ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
வடக்கு, கிழக்கில் குடும்பங்களின் கடன்படுநிலை அதிகரிப்பு – மத்திய வங்கி ஆய்வு தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆய்வு நடத்தவுள்ளது. கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது, சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வீடு மற்றும் அதனைச் சார்ந்த குடும்பத்தினரின் கடன் அதிகரித்து வருவது குறித்து நாம் கவலையடைகிறோம். போருக்குப் பின்னர் குடும்பங்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்களை எதிர்கொண்டுள்ளன. ஆய்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகளுக்கு அமைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 2009 மே மாதம்…
-
- 0 replies
- 198 views
-
-
மே மாதம் 18 ஆம் நாள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் பெயர்களை நினைவுக் கற்களில் பொறித்து அஞ்சலி செய்வதற்கு சிறிலங்கா காவல்துறையினர் தடை விதித்ததுடன், ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தது. காவல்துறையின் இச்செயற்பாட்டை உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் தலைவர் யஸ்மின் வன்மையாகக் கண்டித்ததுள்ளார். கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றமும் நினைவுக் கற்களில் விடுதலைப் புலிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்து தடை விதித்திருந்தது. இது தொடர்பாக யஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு தாய், தந்தையருக்கும் தமது பிள்ளைகளை நினைவுகூர உரிமையுண்டு. அதனை நீங்கள் தடுக்கமுடியாது. அதேபோல் யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளையும் …
-
- 0 replies
- 302 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை அரசாங்கம் ஏற்காது போனால் அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் குழுவாக இயங்குவோம் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது கருத்துக்களை ஜனாதிபதிக்கு ஏற்கனவே அறிவித்துள்ளோம். இன்றளவில் நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமைக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாதாரம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் குழுவின் செயற்பாடுகளே காரணமாகும். கூட்டு அரசாங்கமாகச் செயற்பட வேண்டுமானால் இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதாரத் திட்டங்களினை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்ட…
-
- 0 replies
- 239 views
-
-
சக்தி டிவி செய்திகள் 21th May 2017, 8PM
-
- 0 replies
- 200 views
-
-
தன்னை தடுத்த பொலிஸாருடன் இனவாதமாக பேசிய ஞானசார தேரர் வீதியில் சென்ற தனது வாகனத்தை தடுத்த பொலிஸாருடன், ஞானசார தேரர் இனவாதத்தை தூண்டும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குருநாகல் கொஸ்களை தோரப்பாய பிரதேசத்தின் அனுராதபுர மற்றும் குருநாகல் வீதியில் வைத்து பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் வாகனத்தை மறித்த பொலிஸார், அவரை கைது செய்யவுள்ளதாக கூறி தேரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொலிஸாருடன் இனவாதத்தை தூண்டும் வகையிலான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அனுராதபுரம் சென்ற ஞானசார தேரர் கொஸ்களை பகுதியில் வைத்து பொலிஸாரினால் இடை நிறுத்தப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 299 views
-
-
கிழக்கின் ஆட்சியில் ‘மு.காவும் த.தே.கூவும் பங்குதாரர்கள்’ -வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன் “கிழக்கு மாகாண ஆட்சியின் பங்குதாரர்கள் என்ற அந்தஸ்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் நிரந்தர அந்தஸ்தாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நாங்கள். அதன்மூலமே, நாங்கள் பல விடயங்களைச் சாதிக்க முடியும்” என, மு.காவின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பிழைப்புவாத அரசியலையோ அல்லது சந்தர்ப்பவாத அரசியலையோ செய்யவில்லை என்றும், அமைச்சர் சுட்டிக்காட்டினார். …
-
- 0 replies
- 255 views
-
-
