ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்பன தொடர்பில் இந்திய பிரதமருடன் விவாதிக்க உள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாளை இலங்கை செல்லும் இந்திய பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள மோடி வெள்ளிக்கிழமை மலையகத்திற்கு பயணம் செல்லவுள்ளதுடன் அங்கு நிகழ்வுகளில் பங்கேற்று பின்னர் இந்திய…
-
- 0 replies
- 263 views
-
-
வித்தியா வழக்கு: கொழும்பில் நடத்த யோசனை புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறிய முடியகின்றது. கொழும்பில் இந்த விசாரணையை முன்னெடுக்கவும் யோசனை முன்வைக்க்பபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு படுகொலை செய்யப்பட்டார். மாணவியின் படுகொலையும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டனர். …
-
- 1 reply
- 386 views
-
-
இந்திய - இலங்கை நட்புறவு மையம் வடக்கில் வடமாகாணத்தில் சுமார் 300 கோடி இந்திய ரூபாய் செலவில் இந்திய- இலங்கை நட்புறவு மையம் ஒன்றை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்திய- இலங்கை நட்புறவு மையம் கிளிநொச்சி - பளை பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் அமைய உள்ளதாகவும் அந்த மையத்தின் நடவடிக்கை பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார். இந்திய- இலங்கை நட்புறவு மையம் தொடர்பாக நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழகம் நாகை மாவட்ட மக்கள் இணைந்து நாகை மாவட்ட மக்கள் மன்றம…
-
- 1 reply
- 365 views
-
-
அபிவிருத்தி என்ற போர்வையில் நிலத்தை இழந்து, வளத்தை இழந்து வாழும் நிலைதான் நாம் அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் பரிசு?
-
- 0 replies
- 128 views
-
-
ஒரு மனிதன் மிருகமாவதும் பிராமணனாவதும் பிறப்பால் அல்ல அவனது கொள்கைகளால் ஆகும். எனவே புண்ணியமான போயா தினத்தில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவது விமல் வீரவன்சவின் மிருகக் கொள்கைகளையே வெளிப்படுத்துகின்றது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறானவர்கள் ஊடகங்களின் முன்னிலையில் தேசப்பற்றாளர்களாக நடிக்கின்றார்கள் என்றும் சாடியுள்ளார். இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில் முழு உலகமே பௌத்த தர்மத்தை நினைவு கூரும் தினமே வெசாக் தினமாகும். அனைத்து போயாக்களையும் விட வெசாக் போயா புனிதமானது. …
-
- 0 replies
- 343 views
-
-
மயிலிட்டிப் பிரதேசத்தில் வெடிபொருள் கிணறுகள் மீள்குடியேறிய மக்கள் அச்சத்தில் மயிலிட்டியில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியில், மற்றுமொரு கிணற்றிலிருந்து நேற்றுப் பெருமளவு வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய கிணறுகளிலும் வெடிபொருள்கள் காணப்படக் கூடும் என்று மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி வடக்குத்துறையில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்றுக் காலை ஒரு தொகுதி வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. ஆயிரத்து 500 துப்பாக்கி ரவைகள், 7 வெளிச்சக் குண்டுகள், 10 இனந்தெரியாத குண்டுகள் என்பன இதன்போது மீட்கப்பட்டன. இ…
-
- 0 replies
- 576 views
-
-
புலிகள் வீழ்த்திய வானூர்தியின் பாகங்கள் மீட்பு 25 வருடங்களின் பின் இயக்கச்சியில் கிடைத்தன விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் விமானப் படையினரின் வை 08 என்ற விமானத்தின் பாகங்கள் நேற்று மீட்கப்பட் டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விமானம் 1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானப் படையினரின் புலனாய்வுப் பிரிவின ருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஆனையிறவு இயக்கச்சியில் நேற்று இந்த விமானப் பாகங்கள் மீட்கப்பட் டன. நேற்று அங்கு சென்ற விமானப்படை உயர் அதிகாரிகள் இடத்தைப் பார்வையிட்டனர…
-
- 0 replies
- 170 views
-
-
உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்பெல்லாம் வெசாக் தினங்களை நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம். இப்போது வடகிழக்கில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் வெசாக் கூடுகளை வைக்கின்றனர். எங்கள் நகரங்களை எல்லாம் வெசாக் கூடுகளின் நகரங்களாக்கின்றனர் இலங்கை இராணுவத்தினர். வடகிழக்கில் இலங்கை இராணுவத்தினர் வெசாக் கூடுகளை மாத்திரம் அமைப்பதில்லை. அவர்கள்தான் புத்தர் சிலைகளையும் வைக…
-
- 0 replies
- 373 views
-
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: ‘செயற்படுத்தினால் செவிப்பறை கிழியும்’ -நடராசா கிருஸ்ணகுமார் “அமைச்சரவையினால், புதிதாக அங்கிகரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை செயற்படுத்த முயன்றால், மக்கள் போராட்டம் வெடிக்கும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர், மேலும் தெரிவிக்கையில், “தற்போது உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டமே கடந்த காலங்களில் அரசை, போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றங்களுக்குள் தள்ளிவிடக்காரணமாக அமைந்தது. அப்படியிருக்க புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச விழுமியங்களை ஒழுகியத…
