ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
வவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்! வவுனியாவில் காணாமற்போன உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று காலை 8 மணியளவில் பிரதான வீதியான ஏ 9 வீதியை மறித்து அமர்ந்திருந்த நிலையில், மேற்கொண்டு வந்தனர். இதன்போது போராட்ட இடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வீதியை வழிமறித்து போராட்டம் மேற்கொள்ளவேண்டாம் உங்களுடைய போராட்ட இடத்திலிருந்து மேற்கொள்ளுமாறு தெரிவித்ததையடுத்து ஒருமணி நேரம் மேற்கொண்ட வீதி மறிப்பு போராட்டத்தினை கைவிட்டு தமது போராட்ட இடத்தில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/19452
-
- 0 replies
- 243 views
-
-
கடலில் தத்தளித்த பிரான்ஸ் பிரஜை உயிருடன் மீட்பு தென்பகுதிக் கடற்பரப்பில் படகொன்று கவிழ்ந்ததில் உயிருக்காகப் போராடி கடலில் தத்தளித்த பிரான்ஸ் பிரஜையொருவரை இலங்கை கடற்படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். இச் சம்பவம் ஹம்பாந்தோட்டை பகுதியிலுள்ள கொஹுலன்கல கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு இரு படகுகளுடன் விரைந்த இலங்கை கடற்படையினர் மார்க் அந்திரே பிரான்கோஸ் என்ற பிரான்ஸ் நாட்டவரை உயிருடன் மீட்டதுடன் அவர் பயணித்த படகையும் மீட்டுள்ளனர். திருகோணமலையிலிருந்து காலிக்கு கடற் பயணமாக பயணித்த பிரான்ஸ் நாட்டு பிரஜையி…
-
- 0 replies
- 214 views
-
-
அவுஸ்ரேலியாவிலிருந்து சமீபத்தில் சிறீலங்கா வந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அவுஸ்ரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் பல வருடங்களாக வசித்து வந்த குமார் என்ற யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறீலங்கா சென்ற வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். “சிறீலங்காவிற்குள் நான் சென்ற இரு வாரங்களுக்குள் கடத்தப்பட்டேன். என்னையும் எனது இரு சகோதரர்களையும் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர்” என்று குமார…
-
- 5 replies
- 489 views
-
-
இரா.சம்பந்தனுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்( James Dauris ) க்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம், இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம…
-
- 2 replies
- 497 views
-
-
வவுனியா வடக்கில் உள்ள புராதனக் கிராமங்களின் பெயர்களை எக்காரணம் கொண்டும் மாற்றவேண்டாமென, வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது. வவுனியா வடக்கில் சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களைக் குடியமர்த்துவதற்காக, வீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுத்திட்டக் கிராமத்தின் பெயரை, லைக்கா ஞானம் கிராமம் என பெயர் மாற்றம் செய்ய முடியாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த உத்தியோகத்தர் ஒருவர், …
-
- 0 replies
- 322 views
-
-
தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டி தீர்வே இந்த நாட்டுக்குப் பொருத்தமானது என்று அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தையொட்டி, 'தந்தை செல்வா நினைவுப் பேருரை' நேற்று (25) மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ராஜித சேனாரத்ன 'இலங்கையில் அதிகாரப் பகிர்வு' என்ற தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்தினார். "தந்தை செல்வா சமஷ்டியைத் தீர்வாக முன்வைத்தார். அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வேறு தெரிவுகள் இல்லாமல் தமி…
-
- 1 reply
- 300 views
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பல கொலைகளுக்கான குற்றவாளிகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலை உட்பட பல கொலைகளுக்கு காரணமானவர்களும், கடத்தல்களுக்கு காரணமானவர்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே போன்று கீத் நொயார் தாக்கப்பட்டமை உட்பட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொண்ட நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பல ஆதாரங்கள் த…
-
- 0 replies
- 543 views
-
-
வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் முழு ஆதரவையும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கான ஆதரவு தெரிவித்து சங்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. குறித்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காணாமல் போன உற்றார் மற்றும் உறவினர்களிற்கும், தொடர்ச்சியாக அவர்கள் படும் இன்னல்களுக்கும், அரசு வெளியிடும் நொண்டிச்சாட்டுகளையும், மழுப்பலான அறிக்கைகளையும் கண்டு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் ஏமாற்றமடைந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டின் கடைசி யுத்த கட்டத்திலும், அதன் பின்னரும், இடம்பெற்ற உண்மைகளை அரசு வெளிவிடும் என்று பல வருடங்களாக…
-
- 1 reply
- 238 views
-
-
காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்க வடக்கு, கிழக்கில் நாளை பூரண ஹர்த்தால் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என பல தரப்புக்களும் ஆதரவு (ஆர்.ராம்) காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் வடக்கு, கிழக்கில் இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களின் நியா யமான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நாளைய தினம் வடக்கு, கிழக் கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழ் மக்கள் பேரவை, சமத்து…