வடக்குப் பாதை வலையமைப்பை விருத்தி செய்வதில் டில்லி ஆர்வம் நேரில் வந்து ஆராயவுள்ளார் அமைச்சர் நிதின் கட்கரி ‘வடக்கு மாகாண பாதை வலையமைப்பை அபிவிருத்தி செய்வதில் இந்தியா வெகு ஆர்வமாக உள்ளது. இந்தியாவின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கு வந்து ஆராயவுள்ளார்’ இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘பலமிக்கதோர் இலங்கை’ பொருளாதாரக் கலந்துரையாடலின் தலைமை உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது நான் அண்மையில் இந்…
-
- 4 replies
- 404 views
-
-
ஞானசார மீது துரும்பளவில் தாக்குதல் ஏற்பட்டாலும் நாட்டில் சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும் (ஆர்.யசி) பொதுபல சேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதேபோல் அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் மூலமாக ஞானசார தேரரை கொலைசெய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். ஞானசார தேரரை கைது செய்தாலோ அவர் மீது சிறிய தாக்குதலேனும் நடத்தினால் நாட்டில் சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும் எனவும் அவர் எச்சரித்தார். அண்மைக்காலமாக பௌத்த சிங்கள அமைப்புகள் நாட்டில் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் சிங்கள ராவய…
-
- 0 replies
- 260 views
-
-
வடக்கில் காணிகளை பெற்றுக் கொண்டோரே வேறு இடத்தில் காணி கேட்டுப் போராடுகின்றனர் கடும்போக்காளர்கள் மக்களை தூண்டிவிடுகின்றனர் என்கிறார் ஜனாதிபதி திருமலை நவம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் காணிகள்கேட்டு போராட் டம் நடத்தவில்லை வடக்கிலுள்ள மக்களே காணிகள் கேட்டு போராட்டங்களை நடத்துகின்றனர். வடக்கு மக்களுக்கு நாம் காணி களை வழங்கியிருக்கின்றோம், வீடுகளை வழங்கியிருக்கின் றோம். அதேபோன்று வாழ்வா தாரத்தையும் தேடிக் கொடுத்திருக்கின்றோம். ஆனால், காணிகளை பெற்றுக்கொண்டவர்கள் வேறு இடங்களில் காணிகளை கேட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு மக்கள் கார…
-
- 0 replies
- 204 views
-
-
9 மாகாணங்களிலும் சமமாக இராணுவத்தை நிறுத்தினால் எமக்கு ஆட்சேபனை இல்லை ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் எடுத்துரைப்பு நமது நிருபர் முழு இராணுவத்தையும் ஒன்பதாகப் பிரித்து ஒன்பதில் ஒரு பங்கை ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள். சரிசமனாக இராணுவத்தை நிறுத்துவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து உரையாடியபோது இவ் வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில…
-
- 1 reply
- 225 views
-
-
ஞானசாரரின் இனவாதப் போக்கை சாதுரியமாக கையாண்டார் மனோ – அமைச்சர் திகாம்பரம் இனவாதம் என்பது இலங்கை நாட்டுக்கு புதிதல்ல. காலத்திற்கு காலம் வெவ்வேறு வடிவங்களில் அது இடம்பெற்றே வந்துள்ளது. அண்மைய ஆண்டுகளில் அதனை முன்னெடுத்துச் செல்லும் குழுவாக கலகொட அத்தே ஞானசார தேரர் எனும் பிக்கு தலைமையிலான குழுவினர் இயங்குகின்றனர். இது தனியே அவர் தலைமையிலான குழுவினரின் வேலை மாத்திரம் கிடையாது. இதற்குப் பின்னால் ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலும் இனவாத அரசியல்வாதிகளும் கூட இருக்கின்றார்கள். அத்தகைய அரசியல் நிகழ்ச்சி நிரல் கொண்ட ஞானசாரதேரர் தம்மைச் சந்திக்க வந்த வேளை அரசியல்வாதி என்கின்ற அடிப்படையில் சாணக்கி…
-
- 0 replies
- 367 views
-
-
முஸ்லிம் சமூகத்தை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையிலான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாத காலத்தினுள் மாத்திரம் இவ்வாறான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளமையே இதற்குக் காரணமாகும்.இவற்றுள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு, முஸ்லிம் எல்லைக் கிராம மக்களுக்கு அச்சுறுத்தல்கள், வெறுப்புப் பேச்சுக்கள், அல்லாஹ்வை அவமதிக்கும் பேச்சுக்கள் என பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இருந்த போதிலும் இவை தொடர்பில் இதுவரை ஒரு நபர் கூட கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மேற்படி சம்பவங்கள் அனைத்தும் மிகத் தெளிவாகவே நாட்டின் சட்ட வரம்பை மீறுபவையாகும். எனினும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்…
-
- 0 replies
- 286 views
-
-
