Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீதியில் அநாதரவற்று நிற்கும் பேரூந்தால் மக்கள் அச்சம் வவுனியா குளுமாட்டு சந்தியிலிருந்து மரக்காரம்பளை நோக்கி பயணிக்கும் பாதையில் தனியார் பேருந்து ஒன்று கடந்த நான்கு நாட்களாக அநாதரவற்ற நிலையில் நிற்பதால் தாம் அச்சத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த நான்கு நாட்களாக மரக்காரம்பளை வீதி காளி கோவிலுக்கு அருகே தனியார் பேரூந்து ஒன்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதியில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தாம் அச்சத்தில் உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர். இவ் விடயம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸாரை தொடர்பு கொண்ட கேட்டபோது, …

  2. சிவப்புநிறமாக மாற்றமடையும் ஆரியகுளத்துநீர் யாழ்ப்பாண நகரில் உள்ள ஆரியகுளத்தின் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. சுற்றுச் சூழலில் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த நிலை எற்பட்டுள்ளதா? என பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் குளத்தில் பெருமளவு கழிவுப் பொருட்கள் கொட்டப்படுகின்றன. இது தொடர்பில் யாழ் மாநகர சபையினர் எதுவிதமான நடவடி க்கைகளையும் மேற்கொள்ளவில்லை. யாழ்ப்பாண நகரில் சில நீர்நிலைகளே உள்ளன. அவற்றினை பேணிப்பாதுகாப்பது மற்றும் சுத்திகரிப்பது தொடர்பாக யாழ் மாநகர சபையினர் அக்கறை செலுத்துவதில்லை. ஆரிய குளத்தின் நீர் கடந்த சில நாட்…

  3. பொறுமையின் எல்லையை கடந்து விட்டோம்-பிலக்குடியிருப்பு மக்கள் வேதனை கடந்த 14 நாட்களாக தொடர்ந்தும் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாங்கள் பொறுமையின் எல்லையை கடந்து விட்டோம் என, முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இனிவரும் நாட்களில் நாங்கள் எடுக்கின்ற விபரீதமான முடிவுகளுக்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு, பிலவு பிரதேசம் விமானப் படையின் வசம் மிக நீண்ட காலமாக உள்ளது. இந்தநிலையில், தமது பூர்வீ…

  4. பலாலி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க ஆவணத்தில் கையெழுத்திடேன்-முதல்வர் விக்கி பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவது தொடர்பான எந்தவொரு ஆவணத்திலும் தான் ஒப்பமிடப் போவதில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்விலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணசபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் பலாலி விமான நிலைய விரி வாக்கம் தொடர்பான திட்டத்துக்கு தாம் ஒப்புதல் அளிக்கமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவதற்காக மேலும் 1600 ஏக்கர் நிலத்தை …

  5. காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண்பது என்பது இலகுவான விடயமல்ல வடக்கு, கிழக்கில் 3 ஆயிரம் ஏக்கர் காணி விரைவில் விடுவிக்கப்படும் என்கிறார் ருவன் (எம்.சி.நஜி­முதீன்) காணா­மல் போனோர் தொடர்பில் விசா­ரணை நடத்தி தீர்வு முன்­வைப்­ப­தென்­பது இல­கு­வான விட­ய­மல்ல. எனவே அவ்­வி­ட­யத்தில் காலக்­கெடு வழங்­கு­வது கடி­ன­மா­னது. எனினும் காணா­ம­ல் போனோரின் விட­யத்தில் வினைத்­தி­ற­னான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து விரை வில் தீர்வு முன்­வைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கிறோம். அத்­து டன் வடக்கு, கிழக்கில் இரா­ணு­வத்தின் வச­முள்ள மூவா­யிரம் ஏக்கர் காணியை விரைவில் விடு­விப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்…

  6. ஆதரவு தெரிவிக்க வருபவர்களை புகைப்படம் எடுக்கும் படையினர் -எம்.றொசாந்த் கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்க மற்றும் உதவிகளை வழங்க செல்வோரை விமான படையினர் தமது அலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றார்கள். அத்துடன் வருபவர்களின் வாகன இலக்கங்களையும் குறிப்பெடுத்து கொள்கின்றனர். கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். அப்பகுதி மக்களின் காணியில் அமைந்துள்ள பாரிய விமான படைத்தளத்தை விட்டு விமான படையினர் வெளியேற வேண்டும் என கோரி படைத்தளம் முன்பாக மக்கள் குடியமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். …

  7. வடக்கில் மீண்டும் வெடிச்சத்தம் : மஹிந்த (ஆர்.யசி ) வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கும் சமஷ்டி மூலம் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்தவுமே இந்த அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முயற்சித்து வருகின்றது. இந்த அரசாங்கத்தினால் அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர அதிகாரம் உள்ளது. ஆனால் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. வடக்கில் மீண்டும் வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மொனராகலையில் மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்…

