ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பனிப்போர் : விரைவில் பாரியதொரு வெடிப்பு (எம்.ஆர்.எம்.வஸீம்) ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெறும் பனிப்போர் வெடித்தால் கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவாக இருந்து செயற்படுவோம், அரசாங்கத்துக்குள் இடம்பெற்றுவரும் கருத்துவேறுபாடுகளை பார்க்கும்போது விரைவில் பாரியதொரு வெடிப்பு ஏற்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/18352
-
- 0 replies
- 206 views
-
-
ஜனாதிபதி மைத்திரியை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டுள்ள மஹிந்த நல்லாட்சி அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் நிகழ்ச்சிநிரலை தொடர்ந்தும் முன்னெடுத்துச்சென்றால் நாட்டை மயானத்திற்கு கொண்டுசெல்லும் நிலை உருவாகலாம். எனவே நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவகாசம் கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ப…
-
- 0 replies
- 165 views
-
-
படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு ஜனாதிபதியின் கையிலேயே.! எம்.எம்.மின்ஹாஜ் வடக்கு ,கிழக்கு காணி விடுவிப்பு ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது. எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு பகுதிகளில் படையினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என காணி, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். பாதுகாப்பு படையினரின் கையிருப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலணியே பிரதான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கேப்பாபுலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 204 views
-
-
அரசியல் தீர்வைப் பெற வேண்டுமானால் சிறுபான்மைக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சிறுபான்மையினக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். சிறுபான்மையின கட்சிகளுக்கிடையில் அரசியல் தீர்வு தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுமானால் இறுதியில் அது அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமாகவே அமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டத்தின் சாத்தியத்தன்மை குறித்து கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவி…
-
- 0 replies
- 175 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 34ஆவது கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டதற்கான காரணங்கள், இது எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், 2 வருட கால நீடிப்பானது நம்பகத்தன்மையை குறைக்கும் ஒரு தீர்மானம் எனவும், காணாமல் போனோருடைய விவகாரம், முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலை, இந்த நல்லாட்சி அரசாங்கம் இவற்றிற்கு தீர்வு கொடுக்காதது ஏன்? போன்ற பல வினாக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்து கொண்டு பதிலளித்துள்ளார். Vattameasai | Gajendrakumar Ponnambalam http…
-
- 0 replies
- 409 views
-
-
யாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்! யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சர்ச்சைக்குரிய 'லைக்கா' நிறுவனத்தின் சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை நடத்தும் இலவச வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழரான சுபாஷ்கரனின் லைக்கா மொபைல் நிறுவனம் தமிழ் சினிமா துறையிலும் இறங்கியது. ஆனால் சிங்கள ராஜபக்சே குடும்பத்தினரின் தொழில் கூட்டாளியான லைக்கா நிறுவனம் தமிழகத்தில் கால்பதிக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை லைக்கா தயாரித்ததால் அப்படம் வெளியாவதில் கடும் பிரச்சனையும் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்க…
-
- 33 replies
- 3.2k views
- 1 follower
-
-
அமெரிக்க கடற்படையின் 'கொம்ஸ்ரொக்' இலங்கை வருகை அமெரிக்க கடற்படையின் கப்பலான 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' இன்று கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்கா கப்பலான 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' பயிற்சி நடவடிக்கையின் அடிப்படையிலேயே இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளது. 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் நான்கு நாட்களில் இரு தரப்பினருக்குமிடையில் பயிற்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் பல நட்பு ரீதியான விளையாட்டுக்கள் குறிப்பாக கூடைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. …