-
- 2 replies
- 329 views
-
-
2021 வரை காணி விடுவிப்புக்கு திட்டம் தயாரித்துள்ள இராணுவம் (ஆர்.ராம்) வட., கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களில் தம்மால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து இராணுவம் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் நிகழ்ச்சி திட்மொன்றை தயார் செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி திட்டத்தின் பிரகாரம் வடக்கு: மாகாணத்தில் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2017 டிசம்பர் வரையில் வடமாகாணத்தில் 2877.13 ஏக்கர் அரச காணிகளும் 486.02 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளன. இதே காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 6.29 ஏக்கர் அரச காணிகளும் 44 ஏக்கர் தனியார் காணி…
-
- 2 replies
- 792 views
-
-
மக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்துவிட்டார் – ஆனந்தி சசிதரன் மக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்து விட்டதாக வட மாகாண அமைச்சர் ஆனந்த சசிதரன் தெரிவித்துள்ளார். தம்மைப் போன்றவர்களை ஒன்றிணைத்து கூட்டமொன்றை நடத்தக் கூட சம்பந்தன் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமது கணவர் காணாமல் போயுள்ளதாகவும் யுத்தத்தில் உறவுகளை இழந்துள்ளதாகவும், வாழ்வதற்கு போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறே ஏனையவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுத்து வரும் சில நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுக்கக் கூடாது என்ற போதிலும், மக்கள் எதிர்நோக்க…
-
- 2 replies
- 503 views
-
-
சக்தி டிவி செய்திகள் 26 th April 2017, 1PM
-
- 0 replies
- 294 views
-
-
கொல்கலன் கழிவுகள்... -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம், காக்கைதீவுப் பகுதியின் அராலி வீதியோரத்தில், மாடுகளின் கொல்கலன் கழிவுகள் முறைகேடாகக் கொட்டப்படுவதனால், குறித்த பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையினால் சேர்க்கப்படும் திண்மக்கழிவுகள் நிறைந்த கல்லுண்டாய் வெளிக்கும் காக்கைதீவு பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் மீள்சுழற்சி பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே, இந்தக் கழிவுகள் மதகுடன் கொட்டப்பட்டுள்ளன. இப்பகுதியானது, கடற்கரையை மிகவும் அண்டிய பகுதியாகவும் அராலி, வட்டுக்கோட்டை, காரைநகர் ஆகிய கிராமங்களுக்கன போக்குவரத்து வீதியாகவும் காணப்படுகிறது. இந்நிலையில்,…
-
- 0 replies
- 261 views
-
-
மஹிந்த கோத்தாவுக்கு பயந்தே செயற்பட்டார் : இரகசியத்தை அம்பலப்படுத்தினார் ராஜித (காணொளி இணைப்பு) கோத்தபாய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் இல்லை. கடந்த ஆட்சியில் கோத்தபாய போட்ட விளையாட்டுக்களை இந்த ஆட்சியில் முன்னெடுக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு பயந்துகொண்டே செயற்பட்டார். இதற்கு என்னிடம் சிறந்த உதாரணம் உள்ளது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 'ஒரு நாள் இராணுவத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளை அழைத்து மஹிந்த ராஜபக்ஷ கலந்துரைடிக் கொண்டிருந்தார். அதாவது யுத்தம் நிறைவடைந்துள்ளமையால் எவ்வாறு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடிக்கொண்டிருந்தார…
-
- 0 replies
- 215 views
-
-
வவுனியாவில் தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு! வவுனியா பிரதான மணிக்கூட்டுப் கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (26) காலை 9 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் தலைமையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 40 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வர்த்தகர் சங்கத் தலைவர் ரி. கே. இராஜலிங்கம், தமிழரசுக்கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர் …
-
- 1 reply
- 380 views
-
-
இலங்கை விமான சேவை நேர அட்டவணையில் திடீர் மாற்றம் எதிர்வரும் 27ம் திகதி இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் விமான சோதனை ஓட்டம் காரணமாக இலங்கை விமான சேவை அதன் பயண நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. இந்நிலையில், பயணிகள் இலங்கை எயார் லைன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொடர்பு இலக்கமான 0094197331979க்கு தொடர்பு கொண்டு அல்லது www.srilankan.com என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/19422
-
- 0 replies
- 321 views
-
-
மஹிந்தவுக்கு ரணில் வைத்த பாரிய பொறி (லியோ நிரோஷ தர்ஷன்) புனித பாப்பரசர் இலங்கை வந்த போது கூட காலி முகத்திடலை மக்களால் நிரப்ப முடியாமல் போனது. இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்திற்கு அவ்விடம் வழங்கப்பட்டமையானது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவிற்கு வைத்துள்ள பொறியேயாகும் என தெரிவித்துள்ள கூட்டு எதிர் கட்சி , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் கண்டியில் அல்ல கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் வெற்றிகரமாக நடை பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கூட்டு எதிர்க் கட்சியின் விஷேட ஊடக சந்திப்பு பொரளையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத…
