Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கடந்தவருடம் 207 முறைப்பாடுகள் யாழ் மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான முறைப்பாடுகள் தொலைபேசியினூடாகவே அதிகளவில் கிடைக்கப் பெறுவதாக யாழ் மாவட்ட சிறுவர் விவகார பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரை சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக 207 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் 1929 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக 26 முறைப்பாடுகளும் வேறு அலுவலக தொலைபேசி இலக்கத்தினூடாக 47 முறைப்பாடுகளும் என தொலைபேசிகளினூடாக 73 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்…

  2. கேப்பாபுலவு மக்களுக்கு விமானப்படை எச்சரிக்கை முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மக்களும் தங்களுடைய காணிகள் மீண்டும் தங்களுக்கு கிடைக்காது விடின் விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் விமானப்படையினர் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கின்றார்…

  3. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று 14 கிலோ 250 கிராம் கேரளா கஞ்சாவை தன்னுடைய உடைமையில் வைத்திருந்த குற்றத்திற்காக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/16777

  4. 'சேர் நீங்கள் சொல்லும் எதையும் செய்கின்றேன்..' : மொஹான் பீரிஸ் பதவி நீக்கம் தொடர்பில் ரகசிய தகவலை வெளியிட்டார் ஜனாதிபதி 'சேர் நீங்கள் சொல்லும் எதையும் செய்கின்றேன் என்னை, இந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்” என முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தம்மிடம் கோரியதாகவும் இதனால் தான் இவரை பதவியிலிருந்து நீக்கியதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரகாபொல வைத்தியசாலையின் கட்டட அங்குரார்ப்பண நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி இரவு எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வந்தார். என்னை வாழ்த்துவதற்காக அவர் வந்திருக்கின்றார் என நான் நினைத்தேன். …

  5. ஹம்பாந்தோட்டை துறைமுகதிட்டம் இரு நாடுகளுக்கும் முக்கியமானது ; சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், இலங்கைக்கும் சீனாவுக்கும் முக்கியமான ஒன்று என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், இலங்கைக்கும் சீனாவுக்கும் முக்கியமானஒன்று. இது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை செழிப்படையச் செய்யும் நோக்கத்தைக் கொண்டது. சந்தை…

  6. பதவிக்கு வந்து சொத்து விபரங்களை சமர்ப்பித்த ஒரே ஜனாதிபதி நானே (எம்.எம்.மின்ஹாஜ்) தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி அரச சார்பற்ற அமைப்பொன்று எனது சொத்து விபரங்கள் கோரியுள்ளன. எனது சொத்து விபரங்களை மறைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் எனக்கு இல்லை. ஜனாதிபதியின் சொத்து விபரங்களை கோருவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லாத போதும் ஜனாதிபதி பொறுப்பேற்று 2 வருடத்திற்கான சொத்து விபரங்களை சமர்ப்பித்த நாட்டின் ஒரே ஜனாதிபதி நானேயாகும். இருப்பினும் எனது சொத்து விபரங்கள் தேவையாயின் தேர்தல் ஆணையாளரை அணுகி பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன் தற்போது நாட்டில் ஜனநாயக உரிமையை துட்சமாக மதித்து ஆர்ப்பாட்ட…

  7. வீதியே வீடாக 18ஆவது நாளாக தொடரும் கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்பு போராட்டம் முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 18 நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலிலும் பனியிலும் வீதியையே வீடாக்கி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் இன்றையதினம் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கத்தோலிக்க மதகுருமார்கள், மன்னார் பிரஜைகள் குழுவினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர். வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், அனந்தி சசிதரன், குணசீலன் ஆகியோரும் போராட்டம் இடம்பெறும் இடத்திற…

  8. கடற்படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை, மிரஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய கடற்படை வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/16747

  9. கேப்பாப்புலவு போராட்டக்களத்தில் வீதியில் பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி கேப்பாப்புலவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4 வயது குழந்தையான சதீஸ் கதிசனா தனது பிறந்தநாளை வீதியோரத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய சம்பவம் அனைவரது மனங்களையும் உருக செய்துள்ளது. கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்கவேண்டுமெனக் கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் போராட்டக்களத்தில் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் வீதியையே தமது வீடாக்கி போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4 வயது குழந்தையா…

  10. விரைவில் தீர்வு வழங்­கா­விடின் காணி­க­ளுக்குள் பிர­வே­சிப்போம் இரா­ணுவம் சுட்டால் எமது காணியில் உயிரை மாய்ப்போம் என்­கின்­றனர் புதுக்­கு­டி­யி­ருப்பு மக்கள் (கண்­டா­வளை நிருபர்) முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு நில மீட்­புக்­கான சுழற்சி முறை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடை­பெற்று வரும் பகு­தியில் தொடர்ச்­சி­யாக பொலிஸார் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். போராட்டம் நடை­பெற்­று­வரும் இரா­ணுவ முகா­மிற்குள் நுழை­யா­த­வாறு வாசல்­களில் முட்­கம்­பிகள் போடப்­பட்டு அவ்­வி­டத்தின் பாது­காப்புப் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. புதுக்­கு­டி­யி­ருப்பு பகு­தியில் இரா­ணு­வத்­தினால் அப­க­ரிக்­கப்­பட்டு, படை­முக…