  8. (க.கமலநாதன்) எழுக தமிழ் பேரணியூடாக தற்போது இனவாதம் துண்டிவிடப்படுகின்றதுடன் தமிழ் மக்களும் தூண்டுதல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என தூய்மையான ஹெல உறுமைய அமைப்பு தெரிவிக்கின்றது. எழுக தமிழ் உள்ளிட்ட பேரணிகளை நடத்தி வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தூண்டி விடப்படுகின்றனர். அதனை பொருட்படுத்தாமல் நல்லாட்சி அரசாங்கம் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு வலுச்சேர்த்துக்கொண்டிருக்கின்றது. அன்று நாட்டினை பிளவுபடுத்துகின்ற நோக்கத்தில் செயற்பட்டவர்கள் இன்றும் அவ்வாறே செயற்படுகின்றனர். தற்போதைய அரசாங்கம் புலிகளை பாதுகாத்து அவர்களின் மீள் ஊருவாக்கத்திற்கு சக்தி வழங்கிக்கொண்டுள்ளது மறுபுறத்தில் இராணுவத்தினை தண்டிக்க முன்னெடுப்…

    • 0 replies
    • 337 views
  9. (க.கமலநாதன்) சிலவேளை கருணாவின் ஒத்துழைப்பு கிட்டியிருக்காவிட்டால் நாட்டின் கிழக்குப் பகுதியை புலிகளிடத்திலிருந்து மீட்க முடியாது போயிருக்கும். அதனால் அவ்வாறான ஒருவர் தலைமையில் கட்சி நிறுவப்படுவது காலோசிதமான முயற்சியாகுமென பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமைய அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுபப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளமையானது வரவேற்கத்தக்கதாகும். காரணம் அவர் இறுதி யுத்த காலத்தில் நாட்டின் கிழக்கு பகுதியை புலிகளிடத்திலிருந்து மீட்டெடுக்க பெரும் உதவி செய்தவர். http://www.virakesari.lk/article/16588 தற்போது அவர் கட்சி ஆரம்பிக்க முற்படுகின்றமை…

    • 0 replies
    • 322 views
  10. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள தமது காணிகளையும் வீடுகளையும் இராணுவம் விடுவிக்க வேண்டுமெனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நாளை முதல் சுழற்சி முறையிலான அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்றையதினம் பிரதேசசெயலாளர் ம.பிரதீபனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம் முன்னால் இடம்பெற்றுவரும் போராட்டம் இன்றையதினம் பதினோராவது நாளை எட்டியுள்ளது. புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்க…

    • 0 replies
    • 427 views
  11. சிவனொளிப்பாத மலை உச்சிக்கு சென்றுகொண்டிருந்த மூன்று யாத்திரிகள் கடும் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை(10) இரவு போயா தினத்தன்று இடம்பெற்றுள்ளது. தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 65 வயதுடை சிரியாவதி என்ற பெண்ணும், கம்புறுபிட்டியவைச் சேர்ந்த 64 வயதுடைய சந்திரசேன என்ற நபரும், மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய கித்சிறி பெர்னாண்டோ என்ற நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் இதயம் செயலிழந்து குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. http://www.virakesari.lk/article/16574

    • 0 replies
    • 449 views
  12. தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைககள் நிறுவக மாணவர்கள் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இன்று நண்பகல் வாய்களை கறுப்புத்துணியால் கட்டி பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிறுவகத்தின் வகுப்புகளிலிருந்து வெளியேறிய பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் வீதியில் இறங்கி கல்லூரியின் நுழைவாயிலை மறித்து மௌனப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சியே பதில் சொல்.! எமது காணிகள் எமக்கு வேண்டும்.! எமக்கு நீதி தேவை.! எனும் வாசகங்கள் உட்பட பல கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். h…

    • 0 replies
    • 370 views
  13. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் தற்சமயம் பிரசன்னம் ஆகியுள்ளார். எவன்காட் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியதாக தெரியவந்துள்ளது. http://www.virakesari.lk/article/16578

    • 0 replies
    • 342 views
  14. சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்யச்சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரைக்கும் விளக்கமறியிலில் வைக்குமாறும் அதேவேளை இரண்டாவது சந்தேக நபரை வெளியில் கொண்டு சென்று விசாரணை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக அபாயகரமான ஆயுதங்கள் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியது போன்ற குற்றச்சாட்;டுக்களில் 5 பேர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு குறித்த 5 பேரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்டப்;பட்டிருந்தத…

    • 0 replies
    • 493 views
  15. சந்திரிகா: மீண்டும் எட்டிப்பார்க்கும் யுத்த தேவதை சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தவரும் தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணல் தொடர்பாகத் சிறிலங்காவைச் சேர்ந்த அவதானிப்பாளர்கள் தற்போது உரையாடி வருகின்றனர். சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணலின் குறித்த ஒரு பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பில் இந்த நாடானது தற்போது எந்த நிலையில் உள்ளது என ஊடகவியலாளர் உபல் விக்கிரமசிங்க, குமாரதுங்கவிடம் வினவியிருந்தார். ‘இது மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது’ என குமாரதுங்க பதிலளித்திருந்தார். ‘நல்லிணக்கத்தை மேற்கொள்வதற்க…

  16. உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார். 7 பக்கங்களுக்கு உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காக தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்க…