-
- 0 replies
- 264 views
-
-
யாழுக்கு சந்திரிகா விஜயம் எஸ்.நிதர்ஸன் யாழ்ப்பாணத்துக்கு இன்று (25) வருகைதரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நான்கு பிரதேச செயலகங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ளார். ஐனாதிபதி தேசிய ஒருமைப்பாட்டுக்கும்; நல்லிணக்கத்துக்குமான பணியகத்தினால் தெல்லிப்பளை சங்கானை கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களின் ஊடாக நடமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காகவே, அவர் இங்கு வருகைதருகின்றார். வருகைதரும் அவர் தெல்லிப்பழை பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட பளை வீமன்காமம் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைக்கவுள்ளார். மேலும்…
-
- 6 replies
- 1k views
-
-
நவாலியூர் என் செல்லத்துரையின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் -வி.தபேந்திரன் காலமான, கலாபூசணம் சாகித்திய ரத்னா நவாலியூர் என். செல்லத்துரையின் இறுதிக் கிரியைகள், கந்தர்மடம், ஆத்திசூடி வீதியில் உள்ள அவரது வீட்டில், நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழ் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான கலாபூசணம் நவாலியூர் என்.செல்லத்துரை, அவரது வீட்டில், ஞாயிற்றுக்கிழமை (26) இரவு காலமானார். இவர், ஈழத்து சினிமா வரலாற்றில் 1970 களில் ஏற்பட்ட திரைப்படத்துறை மறுமலர்ச்சி காலத்தில் “காத்திருப்பேன் உனக்காக” திரைப்படத்தில் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியதுடன் முக்கிய பாத்திரமேற்று …
-
- 0 replies
- 301 views
-
-
புதிய அரசியலமைப்புக்கு மக்களின் அங்கீகாரம் அவசியம் பிரிக்கப்படாத இலங்கையில் நல்லிணக்கம் வேண்டும் என்கிறார் சம்பந்தன் (பதுளை, தியத்தலாவை நிருபர்கள்) அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் பயன் அடையும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை அமைப்பது குறித்து முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்த அரசியல் சாசனம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டு மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மலையகத்தில் …
-
- 0 replies
- 240 views
-
-
கோலாகலமாக இடம்பெற்றுவரும் கொழும்பு வீதி உணவுத் திருவிழா : மே 20 வரை பிரதி சனிக்கிழமைகளில் பிராந்தியத்தின் வீதி உணவு தொடர்பாக, புதிய பரிணாமம் ஒன்றை உருவாக்கி அதில் களியாட்டங்களையும் குதூகலத்தையும் கலந்து வித்தியாசமான அனுபவத்தை ‘கொழும்பு வீதி உணவுத் திருவிழா 2017’ பெற்றுத்தரவிருக்கிறது. இந்த கொழும்பு வீதி உணவுத் திருவிழாவை பெயார்வே ஹொட்டேல் நிறுவனம் ஏற்பாடு செய்து அனுசரணையையும் வழங்குகிறது. இம் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை வரும் சனிக்கிழமைகள் தோறும் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு வரை இந்த ‘கொழும்பு வீதி உணவுத் திருவிழா 2017’ (Colombo Street Food Fe…
-
- 0 replies
- 530 views
-
-
இந்திய மீனவர்களுடன் கைதாகியோரில் ஒருவர் மன்னாரில் பிறந்தவர் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி யில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுள் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இலங்கையிலிருந்து அவர் 22 வயதில் அகதி யாகத் தமிழகம் சென்றுள்ளார். பல வருடங்களாக அங்கு வசித்து வரும் அவர் தமிழக உறவுகளுடன் இணைந்து கடற்றொழில் ஈடுபடுகிறார். “மன்னாரில் வாழ்ந்த காலப்பகுதியில் எனது உறவுகளில் 4 பேரை இழந்தேன். என்ன செய்வது என்று தெரியாது தவித்த வேளையிலேயே, தாய்த் தமிழகம் நோக்கி படகில் தப…
-
- 0 replies
- 352 views
-
-
மனித உரிமை பேரவை அலுவலகத்தை வட.,கிழக்கு, கொழும்பில் திறக்க வேண்டும் தமிழ் சமூகம் அறிக்கை தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறலை முடிவுக்கு கொண்டுவந்து, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை கடந்த 23 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் எமது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கலாம். அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில், பிரித்தானிய மனித உரிமை தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை, கனடிய தமிழர் பேரவை ஆகிய முன்று அமைப்புக்கள…