இந்திய போர்க் கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை..! இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான 'சுமேதா' போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த குறித்த போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர். உத்தியோகபூர்வமாக நாட்டை வந்தடைந்துள்ள இந்த கப்பல் 3 நாட்கள் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும், கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கவுள்ளது. கப்பலானது கடற்படையினரின் பயிற்…
-
- 0 replies
- 413 views
-
-
அமைச்சரவை மாற்றம் : முக்கிய அறிவிப்பு நாளை நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்ப டுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தீர்மானித்துள்ளனர். குறிப்பாக நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்கள் பலவற்றிலும் இந்த மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட ஒழுங்குகள் அமைச்சின் பொறுப்புக்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குவதற்கான எதிர்ப்பார்ப்புகள் ஜனாதிபதியிடம் உள்ளதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். இதன…
-
- 1 reply
- 429 views
-
-
பொதுபலசேனா அமைப்பும் அதன் முக்கியஸ்தர் ஞானசாரவும் கடந்த அரசிலும் இந்த அரசிலும் தொடர்ந்தேர்ச்சியாக முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டும் வஞ்சித்து கொண்டும் இருக்கின்றார், புனித இஸ்லாத்தையும் இறைவனையும் இழிவாகவும் பேசுகிறார். இப்படி இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியவர்களின் இறுதி நிலை வரலாறுகளின் அடிப்படையில் ஒன்றில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பர் இல்லயேல் முடிவு மிகக் கேவலமாக இருக்கும் என சிலோன் முஸ்லிம் பிரதானி பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்.புலம்பெயர் மத்திய கிழக்கு இலங்கை முஸ்லிம்களை சிலோன் முஸ்லிம் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார்,மேலும் உரையாற்றிய பஹத் ஏ.மஜீத்,இஸ்லாம் பரிபூரண மார்க்கம், சகவாழ்வு, சமாதானம், ஒழுக்கம், உண்மை, நேர்மை என்பவற்றால்…
-
- 4 replies
- 499 views
-
-
மறக்கப்பட்ட தமிழர்கள் சமீபத்திய இலங்கைப் பயணத்தின்போது, மத்திய மாகாணத்தின் நுவரேலியா மாவட்டத்தில் உள்ள நோர்வுட் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பெருந்திரளாகக் கலந்துகொண்ட மலையகத் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. இலங்கையின் ‘பிற’ தமிழர்களின் பங்களிப்புக்கான இந்திய அரசின் மிக உயர்ந்த அங்கீகாரமாக அது அமைந்தது. மலையகத் தமிழர்களின் பகுதிக்கு முதன்முதலாகச் சென்ற இந்தியப் பிரதமர் மோடிதான். மலையகத் தமிழர்களுக்காக மேலும் 10,000 வீடுகள் கட்டுவதற்கு இந்திய அரசு நிதி வழங்கும் என்றும் மோடி அறிவித்தார். ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்த இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங…
-
- 0 replies
- 372 views
-
-
கேள்வி- பொதுபல சேனா இயக்க செயலாளர் ஞானசாரரை கைது செய்ய வேண்டுமென பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளீர்களே? பதில்- ஆம். ஞானசார தேரரின் நடவடிக்கைகள் எல்லை மீறி விட்டன அல்லாஹ்வை பகிரங்கமாக தகாத வார்த்தைகள் கொண்டு தூற்றி வருகின்றார். இனவாதத்தை மோசமாக கட்டவிழ்த்து விடுகின்றார் இதனாலேயே நானும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்காரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியும் கூட்டாக இந்த முறைப்பாட்டை பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம். கேள்வி – பொலிஸ்மா அதிபரை நீங்கள் சந்தித்ததாக பத்திகைகளில் செய்திகள் வெளிவந்தனவே! பதில் – கடந்த 18ம் திகதி மாலை பொலிஸ் தலைமையகத்தில் அவருக்கெதிராக பதிவு செய்த பின்…
-
- 0 replies
- 596 views
-
-
வடமராட்சி கிழக்கை ஹெலியிலிருந்தவாறே பார்வையிட்டார் ரணில் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தை உலங்கு வானூர்தியில் வட்டமடித்துப் பார்வையிட்டார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க, வடமராட்சிக்கு நேற்றுக் காலை பயணம் மேற்கொண்டார். பருத்தித்துறை துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டார். 8 பில்லியன் ரூபா செலவில் 500 படகுகளை ஒரே நேரத்தில் நிறுத்தக் கூடியதாக இந்தத் துறைமுகம் அமைக்கப்படுகிறது. இதன் பின்னர் மணல்காட்டுப் பகுதியைச் சென்று தலைமை அமைச்சர் பார்வையிட்டார். அங்கிருந்து உலங்குவானூர்தியில் புறப்பட்ட தலைமை அமைச்ச…
