ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143370 topics in this forum
-
பிறரின் காணியில் விகாரை அமைக்குமாறு புத்தபெருமான் கூறவில்லை! - போத்திவெல சந்தானெந்த தேரர் [Monday 2017-05-01 08:00] மற்றொருவரின் காணியில் அத்துமீறி விகாரை நிர்மாணிக்குமாறு புத்தபெருமான் ஒருபோதும் கூறவில்லை என தீகவாபி பரிவார சைத்திய ரஜமகா விகாரையின் பிரதம பௌத்த பிக்கு வணக்கத்திற்குரிய போத்திவெல சந்தானந்த தேரர் தெரிவித்தார். இறக்காமம் மாயக்கல்லி விடயம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நீண்ட காலமாக மாயக்கல்லி முஸ்லிம்களின் அவர்களது பூர்வீக காணிகளில் வசித்தோரை அவர்களின் விருப்பமின்றி அப்புறப்படுத்தி விகாரையை அமைக்கவேண்டிய அவசியமில்லை. மாணிக்கமடுவிக்கு அருகிலேயே தீகவாபி உள்ளதால் இங்கும் ஒரு விகாரை அவசியமில்லை. த…
-
- 0 replies
- 208 views
-
-
லட்சியத்தின் கீழ் அனைவரும் ஒற்றுமையாய் ஓரணியில் திரள்வோம்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி [Monday 2017-05-01 08:00] தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வென்றெடுக்கவும், தமிழ்த் தேசத்துத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய்க் குரல் கொடுப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினப் பேரணியும் பொதுக் கூட்டமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக இன்று அவர் கருத்து வெளியிடுகையில், அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படல் வேண்டும், காணாமல் ஆக்கப்ப…
-
- 0 replies
- 262 views
-
-
ஈழத் தமிழரின் அரசியல் திருப்பு முனையில் வந்து நிற்கிறது : சுமந்திரன் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச தரப்புக்கள் என அனைவரும் எங்களைக் கைவிடாததால் ஈழத் தமிழர் அரசியல் இப்பொழுது திருப்பு முனையில் வந்து நிற்கிறது என்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தந்தை செவ்வாவின் 40வது நினைவு தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜெனீவாத் தீர்மானமும் ஈழத் தமிழர் அரசியலும் எனும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட…
-
- 4 replies
- 468 views
-
-
அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகை கைப்பற்றியது கடற்படை காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகொன்றை இன்று காலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த படகு காங்கேசன்துறையிலிருந்து 12 கடல் மைல் தூரத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும்,குறித்த படகில் இந்தியவைச் சேர்ந்த 2 பேர், மியன்மாரைச் சேர்ந்த 14 பேர் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags http://www.virakesari.lk/article/19576
-
- 2 replies
- 359 views
-
-
தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் மேடையாக பயன்படுத்துங்கள் : எதிர்க்கட்சித் தலைவர் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்கொடுத்து வருகின்ற சவால்கள் என்பவற்றினை முன்னிலைப்படுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடையாகவும் தொழிலாளர்களின் முயற்சிகளை நினைவு கூர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் தமது மே தினக் கொண்டாட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என்று தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழ…
-
- 0 replies
- 113 views
-
-
எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை ஒருபோதும் ஏற்க மாட்டோம் : சம்பந்தன் தேசிய பிரச்சினைக்கான தீர்வு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் மக்களுக்குச் சமர்ப்பிப்போம், மக்களின் ஆலோசனைகளை நாம் பெறுவோம், எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். மக்களின் கருத்துக்களுக்கு உட்பட்டுத்தான் நாங்கள் இறுதி முடிவெடுப்போம். அது உறுதியானதாகும் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள வாய்ப்பை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட வாய்ப்பு இதற்குப் பின்னர் வரும் என நாங்கள் எதிர் பார்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியவர் நாங்கள் அனைத்து தரப்பின…
