவி விலக வேண்டும் என்று விசாரணைக் குழு பரிந்துரைத்த அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா இருவரும், வடக்கு மாகாண சபையின் அமர்வில் பங்கேற்றுள்ளனர். சபை அமர்வு ஆரம்பமாகி சில நிமிடங்களில் இருவரும் சபைக்குள் வந்து தமது ஆசனங்களில் அமர்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. http://uthayandaily.com/story/5326.html
-
- 3 replies
- 554 views
-
-
தென்னிலங்கை பேரனர்த்தம் 6 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை எனக்கு அறிக்கை கிடைத்திருந்தது..! நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் சம்பந்தமாக அறிக்கைகள் எனக்கு ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை கிடைக்கின்றது. இந்த இக்கட்டான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்க்க முடியாமையையிட்டு நான் வருந்துகின்றேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் நேற்று செய்த பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் அப்பதிலில் தெரிவித்துள்ளதாவது, சுகயீனமுற்…
-
- 0 replies
- 211 views
-
-
வடக்கின் காங்கேசன்துறையிலிருந்து தெற்கின் தெய்வேந்திர முனை நோக்கிய மனிதாபிமான ரயில் பயணம் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட தென்பகுதிக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணமொன்றை வடக்கின் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு 'மக்கள் தொடர்பாடல்' என்ற இந்த செயற்திட்டத்தை மொபிடெல் மற்றும் புகையிரத திணைக்களத்தின் அனுசரணையுடனும் ரூபவாகினி வலையமைப்பின் ஊடக அனுசரணையுடனும் செயற்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட மாத்தறை பிட்டபத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்த…
-
- 0 replies
- 340 views
-
-
அதிகார வரம்பை மீறுவது அரசியல்வாதிகளுக்கு தவிர்க்க முடியாதது இப்படி விளக்கமளிக்கிறார் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இயற்கை வளங்களைப் பேணுவதில் அதிகார வரம்பை மீறுவது அல்லது அதிகாரங்கள் இல்லாத விடயங் களில் தலையிடுவது சட்டத்தின் பார்வையில் குற்றமாக இருந்தாலும் அரசியல்வாதிகளாக அவற்றைச் செய்வது தவிர்க்க முடியாது என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் தின நிகழ்ச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள எருமைத்தீவில் நேற்று நடைபெற்றது. ‘மக்களை இயற்கையோடு இணைத்தல்’ என்னும் கருப்பொருளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வா…
-
- 0 replies
- 234 views
-
-
மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேகநபர்கள் அடையாளங் காணப்படவில்லை திருகோணமலை மூதூர் பெருவெளி கிராமத்தில் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று அடையாளங் காணப்படவில்லை. மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போது பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளும் நீதிமன்றமத்தில் ஆஜராகியதை அடுத்து அடையாள அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட சிறுமிகளால் சந்தேகநபர்களை அடையாளம் காணா முடியாது போயுள்ளது. இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விள…
-
- 6 replies
- 668 views
-
-
தொடர்ந்தும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை : 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..! நாட்டில் தென்னிலங்கை மற்றும் மலையாக பகுதிகளில் தொடர்ந்தும் மலையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்வதுடன் ஏழு மாவட்டங்களின் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தில் காணமால் போன 79 பேரை தேடும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 681 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 83 ஆயிரத்து 831 ஆக உள்ளதுடன் 6 ஆயிரத்து 270 குடும்பங்களை சேர்ந்த 21 ஆயிரத்து …
-
- 0 replies
- 133 views
-
-
மக்களே அவதானம் ! பிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி : வர்த்தக, கைத்தொழில் அமைச்சு நாட்டிலுள்ள விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக்கில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நாட்டில் நிலவிய கடும் வறட்சி நிலையை அடுத்து, நிவாரணமாக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட அரசியில் இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு புறக்கோட்டையில் விற்பனை செய்யப்பட்ட அரிசி வகை ஒன்று தொடர்பில் தற்போது சமூகவலைத்தளங்களில் சில காணொளிகள் வெளியாகியதையடுத்து இது பரவலாக பேச்பட்டு வருகின்றது. பாஸ்மதி அரிசி கொள்வனவு செய்த பெண்ணொருவர் அதனை சமைத்த பின்னர் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று ந…
-
- 1 reply
- 590 views
-
-
வறட்சி காரணமாக யாழ். மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு யாழ். மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். தீவகப் பகுதிகளான வேலனை, புங்குடுதீவு, ஊர்காவற்துறை, கரம்பொன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவும் வறட்சியினால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் இப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் குழாய் நீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், நாளொன்றுக்கு அரை மணித்தியாலம் அல்லது ஒரு மணித்தியாலத்திற்கே தற்போது நீர் விநியோகிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 3 replies
- 458 views
-
-