  11. இராணுவம் புகைப்­படம் எடுப்­பதால் எமது போராட்டம் நின்­று­வி­டாது கேப்­பாப்பு­லவு மக்கள் உறுதி (கே .குமணன் ) இரா­ணு­வத்­தினர் புகைப்­படம் எடுப்­ப­தாலோ எம்மை மிரட்­டு­வ­தாலோ நாம் போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை என்றும் தொடர்ந்து எமது போராட்டம் எமது மண்ணில் கால்பதிக்கும் வரை தொடரும் என்றும் போராட்­டத்­தி­லீ­டு­பட்­டுள்ள கேப்­பா­ப்பு­லவு மக்கள் தெரி­வித்­துள்­ளனர். முல்­லைத்­தீவு, கேப்­பா­ப்பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்கள் விமா­னப்­ப­டை­யினர் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள தமது சொந்த நிலங்­களை விடு­விக்­க­வேண்­டு­மெனக் கோரி கடந்த 17 நாட்­க­ளாக தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்த நிலை…

  12. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான அநீதி குறித்து இலங்கை ஆரா­ய­வேண்டும் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக கூறு­கிறார் செய்ட் அல் ஹுசேன் (ரொபட் அன்­டனி) இலங்­கையில் சிறு­பான்மை மதத்­தினர் மற்றும் இனங்­க­ளுக்கு எதி­ரான அநீதி செயற்­பா­டுகள் குறித்து ஆரா­ய­வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட் டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­ யாளர் செய்ட் அல் ஹுசேன் தெரி­வித்தார். எவ்­வி­த­மான அநீ­தி­யான செயற்­பா­டு­களும் இன்றி சிறு­பான்மை மக்கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் செய்ட் அல் ஹுசேன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். உலக நாடு­களின் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான அநீ­தி­யான செயற்­பா­டுகள் தொடர்பில் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேர­வ…

  13. யாழில் வாள்வெட்டு குழுக்களை தேடி பொலிஸார் வலை வீச்சு யாழில் வாள் வெட்டுக்குழுக்களை தேடி பொலிஸார் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் யுத்தத்திற்கு பின்னான காலப்பகுதியில் பல சமுதாய சீரழிவுகள் அதிகரித்துள்ள நிலையில் அண்மைக்காலங்க ளாக வாள்வெட்டு கலாசாரம் மேலோங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ், விசேட அதிரடிப்படை என்பன களமிறக்கப்பட்டும் பெருமளவில் நன்மை பயக்கவி ல்லை. எனினும் ஒரு சிலர் பொலிஸாரின் செயற்பாடுகளினால் சில குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்தவாரங்களில் வாள்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இதேவேளை யாழ் நல்லூர் அரசடியில…

  14. கொழும்பு ஆனந்தா, நாலந்தா மாணவர்களின் மோதல் : சிசிடிவி வெளியானது : 10 பேர் பிணையில் விடுதலை கொழும்பு ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகிள்ளதோடு, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்களில் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து மாணவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 10 மாணவர்களை நேற்று மாலை மாலிகாகந்த மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு மாணவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலருடம் மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேவேளை பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட…

  15. கடல் வழியாக நியூஸிலாந்து செல்ல முயன்ற 9 பேர் கைது (நீர்கொழும்பு நிருபர்) சட்டவிரோதமாக கடல் வழியாக நியூ ஸிலாந்து செல்ல முயன்ற 9 பேரை நீர்கொழும்பு பொலிஸார் நேற்று வியாழக் கிழமை அதிகாலை அக்கரபனஹ, வின்சன் பார்க் பிரதேசத்தில் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் இரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் அதிகாலை குறித்த பிரதேசத்திற்கு வந்த முச்சக்கர வண்டியை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது அதில் பயணித்தவர்கள் சட்டவிரோதமாக நியுஸிலாந்து செல்வதற்காக வின்சன் பார்க் பிர…

  16.  ‘விக்கியின் பேச்சு விக்குகிறது’ வி.நிரோஷினி “வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பேச்சுக்கு இந்த அரசாங்கம் மறுபேச்சு, பேசுவதில்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மேலும், சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாகவே, அரசாங்கம் அரசியலமைப்பில் சமஷ்டியை கொண்டுவர முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசியலமைப்பில் திருத்தங்கள் சி…

  17. சிவராத்திரியை முன்னிட்டு யாழில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணி மனை யின் அனுசரணையில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" எனும் சிரமதான பயணம் நான்கு இடங்களில் இரு ந்து எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. என சைவமகா சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிம னையின் அனுசரணையில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" எனும் சிரமதான பயணம் எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை கா…