-
- 3 replies
- 456 views
-
-
முள்ளிக்குளம் பகுதி விடுவிப்பு முதற்கட்ட வெற்றி : அமைச்சர் சுவாமிநாதன் மன்னார் முள்ளிக்குளம் பகுதி மீண்டும் அம்மக்களித்தில் கையளிப்பதற்கு கடற்படையினர் இணங்கியுள்ள நிலையில் அது தமது முயற்சிகளுக்கு கிடைத்த முதல்வெற்றியென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் தொடரும் எனக் குறிப்பிட்டவர் சொற்ப காலத்தில் காங்கேசன்துறை தொண்டமானாறு வீதியும் மீளத்திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுமெனவும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவுடன் விரைவில் அடுத்த கட்ட விடயங…
-
- 0 replies
- 172 views
-
-
தொழிலாளர்கள் பொறுப்புமிக்க சமூக சக்தியாக செயற்படவேண்டும் : ஜனாதிபதி மே தினத்தைக் கொண்டாடும் உலகவாழ் தொழிலாளர்களோடு நானும் இணைந்து கொள்வதோடு, மனித சமூகத்தின் சுதந்திரத்திற்காக வும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக வும் தமது வியர்வையையும், கண்ணீரையும் சிந்தி போராடிய, குரல் கொடுத்த, உயிர் தியாகம் செய்த அனைத்து தொழிலாளர் சகோதரர்களுக்கும் எனது கௌரவமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இன்று கொண்டாடப்படும் மேதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மன…
-
- 0 replies
- 291 views
-
-
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கும் வேலையற்ற பட்டதாரிகளுக்கும் இடையில் சந்திப்பு! மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளுக்கும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று மாலை அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பட்டதாரிகள், இந்த சந்திப்பின் போது தங்களது பிரச்சனைகள் ஆக்கபூர்வமான முறையில் அவர்களிடம் எடுத்து செல்லப்படவில்லை என இந்த கலந்துரையாடலின் மூலம் தெரியவந்துள்ளது . இன்றய (நேற்றைய) தினம் எங்களது போராட்டம் 69 நாள் என்பதையும் எங்களுடைய தொழில் உரிமையின் தேவைப்பாடு சம்பந்தமாகவும் தெளிவு படுத்தியுள்ளோம் அதற்கு அவர் இரண்டு வாரங்களில் ஒரு சா…
-
- 0 replies
- 233 views
-
-
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிங்கள இளைஞர் ஒருவருக்கு பிரித்தானியாவில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹிரூஷ ஹென்ரிக்ஸ் என்ற 25 வயதுடைய இளைஞருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஹென்ரிக்ஸ் மான்செஸ்டர் ஸ்குவாஷ் பயிற்சியாளராக செயற்பட்டு வருகிறார். இவர் 16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை, போலி சமூக ஊடகங்களினூடாக தமது சொந்த பாலியல் மன நிறைவுக்காக பயன்படுத்தியுள்ளார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஸ்குவாஷ் பயிற்சியாளரா…
-
- 2 replies
- 426 views
-
-
மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரணை செய்ய சிறப்பு 'ட்ரயல் அட்பார்' (எம்.எப்.எம்.பஸீர்) ஊர்காவற்றுறை - புங்குடுதீவு பகுதியின் மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி படுகொலைச் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக ட்ரயல் அட்பார் முறையிலான விசாரணை ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது. நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் யாழ். மேல் நீதிமன்றில் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தககல் செய்து இவ்வாறு ட்ரயல் அட்பார் விசாரணையை ஆரம்பிக்க சட்ட மா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாக அறிய முடிகிறது. http://www…
-
- 0 replies
- 293 views
-
-
சக்தி டிவி செய்திகள் April 2017, 8PM (30-04-2017)
-
- 0 replies
- 277 views
-
-
