ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142659 topics in this forum
-
கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு 01 Jan, 2026 | 02:21 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்காக குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அதற்கான முன்னாயத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொண்டு ஆய்வுகளை செய்வதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன் குறித்த பகுதியில் பாரிய புத்தர் சிலை ஒன்று அவசர அவசரமான திறந்து வ…
-
-
- 5 replies
- 425 views
-
-
அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… பகிரங்கமாக சவால் அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு …
-
-
- 4 replies
- 385 views
-
-
🏥 யாழில் கனடா வாசி நிமோனியாவால் உயிாிழப்பு adminJanuary 4, 2026 கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த குடும்பத்தலைவர் ஒருவர், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் வட்டுக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரமநாயகம் திவாகர் (42 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கனடாவில் வசித்து வந்த இவர், புத்தாண்டு மற்றும் விடுமுறையைக் கழிப்பதற்காக அண்மையில் யாழ்ப்பாணம் வந்து தனது உறவினர்களுடன் தங்கியிருந்துள்ளார். கடந்த டிசம்பர் 31-ஆம் திகதி இவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளி…
-
- 0 replies
- 121 views
-
-
டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்? கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதற்காக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக சுயபாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள உலகக் கும்பலுக்கு விற்பனை செய்ததாக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 9ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் முன்னதாக பிணையில் விடுவிக்கப்பட வேண்டுமென அரசு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் கைவிரிக்கப்பட்டது என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தொடர்பான கடந்த கால மோசடிகள் மற்றும் காணி ஒதுக்கீடுகளைச் சுட்டிக்காட்டும் புதிய வழக்குகள் தாக்கல் ச…
-
-
- 4 replies
- 337 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்! adminJanuary 3, 2026 தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக, தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கைகோர்த்துள்ளனர். தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில், இன்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிகிரியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, காணி உரிமையாளர்களுடன் இணைந்து மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும்…
-
- 2 replies
- 244 views
- 1 follower
-
-
தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை! தையிட்டிக்கு கொண்டு வரப்பட்டிருந்த புத்த சிலை இராணுவ சிற்றுண்டி சாலையில் இருந்து எடுப்பட்டுள்ளது என kks பொலிஸ்சார் தெரித்துள்ளனர். இன்னிலையில் அதனை கொண்டு வந்த மதகுருவிடம் வாக்குமூலம் பெறவுள்ளது. மேலும் இன்று யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1458192
-
- 0 replies
- 166 views
-
-
தீவகத்தில் சட்டவிரோத செயலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞன் மீது தாக்குதல்! adminJanuary 3, 2026 தீவக பகுதியில் மாடுகளை களவாடி , சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கி விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றினால் , மாடுகளை திருடும் கும்பலுக்கு எதிராக செயற்பட்டு வந்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாரந்தனை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் , தீவகம் பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்கள் , மற்றும் மாடுகள் களவாட்டப்பட்டு , இறைச்சியாக்கப்படும் சம்பவங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்துள்ளார். குறித்த இளைஞன் உள்ளிட்ட சிலர் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாடுகளை களவாடி இறைச்சியாக்க மு…
-
- 0 replies
- 119 views
-
-
பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்! 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை, சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற் கொண்டு, பாடசாலைக் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கள் வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைவாக அமைவாக, 2026 ஆம் ஆண்டில் 05 – 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 07.30 மணி முதமல் பிற்பகல் 01.30 மணிவரை மாற்றமின்றி தொட…
-
- 1 reply
- 176 views
- 1 follower
-
-
திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை : 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு கடற்கரையில் நடைபெற்றது Published By: Vishnu 02 Jan, 2026 | 07:24 PM திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) மாலை 6.00 மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நிழற்படங்களுக்கு மலர்தூவி, வளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருகோணமலை பிரதான கடற்கரைச் சந்தியிலுள்ள காந்தி சிலைக்கு அருகாமையாக மாலைப் பொழுதில் தினமும் இளைஞர்கள் நின்று கதைப்பது வழக்கம். 02.01.2006 அன்றைய மாலைப் பொழுதும் மாணவர்கள் பலர் அவ்விடத்தில் கூடிநின்று கதைத்துக்கொண்டிருந்தனர்…
-
- 2 replies
- 205 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம் 02 Jan, 2026 | 05:26 PM (நமது நிருபர்) விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்களென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2026 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு சிறந்ததாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். யுத்தத்தை முடிவுக்கு …
-
-
- 4 replies
- 308 views
- 1 follower
-
-
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு Jan 1, 2026 - 09:36 PM இன்று (1) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4250 ரூபாவாகும். அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 65 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 1710 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjvn0ngl03ero29nm693hxhc
-
-
- 1 reply
- 143 views
- 1 follower
-
-
தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்! adminJanuary 2, 2026 தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் தவறான தகவல்கள் பரப்ப படுவதனால், சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள மொழியில் தென்னிலங்கை ஊடகங்களில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற போதே குறித்த விடயம் முன்வைக்கப்பட்டது. தையிட்டி விகாரை காணி வரைபடங்களை சிங்கள ஊடகங்களில் தெளிவாக பிரசுரித்து விளம்பரங்களை போட சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. https://globaltamilnews.net/2026/225479/
-
-
- 4 replies
- 275 views
-
-
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை Dec 4, 2025 - 06:15 PM ‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாரிய சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட், இந்தத் தீர்மானத்தின் ஊடாக மில்லியன் கணக்கான இலங்கையர்கள் நேசிக்கும் ஒரு விளையாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக இலங்கை கிரிக்கெட் தனது பொறுப்பை பிரதிபலிக்கிறது எனத் தெ…