  18. தமிழர்கள் 11 பேரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த 10 அதிகாரிகளை அடுத்த வாரத்துக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் 5 பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற வலுவான சான்றுகள் உள்ள 11 கடற்படை அதிகாரிகளைக் கைது செய்யும் முயற்சியிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இறங்கியுள்ளனர். எனினும், எந்தவொரு கடற்படை அதிகாரியையும் கைது செய்யக் கூடாது என்று அரசியல் உயர்மட்டத்தில் இருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உறுதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூ…

  19. கிளிநொச்சியில் ஜரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டம் அங்குரார்ப்பணம் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா்; ஹி டுங்லாய் மர்கியு சிறப்பு அதிதீதியாக கலந்துகொண்டு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிாிவின் மருதநகா் கிராமத்தில் இரண்டு வீட்டுத்திட்ட பயனாளிகளின் வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தாா். கிளிநொச்சி மாவட்டத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் 860 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆறு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா வீட்டுத்திட்டத…

  20. நான் திடீரென செல்வந்தன் ஆனவன் அல்ல : சொத்து விபரம் தேவையாயின் பாராளுமன்றில் பெற்றுக்கொள்ள முடியும் - ரவி நான் திடீரென செல்வந்தனானவன் அல்ல. ஆரம்பத்திலிருந்தே என்னுடைய உழைப்பினால் செல்வந்தன் ஆனவன். ஆகவே, உங்களுக்கு எனது சொத்துடைமைபற்றிய விபரம் தேவையாயின் பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தினால் ரவிகருநாணயக்கவின் சொத்துடைமை பற்றிய விபரம் கேட்கப்பட்டுள்ளது, அதற்கு நீங்கள் என்ன பதிலளிக்கப்போகின்றீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, எனக்கு 24 வருட அரசியல் வரலாறு இருக்கின்றது. நான் திடீரென செல்வந்தனானவன் அல்ல. ஆரம்பத்திலிருந்தே…

  21. திருகோணமலை நகரிலிருந்து 4 கைக்குண்டுகள் மீட்பு திருகோணமலை நகரின் மடத்தடி சந்திப்பகுதியில் உள்ள ஆலயமொன்றிலிருந்து உயிர்ப்புள்ள 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கைக்குண்டுகள் ஆலயத்தின் பாவனைக்குதவாத பொருட்கள் வைத்திருக்கும் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கைக்குண்டுகள் எவ்வாறு ஆலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதென்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.virakesari.lk/article/16723

  22. புகைப்படம் எடுக்கும் இராணுவம் ; 17 ஆவது நாளாகவும் துணிவோடு போராடும் கேப்பாப்புலவு மக்கள் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க்கவேண்டுமென கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களையும் செய்தி சேகரித்துவரும் ஊடகவியலாளர்களையும் ஆதரவு தெரிவித்து வரும் சிவில் அமைப்புகள் மற்றும் மக்களையும் எதிரே உள்ள விமானப்படை முகாமில் உள்ள விமானப்படையினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் தொடர்சியாக புகைப்படம் மற்றும் காணொளி பதிவுகள் என்பனவற்றை எடுத்து அச்சுறுத்தி வருகின்றனர். …

  23. நேற்று மலை 6 மணியளவில் குறித்த பிரதேசத்தில் இருந்து நெல்லியடி சந்திக்கு அருகாமையில், இலக்கத்தகடுகள் இன்றி மோட்டார் சைக்கிளில் வாள்கள், பொல்லுகளுடன் ரவுடிகள் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகின்றது. மேலும் குறித்த ரவுடிகள் பொதுமக்களை நோக்கிவந்து , வாள்களை காட்டி மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதும் குறித்த ரவுடிகள் உடனேயே தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போதும் பொலிஸார் மற்றும் புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/135739

  24. அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதில் உடன்பாடில்லாத போதும் குறுகிய காலம் மற்றும் அதிகளவான மேற்பார்வை அவசியமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வின் போது,பொறுப்புக்கூறல் விடயத்திற்காக அரசாங்கம் இரண்டு வருட கால அவகாசம் கேட்கப் போவதாக கூறியுள்ள நிலையில், அந்த கால அவகாசம் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கருத்தினை ஊடகவியலாளர்கள் கேட்டிருந்தனர். 2 வருட கால அவகாசம் கொடுத்தால் ஐ.நாவின் கண்காணிப்புடன் கொடுக்கப்பட வேண்டுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் இதுவரையில் ஐ.நாவின் கண்காணிப்பு இருக்கவில்லையா என ஊடகவியலாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி…

  25. பௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். கேகாலை, நாபே ஸ்ரீ போதியக்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புத்த பிரானின் 36 உருவச்சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், அவற்றை எழுத்துடன் மட்டுப்படுத்தாமல் பௌத்த மதத்தை போதிக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை மேலும் செயற்பாட்டு ரீதியாக அமுல்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் விஜயத்தின் நினைவாக சந்தன மரமொன்று குறித்த விகாரையில் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/po…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.