  17. என்ன பிழை நடந்தாலும் அது எங்கள் தலையில்தான் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்ந்த நிலத்தை வழங்க மறுப்பதால் இப்போராட்டம் தொடர்வதில் மிகுந்த நியாயப்பாடு உண்டு. யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுகிறது என்றால், யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்வது கட்டாயமானதாகும். இருந்தும் கேப்பாப்பிலவு மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர முடியாமல் மிகுந்த கஷ்டங்களையும் அவலங்களையும் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த மக்கள் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ் விடத்தில் அந்த மக்களின் நியாயபூர்வமான போராட்டத்து…

  18. நல்லாட்சியின் நகர்வு நல்லதாகவே இல்லை! வியாழேந்திரன் எம்.பி. கடும் விசனம் மைத்திரி-ரணில் தலைமையிலான இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நகர்வுகள் தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று நல்லதாக அமையவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றிய வியாழேந்திரன், ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து தெருவோரத்திலே குளிரிலும் வெயிலிலும் வேதனையுடன் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவ…

  19. ஆரத்தழுவினார் ஹசன்; பின்னால் ஓடினார் ஹக்கீம் -அழகன் கனகராஜ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், 27ஆவது மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், பென்குவேட் ஹோலில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (12) நடைபெற்றது. இதேவேளை, கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் சனிக்கிழமை இரவு, கட்டாய அதியுயர்பீடக் கூட்டம் இடம்பெற்றது.இந்தக் கூட்டத்துக்கு, பஷீர் சேகுதாவூத் சமூகமளிக்கவில்லை. எனினும், ஹசன் அலி சமுகமளித்திருந்தார். அன்று, மாலை 6:40க்கு ஆரம்பமான உயர்பீடம் இரவு 9:45 மணிவரையிலும் சென்றது. இதன்போது கருத்துரைத்த ஹசன் அலி, அதிகாரங்கள் இல்லாத செயலாளர் பதவியை தனக்கு தராவிடினும் பரவாயில்லை, வேறு எவருக்காவது வழ…

  20. கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் 30ஆம் திகதி சாவகச்சேரி பிள்ளையார் கோவில் வீதியில் வீடொன்றில் சிங்கள பத்திரிகையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்துடன் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு நேரடியாக தொடர்பு உள்ளதென தகவல் வெளியானதை தொடர்ந்து ஜனாதிபதியால் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று அந்த சந்தேகத்திற்…

  21. தமிழ் மக்களுக்கு கிடைக்கும் சமஸ்டியை ஒத்த சமஸ்டி முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அவர்களுக்கு என்ன தேவையென்பதை அவர்களே வெளிப்படுத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று மாலை தமிழ் மக்கள் பேரவைக்கும் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல்கள் சம்மேளனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், எழுக தமிழிற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. கிழக்கில் எழுக தமிழ் நடைபெறுவதை தடுக்க பலர் மும்முரமாக இர…

    • 0 replies
    • 312 views
  22. பிளவுக்கு இடமில்லை: ஹக்கீம் சூளுரை ப. பிறின்சியா டிக்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை வளர்த்தெடுத்த பல்லாயிரக்கணக்கானோர் இந்த அரங்குக்கு வெளியே இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான போராளிகள் கவலையோடு இருக்கின்றனர். இந்த இயக்கத்துக்குப் பங்களித்த தாய்மார்கள், சகோதரிகள் யாருமே இங்கு கலந்துகொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றார்கள். இவ்வாறானதொரு நிலையில், இந்த இயக்கத்தைப் பிளவு -படுத்துவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்” என்று, காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். “காங்கிரஸின் உயர்பீடத்துக்கான தெரிவு நடைபெற்ற போது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்த விவகாரம், பக்கத்தில் இருந்த எங்களுடைய முன்ன…

  23. யாழ் சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம் யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய மீனவர்களும் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். மேலும், கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறும் இவர்கள் கோரியுள்ளனர். தமிழகத்தின் தங்கச்சிமடம், இராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்களே இன்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கடந்த பல மாதங்களாக தாம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது குடும்பங்களை இழந்து பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமது விடுதலையினை வலியுறுத்தி முன்னெடுத்துள்ள இந்த உண்ணாவிரத போராட்டம் கு…

  24. புதிய அரசியல் சாசனத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கு நேர்ந்த கதி புதிய அரசியல் சாசனத்திற்கு நேர்ந்துவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் சிங்கள மக்கள் மீது திணிக்கப்படும் ஒர் அரசியல் சாசனமாக புதிய அரசியல் சாசனம் அமைந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இனியொரு ஆயுதப் போராட்டம் நடத்தப்படாது எனவும் வன்முறைக்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வெற்றியடையும் வரையில் அனைவரும் பொறுமை காக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். http://globalta…

    • 0 replies
    • 274 views
  25. சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மர்மமான முறையில் எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 57 வயதுடைய சிறிகலா எனும் பெண்னே இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மதியம் 12 மணியளவில் அயலவர்கள் மூலம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தனது கணவருடன் வாழ்ந்துவந்த நிலையிலேயே இவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். http://onlineuthayan.com/news/23778

    • 0 replies
    • 356 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.