-
- 0 replies
- 373 views
-
-
போதைப்பொருள் சுற்றிவளைப்பு பொலிஸ் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ; 5 பேர் காயம் ; பிலியந்தலையில் பதற்றம் பிலியந்தலை பகுதியில் போதைப்பொருள் சுற்றி வளைப்பொன்றுக்குச் சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மீது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ உள்ளிட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிறுவர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று சிவிலியன்களும் காயமடைந்து களுபோவில - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனும…
-
- 0 replies
- 135 views
-
-
பலாலி வானூர்தித் தள விரிவாக்கப் பணிக்காக காணி சுவீகரிக்கக்கூடாது வடக்கு மாகாண சபையில் நிறைவேறியது பிரேரணை பலாலி வானூர்தித் தளத்தை விரிவாக்கும் போது காணி சுவீகரிப்பு மேற்கொள்ளக்கூடாது என வடக்கு மாகாண சபையில் நேற்றுப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தப் பொது முக்கியத்து வம் வாய்ந்த பிரேரணையை நேற்றைய அமர்வில் முன்மொழிந்தார். அவர் பிரேரணையில் தெரிவித்ததாவது, வடக்கு மாகாண சபையின் 6 ஆவது அமர்வின்போது நிறைவேற்றப்பட்ட 71 ஆவது தீர்மானத்தின்படி பலாலி வானூர்தித் தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றைப் புனரமைக்கவேண்…
-
- 0 replies
- 240 views
-
-
ஆபத்தான புலிகளையும் விடுவித்துவிட்டு எனது பாதுகாப்பையும் குறைக்கிறது அரசு மறுவாழ்வு வழங்கி விடுவிக்க முடியாதவர்கள் எனக் கருதி தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆபத்தான உறுப்பினர்களை விடுதலை செய்துகொண்டு மறுபுறத்தில் தனக்கான பாதுகாப்பையும் இந்த அரசு குறைத்துள்ளது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கவலையும் விசனமும் தெரிவித்துள்ளார். அவரது ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்ட பத்திரிகைக் குறிப்பில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீதிமன்…
-
- 3 replies
- 394 views
-
-
மக்களை ஒடுக்கும் அரசு வெகுவிரைவில் வீட்டுக்கு – நாமல் ராஜபக்ச சூளுரை மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வெகு விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம். ஐக்கிய மக்கள் சுதந் திரக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சி அமையும் நாள் விரைவில் வரும். இவ்வாறு சூளுரைத்துள்ளார் கிந்த ராஜபக்சவின் புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச. பத்தரமுல்லையில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களி…
-
- 2 replies
- 301 views
-
-
சக்தி டிவி செய்திகள் 9th May 2017, 8PM
-
- 0 replies
- 217 views
-
-
மகிந்த தரப்பில் 11 எம்.பிக்கள் பதவியிழப்பர்? இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளமையால் இலங்கையின் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரட்டைக் குடியுரிமையை, மகிந்த அணியில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர்களும் பதவி இழக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிய வருகின்றது. இரட்டைக் குடியுரிமை காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து …
-
- 0 replies
- 368 views
-
-
முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் – பொதுபல சேனா முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு மட்டும் நாட்டில் தனியான சட்டங்கள் இருக்க முடியாது என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/26357
-
- 1 reply
- 275 views
-
-
புனரமைப்பின்றி புறக்கணிக்கப்பட்ட தென்மராட்சிப் பிரதேசம் 2 ஆயிரத்து 914 குடும்பங்களைச் சேர்ந்த 86 ஆயிரத்து 812பொது மக்கள் வாழும் ஓர் பிரதேச செயலாளர் பிரிவில் 4 ஆயிரத்து 762 குடும்பங்கள் நிரந்தர வீட்டு வசதிகளின்றி இன்றுவரை கொட்டகைகளிலும், அரை வீட்டுத் திட்டத்தின் கீழான பகுதி வீடுகளிலும் வாழ்வதோடு 3 ஆயிரம் வரையிலான குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகளும் இன்றிக் காணப்படும் வட மாகாணத்திலுள்ள ஒரு பிரதேச செயலாளர் செயலாளர் பிரி வாக இன்றுவரை தென்மராட்சி இருந்து வருகின்றது. போர் வேளையில் வன்னிப்பகுதிக்கும் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குமான எல்லைப் பகுதியாக விளங்கிய குறித்த இ…
-
- 0 replies
- 312 views
-
-
கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுக் செல்வோருக்கு நல்ல செய்தி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோரிடமிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் 500,000 ரூபா அறவீடு செய்யத் திட்டமிட்டிருந்தது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் உத்தரவிற்கு அமைய இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பிணைத் தொகையாக ஐந்து லட்சம் ரூபா செலுத்த வேண்டுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது எனினும், தற்போது அந்த தொகையை அறவீடு செய்யாமலேயே வேலை வாய்ப்பு பெற்றுச்செல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 26000 பேர் கொரியாவில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிட…