-
- 0 replies
- 316 views
-
-
நினைவேந்தல் செய்ததால் பணிநீக்கம்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தவர்களை வவுனியாவில் இயங்கும் தென்பகுதியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வேலையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. பணிநீக்கியதற்கான காரணம் தற்போது கூற முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. அந்த நிறுவனத்தில் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 7 பேர் பணிபுரிகின்றனர். அவர்கள் கடந்த வியாழக்கிழமை தாம் பணிபுரியும் அலுவலகத்தில் பணிநேரம் நிறைவடைந்த பி்ன்னர் மாலை 5.30 அளவில் மே 18 நினைவேந்தல் நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றத…
-
- 0 replies
- 194 views
-
-
குருநாகல் பள்ளி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் குருநாகல், மல்லவபிற்றியவில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது, இனந்தெரியாத நபர்களால், நேற்று இரவு, பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, பள்ளிவாசலுக்குச் சேதம் ஏற்பட்டது. - See more at: http://www.tamilmirror.lk/196995/க-ர-ந-கல-பள-ள-ம-த-ப-ற-ற-ல-க-ண-ட-த-த-க-க-தல-#sthash.BPcxTvr4.dpuf
-
- 2 replies
- 817 views
-
-
-
பளையில் துப்பாக்கிச் சூடு கிளிநொச்சி மாவட்டத்தின், பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஏ-9 முதன்மைச் சாலையில், கற்சிலைவெளிப் பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 119 அவசர பொலிஸ் இலக்க வாகனத்தினர் அதிகாலை 12.15 மணியளவில் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வீதியிலிருந்த பற்றைப் பகுதியிலிருந்து மூன்று துப்பாக்கி வெடிகள் கேட்டதாகவும் பளைப் பொலிஸார் தெரிவித்தனர். ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாப் பொலிஸார் கூறுகின்றனர். எவருக்கும் இதன்போது காயங்கள் ஏற்படவில்லை என்றும், வாகனத்துக்கும் சேதம…
-
- 11 replies
- 939 views
-
-
முல்லைத்தீவில் கடற்படைக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணிக்கு உரிமை கோரும் சீனர் முல்லைத்தீவு வெல்லமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படைக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணிக்கு சீனர் ஒருவர் உரிமை கோரியுள்ளார். இந்தக் காணியின் மூல உரிமையாளர் தாம் என குறித்த சீனர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட பாரிய கடற்புலி முகாம் அமைந்திருந்த பகுதியையே அவர் இவ்வாறு உரிமை கோரியுள்ளார். தற்போது குறித்த பகுதியின் 600 ஏக்கர் காணியை உள்ளடக்கி படையினர் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். சீனப் பிரஜை கோரும் காணியானது அவரது பெற்றோர் விவசாய அனுமதிபத்திர அடிப்படையில் பெற்றுக்கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 242 views
-
-
கனடிய கடற்படையின் வின்னிபெக் கொழும்புத் துறைமுகத்தில் கனடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. வின்னிபெக் என்ற கனடிய கடற்படைக் கப்பலே, கூட்டுப்பயிற்சி மற்றும் நட்பு தேவைகளுக்காக நேற்று கொழும்புத் துறைமுகம் வந்துள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ள இந்தப் போர்க்கப்பலானது, கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் கூட்டுப்பயிற்சி, பரஸ்பர நட்புறவு மற்றும் நட்பு ரீதியான விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துக…
-
- 0 replies
- 196 views
-
-
அரசியல் தீர்வு பின்போவதன் எதிர்வினையே பளைச் சூடு! போர் முடிந்து 8 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் வடக்கில் ஒலித்துள்ளன. சுற்றுக் காவல் அணியை இலக்கு வைத்து தாக்குதலாளிகள் பதுங்கியிருந்து சுட்டனர் என்று பொலிஸார் கூறுகின்றனர். அது உண்மையாயின், அரசியல் தீர்வு ஒன்று தாமதப்பட்டு வரும் நிலையில் இத்தகைய சம்பவம் கவலைக்குரியது. எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையை ஏற்படுத்துவது. பளை நகருக்கு அண்மையில் கச்சார்வெளிப் பகுதியில் நடந்த சம்பவம் குறித்துப் பல கதைகள் நிலவினாலும், பாதுகாப்புத் தரப்பினர் அதனை அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொண்டதாகத்…
-
- 0 replies
- 426 views
-