-
- 38 replies
- 1.5k views
- 1 follower
-
-
‘தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு Jan 2, 2026 - 06:00 PM 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை ஒரே நிறுவனத்தின் கீழ் மேற்பார்வை செய்வதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் "தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை" தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் மற்றும் தற்போதைய செயல்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக தேசிய வீட்டமைப்பு அ…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
CEB யோசனை குறித்த பொது மக்களின் கருத்து கோரல் விரைவில் Jan 2, 2026 - 08:02 PM 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்கான எதிர்பார்க்கப்படும் செலவு 137,016 மில்லியன் ரூபாவாகும் எனவும், தற்போதுள்ள கட்டணங்களின் கீழ் கிடைக்கும் வருமானம் 113,161 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தனது யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, 13,094 மில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை நிலவுவதால், மொத்த மின்சாரக் கட்டணத்தை 11.57% சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை முன்மொழிந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்த யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) கையளித்துள்ளது. …
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு (1) முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த படகு ஒன்றும் மீன்படி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.samakalam.com/இல…
-
- 0 replies
- 96 views
-
-
ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் 31 Dec, 2025 | 07:24 PM நாட்டின் ஒழுக்க விழுமியங்களையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில், ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கில மொழிப் பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை தொடர்பான விடயங்கள் சூட்சுமமாகப் புகுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பூஜ்ய யெவெல பஞ்ஞாசேகர தேரர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறியதாவது, ஒரு ஒழுக்கமா…
-
- 2 replies
- 225 views
- 1 follower
-
-
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு : அரசுக்கு நெறியியல், அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை - கிறிஸ்தவ பாதிரிமார்கள், செயற்பாட்டாளர்கள் 61 பேர் கூட்டாகக் கண்டனம் 01 Jan, 2026 | 06:15 PM (நா.தனுஜா) பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளடங்கலாக அடக்குமுறை சட்ட வடிவங்களை நீக்குவோமென வெளிப்படையாக வாக்குறுதி அளித்திருந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது கருத்துச் சுதந்திரத்தையும் நபர்களின் தனியுரிமையையும் அச்சுறுத்தலுக்குள் தள்ளக்கூடிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் மிக மோசமான சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது. இதன்மூலம் தற்போதைய அரசுக்கும் நெறியியல் மற்றும் அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளதாக கிறிஸ்தவ பாதிரிமார்க…
-
- 1 reply
- 127 views
- 1 follower
-
-
பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படையற்றது! - தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் 01 Jan, 2026 | 01:01 PM மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமைகோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படையற்றவை என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. புதுவருட தினமான இன்று (ஜன. 1) வவுனியாவில் இச்சங்கத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அவர்கள் மேலும் கூறுகையில், இன்று ஜனவரி 1, 2026, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்களாகிய நாங்கள், வவுனியாவில் 3,237வது நாட்களுக்க…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
22 நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு நிவாரண உதவி Jan 1, 2026 - 04:52 PM டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக 22 வெளிநாடுகளிலிருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு உதவிகளை முறையாக முகாமைத்துவம் செய்யவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் அவற்றை மக்களுக்கு வினைத்திறனுடன் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யவும் ஜனாதிபதியினால் வெளிநாட்டு நிவாரண ஒருங்கிணைப்புக்கான சிரேஷ்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசே…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
மறுசீரமைப்பு, மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியை தோள்மேல் சுமந்த நிலையில் நாம் புத்தாண்டில் கால்பதிக்கிறோம் - வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி Published By: Digital Desk 3 31 Dec, 2025 | 07:30 PM மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது. 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு …
-
- 3 replies
- 262 views
- 1 follower
-
-
”அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்” – தையிட்டி விகாராதிபதி தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார். தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் விகாராதிபதியாக நான் இடமளிக்கவில்லை. தெற்கில் இருந்து புத்தர் சிலை எடுத்து வருவதாகவும், அன்றைய த…
-
- 1 reply
- 187 views
-
-
யாழ். மாவட்ட செயலகத்தில் 2026ஆம் ஆண்டிற்கான அரச கடமைகள் ஆரம்பம்! செய்திகள் 2026ஆம் புத்தாண்டுக்கான அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (01) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் 2026ஆம் ஆண்டிற்கான அரச சேவை சத்தியப்பிரமாணத்தை (உறுதிமொழி) மேற்கொண்டனர். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப்…
-
- 0 replies
- 109 views
-
-
கடந்த வருடத்தில் 5.6 சதவீதம் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி! 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) உறுதிப்படுத்தியுள்ளது. வருடத்தின் இறுதி நாளான நேற்றைய வர்த்தக நிறைவில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306.29 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.83 ரூபாவாகவும் இருந்தது. 2024 டிசம்பர் 31 அன்று, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 288.32 ரூபாவாகவும், 297.01 ரூபாவாகவும் இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1457954
-
- 0 replies
- 106 views
-
-
வடக்கு, தெற்கில் 3 வீட்டுத்திட்டங்களுக்கான இந்திய நிதி உதவி இருமடங்காக அதிகரிப்பு 31 Dec, 2025 | 04:23 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கிராம சக்தி வடக்கு, கிராம சக்தி தெற்கு-ஐ மற்றும் கிராம சக்தி தெற்கு-ஐஐ ஆகிய மூன்று வீட்டுத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2017 ஒக்டோபர் மற்றும் 2018 ஒக்டோபர் மாதங்களில் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களின்படி, இலங்கை அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், சுயமாக வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு 500,000 இலங்கை ரூபா…
-
- 0 replies
- 80 views
- 1 follower
-