பல வருடங்களின் பின்னர் முள்ளிக்குளம் மக்கள் இன்று தமது பூர்வீக கிராமத்தில் கால்தடம் பதித்தனர் சாத்வீக அறவழிப் போராட்ட வெற்றிப்பூரிப்புடன் மன்னார் – முள்ளிக்குளம் மக்கள் இன்று தமது பூர்வீக கிராமத்தில் கால்தடம் பதித்தனர். முள்ளிக்குளம் மக்கள், பல வருடங்களின் பின்னர் இன்று (30) காலை தமது பூர்வீகக் கிராமத்திற்குள் நுழைந்தனர். விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள பரலோக மாதா ஆலயத்தில் இன்று காலை 9.30 மணியளவில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. முள்ளிக்குளம் பங்குத்தந்தையினால் இந்த கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன், இதில், முள்ளிக்குளம் கிராம மக்கள், பிரதேச அரசியல்பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். கடற்படை முக…
-
- 4 replies
- 403 views
-
-
உண்மையை வெளியிடுமா கூட்டமைப்பு? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-30#page-8
-
- 0 replies
- 271 views
-
-
மாயக்கல்லி மலையில் மறைந்திருக்கும் மர்மம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-30#page-7
-
- 1 reply
- 480 views
-
-
முள்ளிக்குளம் கிராம வீடுகள் 6 மாதத்தில் கையளிக்கப்படும் -எஸ்.றொசேரியன் லெம்பேட் “முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகளில் உள்ள 27 வீடுகளிலும் குடியமர்ந்துள்ள கடற்படையினரின் குடும்பத்தினர், 6 மாத காலத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, மக்களிடம் வீடுகள் கையளிக்கப்படுமென்று, கடற்படை தளபதி உறுதியளித்தார்” என, முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்டன் தவராசா தெரிவித்தார். முள்ளிக்குளம் மக்களின் காணிகளை கடற்படையினர் விடுவித்துள்ள நிலையில், அந்த மக்கள், ஞாயிற்றுக்கிழமை தமது சொந்த இடத்துக்குச் சென்றனர். இதன்போது, நன்றி திருப்பலியை ஒப்புக்கொடுத்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அருட்தந்தை அன்டன் தவராசா …
-
- 0 replies
- 315 views
-
-
முன்னாள் போராளிகள் குறித்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. முன்னாள் போராளிகளுடைய புனர்வாழ்வு, வாழ்வாதாரம் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை, வேலைவாய்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகளை சரியான நேரத்தில், சரியான முறைப்படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்படு…
-
- 4 replies
- 332 views
-
-
தராகி அவர்களின் இழப்பு நேர் சிந்தனையுடைய சிங்கள மக்களுக்கும் ஒரு பேரிழப்பாக அமைந்துள்ளது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி என அழைக்கப்படும் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை வடக்கு கிழக்கினைச் சேர்ந்த ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து யாழ் ஊடக அமையத்தின் தலைமையில் முன்னெடுக்கின்ற இந் நிகழ்வில் என்னை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுமாறு அழைத்ததையிட்டு மகிழ்வடைகின்றேன். உண்மைகளை உலகிற்கு எடுத்துரைத்த ஒரு பெரும் பணியை கைக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் இறந்த தினத்தில் அவர் பற்றி சிந்திக்காமல் இருப்பது இறை நிந்தனைக்கு ஒப்பானது. அந்த வகையில் இந் நிகழ்வில் என்னைக் கலந்து கொள்ளுமாறு அழைத்த போது மற்றைய நிகழ்வுகளை ஒழுங்…
-
- 1 reply
- 613 views
-
-
தேவை இருந்திருப்பின் ஒரே இரவில் கொழும்பை சுற்றி வளைத்திருப்பேன் : பொன்சேகா (க.கமலநாதன்) எனக்கு தேவை இருந்திருந்தால் கடந்த காலத்தில் எனது வசமிருந்த அதிகாரங்களை கொண்டு கொழும்பை சுற்றி வளைத்திருப்பேன் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேநேரம் தற்போது எனக்கு புதியதொரு பதவி வழங்கப்பட்டு அதனால் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு பங்கம் ஏற்படுவதை அமைச்சர் ஜோன் செனவிரத்ன விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பேலியகொடை, பராக்கிரம மாவத்தையில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகளின் விசேட விருந்தினராக கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 0 replies
- 367 views
-
-