எங்கு பார்த்தாலும் சமூகப் பிறழ்வுகள் தலைவிரித்தாடுகின்றன. களவு, கொலை, வாள்வெட்டு, கலாசார சீரழிவு என்பவற்றின் தாண்டவம் எங்ஙனம் வாழப் போகிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிறழ்வுகள் ஏன் நடக்கின்றன? என்பது தெரியவில்லை. ஓர் ஆசிரியர் அடித்து விட்டார் என்றவுடன் மாணவன் தற்கொலை செய்வதென்பது எத்துணை பயங்கரமானது. ஆசிரியர் அடித்தது தொடர்பில் மேலிடத்தில் முறையீடு செய்வது; தனக்கு ஏற்பட்ட உளத்தாக்கத்தை சீர்மைப்படுத்த பொறுப்பான ஆசிரியரை அணுகுவது; நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற எந்த நடைமுறைகளும் பின் பற்றப்படாமல், அல்லது அதற்கு முயற்சி செய்யாமல் தற்கொலை செய்தல் என்ற முடிவை மாணவன் எடுக்கும் போது, அதனால் அந்தக்…
-
- 0 replies
- 465 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (05/06/2017)
-
- 0 replies
- 399 views
-
-
பாலித தெவரப் பெருமவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய முஸ்லிம் அரசியல்வாதிகள் இயற்கை மனிதனுக்கு இயல்பாகவே பல படிப்பினைகளை வழங்குகின்றது. அவற்றை மனிதன் கற்றுக் கொள்ளத் தவறுகின்ற சந்தர்ப்பங்களில் கண்டிப்பான முறையில் சில பாடங்களை நடாத்துகின்றது. இயற்கை அனர்த்தங்களையும் அவ்வாறே பார்க்க வேண்டியிருக்கின்றது. இலங்கையில் அரசியல் வேற்றுமைகளும் இன ரீதியான வேற்றுமைகளும் வேரூன்றி இருக்கத்தக்கதாக, இந்த நாடு சிங்களவர்களுக்கு உரியது என்றும் தமிழர்களும் முஸ்லிம்களும் வந்தேறுகுடிகள் என்றும் கடும்போக்குச் சக்திகள், பிரசாரம் செய்து கொண்டிருந்த நிலையில், முஸ்லிம்களின் இன, மத அடையாளங்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்…
-
- 3 replies
- 571 views
-
-
தண்ணீர் உரிமம் தருவதாகக் கூறி பணம் வசூலித்த கும்பலுக்கு யாழில் நடந்த கதி யாழ்.மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் எனக் கூறி பலரிடம் பணத்தை கொள்ளையிட்டவர்கள் யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர். “அக்குவா சேவ்” என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள். தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாகக் கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர். அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன் சிலருக்கு வழங்க…
-
- 2 replies
- 454 views
-
-
பொய்யான தகவலை வழங்கியதாக வடமாகாண சபை உறுப்பினரின் வாகனப் ‘பெர்மிற்’ பறிபோனது வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகை வாகன அனுமதிப் பத்திரத்தை பொய்யான தகவலை வழங்கிப் பெற்றுக்கொண்டார் என்று உறுப்பினர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டது. அவரிடமிருந்து அனுமதிப் பத்திரம் அதிகாரிகளால் மீளப் பெறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 38 உறுப்பினர்களும் வரிச் சலுகை வாகன அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பித்தனர். அவர்களில் ஒருவர் தொழில் தகைமையில் வாகன அனுமதிப் பத்திரத்தை 5 வருடங்களுக்குள் பெற்றிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டு, அவருடைய விண்ணப்பம் நிரா…
-
- 1 reply
- 302 views
-
-
கதிர்காமத்தில் யாழ். யாத்திரிகர்களுக்கு தங்குமிடம் வேண்டும்’ -எஸ்.நிதர்ஷன் “கதிர்காமத்தில் தமிழ் மக்களது பாரம்பரியங்கள் மற்றும் அவர்களது மடலாயங்கள் அழிக்கப்பட்டமை காரணமாகவே, யாழ்ப்பாணத்துக்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டது” என, தெல்லிப்பழை துர்கா தேவஸ்தானத்தின் தலைவர் ஆறுதிருமுகன் தெரிவித்துள்ளார். “அத்துடன், கதிர்காமத்தில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாத்திரிகள் தங்குமிடம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான காணியை கதிர்காம ஆலய நிர்வாகம் வழங்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு டி.பி.குமாரகே, நல்லூர் ஆலயத்துக்குச…
-
- 0 replies
- 438 views
-
-
பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் சதொச நிறுவனம் விளக்கம் இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பான செய்திகள் அனைத்தும் பொய்யான வதந்திகள் என்பதாக வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன வலியுறுத்தியுள்ளன. அண்மைக்காலமாக இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானிலிருந்து சதொச நிறுவனம் பிளாஸ்டிக் கலந்த பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தித் தளங்களில் பரவலான ஒரு செய்தி பரப்பப்பட்டிருந்தது. எனினும் குறித்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று மறுக்கும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன , உரிய பரிசோதனைகளின் பின்னரே பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செ…
-
- 1 reply
- 783 views
-
-
தெற்கில் கடல் கொந்தளிப்பு தென்மாகாணத்தின் பல பிரதேசங்களில், இன்று (05) காலை, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டுள்ள அதேவேளை, சில பிரதேசங்களில் காலி வீதியை நோக்கி, கடல்நீர் பாய்ந்ததால், மக்கள் பெரும் பதற்றமடைந்துள்ளனர். கஹாவ சந்தியிலிருந்து காலி, ஹிக்கடுவ, கொட்டகமுவ பாலம் வரையான காலி வீதிக்குள், கடல் நீர் பாய்ந்ததாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். கஹாவ, கொடகம, தெல்வத்த, பெரேலிய மற்றும் தொட்டகமுவ போன்ற பிரதேசங்களில், மழைக்காலங்களில் இவ்வாறாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், கடல் நீர் காலி வீதியை நோக்கிப் பாயும் என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/தெ…
-
- 0 replies
- 265 views
-