-
- 0 replies
- 427 views
-
-
இறுதியான திருத்தப்பட்ட அறிக்கையின் வடிவம் தயார்? (பா.ருத்ரகுமார்) அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பான இறுதி திருத்தப்பட்ட அறிக்கையின் வடிவம் தயாராகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீன மேர்சன்ட் தனியார் துறைமுக அபிவிருத்தி நிறுவனத்துக்கும் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட குறித்த ஒப்பந்தத்தில் இடம்பெற்ற திருத்தங்கள் மற்றும் இருதரப்பினரின் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கென…
-
- 0 replies
- 219 views
-
-
தேர்தலை காலம் தாழ்த்துகின்றமை ஜனநாயகத்தை மீறும் செயலாகும் மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய (ஆர்.யசி) மக்களுக்கு தேர்தல் தொடர்பிலும் பாராளுமன்றம் தொடர்பிலும் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான புதிய வாக்காளர்களின் பதிவுகள் கடந்தகாலத்தை விடவும் ஐம்பது சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளூராட்சி தேர்தலை நடத்தாது காலம் கடத்துவது ஜனநாயகத்தின் மீதான அத்துமீறல் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்…
-
- 0 replies
- 121 views
-
-
ஏழு நாட்களுக்குள் சம்பந்தன் தலையிட்டு தீர்வை தரவேண்டும் வீதியில் கிடந்து செத்து மடிவோமே தவிர பின்வாங்க மாட்டோம்; கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை (கே.குமணன்) எமக்கான தீர்வை ஏழு நாட்களுக்குள் உரியதரப்பினருடன் பேசி பெற்றுத்தரவேண்டியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலையாய கடமையாகும். அவரிடம் இந்த கோரிக்கையை உரிமையோடு முன்வைக்கின் றோம் என கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் நேற்று தம்மை பார்வையிட வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களிடம் தெரிவித்தனர். கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் நேற்றுடன் இரு…
-
- 0 replies
- 154 views
-
-
ஒற்றுமையின் நிமித்தமே மௌனமாக இருக்கின்றோம் திருப்பி பேச முடியாதென நினைக்கவேண்டாம்; உரிய நேரத்தில் பதிலளிப்போம் என்கிறார் மாவை சேனாதிராஜா (எம்.நியூட்டன்) காலத்தின் தேவைக்கு ஏற்ப நாம் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய தேவையாக உள்ளது. கிளையில் இருந்து அடி மரத்தை வெட்டுவது போன்றே தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியை வெளியேற்றவேண்டும் என்று கூறப்படுவதாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். சாவகச்சேரி, சங்கத்தானையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மண்டபத் திறப்பு விழா …
-
- 0 replies
- 195 views
-
-
தொழில் வழங்காவிடின் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவில்லை: வேலையற்ற பட்டதாரிகள் சத்தியப்பிரமாணம் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை என வேலையற்றப் பட்டதாரிகளும் அவர்களது உறவிர்னர்களும் மட்டக்களப்பில் இன்று சத்தியப்பிரமாணம் செய்தனர். வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தீர்வின்றி தொடர்கின்றது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்காவில் முன்னெடுக்கும் போராட்டம் 34 ஆவது நாளை எட்டியுள்ளது. பேராட்டத்திற்கு வலுசேர்கும் வகையில் இன்று அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது சவ…
-
- 0 replies
- 196 views
-
-
தமிழீழ விடுதலைபுலிகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கினர் – மத்திய அமைச்சர் மலிக் சமரவீர தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் தமது விருந்தோம்பல் பண்பை சிறப்புடன் மேற்கொள்வார்கள் என தெரிவித்த மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை சார் அமைச்சர் மலின் சமரவிக்ரம, அவர்களுடன் இருந்த காலத்தில் தான் உணர்ந்தவற்றை நினைவு படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 2000 ஏற்றுமதியாளர்களை ஸ்தாபிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் தேசிய ரீதியிலான முதலாவது விழிப்புணர்வு செயலமர்வு அண்மையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் …