-
- 1 reply
- 602 views
-
-
வடக்கு மாகாண சபை முன்பாகப் போராட்டம் வடக்கு மாகாண சபை முன்பாக இன்று காலை, வேலை வாய்ப்புக் கோரி போராடும் பட்டதாரிகளினால் முற்றுகைப் போர் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக கடந்த 71 நாள்களாகப் போராட்டம் நடத்திய, வேலை வாய்ப்புக் கோரி போராடும் பட்டதாரிகள், வடக்கு மாகாண பேரவைச் செயலகம் முன்பாக இன்று காலை போராட்டம் நடத்தினர். வடக்கு மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. http://uthayandaily.com/story/1759.html
-
- 4 replies
- 1.2k views
-
-
விடுதலை பெறும் வரையில் தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும் – டி. எம். சுவாமிநாதனிடம் டக்ளஸ் Share This! சுகவீனமுற்றுள்ள நிலையில் கொழும்பு, மகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் அதிகாரிகளால் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டும், போதிய கவனிப்புகள் இன்றியும் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிய வரும் நிலையில் இது தொடர்பில் போதிய அவதானங்களைச் செலுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெறும் வரையில் அவர்கள் நீதியாக நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்ச…
-
- 0 replies
- 208 views
-
-
அமைச்சர்களின் உறுதிமொழியையடுத்து மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது (நமது நிருபர்) மாவில்லு வர்த்தமானி பிர கடனத்தில் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளைபோக்கி பிரகடனத்தை இரத்துச்செய்ய வேண்டுமென கடந்த 44 நாட்களாக மறிச்சுக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்த மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தை நேற்று மாலை தற்காலிகமாக இடை நிறுத்திக்கொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று முன்தினம் காலை நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்தும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளதால்போரா…
-
- 0 replies
- 347 views
-
-
வடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின் இரத்தமாகும் என வட மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக நாட்டுக்காக இரத்தம் சி;ந்திய படைவீரர்கள் இன்று, வடக்கு மக்களை வாழ வைப்பதற்காக இரத்தத்தை தானமாக வழங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற படைவீரர் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஓர் இனம், ஒர் மதம் அல்லது சமூகத்தின் வெற்றியாக இந்த நிகழ்வு நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/26311
-
- 3 replies
- 447 views
-
-
மிக் விமானக் கொள்வனவு விவகாரம் : வங்கிக்கணக்கு விசாரணைக்கு மேலும் கால அவகாசம் தேவை மிக் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என உயர் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. தனது வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டமைக்கு எதிராகவும் கோட்டை நீதிவானினால் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவிறாந்து ஊடாகவும் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து உதயங்க வீரதுங்க சார்பில் தாக் கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை…
-
- 0 replies
- 268 views
-
-
குழந்தை கடத்தலின் பின்னணியில் செயற்பட்டிருந்த பலர் தலைமறைவு கைதுசெய்ய இரு சிறப்புக் குழுக்கள்; கைதானோர் விளக்கமறியலில் (எம்.எப்.எம்.பஸீர்) கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கவட்ட வீதி பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த இரண்டரை வயது குழந்தையை கடத்தியமை, சட்டபூர்வமான பாதுகாப்பில் இருந்து குழந்தையை பிரித்தமை, தடுத்து வைத்தமை மற்றும் கப்பம் கோரியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தையுடன் மாயமான, பின்னர் கடத்தலின் பிரதான சூத்திரதாரி என கண்டறியப்பட்ட மாமா உறவு முறை இளைஞர் முஹம்மத் அசாம் மற்றும் கு…
-
- 1 reply
- 342 views
-
-
மோடியின் வருகையை அரசியலாக்கவேண்டாம் தமிழ் ஊடகங்களும் இனவாதிகளும் குழப்பக்கூடாது என்கிறார் டிலான் (ரொபட் அன்டனி) இலங்கையில் அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதாக யாரும் கருதக்கூடாது. மாறாக ஐக்கிய நாடுகளின் வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்ளவே மோடி இலங்கை வருகின்றார். ஆதலால் இனவாதிகள் இந்த விடயத்தை குழப்பக்கூடாது என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். கூட்டு எதிரணியினர் மோடி வருகையின் போது கறுப்புக்கொடி காட்டவேண்டுமென தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 166 views
-