-
- 0 replies
- 281 views
-
-
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்தார் பிரதமர் ரணில் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ரணில் விக்ரமசிங்க, இன்றைய மதியம் மதிய போசன வேளையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளார். http://www.virakesari.lk/article/19416
-
- 0 replies
- 131 views
-
-
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வழங்குவது மனித உரிமை மீறல்களுக்கு விருது வழங்குவதற்கு நிகரானது இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் வழங்குவதானது, மனித உரிமை மீறல்களை உதாசீனம் செய்து , விருது வழங்குவதற்கு நிகரானது என சில மனித உரிமை நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இலங்கை அரசாங்கம் மனித உரிமை விவகாரங்களில் உரிய முனைப்பு காட்டத் தவறினால் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் தி;ட்டம் வழங்கப்படக்கூடாது என அவை தெரிவித்துள்ளன. சில மனித உரிமை நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன. உரிய காலத்தில் இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஐரோப்பிய ஒன்றியம் சலுக…
-
- 0 replies
- 304 views
-
-
சிவனொளிபாதமலையில் பதற்றம்: சிலையை வைக்க சிங்ஹ லே முயற்சி காமினி பண்டார சிங்ஹ லே அமைப்பானது, சிவனொளிபாதமலையில், புத்தர் சிலை வைப்பதற்கு எடுத்த முயற்சி, நல்லதண்ணிப் பொலிஸாரின் தலையீட்டையடுத்து, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் நேற்று, பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், நல்லதண்ணி நகரிலிருந்து சினொளிபாத மலை வீதிவரை, பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. நேற்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிங்ஹ லே அமைப்பின் யாத்திரிகர்கள், சிவனொளிபாத மலையில், புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சிவனொளிபாதமலையின் இதிகட்டுமானப் பகுதி வரை புத்தர் சிலை கொண்டு செல்லப்பட்டதாகவும…
-
- 0 replies
- 329 views
-
-
இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு அமைப்பு இக்குழுவின் தீர்மானங்களுக்கமையவே எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சு மேலும் தகவல் தருகையில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி, மீன்பிடித்த இந்திய மீனவர்களின் 132 க்கு மேற்பட்ட படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை விடுவிப்பதற்கு வடபகுதி மீனவ சமாஜங்களும் மீனவர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்தியப் படகுகள் விடுவிக்கப்பட்டால் மீண்டும் கடல் எல்லை மீறப்படும். எனவே எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கும் வடபகுதி மீனவர்கள் படகுகளை விடுவிப்பதை கடுமையாக எதிர்க்கின்றனர். …
-
- 0 replies
- 248 views
-
-
இந்தியாவில் பயிற்சியின் இடைநடுவே இலங்கை கடற்படை சிப்பாய் உயிரிழப்பு இந்தியாவின் கொச்சி கடற்படை பயிற்சி தளத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை வீரர் ஒருவர் பயிற்சியின் இடை நடுவே உயிரிழந்துள்ளார். குருணாகல் பகுதியைச் சேர்ந்த 39 வயதான வை.பி.என்.ஆர். வீரசிங்க எனும் கடற்படையின் ' டைவிங்' வீரரே இவ்வாறு நேற்று முன் தினம் மாலை வேளையில் உயிரிழந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, கொச்சி கடற்படை தளத்துக்கு உட்பட்ட கேரளா - எர்னா குளம் கடற்படை பயிற்சி மையத்தில் வழமையாக இடம்பெறு…
-
- 0 replies
- 334 views
-
-
ரணிலின் இந்திய விஜயத்தின் இரகசியம் வெளியாகியது..! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது திருகோணமலை குதங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தமாட்டார். எனினும் எட்கா குறித்தான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினைக்கு முன்னைய ஆட்சியும் நல்லாட்சியும் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article…
-
- 0 replies
- 211 views
-
-
புலிகளின் நிதியை உள்வாங்கவா... பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலம்.? (லியோ நிரோஷ தர்ஷன்) சீன முதலீடுகளை விட புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளே இலங்கைக்கு உகந்தது என்று நோர்வேயின் எரிக் சொல்ஹிம் இந்திய ஊடகத்திற்கு குறிப்பிட்டிருந்தார். இதனை அங்கீகரிக்கும் வகையில் விடுதலை புலிகளின் நிதியை சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே அரசாங்கம் பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஜீஎஸ்பி வரி சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதாயின் தேசிய பாதுகாப்பு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால்…
-
- 0 replies
- 216 views
-
-
கொடிகாமம் பகுதியில் இருவருக்கு வாள்வெட்டு -செல்வநாயகம் கபிலன் மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். “திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மந்துவில் பகுதியினை சேர்ந்த நந்தகுமார் லிங்கேஸ்வரன் (வயது 24), மற்றும் அதே பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோபர் தினேஷ் (வயது 28) ஆகிய இருவருமே வாள் வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்” என, பொலிஸார் குறிப்பிட்டனர்…
-
- 2 replies
- 528 views
-