-
- 0 replies
- 443 views
-
-
ஜெனீவாவைக் கண்டுகொள்ளாத முஸ்லிம் அரசியல்வாதிகள் - மொஹமட் பாதுஷா முஸ்லிம்களின் அரசியலானது பெருவளர்ச்சி பெற்று பக்குவப்பட்டிருக்கின்றது என்றும் அதிலுள்ள அரசியல்வாதிகள் முதிர்ச்சி அடைந்திருக்கின்றார்கள் என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், சில செயற்பாடுகளைப் உற்றுநோக்குகின்றபோது, இன்னும் சிறுபிள்ளைத்தனமான அரசியலிலேயே அவர்கள் மூழ்கியிருப்பதைக் காண முடிகின்றது. ரோம் நகரம் எரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று வரலாற்றினூடு அறிந்திருக்கின்றோம். ஆனால், இல்லாத இராச்சியத்துக்காக உரிமை கொண்டாடிக் கொண்டு, முஸ்லிம்களிடையே அளவுக்கதிகமான ‘நீரோ’க்கள் இருக்கின்றார்கள்…
-
- 0 replies
- 408 views
-
-
விமான சேவை 6இல் வழமைக்கு திரும்பும் கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள், வழமைபோல எதிர்வரும் 6ஆம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், தற்போது இறுதிக் கட்டத்தை எய்தியுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான கட்டுமானப் பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. விமான ஓடு பாதையின் பணிகளும் நவீன தொழில்நுட்ப ரீதியான சமிக்ஞைக் கட்டமைப்பும், தற்போது பொருத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திட்டமிட்டதன் அடிப்படையில், எதிர்வரும் 5ஆம் திகதி, விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் முழுமையாக நிறைவு பெற…
-
- 0 replies
- 240 views
-
-
நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு.! கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் இன்று முற்பகல் ஒருதொகுதி வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர், தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கிளிநொச்சி குற்றத்தடகவியல் பொலிஸார் ஆகியோர் நெத்தலியாறு பகுதிக்குச் சென்று ஆற்றின் நடுவே பை ஒன்றில் வெடிபொருள்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இருப்பினும் குறித்த வெடிபொருள் என்ன என்பது தொடர்பில் ஆராயவும் அதனை மீட்கவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவி …
-
- 0 replies
- 394 views
-
-
புகையிரதம் மோதி ஒருவர் பலி புகையிரத கடவையில் படுத்திருந்தவர் மீது புகையிரதம் மோதியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (26) காலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கும், புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தவநாயகம் திரேந்திரா (வயது 28) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அத செய்தியாளர் தெரிவித்தார். உயிரிழந்தவர் நீர்ப்பாசன திணைக்களத்…
-
- 2 replies
- 369 views
-
-
லசந்த கொலை தொடர்பில் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் கொழும்பு தெற்கு போதான வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி சுனில் குமார கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லசந்த கொலை தொடர்பிலான விசாரணைகளின் ஊடாக இப்போது புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. லசந்தவின் கொலையானது தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், மரணம் இடம்பெற்ற வேளையில் பிரரேத பரிசோதனை நடத்திய வைத்திய அதிகாரி சுனில் குமார, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக அறிவ…
-
- 0 replies
- 242 views
-
-
இலங்கையை நோக்கி நகரும் ரஷ்யா பூகோள அரசியலில் திடீர் திருப்பம் லியோ நிரோஷ தர்ஷன் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் அந்நாட்டு ஜனாதி பதி உள்ளிட்ட அரச தரப்புகளுடன் உயர் மட்டப் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளனர். கல்வி, பொருளாதாரம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட பல துறைசார் ஒப்பந்தங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், நான்கு தசாப்தத்துக்கு பின்னரான இராஜதந்திர நட்பை தற்போது செயற்திறன் மிக்கதாக்குவதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது. உள் நாட்டு போர் நிறைவடைந்த பின்னர் உலக வல்லரசுகளின் பார்வை முழு அளவில் இ…
-
- 0 replies
- 329 views
-