வெளிவிவகார அமைச்சருடன் பிணையெடுக்க சென்ற சிறிதரன் ?(ஆதாரங்கள்) இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய தீர்மானத்துக்கு இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு கோருவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரசல்ஸ் சென்றுள்ளார் தெரியவருகின்றது. இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹார்சா டி சில்வா தலைமையிலான இலங்கை குழுவுடன் பிரசல்ஸ் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனோ அல்லது த.தே.கூட்டமைப்போ இது பற்றி எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்பதோடு பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் த.தே.கூட்டமைப்பை பற்றி எழுதுவதற்கு பின்னடிப்பதையும் தமிழ்கிங்டொம் இங்கு சுட்டிக்காட்டுகின்றது. இது தொடர்பாக முகநூலில் பல செய்திகள் வெளியாகியிருந்த…
-
- 1 reply
- 990 views
-
-
இரண்டு மாதங்களை தாண்டி தொடரும் கேப்பாபுலவு நில மீட்பு போராட்டம் !!! கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து, சொந்த நிலத்தில் தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி இன்றுடன் 61 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 61 நாட்களாக போராடிவரும் மக்கள் பல நோய்த்தாக்கங்களுக்கு தாம் ஆளாகியிருப்பதாகவும் இப்படியே வீதியிலே எத்தனை நாட்களுக்கு அவல வாழ்க்கை வாழ விட்டு…
-
- 0 replies
- 341 views
-
-
கேப்பார் யாருமின்றி முல்லைத்தீவில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!!! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 54 நாட்களாக தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்றுவரையில் எந்தவித சாதகமான பதில்களும் அற்றநிலையில் தொடர்ந்து செல்கின்றது. இறுதி யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் வட்டுவாகல் மற்றும் ஓமந்தை பகுதிகளில் வைத்து இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே என கோரியும் வெள்ளைவான்களில் கடத்தி செல்லப்படட தமது உறவுகள் எங்கே என கேட்டும் இவர்களின் போராட்…
-
- 0 replies
- 358 views
-
-
மக்கள் பலத்தை வெளிக்காட்ட மைத்திரி - ரணில் - மஹிந்த போட்டி : நாளை களை கட்டும் மே தினம் லியோ நிரோஷ தர்ஷன், எஸ். கணேசன் நாளை நடைபெறவிருக்கும் மேதினத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி என்பன தமது மக்கள் பலத்தை வெளிக்காட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான சர்வதேச தொழிலாளர் தினம், அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அப்பால், அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சைக் களமாக மாறியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் ,கொழும்பிலும் கண்டியிலும் தமக்…
-
- 0 replies
- 600 views
-
-
"தொழிலாளர் தினத்தில் வடக்கிலும் கிழக்கிலும் விடுதலையின் அழுத்தம்" : எம்.ஏ.சுமந்திரன் (ஆர்.யசி) எமது மக்களின் உரிமைக்காக இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தொழிலாளர் தினத்தை விடுதலையின் அழுத்தம் கொடுக்கும் தினமாக அனுஷ்டிக்கவுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அம்பாறையில் நடைபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் தொடர்பாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19568
-
- 0 replies
- 482 views
-
-
மௌனித்த துப்பாக்கிகளும் பந்தாடப்படும் தமிழர்களும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது. விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய இனத்திற்கு தேடற்கரிய தலைவன் கிடைத்தான். விடுதலைப்பயணம் வீச்சுக்கொண்டது. கெரிலாப்படையணி மரபு வழி இராணுவமாய் பரிணமித்தது. வீரர்களின் வீரம் ,மக்களின் தியாகம், புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு என விடுதலையின் விளிம்பில் நின்ற இனம் காட்டிக்கொடுப்பு, துரோக்தனம், வல்லரசுகளின் சதி என பல்வேறுகாரணங்களால் முள்ளிவாய்காலில் முடிவடைந்தது. முள்ளிவாய்காலில் மே18 இல் விடுதலை வீரர்களின் துப்பாக்கிகள் மௌனித்தன. இறுதி யுத்ததில் மனிதப்பேர்அவலம் நடத்தது. அந்த கோர நாட்களின் வலிகள் தமிழினத…
-
- 0 replies
- 258 views
-